Choose your suitable option for better User experience.
  • English
  • Login / Register

மாசிராட்டி செய்தி & விமர்சனங்கள்

  • சமீபத்தில் செய்திகள்
  • 2015 துபாய் மோட்டார் ஷோவில் மாசெராட்டி நிறுவனம் 2+2 சீட்டர் அல்ஃபிரி கான்செப்ட் காரை காட்சிப்படுத்தும்

    மாசெராட்டி நிறுவனம் வரும் நவம்பர் மாதம் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 2015 துபாய் மோட்டார் ஷோவில், தனது 2+2 சீட்டர் அல்ஃபிரி கான்செப்ட் காரை காட்சிக்கு வைக்கவுள்ளது. இந்த கான்செப்ட் காரை, சென்ற வருடத்தில் நடைபெற்ற ஜெனீவா ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தி, இதன் விற்பனை அடுத்த ஆண்டு துவங்கும் என்று அறிவித்தது. மாசெராட்டி நிறுவனம், அல்ஃபிரி காரைத் தவிர, துபாயின் தேவைக்கு ஏற்றார்போல ஒரு புதிய வாகனத்தையும் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது. இதை பற்றிய கூடுதல் விவரங்கள் நடைபெறவுள்ள மோட்டார் ஷோவில் வெளிவரும்.

    By raunakஅக்டோபர் 22, 2015
  • டெல்லியில் ஒரு புதிய டீலர்ஷிப்பை பெற்று இந்தியாவிற்குள் மாசெராட்டி மீண்டும் நுழைகிறது

    புது டெல்லியில் கிடைத்துள்ள ஒரு புதிய ஷோரூம் மூலம் இந்தியாவிற்குள் மாசெராட்டி மறுபிரவேசம் செய்துள்ளது. மதுரா ரோட்டில், நவீன தொழில்நுட்பமான 3S வசதி கொண்ட AMP சூப்பர்கார்ஸ் உடன் டீலர்ஷிப் வைத்து இந்நிறுவனம் கைகோர்த்துள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பாளரான இந்நிறுவனம், ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் இந்தியாவுடன் (FCAI) இணைந்து செயலாற்றி, இந்திய சந்தைக்குள் மீண்டும் நுழைய போவதாக, கடந்த ஆண்டே அறிவித்தது. இந்த பிராண்ட்டின் அடுத்த டீலர்ஷிப்கள், மும்மை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய பிராண்ட் ஷோரூமில் அந்நிறுவனத்தின் முன்னணி மாடல்களான குவாட்ரோபோர்ட், கிப்லி, கிரான் டூரிஸ்மோ மற்றும் கிரான் கேப்ரியோ ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். இந்த 3S வசதி கொண்ட ஷோரூமில் விற்பனை மற்றும் விற்பனைக்கு பிறகுள்ள சர்வீஸ் என்ற இரண்டு வசதிகளையும் கொண்டிருப்பதோடு, வாடிக்கையாளர்களின் எல்லாவிதமான கார் தொடர்பான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்ய உதவும். மேலும் இந்த ஷோரூமில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேகமான வாடிக்கையாளர் காத்திருப்பு பகுதியில், மாசெராட்டியின் வரலாறு குறித்த காட்சியகமும், வாடிக்கையாளருக்கு தனது காரை குறித்த எல்லா தகவல்களையும் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பகுதியும் காணப்படுகிறது.

    By nabeelசெப் 23, 2015
  • லேவாண்டே SUV வாகனத்தின் தயாரிப்பு 2016  ல் தொடங்கும் என்று மெசராடி  நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

    அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் லேவாண்டே SUV வாகனத்தின் தயாரிப்பை தொடங்கப் போவதாக மெசராடி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கார் மார்ச் மாதத்தில் நடைபெற இருக்கும் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட்டு பின் அதன் உற்பத்தி தொடங்கப்படும் என்று தெரிகிறது. இதற்கு முந்தைய ஜீப் தொழில் நுட்பத்தை (ப்லேட்பார்ம்) கைவிட்டு க்யூபாங் கான்செப்ட் அடிப்படையில் இந்த SUV தயாரிக்கப்பட உள்ளது. இந்த புதிய வாகனம் முற்றிலும் மெசராடி நிறுவனதின் சொந்த தயாரிப்பாக இருக்கும் என்று அறியப்படுகிறது.

    By manishசெப் 22, 2015
Did you find this information helpful?
×
We need your சிட்டி to customize your experience