<cityName> -யில் பரிந்துரைக்கப்படும் யூஸ்டு ரெனால்ட் க்விட் 2015-2019 கார்கள்
ரெனால்ட் க்விட் 2015-2019 இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 799 சிசி - 999 சிசி |
பவர் | 53.3 - 67 பிஹச்பி |
டார்சன் பீம் | 72 Nm - 91 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் |
மைலேஜ் | 23.01 க்கு 25.17 கேஎம்பிஎல் |
எரிபொருள் | பெட்ரோல் |
- digital odometer
- ப்ளூடூத் இணைப்பு
- touchscreen
- central locking
- ஏர் கன்டிஷனர்
- கீலெஸ் என்ட்ரி
- பின்பக்க கேமரா
- பின்புறம் seat armrest
பின்பக்க சீட் ஆம்ரெஸ்ட்– பின்பக்க சீட்டில் பயணிக்கும் பயணிகளுக்கு இதமான தன்மையை அதிகரிப்பதோடு, பிரிமியம் தோற்றத்தை அதிகரிப்பதாக உள்ளது.
கேபினுக்குள் சரக்கு வைப்பதற்கான இடவசதிகள்–பெரிய சென்டர் கன்சோல் சேமிப்பகம் உடன் இந்த பிரிவிலேயே முன்னணி வகிக்கும் 300 லிட்டர் பூட் ஆகியவற்றை கொண்டிருப்பதால், ஒரு வார இறுதி சுற்றுலா செல்ல போதுமான இடவசதி உடன் காணப்படுகிறது.
இந்த பிரிவிலேயே முதன் முறையாக இந்த ரெனால்ட் க்விட் காரில் ரிவெர்ஸ் பார்க்கிங் கேமரா அளிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர்– தேவைக்கு ஏற்ப தெளிவான மற்றும் எளிதான புள்ளி விவரங்களை அளிக்கிறது.
- முக்கிய விவரக்குறிப்புகள்
- டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
- சிறப்பான வசதிகள்
ரெனால்ட் க்விட் 2015-2019 விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are the last recorded, மற்றும் the prices மே vary depending on the car's condition.
- அனைத்தும்
- ஆட்டோமெட்டிக்
க்விட் 2015-2019 மீண்டும் ஏற்றப்பட்டது 0.8(Base Model)799 சிசி, மேனுவல், பெட்ரோல், 25.17 கேஎம்பிஎல் | ₹2.67 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 எஸ்டிடி799 சிசி, மேனுவல், பெட்ரோல், 25.17 கேஎம்பிஎல் | ₹2.83 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 ரஸே விரும்பினால்799 சிசி, மேனுவல், பெட்ரோல், 25.17 கேஎம்பிஎல் | ₹3.07 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
ரஸ்ல் 02 ஆண்டுவிழா பதிப்பு799 சிசி, மேனுவல், பெட்ரோல், 25.17 கேஎம்பிஎல் | ₹3.43 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 ரஸே799 சிசி, மேனுவல், பெட்ரோல், 25.17 கேஎம்பிஎல் | ₹3.53 லட்சம்* | காண்க ஏப்ரல் offer |
க்விட் 2015-2019 1.0 ஆர்.எக்ஸ்.எல்999 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.01 கேஎம்பிஎல் | ₹3.54 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 மீண்டும் ஏற்றப்பட்டது 1.0999 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.01 கேஎம்பிஎல் | ₹3.58 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 ரோஸ்ட்799 சிசி, மேனுவல், பெட்ரோல், 25.17 கேஎம்பிஎல் | ₹3.61 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
1.0 ஆர்.எக்ஸ்.எல் 02 ஆண்டுவிழா பதிப்பு999 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.01 கேஎம்பிஎல் | ₹3.64 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
ரோஸ்ட் 02 ஆண்டுவிழா பதிப்பு799 சிசி, மேனுவல், பெட்ரோல், 25.17 கேஎம்பிஎல் | ₹3.76 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 ரஸ்ல்799 சிசி, மேனுவல், பெட்ரோல், 25.17 கேஎம்பிஎல் | ₹3.83 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 1.0999 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.01 கேஎம்பிஎல் | ₹3.84 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 1.0 அன்ட் ரஸ்ல்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 24.04 கேஎம்பிஎல் | ₹3.84 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 மீண்டும் ஏற்றப்பட்டது அன்ட் 1.0999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 24.04 கேஎம்பிஎல் | ₹3.88 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
1.0 ரோஸ்ட் 02 ஆண்டு பதிப்பு999 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.01 கேஎம்பிஎல் | ₹3.98 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 ரோஸ்ட் அன்ட்799 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 25.17 கேஎம்பிஎல் | ₹3.98 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 ரோஸ்ட் விரும்பினால்799 சிசி, மேனுவல், பெட்ரோல், 25.17 கேஎம்பிஎல் | ₹3.98 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 க்விட்1.0 RXT999 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.01 கேஎம்பிஎல் | ₹4.03 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 1.0 ரோஸ்ட் விரும்பினால்999 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.01 கேஎம்பிஎல் | ₹4.21 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 1.0 ரோஸ்ட் optional ஏடி999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 23.01 கேஎம்பிஎல் | ₹4.30 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 சூப்பர் சோல்டயர் 1.0 மட்999 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.01 கேஎம்பிஎல் | ₹4.34 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 ஐயன் மண் 1.0 மட்999 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.01 கேஎம்பிஎல் | ₹4.34 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 இரும்பு மனிதன் 1.0 அன்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 23.01 கேஎம்பிஎல் | ₹4.34 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 கேப்டன் அமெரிக்கா 1.0 எம்டி999 சிசி, மேனுவல், பெட்ரோல், 24.04 கேஎம்பிஎல் | ₹4.34 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 ஏறுபவர் 1.0 எம்டி999 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.01 கேஎம்பிஎல் | ₹4.46 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 1.0 அன்ட் ரோஸ்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 24.04 கேஎம்பிஎல் | ₹4.50 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 ஏறுபவர் 1.0 அன்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 24.04 கேஎம்பிஎல் | ₹4.75 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 வெல்லமுடியாத 1.0 அன்ட்999 சிசி, மேனுவல், பெட்ரோல், 24.04 கேஎம்பிஎல் | ₹4.94 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
க்விட் 2015-2019 கேப்டன் அமெரிக்கா 1.0 அன்ட்(Top Model)999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 24.04 கேஎம்பிஎல் | ₹4.94 லட்சம்* | காண்க ஏப்ரல் offer |
ரெனால்ட் க்விட் 2015-2019 விமர்சனம்
Overview
2018 மேம்பாட்டின் மூலம், க்விட் காரில் நடைமுறைக்கு அதிகம் பயன்படக் கூடிய ரிவெர்ஸ் கேமரா, ஏஎம்டி க்ரீப் மற்றும் மடக்கக் கூடிய வசதி கொண்ட பின்பக்க சீட் பெல்ட்கள் போன்ற அம்சங்களை ரெனால்ட் நிறுவனம் சேர்த்துள்ளது. இதை தவிர, விலையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை! எனவே நீங்கள் க்விட் கார் வாங்குவதாக இருந்தால், அது ஒருஇனிமையான வணிக செயல்பாடாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
வெளி அமைப்பு
பட்ஜெட் விலையில் கிடைக்கும் கார்களின் பிரிவில் க்விட் இடம்பெறுவது இல்லை என்பதால், வித்தியாசமான காரியங்களைச் செய்யும் முயற்சியில் ரெனால்ட் நிறுவனத்தை தடுக்க முடியவில்லை. துவக்க நிலை ஹேட்ச்பேக் கார்களில், தனது ஸ்டைலில் சில எஸ்யூவி அமைப்பை கொண்ட முதல் காராக ரெனால்ட் க்விட் திகழ்கிறது. நீண்டகாலமாக உள்ள ஆல்டோ காரை வைத்து பார்க்கும் போது, இது பசுமையான தோற்றத்தை பெற்றதாக தெரிகிறது. உயர்ந்த நிலைப்பாடு மற்றும் தடித்த அமைப்பு உடன் கூடிய பிளாஸ்டிக் வீல் ஆர்ச்சுகள் ஆகியவை ஒரு எஸ்யூவி தோற்றத்தை தருகிறது.
முன்பக்கத்தை பொறுத்த வரை, இதன் கிரில் எதிர்காலத்திற்குரிய தன்மை கொண்டுள்ளது. இதில் உள்ள ஒரே கிரோம் என்றால், டைமண்ட் வடிவிலான ரெனால்ட் லோகோ மட்டுமே. இந்த கிரோமை நீங்கள் விரும்பும் பட்சத்தில், ஹனிகோம் கிரில் வேண்டுமானால் மாற்றி கொள்ள முடியும். சாலையில் தனித்து தெரியும் வகையில், மாற்றி அமைக்கக் கூடிய பல தேர்வுகளை ரெனால்ட் நிறுவனம் அளிக்கிறது.
தடித்த உருவத்தை பெறும் வகையில், பம்பரில் சில வீங்கிய தன்மையை பெற்று, அதில் வட்ட வடிவிலான ஃபேக் லெம்ப்கள் அமைக்கப்பட்டுள்ளது.கீழே இருந்த சிறிய ஏர் டேம் அப்படியே அளிக்கப்பட்டு, கிரில் அதே ஸ்டைலில் தொடர்கிறது.
இந்த கார் அதிக உயரம் கொண்டதாக இல்லை என்றாலும், பக்கவாட்டு பகுதியில் ஒரு உயரமான விண்டோ லைன் மற்றும் பெரிய விண்டோக்கள் அளிக்கப்பட்டுள்ளன. கீழே உள்ள கருப்பு நிறத்திலான ஸ்லாட்கள் பிளாஸ்டிக் அல்ல. ஆனால் அது வெறும் ஒரு வின்னைல் ஸ்டிக்கர் ஆகும். டீலர்ஷிப் நிலையில் தொடர்பு கொண்டு, இதை ஒரு பிளாஸ்டிக் கிளெடிங்காக உதிரிபாகங்களில் இருந்து மேம்படுத்தி கொள்ள முடியும்.
இந்த காரில் 13 இன்ச் ரிம்கள் மற்றும் 155 மிமீ ரப்பர் வீல்கள் அமைந்து, அவை 3 லக் நட்கள் மூலம் பொருத்தப்பட்டுள்ளன. இயன் காரில் கூட ஒத்த டயர் மற்றும் ரிம் கூட்டணியை காண முடிகிறது. ஆனால் நேனோ மற்றும் ஆல்டோ 800 கார்களில் இன்னும் மெலிந்த முறையே 135 மற்றும் 145 மிமீ டயர்களும், 12 இன்ச் ரிம்களும் அளிக்கப்படுகிறது. இந்த 2018 புதுப்பிப்பு மூலம் ரெனால்ட் க்விட் காரின்RxL வகையில் தற்போது முழு வீல் கவர்கள் மற்றும் ஃபேக் லெம்ப்கள் அளிக்கப்பட்டு, நடுநிலை பிரிவை சேர்ந்த தோற்றத்தை பெற்றதாக இந்த காரை உருவாக்கி உள்ளது.
வெளிப்புற மிரர் மற்றும் டோர் ஹேண்டில்கள் பயன்படுத்த சுமூகமாகவும், முழு கருப்பு நிறத்திலுமும் அமைந்துள்ளன. நீண்டகாலம் காத்திருந்த பிறகு 2018 புதுப்பிப்பு வந்துள்ள பிறகும், இதில் பயன்படுத்தி உள்ள பிளாஸ்டிக்தரம் மட்டும் குறையாக தெரிகிறது. காருக்குள் இருந்து மிரர்களை மாற்றி அமைக்கும் வசதி அளிக்கப்படவில்லை. ஆனால் இந்த வசதி, ஆல்டோ 800 காரில் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பக்கவாட்டில் உள்ள டேன் இன்டிகேட்டர் பல்புகள், முன்பக்க வீல் ஆர்ச் மீது ஏறிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கார் வகையின் பேட்ஜ்ஜிங், பக்கவாட்டில் பின்பக்க விண்டோவின் பின்னால் அமைந்துள்ளது.
பின்பக்கத்தில் பேட்ஜ்ஜிங் மிகவும் சிறியதாக அமைக்கப்பட்டுள்ளது. டெயில் லெம்ப்கள் ஒரு அடிப்படை தன்மையை கொண்டுள்ளது. பின்பக்கத்தின் நடுப்பகுதியில் ரெனால்ட் மற்றும் க்விட் பேட்ஜ்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சிறிய ரெனால்ட் பேட்ஜ் இடதுபக்கத்தில் உள்ளது. பம்பரின் கீழ் பகுதி, முழு கருப்பு நிற கிளெடிங்காக அமைந்து, எல்லா வகைகளுக்கும் பொதுவாக அளிக்கப்பட்டுள்ளது.
காரின் மேற்பகுதியில், ஆங்கில எழுத்து யு வடிவிலான அமைப்பை ரூஃப் பெற்றுள்ளது. இந்த காரில் பயன்படுத்தி உள்ள மெல்லிய ஷிட் மெட்டலை ஈடுகட்டும் வகையில் மற்றும் உறுதி தன்மையை அதிகரிக்கவும் இது உதவுகிறது. இந்த காரின் எல்லா வகைகளிலும் ஒரு ஒருங்கிணைந்த ரூஃப் ஸ்பாய்லரை பெற்று, அதன் உருவமைப்பை கூட்டுகிறது. இதன் உடன் உங்களுக்கு உதவும் ஒரு நீண்டFM ஆண்டினா காணப்படுகிறது. மேலும் டீலர்ஷிப்-பில் உள்ள உதிரிபாகங்கள் கடையில் இருந்து ரூஃப் ரெயில்களை நீங்கள் பெற்று கொள்ளலாம்.
இந்த க்விட் காரில் முன்பக்கத்தில் ஒரே ஒரு வைப்பர் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் வைப்பர் வைப்பதற்கான எந்த தேர்வும் இல்லை. இது ஒரு செலவு குறைப்பு நடவடிக்கையாக இருந்தாலும், ஒவ்வொரு ஸ்வைப்பிலும் விண்ட்ஷிட் பகுதியின் பெரும்பாலான பகுதிகளை எட்டி சேர்ந்து, அதன் பணியை நேர்த்தியாக செய்கிறது. இந்த பனி துடைப்பு செயல்பாட்டை, உயர் தர வகையில்(RXT) மட்டுமே காண முடிகிறது. இந்த ஸ்ப்ரே-களில் ஒரு சிறிய வாஷர் நீர் துளிகளை பீச்சி அடிப்பதோடு சரி. நீராவியை தொடர்ந்து, ஒரு விரைவான ஸ்வைப் செய்யும் பணியை வைப்பர் செய்வது இல்லை. இந்த காரின் எந்தொரு பிரிவிலும் மேற்கண்ட இந்த செயல்பாட்டை காண முடிவதில்லை.
இந்தக் காரின் அளவீடுகளைப் பொறுத்த வரை, இந்த பிரிவிலேயே அதிக நீளம் கொண்டதாக அமைந்து, 3679 மிமீ நீளத்தை க்விட் கார் பெற்றுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸை பொறுத்த வரை, மீண்டும் அதிக நோட்ச் கொண்டதாக 180 மிமீ அளவை பெற்றுள்ளது. இதனால் வேகத் தடைகளில் சிறப்பாக பயணிக்க முடிகிறது. ஆனால் இது ஒரு உயர்ந்த இடத்தில் ஏறி அமர்ந்து இருப்பது போன்ற அனுபவத்தை அளிக்கிறது. இதன் வீல் பேஸ் 2422 மிமீ என்ற அளவை பெற்றுள்ளது. இது இயன் மற்றும் ஆல்டோ போன்ற கார்களின் அளவை விட, அதிகம் ஆகும். கிரிப் எடையை பொறுத்த வரை, நானோ காரை விட ஏறக்குறைய 50 கிலோ வரை குறைவாக, 600 கிலோ என்ற அளவில் உள்ளது. இந்த காரின் பூட் ஸ்பேஸ் 300 லிட்டர் அளவை பெற்று, பிரிவிலேயே சிறந்ததாக அமைந்துள்ளது.
கண்டிப்பான எஸ்யூவி போன்ற உருவமைப்பை கொண்ட க்விட் கார், தகுந்த அளவீடுகளில் அமைந்துள்ளதால், அதை நாங்கள் விரும்புகிறோம்.
Exterior Comparison
Datsun redi-GO | |
Length (mm) | 3435mm |
Width (mm) | 1574mm |
Height (mm) | 1546mm |
Ground Clearance (mm) | 187mm |
Wheel Base (mm) | 2348mm |
Kerb Weight (kg) | 710 |
Boot Space Comparison
Datsun redi-GO | |
Volume | - |
உள்ளமைப்பு
இந்த க்விட் ஒரு பட்ஜெட் கார் என்பதால், வழக்கம் போல கேபின்சமரசம் செய்து கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரத்தில் க்விட் காரில் விலைக் குறைப்பு தன்மைகள் மிகவும் குறைவாக காணப்பட்டு, எல்லாவற்றையும் சிறப்பாக ஒருங்கிணைத்தது போன்ற உணர்வை அளிக்கிறது. ஒரு ஓட்டுநர்அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் எந்தொரு காரியத்தின் மீதும் சமரசம் ஏற்படுத்தி கொள்ளக் கூடாது என்பதில், வடிவமைப்பாளர்கள் மிகவும் உறுதியாக செயல்பட்டுள்ளதை காண முடிகிறது. இதில் பயன்படுத்தி உள்ள பிளாஸ்டிக் தரம் மட்டும் சற்று குறைவான எண்ணத்தை அளிக்கிறது.
இந்த க்விட் காருக்குள் நீஙகள் நுழைந்த உடன், டஸ்டர் காரில் இருந்து பெறப்பட்ட 7 இன்ச்டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் தான் முதன் முதலில் உங்கள் கண்களில் தெரிகிறது.இந்த சிஸ்டத்தை சூழ்ந்து ஒரு பியானோ கருப்பு நிறத்திலான பேசில் மற்றும் சாம்பல் நிறத்திலான டேஸ் போர்டை எடுத்து காட்டுவது போல, மின்னும் கிரோம்சூழ அமைந்துள்ளது. இந்த சிஸ்டம் மூலம் நேவிகேஷன்,USB, ஆக்ஸ் மற்றும் ப்ளூடூத் இணைப்பு ஆகியவற்றை நீங்கள் பெற முடியும். இந்த பிரிவில் தொழிற்சாலையில் இருந்தே பொருத்தப்பட்ட ஒரு டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஒரு தேர்வாக கொண்ட ஒரே காராக இதை மட்டுமே காண முடியும்.
இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு கீழ் பகுதியில் ஏர் கண்டீஷன் செயல்பாடுகள் வைக்கப்பட்டுள்ளது. இதன் கினாப்களில் கிரோம் பூச்சு பெற்று, பயன்படுத்துவதற்கு நன்றாக தெரிகிறது. இதன் காற்று திறப்பிகள் கூட வட்ட வடிவில் அமைந்து, கிரோம் உள்ளீடுகளை பெற்றுள்ளது. நடுவில் உள்ளவை நீள்சதுர வடிவில் அமைந்து, அதனுடன் உள்ள கினாப்களில் சற்று கிரோமை பெற்றுள்ளது. இவை அனைத்தையும் தனித்தனியாக இயக்க முடியும். இந்த காரின் துவக்க நிலை வகையில் மேற்கண்ட ஏர் கண்டீஷனிங் அளிக்கப்படவில்லை.
நெருக்கடிக்கு உதவும் லைட்கள், பவர் விண்டோக்கள் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் ஆகியவற்றிற்கான பட்டன்கள், கீழே அளிக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு என்று தனித்தனியாக சுவிட்ச்சுகள் அளிக்காமல் தவிர்த்து இருப்பது, ஒரு தகுந்த செலவு குறைப்பு நடவடிக்கையாக அமைந்துள்ளது. அவை இரு வகையிலும் சரிசமமாக இயக்கும் தன்மையில் உள்ளது.
இந்த கன்சோலின் கீழே கியர் லிவர் இருக்கும் இடத்திற்கு முன்னதாக, கப் ஹோல்டர்கள் மற்றும் ஒரு12v சார்ஜிங் பாயிண்ட் உள்ளது. ஹேண்ட் பிரேக் மற்றும் கியர் லிவருக்கு இடையே ஒரு சிறிய கப்பி இருப்பதை காணலாம். இது ஒரு தரமானபயன்பாடு ஆகும்.
ஓட்டுநரின் பகுதியில் இருந்து பார்க்கும் போது, உங்களுக்கு ஒரு நல்ல சிறிய ஸ்டீயரிங் வீல் அளிக்கப்பட்டுள்ளது. இது பிடிப்பதற்கு நன்றாகவும், பார்ப்பதற்கு ஸ்டைலாகவும் உள்ளது. சாவியை போட்டு வாகனத்தை இயக்க துவங்கினால், க்விட் காரில் வெறும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மட்டுமே கவர்ச்சிகரமான ஒன்றாக அமையவில்லை என்பது எளிதாக நீங்கள் கண்டு கொள்ள முடியும். இதில் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரும் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் இந்த பிரிவில் சிறந்தது எனலாம்! இதில் வேகம் குறித்த அளவீடுகள் மிக தெளிவாக காட்டப்படுவதோடு, ஒரு சிறிய ஸ்ட்ரீப் மூலம் ஒரு கூட்டம் அளவீடுகள் காட்டப்படுகிறது. இதில் ஓடோமீட்டர், எரிபொருள் முடியும் தூர அளவு, ஒரு ட்ரிப் மீட்டர், ரியல்- டைம் எரிபொருள் பயன்பாட்டு அளவு, சராசரி எரிபொருள் பயன்பாடு, பயணித்த தூரம், ட்ரிப் எரிபொருள் பயன்பாடு மற்றும் சராசரி வேகம் ஆகியவை காட்டப்படுகிறது. ரீசெட் பட்டனை அழுத்துவதன் மூலம் மேற்கண்ட அளவீடுகளை மாற்றி அமைத்து கொள்ள முடியும்.இது எரிபொருள் அளவீடுகளின் அருகில் அமைந்துள்ளது.
இந்த காரில் ஹெட்லைட்கள் மற்றும் இன்டிகேட்டர் ஆகியவை, ஸ்டீயரிங் வீல்லில் இருந்து எளிதாக இயக்க முடிகிறது. இதில் ஒரு லென் மாற்று அம்சம் உள்ளது. ஒரு சிறிய டேப்-பில் அமைந்து, இன்டிகேட்டரை மூன்று முறை மின்னி மின்னி எரிந்து, பிறகு தானாக அணைந்து விடுகிறது.
பயணிகள் பகுதியை பொறுத்த வரை, இரண்டு கிளெவ் பாக்ஸ்கள் உள்ளன. இதில் மேலே உள்ளதில், ஒரு வெட்டு போன்ற தோற்றத்தை பெற்று, அதில் தண்ணீர் பாட்டிலை வைத்து கொள்ள முடியும். கீழே உள்ள கிளெவ் பாக்ஸ் உருவில் சற்று பெரியதாக உள்ளது. இதன் இரண்டிற்கும் இடையே ஒரு திறந்த வடிவிலான பெரிய சேமிப்பகம் செல்ஃப் காணப்படுகிறது.
டேஸ் போர்டின் மற்றொரு முனையில் முன்பக்க ஸ்பீக்கர்கள் ஏறிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒலி தரம், ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் உள்ளது. இவற்றை பயன்படுத்தி, கடினமான இசையில் வரும் பாஸை வைத்து அடித்து தூள் கிளப்ப முடியாது. இசை விரும்பிகளுக்கு, இதன் மேம்பாடு கண்டிப்பாக தேவைப்படும்.
இந்த காரின் முன்பக்க சீட்களில் சிவப்பு, சாம்பல் மற்றும் கருப்பு என்று மூன்று வர்ண அப்ஹோல்டரியைப் பெற்றுள்ளது. ஹெட்ரெஸ்ட்கள் நிலையாக அமைக்கப்பட்டுள்ளது. அதை மாற்றி அமைக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஆல்டோ காரில் இருப்பதை விட அதிக இதமான சீட்களை இது பெற்றுள்ளதோடு, அதிக இடவசதியை அளித்து, தொடைகளுக்கு நல்ல ஆதரவாக உள்ளது.
இந்த காரின் பின்பகுதிக்கு சொன்றால், ஆல்டோ மற்றும் இயன் ஆகிய கார்களுடன் ஒப்பிட்டால், இதுவே வெற்றியாளராக வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த கார் உடன் போட்டியாளர்களான கார்களை வைத்து ஒப்பிடும் போது, உயரமான மக்களுக்கு கூட அதிக இதம் அளிப்பதாக உள்ளது. இதில் மூன்று பேர் பயணிக்கலாம் என்றாலும், அசவுகரியமாக உணரக் கூடும். பின்பக்கத்தை பொறுத்த வரை, இரண்டு பேர் கச்சிதமாக பயணிக்க முடியும். பின்பக்க சீட்களில் கூட முன்பக்கத்தை போல, மூன்று வர்ண அப்ஹோல்டரி அமைப்பை காண முடிகிறது. இந்த சீட்களில் வடிவங்கள் இல்லாமல்,இதமான தன்மைக்காக குஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீட்கள் சுமாரான உயரத்தை கொண்டு, பார்க்க நன்றாக உள்ளது.
இந்த 2018 ரெனால்ட் க்விட் காரில், சில நல்ல காரியங்களை தாங்கி வருகிறது. பின்பக்க சீட்களுக்காக ஒரு தரமான எமர்ஜென்ஸி லாக்கிங் ரீடிராக்டர் (இஎல்ஆர்) போன்ற அம்சங்களைப் பெற்றுள்ளது. இந்த இஎல்ஆர் என்பது ஒரு பாதுகாப்பு அம்சம் மட்டுமின்றி, பயணிகளின் அசைவுகளுக்கு தகுந்தாற் போல சீட் பெல்ட்களை விரிவாக்கம் செய்ய பயன்படுகிறது. மேலும் இது எமர்ஜென்ஸி பிரேக் அப்ளிகேஷனில் சீட் பெல்ட் லாக்கிங் செய்ய உதவி, முன்னே நோக்கி பயணி விழுவதை தடுத்து நிறுத்துகிறது. பழைய விரிவாக்கம் செய்ய முடியாத சீட் பெல்ட்களுடன் ஒப்பிடும் போது, இது ஒரு முக்கிய காரணியாக இருந்து, பார்வைக்கு சுருண்டு கிடக்கிறது. இது தவிர,பழைய பெல்ட்கள் நம்மை சுற்றிலும் அமைந்த வண்ணம் இருக்கும் நிலையில், டோரை மூடும் முன் அவற்றை நீங்கள் உள்ளிழுத்து கொள்ள வேண்டிய தேவை இருந்தது. பின்பக்க விண்டோக்களில் மேனுவல் ரோலர் அளிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. இந்த காரின் உயர் தர வகையானRxT (O) இல் கூட பவர் விண்டோ வசதி அளிக்கப்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கும் செய்தி ஆகும்.
நாம் இன்னும் பின்பக்கத்தை நோக்கி சென்றால், பின்பக்க சீட்டின் கீழே இருக்கும் கினாப் பயன்படுத்தியோ அல்லது சாவியை பயன்படுத்தியோ, பூட் திறக்க முடியும். இந்த பூட் இடவசதி மிகவும் அதிகமாக உள்ளது. இந்த காரில் உள்ள 300லிட்டர் பூட் என்பது இந்த துவக்க நிலை பிரிவில் மட்டுமின்றி, இதற்கு மேற்பட்ட ஒரு சில பிரிவுகளுக்கும் சவாலான ஒன்றாக உள்ளது.இதிலும் உங்கள் பொருட்களை வைக்க இடம் இல்லாமல் போகும் பட்சத்தில் பின்பக்க சீட்டை கீழ் நோக்கி படுக்க வைத்து, உங்களுக்கு தேவையான இடவசதி மேலும் அதிகரித்து கொள்ள முடியும்.
இந்த காரின் உட்புற அமைப்பியலை குறித்து எங்களின் கடைசி முடிவு: நீங்கள் அளிக்கும் பணத்திற்கு ஏற்ப, எண்ணற்ற அம்சங்களை நீங்கள் பெறுகிறீர்கள். ரெனால்ட் நிறுவனமும் இந்த காரின் உட்புறத்தை திருப்திகரமாக செய்துள்ளது (பட்ஜெட் விலையில்). எனவே இந்த காருக்குள் செலவிடும் நேரம், உங்கள் அனுபவத்தை கெடுக்கும் வகையில் அமையாது என்பது உறுதி.
பாதுகாப்பு
இந்த ரெனால்ட் க்விட் காரின் பாதுகாப்பு கிட் 2018 ஆம் ஆண்டு தான் மேம்படுத்தப்பட்டது என்றாலும், பல காரியங்களை இழந்ததாக தான் தெரிகிறது. இந்த காரின் உயர் தர வகையானRxT (O) இல் ஓட்டுநர் பகுதியில் ஏர்பேக் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பயணிகளுக்கான ஏர்பேக்குகள், எந்த ஒரு வகையிலும் ஒரு தேர்வாக கூட அளிக்கப்படவில்லை. இது தவிர, பாதுகாப்பு பேக்கேஜ்ஜில், ஆன்டி- லாக் பிரேக் (ஏபிஎஸ்) அளிக்க தவறியது ஒரு தவிர்க்க முடியாத இழப்பாக தெரிகிறது.இந்நிலையில் 2018 க்விட் காரில் அப்படி என்ன தான் மேம்படுத்தப்பட்டது என்று கேட்டால், ஒரு பின்பக்க கேமரா மற்றும் பின்பக்கத்தில் பயணிகளுக்கான3 புள்ளி இஎல்ஆர் சீட் பெல்ட்கள்ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. முன்பகுதியில் உள்ள பயணிக்கு இன்னும் ஒரு லெப் பெல்ட் தான்அளிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது,கிராஷ் சோதனைகளில் இன்னும் சிறந்த முடிவுகளை பெற வேண்டுமானால், க்விட் காரின் இந்த துறையில் ரெனால்ட் நிறுவனம் இன்னும் அதிகமாக செயல்பட வேண்டியுள்ளது
செயல்பாடு
0.8 SCe
இந்த க்விட் காரில் உள்ள இந்த என்ஜின், ஒரு புதிய 800சிசி அமைப்பு ஆகும். இந்த க்விட் காரின் உருவாக்கத்திற்கான செலவின் 50 சதவீத செலவு, என்ஜின் உருவாக்கத்திற்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒரு காரியமாகும். என்ஜின் மீது அவ்வளவு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலேயே அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட பெட்ரோல் என்ஜினை உருவாக்கிய பெருமையை ரெனால்ட் நிறுவனம் பெற்றுள்ளது.ARAI மதிப்பீட்டில், லிட்டருக்கு 25.17 கி.மீ. என்ற நிலையை பெற்றுள்ளது.ARAI மதிப்பீட்டில் ஆல்டோ காருக்கு லிட்டருக்கு 22.74 கி.மீ. மற்றும் இயன் காருக்கு லிட்டருக்கு 21.1 கி.மீ. என்ற அளவீடுகளைப் பெற்றுள்ளன.
இந்த மூன்று சிலிண்டர்களை கொண்ட என்ஜின்54PS ஆற்றலையும் 72Nm முடுக்கு விசையையும் வெளியிடுகிறது. இது ஒரு 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே பொருத்தப்படுகிறது. இந்த வாகனத்தில் ஒரு ஜோடிமட்டும் பயணிக்கும் நிலையில், இந்த என்ஜின் இதமான செயல்பாட்டை அளிக்கிறது. ஆனால் பயணிகள் மற்றும் சில சரக்குகளை கொண்டு இதை நிரப்பும் போது, இழுப்பதற்கு திணறுகிறது. இந்த என்ஜினை பொறுத்த வரை, நகர்புற சாலைகளுக்கு ஏற்றதாக உள்ளது. எனவே நெடுஞ்சாலைகளில் இதன் செயல்பாட்டின் மீது எதிர்பார்ப்பை வைக்க முடியாது.இந்த காரில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஒருவரை கொண்டு சேர்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் செயல்படும். இதில் அவ்வளவு கஷ்டத்தை உணராது.
இதில் ஒரு கசப்பான உண்மை என்னவென்றால், இந்த என்ஜின் அந்த அளவிற்கு மறுசீரமைப்பு செய்யப்படப்படவில்லை. இதில் மூன்று சிலிண்டர் டிரான் இருப்பதை தவிர்க்க முடியாத நிலையில், இந்த என்ஜினில் இருந்து வரும் சத்தம் குறைக்க முடியாத ஒன்றாக
உள்ளது. இந்த காரின் உயர்ந்த வகைகளுக்கு செல்ல தோறும் இந்த பிரச்சனை இன்னும் மோசமாகிறது. ஆனால் ஆல்டோ மற்றும் இயன் போன்ற கார்களை ஒப்பிட்டால், நிறுத்திய நிலையிலும் ஓடிக் கொண்டிருக்கும் நிலையிலும் மிகவும் அமைதியாக இருக்கின்றன.
1.0 SCe
இந்த காரின் உயர் தர வகைகளானRXT மற்றும் RXT (O) ஆகியவற்றில் மட்டுமே இந்த 1.0 லிட்டர் மோட்டார் அளிக்கப்படுகிறது. ஆனால் இதன் தகவமைப்புகளை 0.8 லிட்டர் தயாரிப்பில் இருந்து பகிர்ந்து கொள்கிறது. சிறிய என்ஜினில் இருந்த போர் மற்றும் ஸ்ட்ரோக் ஆகியவற்றை அதிகரித்துள்ள ரெனால்ட் நிறுவனம், அதிக டிஸ்ப்ளேஸ்மெண்ட் பெற்று, அதிக ஆற்றலை அளிக்கும் பொறுப்பை டிரைவ் ஷாப்ட் ஏற்பதை உறுதிப்படுத்தி உள்ளது. கூடுதலாக கிடைக்கும்14PS ஆற்றல் மூலம் பெரிய அளவிலான வித்தியாசத்தை காண முடிவதில்லை. அதே நேரத்தில், க்விட் காருக்கு சற்று கூடுதல் வேகம் கிடைக்க, மேலும் நிம்மதியாக உணருவதை காண முடிகிறது. எதிர்பார்த்தது போலவே, நெடுஞ்சாலை செயல்பாடுகளில், மூன்று இலக்க வேகத்தில் சென்றாலும், என்ஜின் சிரமப்படுவதாக தெரியாமல், முன்னேற்றத்தை பெற்றிருப்பதாக உணர முடிகிறது. ஆனால் சத்தம், அதிர்வு மற்றும் கடினத்தன்மை ஆகியவற்றில் 0.8 லிட்டர் என்ஜினின் நிலையில் இருந்து எந்த மாற்றமும் காண முடிவதில்லை. கடினமாக இயக்கும் நிலையில், ஒரே மாதிரியான சத்தம் மற்றும் வெளிப்புற ஒலிகளை கேட்க முடிகிறது.
0.8 லிட்டர் என்ஜின் இயக்கும் போது இன்னும் கூட சற்று வேகம் கிடைக்குமா என்று அவ்வப்போது ஏக்கத்தை உங்களுக்கு அளிக்கும். அதை 1.0 என்ஜின் மூலம் சற்று நிவர்த்தி செய்கிறது. மணிக்கு 0இல் இருந்து100 கி.மீ. வேகம் என்றநிலையை அடைய 13.90 வினாடிகளை எடுத்து கொள்கிறது. இது கவர்ச்சிகரமான ஒரு காரியம் அல்ல என்றாலும், இந்த பிரிவில் மட்டுமின்றி, இதற்கும் மேற்பட்ட பிரிவில் உட்படும் ஃபோர்டு ப்ரீஸ்டைல் பெட்ரோல் மற்றும் மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் டீசல் ஆகியவற்றை விட மேலானது ஆகும். க்விட் காரின் எடைக் குறைந்த தன்மை, இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்த என்ஜின் செயல்பாடு மூலம் க்விட் காரின் நகர்புற தன்மைகள் மேம்பட்டு, தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இது தவிர,0.8SCe என்ஜினை விட அதிக ஆற்றல் கொண்டது இந்த என்ஜின் என்பதை தவிர, அதன் சிக்கனமும் நன்றாக உள்ளது. பரிசோதனை செய்ததில், நகர்புற சாலைகளில் லிட்டருக்கு 20 கி.மீ. மற்றும் நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 23.02 கி.மீ. என்று அளிக்கிறது.
1.0 SCe AMT
மாருதி சுஸூகி ஆல்டோ K10 AGS காருக்கு போட்டியாக அமையும் வகையில், க்விட் காரில் AMT வகையை ரெனால்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேனுவல் வகையை விட இந்த இரண்டு பெடல் மட்டுமே கொண்ட வகைக்கு 30 ஆயிரம் ரூபாய் அதிகமாக செலவிட வேண்டியுள்ளது. இந்த விலையை சரிக்கட்டும் வகையில், இந்த வகையில் க்விட் இஸி-ஆர் அளிக்கப்படுகிறது.
பட்ஜெட் பிரிவில் அமைந்த AMT வகையை கொண்ட கார்களில், நாங்கள் ஓட்டிய கார்களில் சிறந்த்தாக இதை கூறலாம். கியர் மாற்றங்களில் ஏற்படும் அதிர்வுகள் மிகவும் குறைவாக உணர முடிகிறது. கியர்பாக்ஸ் ஏற்றங்கள் சீராக உயர்ந்து, சுழற்சி உள்ளீடுகள் ஏற்க கூடிய வகையில் அமைகிறது. படிபடியாக ஏற்றம் ஏற்படுகின்றன. இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட போது, இந்த டிரான்ஸ்மிஷன் அவ்வளவு சிறப்பான செயல்பாட்டை அளிக்கவில்லை. அதே நேரத்தில், 2018 ரெனால்ட் க்விட் காரில் அதை காண முடிகிறது. இதில் டிராஃபிக் அசிஸ்ட் என்று ரெனால்ட் லேபிளிட்டு உள்ளது. எளிமையாக கூற வேண்டுமானால், இந்த அம்சமானது (டட்சன் ரெடி கோ காரில் அளிக்கப்பட்ட AMT அம்சம்), ஆங்காங்கே நிறுத்தி செல்லும் சாலை நெரிசலில் திணறல் வேகத்திலும் காரை செலுத்த தொடர்ந்து ஆக்ஸிலேட்டரை அழுத்தி கொண்டே இருக்க வேண்டிய தேவையில்லை. இதில் தேவைப்படும் போது, ஓட்டுநர் முழு கட்டுப்பாட்டையும் கையில் எடுத்து கியரை மாற்றி கொள்ளக் கூடிய வகையில், மேனுவல் வசதி அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதை ஒரு பெரிய இழப்பு என்றே நாங்கள் கூறுவோம். ஏனெனில் ஒவ்வொரு முறையில் (ஒரு சிறிய தடுமாறல் உடன் செயல்படுகிறது) சரியான கியரில் தான் கியர்பாக்ஸ் அமைப்பு இருக்கும் என்று கூற முடியாது. எனவே தினந்தோறும் உள்ள வாழ்க்கையில் இதை நீங்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்படாது.
Performance Comparison (Petrol)
Datsun redi-GO | Renault KWID | Hyundai EON | |
Power | 53.64bhp@5600rpm | 53.26bhp@5600rpm | 55.2bhp@5500rpm |
Torque (Nm) | 72Nm@4250rpm | 72Nm@4250rpm | 74.5Nm@4000rpm |
Engine Displacement (cc) | 799 cc | 799 cc | 814 cc |
Transmission | Manual | Manual | Manual |
Top Speed (kmph) | 135 Kmph | ||
0-100 Acceleration (sec) | 19 Seconds | ||
Kerb Weight (kg) | 710 | 675 | 840 |
Fuel Efficiency (ARAI) | 20.71kmpl | 20.71kmpl | 21.1kmpl |
Power Weight Ratio | - | - | - |
அதே நேரத்தில், க்விட் 1.0 லிட்டர் மேனுவல் உடன் ஒப்பிடும் போது, வெளிப்புற செயல்பாட்டில் ஒரு கலப்படம் இல்லாத வித்தியாசத்தை காண முடிகிறது. மணிக்கு 0 – 100 கி.மீ. வேகத்தை எட்டுவதற்கு எடுத்துக்காட்டாக 17.44 வினாடிகள் எடுத்து கொள்கிறது. க்விட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் ஒப்பிட்டால், 3.5 வினாடி குறைவு ஆகும். இந்த இடைவெளியை வைத்து பார்த்தால், நம் எரிபொருள் சேமிப்பு சோதனைகளில் அதிகமாக ஒலிக்கிறது. இதன்மூலம் நகர்புறத்தில் க்விட் AMT காரில் லிட்டருக்கு 16.28 கி.மீ. மற்றும் நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 19.09 கி.மீ. மைலேஜ் அளிக்கிறது. இந்த இரு பாதைகளிலும் ஏறக்குறைய லிட்டருக்கு 4 கி.மீ. குறைவாக உள்ளது.
பயணம் மற்றும் கையாளும் திறன்
டஸ்டர் மற்றும் லாட்ஜி ஆகிய தயாரிப்புகளின் மூலம் பயணம் மற்றும் கையாளும் திறன் ஆகியவற்றில் சிறப்பான செயல்பாட்டை ரெனால்ட் நிறுவனம் அளித்துள்ளது. இந்த சிறப்பை க்விட் காரிலும் தெளிவாக காண முடிகிறது. ஒரு நகர்புற காராக இருக்க, சஸ்பென்ஷன் பகுதி மிகவும் மென்மையாக அமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் குண்டும் குழியும் உள்ள சாலைகளை சிறப்பாக கையாளுகிறது. உயர்வான கிரவுண்டு கிளியரன்ஸ் கொண்டுள்ளதால், நெருக்கமான முனைகளை கடந்து செல்ல இயலுகிறது. ஆனாலும் கையாளுதலில் எதிர்பார்க்கும் தன்மையை கொண்டு குதூகலிக்க முடிகிறது. இதில் உள்ள ஒரே பிரச்சனை 5 மீட்டர் டர்னிங் ரேடியஸ். இதனுடன் ஒப்பீட்டில் ஆல்டோ 800 காரில் 4.6 மீட்டர் டர்னிங் ரேடியஸை கொண்டுள்ளது. குறுகலான இடங்களை க்விட் கார் மூலம் கடந்து செல்ல, கொஞ்சம் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது.
இதன் பிரேக்குகளுக்கு சரியான பிடிமானம் இருப்பதோடு, எந்த திணறலும் இல்லாமல் இந்த காரை சரியான தகுந்த முறையில் நிறுத்த உதவுகிறது. அசுரத்தனமாக காரை ஓட்டும் நபரை விட, பொறுமையாக ஓட்டும் ஒருவருக்கு ஏற்ற வாகனமான க்விட் கார் இருக்கும் என்று தெரிகிறது. ஏனெனில் இதில்ABS வசதி இல்லாததால், அதிக அழுத்தத்துடன் பிரேக் பிடித்தால், முன்பக்க வீல்கள் லாக் ஆகிவிட வாய்ப்புள்ளது.
ஸ்டீயரிங் வீலை பொறுத்த வரை, குறைந்த வேகத்தில் லேசாக இருந்து, வேகத்தை கூட்டும் போதும் அப்படி உள்ளது. இது சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, நகர்புற சாலைகளில் இந்த காரை சிறப்பாக ஓட்டலாம். மேலும் மணிக்கு 100 கி.மீ. வேகத்திற்குள் ஓட்டும் போது, இதில் எந்த பிரச்சனையையும் சந்திக்க வாய்ப்பு இல்லை.
வகைகள்
இந்த க்விட் காரில் மொத்த ஐந்து வகைகள் அளிக்கப்படுகின்றன. அவையாவன: STD, RxE, RxL, RxT (O) மற்றும் கிளைம்பர். இதில் முதல் மூன்று வகைகளில் 0.8 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.RxT (O) வகையில் மேற்கூறிய 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என்று இரு என்று இரு மோட்டார் தேர்வுகளில் கிடைக்கிறது. மேலும்,RxT (O) மற்றும் கிளைம்பர் ஆகியவற்றில், ஆட்டோமேட்டேடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (ஏஎம்டி) வசதி கொண்டதாகவும் கிடைக்கிறது.
இந்த காரின் துவக்க வகை(STD) மிகவும் அடிப்படை வசதிகள் உடன் கூடியதாக உள்ளது. இதில் கருப்பு நிறத்திலான பம்பர்கள், பவர் ஸ்டீயரிங் அல்லது ஏசி ஆகியவை இல்லை. மேலும் மியூஸிக் சிஸ்டம் அல்லது ஸ்பீக்கர்கள் கூட கிடையாது. இந்த வகை ஒரு துவக்க நிலையிலான விலை குறைந்த க்விட் என்பதற்காகவே அளிக்கப்படுகிறது. இதனால் எங்கள் பரிந்துரைப்படி, இந்த வகையை தவிர்த்து விடுவது நல்லது.
இதற்கு அடுத்த வகையில்(RxE) ஒரு ஏசி மற்றும் ஒருசில அம்சங்களான முன்பக்க பயணிக்கான ஒரு சன் விஸர் மற்றும் ஒரு என்ஜின் இம்மொபைலைஸர் ஆகியவை அளிக்கப்படுகிறது. ஆனாலும் துவக்க நிலையை விட, மிகவும் தேறிய நிலையை காணப்படுகிறது. ஓட்டுவதற்கு சிரமத்தை ஏற்படுத்த கூடிய வகையில், இதிலும் பவர் ஸ்டீயரிங் அளிக்கப்படவில்லை.
இடைப்பட்ட நிலையில் உள்ளRxL வகையில் இருக்கும் அம்சங்கள் இன்னும் சிறப்பானதாக தெரிகிறது. இதில் ஒரு எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் மற்றும் மதிப்பு மிகுந்த தன்மைகளை கொண்ட ஒரு சுமாரான பயணத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்று உள்ளது. இதில் பாடி நிறத்திலான பம்பர்கள், வீல் கவர்கள், முன்பக்க பவர் விண்டோக்கள், 3 கேபின் லைட் மற்றும் ஒரு ஒற்றைDIN மியூஸிக் சிஸ்டம் உடன்AUX/USB/ ப்ளூடூத் இணைப்பு ஆகியவை அடங்கிய ஒரு பட்டியல் அம்சங்கள் அளிக்கப்படுகிறது.
உயர் தர வகையானRxT (O) இல் மட்டுமே 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில்ஒரு இரட்டை நிறத்திலான டேஸ்போர்டு, ஓட்டுநர் ஏர்பேக் மற்றும் ரிவெர்ஸ் கேமரா ஆகியவற்றையும் பெற்று உள்ளது. இந்த வகையை சேர்ந்த க்விட் காரை தான் எங்கள் பரிந்துரையாக உள்ளது. ஏனெனில்,இதில் அடிப்படையான தேவையாக இருக்கும் க்விட் காரின் என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளைக் கொண்டுள்ளது.
க்விட் காரை தனித்தன்மை கொண்டதாக மாற்றும் வகையில், அதிக சிறப்பு அழகியல் தன்மைகளை கொண்டதாக கிளைம்பர் வகை அமைகிறது. இதில் ஆரஞ்சு விங் மிரர்கள், முன்பக்க டோர்கள் மற்றும் பின்பக்க விண்ட் ஷில்டுகளில் கிளைம்பர் இன்சைனியா பெற்று, உட்புறத்தில் ஆரஞ்சு நிறத்திலான வரிகளை பெற்றுள்ளது. இந்த வகையில் எந்தொரு புதிய அம்சமும் சேர்க்கப்படாத நிலையில், இதற்கு முந்தைய வகையை விட, 25 ஆயிரம் ரூபாய் அதிகமாக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் 1.0 லிட்டர் என்ஜின் மட்டுமே பெற்று, மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும்AMT பவர் ட்ரெயின் தேர்வுகளைக் கொண்டுள்ளது. இது பார்க்க நன்றாக உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே இதை வாங்க முடியும்.
வெர்டிக்ட்
இந்த பிரிவில் மிகவும் இளமையான தன்மைகளோடு அளிக்கப்படும் ஒரு தயாரிப்பாக ரெனால்ட் க்விட் விளங்குகிறது. இதில் இரண்டு பிரிவுகளுக்கு மேற்பட்ட அம்சங்களான பார்வைக்கு கவர்ச்சிகரமானது, இடவசதி உடன் கூடிய கேபின் மற்றும் எரிபொருள் சிக்கனம் கொண்டது போன்றவற்றை பெற்றுள்ளது.
“2018 புதுப்பிப்பு மூலம் க்விட் காரில் நடைமுறைக்கு உகந்த அதிக அம்சங்களான ரிவெர்ஸ் கேமரா, ஏஎம்டி க்ரீப் மற்றும் மடக்கக் கூடிய தன்மை கொண்ட பின்பக்க சீட் பெல்ட்கள் ஆகியவற்றை ரெனால்ட்நிறுவனம்அளித்துள்ளது. அத
தவிர, விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை! எனவே க்விட் காரை வாங்கலாம் என்று நீங்கள் கருதினால், அது மிகவும் இனிமையான ஒரு வணிக செயல்பாடாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.”
மேலும் 2018 புதுப்பிப்பு மூலம் நடைமுறைக்கு ஏற்றதாக அமையும் ஒரு ரிவெர்ஸ் கேமரா, ஏஎம்டி க்ரீப் மற்றும் மடக்கக் கூடிய வசதி கொண்ட சீட் பெல்ட்கள் உள்ளிட்ட அம்சங்களை சேர்த்துள்ள ரெனால்ட் நிறுவனம், உங்களிடம் இருக்கும் பணம் மூலம் நகர்புற சாலைகளில் ஓட்டுவதற்கான சிறிய காரை வாங்குவதை மேலும் சாத்தியமாக்கி உள்ளது. இது தவிர, அளிக்கும் பணத்திற்கான திட்டத்தை மேலும் மதிப்பு கொண்டதாக மாற்றினாலும், காரின் விலையில் ஏறக்குறைய எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த க்விட் காரை நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தால், அது ஒரு இனிமையான வணிக செயல்பாடாக இருக்கும்.
ரெனால்ட் க்விட் 2015-2019 இன் சாதகம் & பாதகங்கள்
- நாம் விரும்பும் விஷயங்கள்
- நாம் விரும்பாத விஷயங்கள்
- கிரீப் செயல்பாடு மூலம் காரை நிறுத்துதல் மற்றும் புறப்படுதல் போன்ற நேரங்களில் மிகவும் இதமான சவுகரியமான ஓட்டும் திறனை பெற முடிகிறது.
- க்விட் காருக்கு அளிக்கப்பட்டுள்ள 1.0 லிட்டர் என்ஜின் மூலம் அதன் க்ரீப் எடை மேலும் லேசானதாக மாற்றப்பட்டு, உற்சாகவும் சக்தி வாய்ந்ததாகவும் செயல்பட வைக்கிறது. நகர்புற சாலைகளில் பயணிக்க, சிக்கனமான ஏஎம்டி ஒரு வரபிரசாதம் ஆகும்.
- 4 வருட சாலையோர இலவச உதவி உடன் எங்கும் கிடைக்காத 4 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கி.மீ. வரை உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.
- இந்த பிரிவிலேயே முதல் முறையாக, டச் ஸ்கிரீன், புதிய பின்பக்க ஆர்ரெஸ்ட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் போன்ற அம்சங்கள், இந்த காரின் உட்புற அமைப்பியலை சந்தையில் மேன்மையாக காட்டுகிறது.
- நகர்புற சாலைகளில் பயணிக்க நன்கு பொருந்தக் கூடிய பயண தரம்.
- SUV தழுவிய ஸ்டைலிங். இந்த பிரிவிலேயே எந்த காருக்கும் இல்லாத வகையிலான கிளாடிங் மற்றும் தடித்த அமைப்புகளை இது பெற்றுள்ளது.
- இந்த காரின் கேபினில் உள்ள ஏசி திறப்பி லிட்கள், ஏஎம்டி டயல் மற்றும் டோர் பேட்கள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் இன்னும் கூட தரமானதாக அமைத்து இருக்கலாம்.
- இந்த கார் எடைக் குறைவாகவும் மெலிசான டயர்களையும் கொண்டிருப்பதால்,நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் செல்லும் போது, நிலையான ஸ்டீயரிங் இணைப்புகள் தேவைப்படுகிறது.
- க்ரீப் செயல்பாடு இருந்தாலும், தாழ்வான பகுதிகளில் கார் நகர ஆரம்பித்து விடுகிறது என்பதால், ஒரு ஹேண்டு பிரேக் ஸ்டார்ட் போட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ரெனால்ட் க்விட் 2015-2019 car news
- நவீன செய்திகள்
- Must Read Articles
- ரோடு டெஸ்ட்
ரெனால்ட்டின் 3 மாடல்களின் லோயர்-ஸ்பெக் டிரிம்களுக்கு பணத் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் கிடைக்காது.
இது க்விட் EVக்கு ஒத்த புதிய LED DRL வடிவமைப்பில் அமைக்கப்பட்ட ஸ்ப்ளிட்-ஹெட்லேம்பைப் பெறுகிறது
க்வீட் முகப்பரு Renault City K-ZE மின் காரில் இருந்து வடிவமைப்பு உத்வேகம் எடுக்கக்கூடும்
நுழைவு அளவிலான ரெனால்ட் புதிய நிதியாண்டில் விலைக்கு விற்கப் போகிறது
முன்னணி முடிவுக்கு தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான புதுப்பிப்புகள், இது, பிரிப்பு பிளவு ஹெட்லேம்ப்ஸ் அமைப்பைக் கொண்டுள்ளது
2018 ரெனால்ட் குவிட்டில் என்ன மாறிவிட்டது? கண்டுபிடி
இயக்கி airbag மற்றும் ABS போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இப்போது நிலையானவை
2018 ரெனால்ட் க்விட் க்ளைம்மர் AMT: நிபுணர் விமர்சனம்
ரெனால்ட் குவிட் 1.0 லிட்டர் கையேடு மற்றும் AMT: விமர்சனம்
பெஞ்சமின் கிரேசியாஸ் எழுதிய சொற்கள் | Vikrant தேதி புகைப்படம்
ரெனால்ட் குவிட் 1.0: முதல் இயக்கி விமர்சனம்
ரெனால்ட் KWID முதல் இயக்கக விமர்சனம் பார்க்கவும்
ரெனால்ட் க்விட் 2015-2019 பயனர் மதிப்புரைகள்
- All (1354)
- Looks (445)
- Comfort (305)
- Mileage (381)
- Engine (223)
- Interior (170)
- Space (278)
- Price (271)
- மேலும்...
- நவீனமானது
- பயனுள்ளது
- Verified
- Critical
- Superm Of The ஆண்டை
Nice car with best mileage around 20+kmpl but 1 thing is cabin noice and small space with less ac chill best car of the year for me it's dream of middle class people.மேலும் படிக்க
- We've Owned The க்விட் ரோஸ்ட்
We've owned the kwid rxt amt since 2018 and in the period of 6 years we've had bad experiences from renault service centre and the car is not at all comfortable especially for tall passengers but it offers great mileageமேலும் படிக்க
- நல்ல நிலையில்
Good condition and compact vehicle for family. Well maintained vehicle with regular servicing track record. New tyres and complete servicing for the year had been completed. Overall good condition vehicle to buy. Thank youமேலும் படிக்க
- Average is good look good comfort average cost is low
Average is good look good comfort average cost is low, safety excellent ground clearance v.good..maintenance almost satisfactoryமேலும் படிக்க
- Car Experience
Best car in the range of 1 lakh and nice in feature and so much stylish but small and doesn't have a family carமேலும் படிக்க
ரெனால்ட் க்விட் 2015-2019 வீடியோக்கள்
- 6:25Renault KWID AMT | 5000km Long-Term Review6 years ago | 527.8K வின்ஃபாஸ்ட்
ரெனால்ட் க்விட் 2015-2019 படங்கள்
ரெனால்ட் க்விட் 2015-2019 -ல் 22 படங்கள் உள்ளன, ஹேட்ச்பேக் காரின் வெளிப்புறம், உட்புறம் & 360 காட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய க்விட் 2015-2019 -ன் படத்தொகுப்பைக் பாருங்கள்.
ரெனால்ட் க்விட் 2015-2019 உள்ளமைப்பு
ரெனால்ட் க்விட் 2015-2019 வெளி அமைப்பு
48 hours இல் Ask anythin g & get answer
கேள்விகளும் பதில்களும்
A ) The Renault KWID is priced in the range of Rs.2.76 - 4.75 Lakh*(Ex-Showroom Delh...மேலும் படிக்க
A ) We'd request you to connect with the nearest authorized service centre for the a...மேலும் படிக்க
A ) Yes, Renault Kwid is offered with a driver airbag.
A ) Renault kwid looks nice but because of 3 nuts wheel looks odd, even the light ca...மேலும் படிக்க
A ) The Renault KWID STD isn't offered with air conditioner. Stay tuned.