மகாராஷ்டிராவில் சிஎன்ஜி, எல்பிஜி மற்றும் பிரீமியம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வரி விதிப்பில் மாற்றம் !
சிஎன்ஜி மற்றும் எல்பிஜி -யில் இயங்கும் வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரியை 1 சதவீதம் திருத்தவும், ரூ.30 லட்சத்துக்கும் அதிகமான விலை கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 6 சதவீத வரியை அறிமுகப்படுத்தவும் மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில அரசு 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது. மோட்டார் வாகன வரியை உயர்த்துவது குறித்த ஒரு திட்டமும் இந்த பட்ஜெட்டில் அதில் முக்கிய விஷயமாக பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது. துணை முதல்வர் அஜித் பவார் தாக்கல் செய்த மாநில அரசின் புதிய பட்ஜெட்டில் மாநிலத்திற்கு 150 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதற்காக மோட்டார் வாகன வரியில் திருத்தம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
என்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன ?
புதிய பட்ஜெட்டில் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி மூலம் இயங்கும் தனியாருக்குச் சொந்தமான வாகனங்களுக்கான மோட்டார் வாகன வரியில் 1 சதவீதம் வரை உயர்த்தும் திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவற்றின் வகை மற்றும் விலையை பொறுத்து 7 முதல் 9 சதவீதம் வரை உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரீமியம் எலக்ட்ரிக் கார்களுக்கு (ரூ. 30 லட்சத்துக்கு மேல்) இனிமேல் 6 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.30 லட்சத்திற்கும் குறைவான அனைத்து மின்சார வாகனங்களுக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த வகையான வரிகளும் இருக்காது. புதிய பட்ஜெட்டில் மோட்டார் வாகன வரியின் அதிகபட்ச வரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்திற்கு கூடுதலாக ரூ.170 கோடி வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மார்ச் 2025 மாதம் ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான EV -களுக்கான வெயிட்டிங் பீரியட் விவரங்கள்
இந்தியாவில் CNG மற்றும் எலக்ட்ரிக் கார்கள் பற்றிய ஒரு பார்வை
தற்போதைய நிலவரப்படி டாடா நெக்ஸான், ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் மாருதி ஃப்ரான்க்ஸ் உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட கார்கள் சிஎன்ஜி ஆப்ஷன் உடன் வருகின்றன. சிஎன்ஜி கார்களுக்கான தேவை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. சிஎன்ஜி கார்கள் சில சந்தர்ப்பங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை விட அதிகமாக விற்பனையாகின்றன.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல கார் தயாரிப்பாளர்கள் களத்தில் உள்ளனர் மேலும் இன்னும் பலர் இணையவுள்ளனர். இந்தியாவில் ரூ. 30 லட்சத்திற்கு மேல் விலையுள்ள பல இவி - கள் உள்ளன. இதில் அனைத்து ஆடம்பர மாடல்களும், கியா EV6 மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 போன்ற சில கார்களும் அடங்கும். நிதி நிலை அறிக்கையில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் புதிய நிதியாண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தால் இந்த மாடல்களின் ஆன் ரோடு விலை கணிசமாக உயரும்.
மகாராஷ்டிரா அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? கீழே கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
Write your கருத்தை
Ev industry is already struggling. It may see further drop is sales