Toyota Innova Hycross விமர்சனம்: இன்னோவா -க்களில் இதுதான் சிறந்ததா ?
Published On ஜனவரி 11, 2024 By rohit for டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்
- 1 View
- Write a comment
புதிய தலைமுறையின் அறிமுகத்துடன், இது டொயோட்டா -வின் மிகப் பிரபலமான MPV ஆக இருந்து வருகிறது. இது எதற்காக இது வரை எதற்காக வாடிக்கையாளர்களிடம் பிரபலமாக இருந்து வந்ததோ அதிலிருந்து வேறுபட்டு தற்போது எஸ்யூவி -க்கான விஷயங்களைப் பெற்றுள்ளது. இப்போது இரண்டு எடிஷன்கள் இப்போது விற்பனையில் உள்ளன, எது உங்கள் தேர்வாக இருக்க வேண்டும்?.
இந்தியாவில் MPV வகையின் கார்களில் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட மிகவும் பிரபலமான கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா ஆகும். 2023 ஆம் ஆண்டின் இறுதியில், மூன்றாம் தலைமுறை டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் எங்களுக்கு கிடைத்தது. புதிய MPV ஆனது புதிய ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மற்றும் ஒரு ஃபிரன்ட்-வீல் டிரைவ் ட்ரெயின் (FWD) உட்பட பல விஷயங்களை பெறுகிறது, இவை அனைத்தும் இரண்டாம் தலைமுறை டொயோட்டா இன்னோவாவை விட (இன்னோவா கிரிஸ்டா என அழைக்கப்படும்) அதிக பிரீமியம் அனுபவத்தை வழங்குவதாக உறுதியளிக்கிறது. ஆனால் அது உண்மைதானா ?. இந்த விமர்சனத்தில் ஹைகிராஸின் (பெட்ரோல் மற்றும் ஸ்ட்ராங்-ஹைப்ரிட்) இரண்டு பதிப்புகளையும் ஒப்பிடுவதன் மூலம் அதை கண்டுபிடிப்போம்.
தோற்றத்தில் இரண்டும் மிகப் பெரியவை
முதல் விஷயம் - இன்னோவா ஹைகிராஸ் இது வரை வெளியானதிலேயே மிகப்பெரிய இன்னோவா ஆகும். இது சாலை -யில் இதன் தோற்றம் இதை நோக்கி மையப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது மற்றும் உயரத்தை தவிர அனைத்து பரிமாணங்களிலும் இன்னோவா கிரிஸ்டாவை விட பெரியது. முன்பக்கத்தில், இன்னோவா ஹைகிராஸின் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் பதிப்புகள் இரண்டுமே மல்டி-ரிஃப்ளெக்டர் LED ஹெட்லைட்கள் மற்றும் அதே பெரிய கிரில்லை கொண்டிருக்கின்றன. இருப்பினும், ஹைகிராஸ் பெட்ரோல் மாடலில் LED DRL -கள், ஃபாக் லைட்ஸ் மற்றும் குரோம் எலமென்ட் இல்லாதது ஆகியவற்றை முக்கிய வேறுபாடுகளாக பார்க்க முடிகின்றது.
பக்கவாட்டில், பெட்ரோல் ஹைகிராஸ் பாடி கலரில் டோர் ஹேண்டில்கள் மற்றும் அலாய் வீல்கள் (16-இன்ச் யூனிட்) ஆகியவற்றை பெறுகிறது. ஹைகிராஸ் ஹைப்ரிட், மறுபுறம், ORVM -களுக்கு கீழே ‘ஹைப்ரிட்’ பேட்ஜுடன் வருகிறது, குரோம் விண்டோ பெல்ட்லைன் மற்றும் டோர் ஹேண்டில்கள் மற்றும் பெரிய 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பின்புறத்தில், இரண்டும் ஒரு பெரிய பம்பர் மற்றும் ஒரு பிளாட்-இஷ் டெயில்கேட், ஸ்போர்ட்டிங் ரேப்பரவுண்ட் LED டெயில்லைட்களை பெறுகின்றன. MPV -யின் பெட்ரோல் பதிப்பில் ‘இன்னோவா ஹைகிராஸ்’ பேட்ஜ் மட்டுமே இருக்கின்றது. அதே வேளையில், ஹைகிராஸ் ஹைப்ரிட், டெயில்லைட்கள் மற்றும் வேரியன்ட் ஹைப்ரிட் என்ற எழுத்தை இணைக்கும் குரோம் ஸ்ட்ரிப் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
கேபினுக்குள் உள்ள வித்தியாசங்கள்
ஹைகிராஸ் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் ஆகியவற்றின் கேபினை பார்த்தால், இரண்டும் எவ்வளவு வித்தியாசமானது என்பதை அப்போதுதான் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஹைகிராஸ் பெட்ரோல் முழுவதுமாக பிளாக் கலர் கேபின் தீமில் இருக்கின்றது. ஹைப்ரிட் வேரியன்ட் பிளாக் மற்றும் டேன் நிற உட்புறத்தை கொண்டுள்ளன.
பெட்ரோல்-மட்டும் இன்னோவா ஹைகிராஸ் பேஸ் GX டிரிமில் மட்டுமே கிடைக்கிறது. எனவே இது டாஷ்போர்டு மற்றும் டோர் பேடுகளில் மாறுபட்ட சில்வர் எலமென்ட்கள் மற்றும் பிளாக் கிளாத் அப்ஹோல்ஸ்டரியுடன் மந்தமான பிளாக் நிற பிளாஸ்டிக்கை பெறுகிறது. ஆனால் அதன் விலையின் அடிப்படையில் பார்க்கப்போனால் ஃபிட் மற்றும் ஃபினிஷ் (மெலிவான ஸ்டால்க்குகள் மற்றும் மோசமான தரம் கொண்ட கப் ஹோல்டர் தரம் உட்பட ஆகியவை இன்னும் கொஞ்சம் சிறப்பானதாக இருந்திருக்கலாம்.
மறுபுறம், ஹைகிராஸ் ஹைப்ரிட்டின் டேஷ் போர்டின் வடிவமைப்பு, இதுவரை டொயோட்டா கார்களில் இருந்ததை விட மிகவும் தெளிவானதாகவும் நவீனமாகவும் இருக்கிறது. டொயோட்டா டாஷ்போர்டின் மையப் பகுதி உட்பட முன் வரிசையில் உள்ள பெரும்பாலான டச் பாயிண்டுகளுக்கு சாஃப்ட்-டச் லெதரெட் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளது, இது கேபினுக்குள் பிரீமியம் மற்றும் வசதியான அனுபவத்தை கொடுக்கின்றது. சென்டர் கன்சோல், டோர் பேட்கள் மற்றும் ஸ்டீயரிங் முழுவதும் சில்வர் ஆக்ஸென்ட்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதை இங்கே நீங்கள் பார்க்கலாம். சென்டர் கன்சோலில் உள்ள சில பேனல்கள் மற்றும் ஸ்டீயரிங் -ல் உள்ள கன்ட்ரோல்கள் ஆகியவற்றில் இன்னும் கொஞ்சம் உயர்தர பிளாஸ்டிக்கை டொயோட்டா பயன்படுத்தியிருக்க வேண்டும். அது கேபினைக் கச்சிதமாக மாற்றியமைத்திருப்பதோடு இன்னும் சிறப்பான மதிப்பெண்ணை பெற்றிருக்க உதவியிருக்கும் என நாங்கள் நினைக்கிறோம். .
இடப்பற்றாக்குறை அல்லது பிராக்ட்டிக்கல் பிட்கள் இல்லை
இன்னோவா ஹைகிராஸில் உள்ள இருக்கைகள் நீண்ட தூரத்திற்கு கூட ஏற்றதாகவும் வசதியாகவும் இருக்கும், மேலும் டிரைவர் சீட் 8 வே பவர் அட்ஜஸ்ட்மெண்ட் வசதியையும் கொண்டிருக்கிறது. பயணிகள் இருக்கை -யில் பவர்டு அம்சம் கொடுக்கப்படவில்லை என்றாலும் கூட வென்டிலேஷன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது ஒர் நல்ல விஷயம். டொயோட்டாவின் எம்பிவி -யில் டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் இருப்பதால் நீங்கள் உயரமாக அமரலாம், ஓட்டுநருக்கு ஏற்ற சிறந்த நிலையை எளிதாகக் கண்டறியலாம். இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரிட் கூடுதல் வசதிக்காக மெமரி செயல்பாட்டுடன் எலக்ட்ரிக்கலி சீட் அட்ஜஸ்ட்மென்ட் வசதியையும் பெறுகிறது.
ஆனால் இன்னோவா ஹைகிராஸை நமது சந்தையில் உள்ள சராசரி MPV -களில் இருந்து வேறுபடுத்துவது இரண்டாவது வரிசை தரும் அனுபவமாகும், இது சராசரி அளவிலான பெரியவர்களுக்கு வழங்க நிறைய இடத்தை கொண்டுள்ளது. ஹைகிராஸ் பெட்ரோலின் இரண்டாவது வரிசை ஒரு பட்டனைத் தொட்டால் மடங்காது. சாய்த்தவாறு முன்னோக்கி தள்ள முடியும். ஆனால், நீங்கள் அதைத் தாண்டிப் பார்க்க முடிந்தால், கடைசி வரிசையில் நீங்கள் செல்வதற்கு நிறைய இடம் இருக்கிறது.
ஹைகிராஸ் ஹைப்ரிட்டின் இரண்டாவது வரிசையானது, இந்த புதிய இன்னோவாவின் மிகவும் குறிப்பிடத்தக்க வசதி ஒன்றை பெறுகிறது: ஓட்டோமான் இருக்கைகள். இருக்கைகள் சிரமமின்றி பின்புறமாக சரிந்து, போதுமான கால் அறையை வழங்குகின்றன, மேலும் கிட்டத்தட்ட முழுமையாக சாய்ந்து கொள்கின்றன. மேலும், காலுக்கான சப்போர்ட் சீராக முன்னோக்கி நகர்கிறது, இது ஒரு தூக்கம் அல்லது சௌகரியமான சவாரிக்கு ஏற்றது. இரண்டாவது வரிசையில் உள்ள மற்ற சிறப்பம்சங்களை பார்க்கும் போது ஃபிளிப்-அப் டேபிள்-உண்மையில் கொஞ்சம் உறுதியானதாக இருந்திருக்க வேண்டும். டோர் பாக்கெட்டில் கப்ஹோல்டர்கள், USB போர்ட்கள், சன்ஷேடுகள் மற்றும் ரூஃபில் பொருத்தப்பட்ட ஏர் கான்வென்ட்கள் ஆகியவையும் உள்ளன.
ஹைகிராஸ் பெட்ரோல் மற்றும் ஹைகிராஸ் ஹைப்ரிட் இரண்டின் மூன்றாவது வரிசைக்கு வரும்போது, எட்டு பேர் கொண்ட குடும்பத்தை வசதியாக ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. நீங்கள் இருக்கைகளில் சாய்ந்து கொள்ளலாம் மற்றும் 3 சாதாரண அளவிலான நபர்கள் குறுகிய பயணங்களுக்கு எளிதாக அமரலாம். ஹைகிராஸ் ஹைபிரிட்டில், ஓட்டோமான் இருக்கைகளை வசதியான அமைப்பிற்கு மாற்றலாம், மூன்றாவது வரிசையில் இரண்டு பெரியவர்களை எளிதாக அமரலாம். லெக்ரூம் நன்றாக உள்ளது, 6-அடி உடைய நபர்களுக்கு ஏற்றது, மற்றும் இருக்கைகள் சாய்ந்து கொள்ளலாம். தொடையின் கீழ் இடம் கூட, பொதுவாக பின் வரிசையில் சமரசம் செய்து கொள்ளும் வகையில் இல்லை. ஆறு பெரியவர்களுடன் நீண்ட பயணங்கள் செய்யக்கூடிய வகையிலேயே உள்ளது ஆனால் குறைந்த அகலம் காரணமாக பின்புற பெஞ்சில் மூன்று பேர் அமர்வது நெருக்கமாக அமர்ந்திருக்கும் உணர்வை தரும். மூன்றாவது வரிசையில் நுழைவது சற்று சிரரமமாக இருக்கலாம், ஏனெனில் இரண்டாவது வரிசை இருக்கைகளை கைகளை வைத்தே முன்னோக்கி நகர்த்த வேண்டும், அதே நேரத்தில் சீட்பேக்கை சாய்ந்திருக்க வேண்டும் (எலக்ட்ரிக் அட்ஜஸ்ட்மென்ட் காரணமாக சிறிது நேரம் எடுக்கும்) நுழைவதற்கான இடத்தை உருவாக்க வேண்டும். இருப்பினும், கடைசி வரிசையில் நடுத்தர பயணிகளுக்கு ஹெட்ரெஸ்ட் மற்றும் 3-பாயின்ட் சீட்பெல்ட்டை வழங்கியதற்காக டொயோட்டா -வை பாராட்ட வேண்டும்.
இது ஒரு பிரபலமான மக்கள் பயணம் செய்யும் காராக இருப்பதால், இன்னோவா ஹைகிராஸ் நடைமுறை என்று வரும்போது கொஞ்சம் கூட குறை வைப்பதில்லை. நான்கு கதவுகளிலும் 1 லிட்டர் பாட்டில் ஹோல்டர்கள் உள்ளன, மேலும் மூன்றாவது வரிசை பயணிகளுக்கு பிரத்யேக கப் ஹோல்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. முன்னால் மற்றொரு ஜோடி கப் ஹோல்டர்கள் உள்ளன (ஒன்று முதல் வரிசை ஏசி வென்ட்களுக்கு முன்னால் மற்றும் மற்றொன்று சென்டர் கன்சோலில்), மற்றும் முன் ஆர்ம்ரெஸ்டின் கீழ் ஒரு சேமிப்பு பகுதியும் உள்ளது.
ஸ்மார்ட்போன் அல்லது வாலட் போன்ற உங்களின் மற்ற பொருள்களை வைக்க விரும்பினால், பெரிய டோர் பாக்கெட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் டாஷ்போர்டில் பெரிய சேமிப்பகப் பகுதியும் உள்ளது. இந்த இடத்தில் ஏதேனும் ஒன்றை அடைய ஓட்டுநர் சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும்.
முன்பக்க பயணிகளுக்கு ஒரு Type-C போர்ட் மற்றும் USB போர்ட் மற்றும் 12V பவர் சாக்கெட் மற்றும் 2வது வரிசையில் இரண்டு டைப்-சி போர்ட்களுடன் சார்ரிங் ஆப்ஷன்கள் நிறையவே உள்ளன. மூன்றாவது வரிசையில் இருப்பவர்களுக்கு 12V சாக்கெட் மட்டுமே வழங்கப்படுகிறது.
பைகளை அடுக்கி வைக்க நிறைய இடம் உள்ளது
இன்னோவா ஹைகிராஸ் காரின் இரண்டு பதிப்புகளிலும் சிறிய மற்றும் முழு அளவிலான ட்ராலி பைகளை மூன்றாவது வரிசை -யில் வைக்க முடியும். கடைசி வரிசையை மடக்கினால், டொயோட்டா MPV ஆனது மூன்று டிராலி பேக்குகளை வைப்பதற்கான போதுமான இடவசதியையும், இரண்டு கூடுதல் சாஃப்ட் பேக்குகளை வைப்பதற்கான இடவசதியை கொண்டுள்ளது.
ஹைகிராஸ் பெட்ரோல் அதன் ஹைப்ரிட் மாடலை காட்டிலும் கொண்டிருக்கும் ஒரு கூடுதல் நன்மை என்னவென்றால், சிறிய அல்லது லேப்டாப் பைகளை வைப்பதற்கு ஃப்ளோர்போர்டில் சில கூடுதல் சேமிப்பு இடத்தைப் பெறுகிறது. MPV -யின் மற்ற பதிப்பில் உள்ள இந்த பகுதி அதன் ஸ்ட்ராங்-ஹைபிரிட் அமைப்பிற்காக பேட்டரிகளால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஹைகிராஸ் ஹைப்ரிடில் உள்ள பொருட்களை உங்கள் லக்கேஜில் ஏற்றுவது ஒரு பிரச்சனையாக இல்லை, ஏனெனில் கடைசி வரிசை இருக்கைகளை மடித்து வைக்கும்போது தட்டையான தளம் கிடைக்கின்றது.
இரண்டும் என்ன தொழில்நுட்பத்தை கொண்டிருக்கின்றன?
இன்னோவா அதன் மூன்றாம் தலைமுறை மாதிரியுடன் கணிசமாக மேம்படுத்தப்பட்ட ஒரு துறையானது உபகரணங்களின் தொகுப்பாகும். ஹைகிராஸ் பெட்ரோலை பற்றி முதலில் பார்க்கலாம். இது 8 இன்ச் டச் ஸ்கிரீன் அமைப்புடன் வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, நான்கு பவர் விண்டோக்கள், 4-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் மற்றும் 4.2 இன்ச் கலர் MID ஆகியவற்றைப் பெறுகிறது. டொயோட்டா ஆட்டோ ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றை இந்த விலையில் கொடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
ஆனால் நீங்கள் உண்மையிலேயே பிரீமியம் எப்படி இருக்கும் என்பதை அனுபவிக்க விரும்பினால், அம்சங்களின் அடிப்படையில் முழுப் பலன்களை பெற ஹைகிராஸ் ஹைப்ரிட்டை தேர்வு செய்யுங்கள். இது 10 இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட், டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
டொயோட்டா 360 டிகிரி/ரிவர்சிங் கேமராவின் ஊட்டத்தை மெருகூட்டி, இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டிற்கு அதிக லேக்-ஃப்ரீ இன்டர்ஃபேஸை வழங்கியிருந்தால் நாங்கள் அதை இன்னும் அதிகமாக விரும்பியிருப்போம். உபகரணங்களை பொறுத்தவரை, ஹைகிராஸ் ஹைப்ரிட் அம்சங்களின் பட்டியலின் ஒரு பகுதியாக வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் நடுத்தர வரிசை இருக்கைகளுக்கான இருக்கை வென்டிலேஷன் ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும்.
பாதுகாப்பை பற்றியும் கவலை இல்லை
நீங்கள் ஹைகிராஸ் பெட்ரோல் வேரியன்ட்டை தேர்ந்தெடுத்தால், அதன் பாதுகாப்பு வலையில் டூயல் ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் ரிவர்ஸ் கேமரா ஆகியவை அடங்கும். இதில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்களும் கொடுக்கப்படவில்லை.
ஹைகிராஸ் ஹைப்ரிட் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 6 ஏர்பேக்குகள் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன்-கீப் அசிஸ்ட், ரியர் கிராஸ் ட்ராஃபிக் அலர்ட் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை கிடைக்கும்.
இன்ஜினில் உள்ள ஒரு மாற்றம்
ஜெனரேஷன் அப்டேட் உடன், பிரபலமான டொயோட்டா MPV முதல் முறையாக பெட்ரோல்-ஒன்லி காராக மாறியது. முதலில் ஹைகிராஸ் பெட்ரோல் பற்றி பேசுவோம். இது 173 PS மற்றும் 209 Nm அவுட்புட்டை கொடுக்கும் 2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் இன்ஜினை பெறுகிறது. இது CVT கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும். இது மிகவும் உற்சாகமான இன்ஜின் இல்லை என்றாலும், தேவைப்படும் வேலையைச் செய்ய இது போதுமானது. CVT -யும் நல்ல ரெஸ்பான்ஸை கொடுக்கின்றது மற்றும் இன்ஜின் நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தை வசதியாக கையாளுகிறது. மூன்று இலக்க வேகத்தில் முந்துவதற்கு பொறுமை தேவை. இருப்பினும், இது தவிர, இந்த இன்ஜினில் சில குறைபாடுகள் உள்ளன. செங்குத்தான சாய்வுகளில், மோட்டாரை ரெவ் செய்யும் போது CVT -யிலிருந்து வரும் சத்தம் மட்டுமே தொந்தரவாக இருக்கிறது, ஆனால் ஒட்டுமொத்தமாக கார் நன்றாகச் செயல்படுகிறது என்றே கூற வேண்டும்.
ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களில் 2-லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் 168-செல் Ni-MH பேட்டரி பேக் மற்றும் ஒரு மின்சார மோட்டார் உட்பட ஸ்ட்ராங்-ஹைபிரிட் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து 184 PS அவுட்புட்டை கொடுக்கின்றன. இன்ஜின் 188 Nm டார்க்கை உருவாக்குகிறது, அதே நேரத்தில் எலக்ட்ரிக் மோட்டார் 206 Nm வழங்குகிறது. இந்த சக்தியானது இ-டிரைவ் எலக்ட்ரிக் டிரான்ஸ்மிஷன் மூலம் முன் சக்கரங்களுக்கு பிரத்தியேகமாக செலுத்தப்படுகிறது.
ஓட்டுநருக்கான கட்டுப்பாடுகள் எளிதாக, சிறந்த சாலை பார்வை மற்றும் ஒரு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் சிரமமின்றி உள்ளது. இது அனுபவமற்ற ஓட்டுநர்களுக்கும் ஏற்றது. இது வெவ்வேறு டிரைவ் மோட்களை வழங்குகிறது : ஸ்போர்ட், நார்மல் மற்றும் இகோ -இவை த்ரோட்டில் ரெஸ்பான்ஸை சற்று மாற்றும். இது ஓட்டுவதில் ஈடுபாடு கொண்டதாக இருந்தாலும், குறிப்பாக ஸ்போர்ட்டியாக இல்லை. திருப்பமான சாலைகளில் சிலிர்ப்பான அனுபவத்தை வழங்குவதற்குப் பதிலாக, நிதானமான நெடுஞ்சாலையில் பயணம் செய்வதற்கும் அமைதியான நகரத்தை ஓட்டுவதற்கும் ஏற்ற காராக இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
பழைய இன்னோவா (கிரிஸ்டா) உடன் ஒப்பிடும் போது, இயந்திர செயல்திறன் மற்றும் நகரம் மற்றும் நெடுஞ்சாலைத் திறன்கள் ஆகிய இரண்டிலும், இரண்டு டிரைவ் டிரெய்ன்களும் ரீஃபைன்மென்ட் அடிப்படையில் ஒரு படி மேலே உள்ளன. இருப்பினும், பாடி-ஆன்-ஃபிரேம் கட்டுமானம் மற்றும் ரியர்-வீல்-டிரைவ் (RWD) வடிவில் முரட்டுத்தனத்தின் அடிப்படையில் இன்னோவா கிரிஸ்டாவிற்கு சில தளங்களை கொடுத்துள்ளனத். எனவே இன்னோவா கிரிஸ்டா இன்னும் மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் கரடுமுரடான சாலைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ஒட்டுமொத்தமாக சிறப்பான சவாரி தரம்
சஸ்பென்ஷன் நன்றாக டியூன் செய்யப்பட்டுள்ளது: அதிகப்படியான சத்தம் எதுவும் இல்லாமல் மேற்பரப்பில் உள்ள அதிர்வுகளை திறம்பட நிர்வகிக்கிறது. நெடுஞ்சாலையில், அது மூன்று இலக்க வேகத்தில் கூட திடமானதாகவும் நம்பிக்கையை கொடுக்கும் வகையிலும் உள்ளது. அனைத்து இருக்கைகளிலும் ஆள்கள் இருந்தாலும், கார் பல்வேறு வகையான சாலைகளை நன்றாகக் கையாளுகிறது, மேலும் பெரிய மேடுகளை சமாளிக்கின்றது. நெடுஞ்சாலைகளில், அதிக மென்மையாக உணர வைக்காமல் நிலைத்தன்மையை பராமரிக்கிறது. குறைவான பயணிகளுடன், குறைந்த வேக சவாரி சற்று உறுதியானதாக இல்லாததை போல இருக்கலாம், ஆனால் இது ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினை அல்ல. பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு ஏற்றதாக இருக்கும் இந்த வர்த்தகம் நீண்ட காலத்திற்கு உங்களுடன் பயணிப்பவர்கள் பாராட்டும் வாகையில் இந்த கார் அமையும்.
முக்கியமான விவரங்கள்
இன்னோவா ஹைகிராஸ் உடன், டொயோட்டா அதன் பிரபலமான MPV-க்கு பல அம்சங்களில் எஸ்யூவிக்கான விஷயங்களைக் கொடுத்துள்ளது. புதிய இன்னோவா ஹைகிராஸ் ஆனது, இன்னோவா கிரிஸ்டா -வின் ஏற்கனவே உள்ள முக்கியமான விஷயங்களை இன்னும் அதிகமாக கொடுக்கின்றது, இருப்பினும் அது கடினமானதாக இல்லை.
ஹைகிராஸ் பெட்ரோல், அடிப்படை காராக இருந்தாலும் கூட, பெரிய MPV தேவைப்படுபவர்களுக்கு ஏற்றது, அது வசதியாக ஏழு பேரை ஏற்றிச் சென்று வேலையைச் செய்துவிடும். அதன் அடிப்படை கார் என்பதால் அதை கருத்தில் கொண்டு பார்க்கப்போனால் அதை சற்று மேம்படுத்துவதற்கு நீங்கள் சில கூடுதல் பணத்தைச் செலவிட வேண்டியிருக்கும்.
ஹைகிராஸ் ஹைப்ரிட் -க்கான பணத்தை செலவிட நீங்கள் தயாராக இருந்தால், சிறப்பான தோற்றம், மிகவும் திறமையான பவர்டிரெய்ன் மற்றும் சிறப்பான அம்சங்களின் தொகுப்பு உட்பட பலவற்றை நீங்கள் பெறலாம். அதன் இரண்டாவது வரிசை அனுபவம் இந்த விலைக்கு மற்ற எந்த கார்களுடனும் ஒப்பிட முடியாத வகையில் உள்ளது. டொயோட்டாவை வைத்திருப்பதன் நம்பகத்தன்மை மற்றும் குறைந்த சேவை செலவுக்கான காரணிகளை சேர்த்து பார்க்கப்போனால், அது காருடன் நாம் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தை இனிமையாக்குகிறது.