Toyota Hyryder விமர்சனம்: இந்த காரில் உள்ள ஹைப்ரிட் மதிப்புள்ளதுதானா?
Published On மே 14, 2024 By ansh for டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
- 1 View
- Write a comment
ஹைரைடரில் நீங்கள் பிரிவின் சிறந்த மைலேஜை பெறுவீர்கள். ஆனால் இந்த காரை வாங்கும் முடிவில் சமரசம் செய்து கொள்ளக்கூடிய சில விஷயங்களும் உள்ளன.
உங்கள் குடும்பத்திற்காக காம்பாக்ட் எஸ்யூவியை வாங்க நீங்க முடிவு செய்தால் நிறையவே ஆப்ஷன்கள் உள்ளன. சில கார்கள் சிறப்பான செயல்திறனை வழங்குகின்றன. சில கார்கள் பாதுகாப்பில் 5-நட்சத்திர மதிப்பீடுகளைக் கொண்டுள்ளன. மேலும் சில வசதிகள் மேலே உள்ள ஒரு பிரிவுக்கு சவாலாக உள்ளன. ஆனால் உங்களுக்கு சிறந்த மைலேஜ் கொண்ட கார் தேவைப்பட்டால் உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன அவற்றில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர். எனவே இந்த ரோடு டெஸ்ட் ரிவ்யூவில் ஹைரைடரை விரிவாக ஆராய்ந்து சிறந்த மைலேஜ் -க்காக ஏதேனும் சமரசம் செய்ய வேண்டியிருக்குமா என்று பார்க்கலாம்.
ஒரு காம்பேக்ட் கீ
ஹைரைடர் காருக்கு ஒரு சிறிய பிளாக் செவ்வக வடிவம் கொண்ட கீ கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு பட்டன்கள் உள்ளன: லாக் மற்றும் அன்லாக். மாருதி கார்களிலும் இதையே கீ கிடைப்பதால் வேறு லோகோவுடன் இந்த சாவியை நீங்கள் முன்பே பார்த்திருக்க வாய்ப்புள்ளது.
லாக் மற்றும் அன்லாக் ஃபங்ஷனை மட்டுமே வழங்கும் அதே வேளையில் நீங்கள் அன்லாக் பட்டனை அழுத்தியவுடன் அனைத்து கதவுகளையோ அல்லது டிரைவர் டோரை திறக்க ஹைரைடரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரிலிருந்து டிரைவர் டோரை திறக்க கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். மேலும் எஸ்யூவி -யின் முன் டோர்கள் இரண்டும் ஹேண்டில்களில் பட்டன்களை கொண்டுள்ளன. அவற்றால் உங்கள் பாக்கெட்டில் இருந்து சாவியை எடுக்காமல் காரை லாக் செய்யவோ அல்லது அன்லாக் செய்யவோ முடியும்.
இப்போது டொயோட்டா ஹைரைடர் காரின் தோற்றத்தை பற்றி பார்ப்போம்.
பிரீமியமாகத் தெரிகிறதா? நிச்சயமாக.
ஹைரைடரின் அளவு மற்றும் சில்ஹவுட் அதன் மாருதி இணையான கிராண்ட் விட்டாராவை போலவே இருந்தாலும் டொயோட்டா ஹைரைடரை அதிக பிரீமியமாகக் காட்ட முடிந்துள்ளது. இந்த பிரீமியம் ஃபீல் முன்பக்கத்தில் ஸ்பிளிட் LED DRL -கள் குரோம் எலமென்ட்கள் மற்றும் பம்பரில் உள்ள ஷார்ப்பான் கட்ஸ் ஆகியவற்றிலிருந்து வருகிறது. இது எஸ்யூவி -க்கு நவீனமான தோற்றத்தை கொடுக்கின்றது.
பக்கவாட்டில் ஸ்டைலான 17-இன்ச் அலாய் வீல்கள் தெரிகின்றன. மேலும் இது வீல் ஆர்ச்கள் டோர் கிளாடிங், பெரிய பின்புற தோற்றம் மற்றும் பெரிய பின்புற பம்பர் ஆகியவற்றிலிருந்து அதன் மஸ்குலர் எஸ்யூவி தோற்றத்தை பெறுகிறது. இந்த பிரீமியம் மற்றும் மஸ்குலர் பிட்கள் அனைத்தும் இணைந்து ஹைரைடருக்கு சிறப்பான சாலை தோற்றத்தை வழங்குகின்றன.
ஆனால் இந்த வடிவமைப்பில் இருந்திருக்கக் கூடாத ஒரு எலமென்ட் உள்ளது. பானட்டின் கீழே மற்றும் DRL -களுக்கு இடையில் கார்பன் ஃபைபர் போன்ற தோற்றத்தை கொடுக்கும் எலமென்ட் உள்ளது. ஒரு காரில் கார்பன் ஃபைபர் எலமென்ட்களை சேர்ப்பது ஒரு நல்ல டச் ஆனால் நிலைத்தன்மையுடன் மட்டுமே இருக்கின்றது. இங்கே இந்த ஒரு இடத்தைத் தவிர கார்பன் ஃபைபர் எங்கும் இல்ல இது முன்பகுதியில் உள்ள தனித்து தெரிய வைக்கின்றது.
பூட் பகுதி சமரசம் செய்யப்பட்டுள்ளது
ஒரு ஃபேமிலி எஸ்யூவி -க்கு பூட் ஸ்பேஸ் ஒரு மிக முக்கியமான விஷயம். பயணங்களுக்குச் செல்வதற்கு உங்கள் எல்லா பொருள்களையும் வைக்க இடம் தேவைப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஹைரிடரின் ஹைபிரிட் வேரியன்ட்களில் அதை சமரசம் செய்ய வேண்டியுள்ளது. பூட் பகுதியில் ஒரு பேட்டரி இருப்பதால் பூட் பகுதி சமரசம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக இடவசதி குறைகின்றது. காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் இன்னும் பல மாடல்கள் உள்ளன. அவற்றில் சில 4-5 சூட்கேஸ்களை எளிதாக சேமிக்க போதுமான இடத்தை வழங்குகின்றன. ஒரு விரிவான ஒப்பீட்டை நீங்கள் இங்கே பார்க்கலாம்
இருப்பினும் நீங்கள் எதையும் இங்கே வைக்க முடியாது என்பது போல் இல்லை. நீங்கள் இங்கே எளிதாக 3 பைகளை வைக்கலாம் இன்னும் ஒரு ஹேண்ட்பேக்கை வைக்க பக்கத்தில் இன்னும் இடம் உள்ளது. மேலும் உங்களிடம் அதிக லக்கேஜ்கள் இருந்தால் பின் இருக்கைகள் 40:60 ஸ்பிளிட் செய்து கொள்ளலாம். எனவே நீங்கள் அவற்றை மடிப்பதன் மூலமாக பொருள்களை எளிதாக வைக்கலாம்.
உள்ளே பிரீமியமான தோற்றம்
ஹைரைடரின் பிரீமியம் தோற்றம் கேபினுக்குள்ளும் இருக்கின்றது. டாஷ்போர்டு டூயல்-டோன் தீம் குரோம் எலமென்ட்கள் மற்றும் பியானோ பிளாக் பிட்கள் போன்ற பல எலமென்ட்களால் ஆனது. டாஷ்போர்டு டோர்கள் மற்றும் சென்டர் கன்சோலில் உள்ள சாஃப்ட்-டச் பொருட்கள் மற்றும் ஒட்டுமொத்த கேபின் தரம் ஆகியவற்றில் பிரீமியம் ஃபீல் தரப்பட்டுள்ளது.
ஹைரைடரின் கேபின் பிளாக் மற்றும் டார்க் பிரெளவுன் நிறத்தில் வருகிறது. இது ஒரு சிலருக்கு பிடிக்காமல் போகலாம் மந்தமாகவும் இருக்கும். ஆனால் பிட் மற்றும் ஃபினிஷ் அதற்கு ஏற்றபடி ஈடு செய்கிறது. கேபினுக்குள் புகார் எதுவும் இல்லை மேலும் இங்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளின் ஃபிட் நன்றாக உள்ளது. மோசமான எலமென்ட்கள் எதுவும் இல்லை. பட்டன்கள் கிளிக் மற்றும் நன்றான உணர்வைக் கொடுக்கின்றன. மேலும் சாஃப்ட்-டச் லெதர் வசதிக்கு ஏற்றபடி இருக்கின்றது. மற்றும் கேபினுக்கு கூடுதலான அப்மார்கெட் ஃபீலை கொடுக்கின்றது.
வாகனம் ஓட்டும்போது முன் இருக்கைகள் சீரான குஷனிங்குடன் வசதியாக இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். இந்த இருக்கைகள் பெரிய கான்டூரை கொண்டுள்ளன. ஸ்லைடிங் முன் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் இருக்கை வென்டிலேஷன் முன் இருக்கை வசதியை மேம்படுத்துகிறது.
ஒரு நடைமுறை கேபின்
கேபினின் நடைமுறையில் எந்த சமரசமும் இல்லை. பூட் உங்கள் எல்லா பொருள்களையும் சேமித்து வைக்கவில்லை என்றாலும் கேபினில் உங்கள் பொருட்களை வைக்க போதுமான சேமிப்பிட இடம் உள்ளது. 4 டோர்களிலும் 1 லிட்டர் பாட்டில் ஹோல்டர்கள் உள்ளன. பக்கவாட்டில் சிறிது இடம் உள்ளது அங்கு நீங்கள் வார இதழ்கள், நாளிதழ்கள் போன்ற சில சிறிய பொருட்களை வைக்கலாம்.
முன்பக்கத்தில் இரண்டு கப் ஹோல்டர்கள் போதுமான அளவிலான க்ளோவ் பாக்ஸ் மற்றும் முன் ஆர்ம்ரெஸ்டில் உங்கள் கீ அல்லது பர்ஸை வைக்க சிறிய ஸ்டோரேஜ் உள்ளது. பின்புறத்தில் பின்புற பயணிகள் சென்டர் ஆர்ம்ரெஸ்டில் இரண்டு கப்ஹோல்டர்களை பெறுகிறார்கள். இரண்டு முன் சீட்களிலும் பின் பாக்கெட்டுகள் உள்ளன. பின்புற ஏசி வென்ட்களுக்கு கீழே ஃபோன் அல்லது வாலட்டுக்கான சிறிய ஸ்டோரேஜ் பாக்ஸ் உள்ளது.
சார்ஜிங் ஆப்ஷன்களை பொறுத்தவரை முன் பயணிகளுக்கு வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஒரு USB டைப் A போர்ட் மற்றும் 12V சாக்கெட் ஆகியவை கிடைக்கும். பின்பக்கத்தில் இருப்பவர்களுக்கு பின்புற ஏசி வென்ட்களுக்கு கீழே ஒரு USB டைப் A மற்றும் USB டைப் C என இரண்டு சார்ஜிங் போர்ட்கள் உள்ளன.
பின் இருக்கை அனுபவம்
ஹைரைடரின் பின்புற இருக்கைகளின் வசதியானது முன்பக்கத்தைப் போலவே உள்ளது. ஆனால் ஒரு சமரசம் செய்து கொள்ள வேண்டும். நீங்கள் நல்ல லெக்ரூம் மற்றும் முழங்கால் அறை மற்றும் போதுமான தொடைக்கு அடியில் சப்போ பெறுவீர்கள் ஆனால் ஒரு பனோரமிக் சன்ரூஃப் இருப்பதால் இங்குள்ள ஹெட்ரூம் சமரசம் செய்யப்படுகிறது. சராசரி அளவிலான பெரியவர்கள் கூரைக்கு அருகில் இருப்பார்கள் மற்றும் 6 -அடி உடையவர்கள் எப்போதாவது கார் பள்ளங்கள் அல்லது ஸ்பீட் பிரேக்கர்களுக்கு மேல் செல்லும்போது அவர்களின் தலை மோதிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
இங்குள்ள இடம் 4 பயணிகளுக்கு ஏற்றது. ஆனால் 5 பயணிகள அமர்வது சற்றி சிரமமாக இருக்கும். பின்புற நடுத்தர பயணிகளுக்கு ஹெட்ரூம் மோசமாக இருக்கும். மற்றும் தோள்பட்டை அறையும் போதுமானதாக இருக்காது. எனவே 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஹைரைடர் ஒரு வசதியான பின் இருக்கை அனுபவத்தை வழங்கும். ஹெட்ரூமில் சிறிது அசௌகரியம் இருக்கலாம்.
பின் இருக்கை பயணிகளுக்கு பக்கங்களிலும் நல்ல பார்வை கிடைக்கும். ஜன்னல்கள் அகலமாக உள்ளன சி-பில்லர் அவ்வளவு தடிமனாக இல்லை பின்புறத்தில் ஒரு குவார்ட்டர் கிளாஸ் உள்ளது இது அறைக்குள் அதிக வெளிச்சத்தைக் கொண்டு வருகிறது. இருப்பினும் பெரிய முன் இருக்கை ஹெட்ரெஸ்ட்கள் காரணமாக ஒட்டுமொத்த கேபின் தெரிவுநிலை குறைக்கிறது.
வசதிகள் நிறைந்தது, ஆனால் சில பிரச்னைகள் உள்ளன
கேபினுக்குள் உங்கள் அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான வசதிகளை விட அதிகமான வசதிகளைப் பெறுவீர்கள். டேஷ்போர்டில் 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. அது ரெஸ்பான்ஸிவ் ஆக உள்ளது. இது பயன்படுத்த எளிதானது மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட்டையும் கொண்டுள்ளது. டிரைவருக்கான 7-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளேவை ஒரு நேர்த்தியான செட்டப் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் ஸ்கிரீன் உங்களின் அனைத்து டிரைவருக்கான தகவலையும் காண்பிக்கும். எலக்ட்ரிக் மோட்டாருக்கு பேட்டரி எப்போது பவரை அனுப்புகிறது மற்றும் எப்போது சார்ஜ் செய்யப்படுகிறது என்பது போன்ற தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளாலாம். மேலும் டிரைவ் மோடுகளுக்கு வெவ்வேறு வண்ண தீம்கள் உள்ளன.
இந்த வசதிகளைத் தவிர நீங்கள் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் பின்புற ஏசி வென்ட்கள் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் வென்டிலேட்டட் முன் சீட்கள் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறுவீர்கள் இது உங்கள் டிரைவிங் விவரங்களை காட்டுவது மட்டுமல்லாமல் நேவிகேஷனுக்கு பயன்படுத்தப்படலாம். உங்கள் பார்வையை சாலையில் இருந்து எடுக்க வேண்டியதில்லை.
இருப்பினும் சில வாடிக்கையாளர்களுக்கு பனோரமிக் சன்ரூஃப் வசதியால் சில சிரமங்கள் ஏற்படலாம். முதலாவதாக பெரும்பாலான கார்களில் சன்ரூஃப்புக்கு ஷேடு கிடைக்கும். ஆனால் இங்கே இது ஒரு மெல்லிய பொருளால் ஆனது. இது அதிக வெளிச்சத்தை தடுக்காது. நேரடி சூரிய ஒளியில் இது கேபின் அதிக வெப்பமடைவதற்கு காரணமாக இருக்கும். மேலும் ஏசி காரை குளிர்விக்க அதிக நேரம் எடுக்கும். வாகனம் ஓட்டும் போது ஏசி குளிர்ந்த காற்று வீசும் ஆனால் கூரையில் இருந்து வரும் வெப்பத்தால் பயணிகளின் தலை சூடாகும் வாய்ப்பு அதிகம்.
இரண்டாவதாக மெல்லிய ஷேடு பயணிகளை அதன் வழியாகப் பார்க்க முடியும். மேலும் சன்ரூஃப் கண்ணாடி அழுக்காக இருந்தால் நீங்கள் அதை கேபினுக்குள் இருந்து பார்க்க முடியும். இது மெல்லியதாக மட்டுமல்ல, கொஞ்சம் தளர்வாகவும் இருக்கிறது. தளர்வாக இருப்பதால் பயணிகளை மேலே உள்ள கண்ணாடியைத் தொடவும் முடியும்.
இது பாதுகாப்பனதா?
மேற்பரப்பில் ஹைரைடர் உங்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் வழங்குகிறது. இது 360 டிகிரி கேமராவுடன் வருகிறது இது சிறப்பாக இருக்கின்றது. கேமராவின் தரம் நன்றாக உள்ளது மற்றும் லோ லைட் நிலைமைகளிலும் நீங்கள் அதை சரியாகப் பயன்படுத்தலாம்.
6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) முன் இருக்கை பெல்ட் ரிமைண்டர்கள் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவற்றையும் பெறுவீர்கள். பாரத் NCAP -ல் கிராஷ்-டெஸ்ட் செய்யப்படும்போது இதன் பாதுகாப்பின் உண்மையான விவரங்கள் தெரிய வரும்.
ஹைபிரிட் செயல்திறன்
ஹைரைடரின் செயல்திறனை பார்க்கும் முன் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் மற்றும் அதன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் செட்டப்பின் செயல்திறன் எப்படி இருக்கின்றது என்பதை பார்ப்போம்.
இன்ஜின் |
1.5 லிட்டர் பெட்ரோல் |
1.5 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி |
1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல் |
பவர் |
103PS |
88 PS |
115PS (இன்டெகிரேட்டட்) |
டார்க் |
137Nm |
121.5Nm |
122Nm (இன்ஜின்) 141Nm (எலக்ட்ரிக் மோட்டார்) |
டிரான்ஸ்மிஷன் |
5MT/6AT |
5MT |
e-CVT |
டிரைவ்டிரெய்ன் |
FWD/ AWD (MT) |
FWD |
FWD |
டொயோட்டா ஹைரைடர் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 1.5-லிட்டர் பெட்ரோல் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இது சிஎன்ஜி கிட் மற்றும் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷனுடன் மற்றும் e-CVT உடன் கனெக்டட் 1.5-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் (மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இரண்டும்) இருக்கலாம்.
எங்கள் ரோடு டெஸ்ட்க்காக காம்பாக்ட் எஸ்யூவியின் ஸ்ட்ராங்-ஹைபிரிட் எடிஷன் எங்களிடம் இருந்தது மற்றும் மிகப்பெரிய நன்மை அதன் மைலேஜ் (27.97 கிமீ கோரப்பட்டது) ஆகும். இவ்வளவு மைலேஜ் இந்த காரில் எப்படி கிடைக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள ஹைபிரிட் செட்டப் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
3 முக்கிய விஷயங்கள் உள்ளன: இன்ஜின் பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார். எலக்ட்ரிக் மோட்டார் பேட்டரி பேக்கிலிருந்து பவரை பெற்று எஸ்யூவியை இயக்குகிறது. நகர வேகத்தில் இன்ஜின் அணைத்து வைக்கப்பட்டிருக்கும். மேலும் ஹைரைடர் பேட்டரி மற்றும் மோட்டாரில் மட்டுமே இயங்குகிறது. ஆக்சலரேஷன் கொடுக்கும் போது அதிக பவர் தேவைப்படுகிறது எனவே அந்த கூடுதல் சக்தியை உற்பத்தி செய்ய இன்ஜின் அதிக RPM -ல் இயங்குகிறது மற்றும் அதே நேரத்தில் பேட்டரியை சார்ஜ் செய்யும் போது அதை மோட்டாருக்கு ஃபீட் செய்கின்றது. 99 சதவீத வழக்குகளில் எலக்ட்ரிக் மோட்டார் காரை இயக்குகிறது, இன்ஜின் ஒரு ஜெனரேட்டராக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இப்போது செயல்திறன் பற்றி பேசலாம். 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் மென்மையானது மற்றும் ரீஃபைன்மென்ட் ஆக உள்ளது. இது விரைவான ஆக்ஸிலரேஷனை கொடுக்கின்றது மற்றும் அதிக வேகத்தை அடைவதற்கு அதிக நேரத்தையும் எடுக்காது. கியர் ஷிப்ட்களும் சீராகவும் சரியான நேரத்திலும் இருக்கும். எனவே சாதாரண நகரப் பயணங்கள் அல்லது நெடுஞ்சாலைகளில் விரைவாக முந்திச் செல்வது ஆகிய இரண்டையும் நீங்கள் எளிதாகச் செய்ய முடியும். மேலும் செயல்திறனில் எந்தக் குறையும் இருக்காது.
ஒரு வசதியான சவாரி
ஒரு ஃபேமிலி எஸ்யூவிக்கு சவாரி வசதியும் மிக முக்கியமானது. ஹைரைடரின் சஸ்பென்ஷன் செட்டப் சமநிலையானது மற்றும் மேடுகளை சிறப்பாக சமாளிக்கின்றது. ஸ்பீட் பிரேக்கர்கள் மற்றும் பள்ளங்களுக்கு மேல் செல்லும் போது கேபினுக்குள் அதிகமாக அசைவுகள் இருக்காது. மேலும் கம்ஃபோர்ட் அப்படியே இருக்கும்.
நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் ஹைரைடர் நிலையானது மற்றும் சைடு-டூ-சைடு இயக்கம் மிகக் குறைவாக உள்ளது. மோசமான நகர சாலைகள் அல்லது ஒரு மென்மையான நெடுஞ்சாலை உங்கள் குடும்பம் வசதியாக பயணிக்கும்.
தீர்ப்பு
உங்கள் குடும்பத்திற்காக டொயோட்டா ஹைரைடரை பரிசீலிக்க வேண்டுமா? நிச்சயமாக. நல்ல வசதிகள் பிரீமியம் வடிவமைப்பு, மென்மையான ஓட்டுநர், அனுபவம் மற்றும் பிரிவில் சிறந்த மைலேஜ் ஆகியவற்றை வழங்கும் எஸ்யூவி -யை நீங்கள் விரும்பினால் நீங்கள் நிச்சயமாக ஹைரைடரை கருத்தில் கொள்ள வேண்டும்.
டார் , டல் கேபின் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் சமரசம் செய்யப்பட்ட பூட் ஆகியவற்றின் மோசமான செயல்பாடு போன்ற சில பகுதிகள் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் இந்த சமரசங்களை செய்து கொள்ள தயாராக இருந்தால் சிறந்த செயல்திறன், கம்ஃபோர்ட் மற்றும் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் கொண்ட உங்களுக்கான சரியான ஃபேமிலி காராக இருக்கும்.