Toyota Hilux ரிவ்யூ: ஒரு பிக்அப்பை விட கூடுதலானதா ?
Published On ஜூன் 04, 2024 By ansh for டொயோட்டா ஹைலக்ஸ்
- 1 View
- Write a comment
டொயோட்டா ஹைலக்ஸ் உடன் பயணிக்கும் போது சில நீங்கள் எதிர்பார்க்கும் சில சவால்கள் இருக்கின்றன. ஆனால் அவை உங்களை வெல்ல முடியாத ஒருவராக உணர வைக்கின்றன.
டொயோட்டா ஹைலக்ஸ் ரூ.30.40 லட்சம் முதல் ரூ.37.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலை வரம்பில் ரேஞ்சில் இந்திய சந்தையில் தனியார் கார் உரிமையாளர்கள் வாங்கக்கூடிய ஒரு சில பிக்கப் டிரக்குகளில் ஒன்றாகும். ஹைலக்ஸ் உங்கள் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல. இது ஒரு வார இறுதி பயணத்துக்கான/லைஃப்ஸ்டைல் வாகனமாக இருக்கும். இந்த ரோடு டெஸ்ட் ரிவ்யூவில் ஹைலக்ஸ் உடன் ஒரு நாள் செலவழித்து இதன் மந்தமான கேபின் பழைய வசதிகள் மற்றும் சமதளமான சவாரி தரம் ஆகியவற்றுடன் இதன் சிறந்த சாலை தோற்றம், ஆஃப்-ரோடு திறன்கள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை கொண்டுள்ளதா என்பதைக் கண்டறிய முயற்சிப்போம்.
மிரட்டலான தோற்றம்
ஹைலக்ஸ் உண்மையில் மிகப்பெரிய கார். துல்லியமாக 5325 மி.மீ நீளம் கொண்டது இது மெர்சிடிஸ்-பென்ஸ் GLS -ஐ விடவும் பெரியதாக உள்ளது. இதன் நீளம் காரணமாக இது வழக்கமான வாகன நிறுத்துமிடங்களில் இது எளிதில் பொருந்தாது. காலையில் ஹைலக்ஸை வெளியே எடுத்து மாலையில் ஒரு அழகான சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பு நான் காரிலிருந்து முதலில் என் கண்களை எடுக்க வேண்டியிருந்தது.
இது ஆதிக்கம் செலுத்தும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது எங்கு சென்றாலும் கவனத்தை ஈர்க்கிறது. பெரிய பிளாக் கிரில், பெரிய பம்பர் மற்றும் ஸ்கிட் பிளேட் மற்றும் ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய முன்பக்கத்தை கொண்டுள்ளது.
ஆனால் பக்கவாட்டில் பார்க்கும் போதுதான் உண்மையில் இதன் அளவு பற்றிய ஒரு யோசனையை நீங்கள் பெற முடியும். நீளத்தைத் தவிர கதவில் உள்ள தடிமனான கிளாடிங் பெரிய 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் பெரிய வீல் ஆர்ச்கள் ஆகியவை உங்கள் கண்ணைக் கவரும் மற்ற விஷயங்களாக இருக்கும். இந்த எலமென்ட்கள் இந்த பிக்கப் டிரக்கின் முரட்டுத்தனத்தை எடுத்துக் காட்டுகின்றன. மேலும் இவை அனைத்திலும் பெரும்பாலான பயனர்கள் அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவையானதை விட அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் (220 மி.மீ அன்லேடன்) பெறுவீர்கள்.
ஹைலக்ஸ் உண்மையிலேயே கண்களைக் கவரும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது மக்களை மீண்டும் பார்க்க வைப்பது மட்டுமல்லாமல் உங்களை சாலையில் மிக முக்கியமான நபராக உணரவும் செய்கிறது. மேலும் ஹைலக்ஸ் காரின் மற்றொரு நன்மை சர்வதேச சந்தையில் இதன் பிரபலம் ஆகும். இது பார்ட்கள் மற்றும் மாடிஃபிகேஷன்/பெர்சனலைசேஷன் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளது.
பூட் கவர் கொடுக்கப்பட்டுள்ளது
ஒரு வழக்கமான வடிவத்தில் ஹைலக்ஸ் ஒரு பூட் -டை பெறவில்லை ஏனெனில் இது ஒரு கார்கோ ஃபுளோர் ஆகும். உங்களின் முழு பயணத்தின் சாமான்களையும் எளிதாக இங்கே சேமித்து வைத்தாலும் கூட இன்னும் அதில் பாதி மட்டுமே நிரம்பியிருக்கும்.
நிச்சயமாக திறந்த சேமிப்பு படுக்கை உங்கள் சாமான்களை வைத்திருக்கும் போது நீங்கள் கொஞ்சம் பயப்படக்கூடும். சாமான்களை யாராவது திருடினால் என்ன செய்வது? அல்லது நான் ஒரு மேட்டின் மீது ஏறி இறங்கும் போது பை கீழே விழுந்தால் என்ன செய்வது? இந்த விஷயங்கள் நடக்காமல் போகலாம் என்றாலும் கூடுதலாக ஒரு ஆக்ஸசரியாக ஒரு கவரை பெறுவது நல்லது.
ஒரு சுமாரான கேபின்
நீங்கள் ஹைலக்ஸ் காரின் உள்ளே உட்காரும் போது கேபின் வடிவமைப்பு மற்றும் பயன்படுத்தப்படும் பொருட்கள் நீங்கள் சுமார் ரூ. 45 லட்சம் ஆன்-ரோடு விலையுள்ள காரில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை கொடுக்காது. இது ஒரு எளிய வடிவமைப்பு மற்றும் சில கரடுமுரடான எலமென்ட்களுடன் ஆல்-பிளாக் கேபினையும் கொண்டுள்ளது. கேபின் பெரும்பாலும் கடினமான பிளாஸ்டிக்குகளை கொண்டுள்ளது. மற்றும் போதுமான சாஃட் டச் எலமென்ட்கள் இல்லை, இது உட்புறத்தை கொஞ்சம் மந்தமானதாகவும் பழையதாகவும் உணர வைக்கிறது. ஆம் இந்த கார் இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்தது. ஆனால் சர்வதேச அளவில் இது பெரும்பாலும் பயன்பாட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது எனவே உங்களுக்கு ஒரு சுமாரான கேபின்தான் கிடைக்கும்.
வாகனம் ஓட்டும்போது இதன் இருக்கைகள் கடினமான குஷனிங்காக இருப்பதையும் நீங்கள் கவனிப்பீர்கள். இவை விசாலமானவை ஆனால் கொஞ்சம் மென்மையான குஷனிங் கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
பின் இருக்கைகளும் மிகவும் விசாலமானவை, மூன்று பயணிகள் வரை எளிதாக அமர முடியும். நீங்கள் ஹெட்ரூம் லெக் ரூம் மற்றும் முழங்கால் அறை ஆகியவற்றைப் பெறுவீர்கள். ஆனால் இவை பின்புறம் சாய்வதில்லை மற்றும் இருக்கைகள் முன்புறம் இருப்பதைப் போலவே கடினமாக உள்ளன.
நகரத்தில் காரை ஓட்டுவது எப்படி இருக்கும்
ஹைலக்ஸ் காரின் பெரிய அளவானது ஆதிக்கம் செலுத்துவதை போலவே தோற்றமளிக்கிறது. ஆனால் கூடவே ஒரு பெரிய சிக்கலையும் கொண்டு வருகிறது. ஒரு சிறிய மிகவும் கச்சிதமான காருக்கு நகர போக்குவரத்தில் செல்வது அவ்வளவு கடினமாக இருக்காது. ஆனால் ஹைலக்ஸ் காரில் நகரத்தில் உங்கள் பொறுமை சோதிக்கப்படலாம்.
உதாரணமாக நீங்கள் ஒரு புதிய நகரத்தில் இருக்கும் நேரங்கள் மற்றும் அறிமுகமில்லாத சாலைகளில் வாகனம் ஓட்டுவதில் சில சிக்கல்கள் உள்ளன. ஒரு சில சூழ்நிலைகளில் கூகுள் மேப்ஸ் நீங்கள் செல்ல வேண்டிய ஒரு குறுகிய சாலையைக் காண்பிக்கும். மேலும் நீங்கள் ஹைலக்ஸில் இருந்தால் அந்த குறுகிய பேட்ச் வழியாக ஓட்டிச் செல்வது எவ்வளவு குறுகியதாக இருந்தாலும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
இருப்பினும் இந்த அளவால் ஒரு நன்மையுடன் உள்ளது. இவ்வளவு பெரிய காரை ஓட்டும் போது நகரத்தில் உள்ள மற்ற கார்கள் உங்கள் வழியில் வராமல் இருக்கும், அல்லது உங்களைத் தனித்து விடுகின்றன. ஹைலக்ஸின் பெரிய அளவானது உங்களை சாலையில் பெரிய நபராகக் காட்டுகிறது. மேலும் பெரும்பாலும் மற்ற கார்கள் உங்களுக்கு வழி விடும்.
நகரத்திற்குள் வாகனம் ஓட்டும்போது பவர் டெலிவரி பற்றாக்குறையை நீங்கள் உணர மாட்டீர்கள். மேலும் விரைவான ஆக்ஸிலரேஷன் முந்திச் செல்வதை எளிதாக்குகிறது. டிரைவிங் மென்மையானது மற்றும் இன்ஜின் ரெஸ்பான்ஸிவ் ஆக உள்ளது. எனவே போக்குவரத்தில் சரியான வழியில் செல்வதை தவிர வேறு எதுவும் கடினமாக இரக்காது.
இருப்பினும் சவாரி கனரக சரக்குகளை எடுத்துச் செல்ல வடிவமைக்கப்பட்ட பெரிய பிக்கப்களின் பொதுவானது. இது கடினமாக இருக்கும் புடைப்புகள் மற்றும் குழிகளை எளிதில் சமாளிக்கும். நீங்கள் கேபினுக்குள் பக்கவாட்டாக தூக்கி எறியப்படுவதை உணர்வீர்கள். அதே அளவுள்ள நகர்ப்புற எஸ்யூவி போல அது உடனடியாக செட்டில் ஆகாது. பிக்கப் முழுவதுக்கும் பயணிகள் அல்லது லக்கேஜ் ஏற்றினால் சவாரி தரம் மிகவும் வசதியாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
வசதிகள் போதுமானதா ?
ஆம். ஹைலக்ஸ் ஆனது 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப்பை பெறுகிறது. இது மிகவும் ரெஸ்பான்ஸிவ் ஆனது. எளிமையாக புரிந்துகொள்ளக்கூடிய யூஸர் இன்டஃபேஸ் உடன் வருகிறது. இது வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் பாதுகாப்பிற்காக 7 ஏர்பேக்குகள் ஹைல் ஹோல்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் மற்றும் பிரேக் அசிஸ்ட் ஆகியவற்றை வழங்குகிறது.
ஆனால் சில வசதி குறைபாடுகளும் உள்ளன. இதன் விலைக்கு கேபினுக்குள் ஒரு பெரிய டச் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டிருந்தால் மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும். மேலும் அதிகமான சார்ஜிங் ஆப்ஷன்களும் இருந்திருக்க வேண்டும். முன்பக்கத்தில் நீங்கள் இரண்டு 12V சாக்கெட்டுகள் USB சார்ஜிங் போர்ட் மற்றும் சென்டர் ஆர்ம்ரெஸ்டில் 100W சார்ஜர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் இல்லை. மேலும் முன்பக்க பயணிகளுக்கு போதுமான சார்ஜிங் ஆப்ஷன்கள் இருந்தாலும் பின்பக்க பயணிகளுக்கு எதுவும் இல்லை
நீண்ட பயணத்துக்கு ஏற்ற நடைமுறை தன்மை
நான்கு கதவுகளிலும் 1-லிட்டர் பாட்டில் ஹோல்டர்கள் உள்ளன சென்டர் கன்சோலில் இரண்டு கப்ஹோல்டர்கள் மற்றும் டேஷ்போர்டின் இருபுறமும் இரண்டு கப் ஹோல்டர்கள் உள்ளன.
சென்டர் ஆர்ம்ரெஸ்டில் ஸ்டோரேஜ் உள்ளது. அதில் இரண்டு க்ளோவ்பாக்ஸ்கள் உள்ளன சென்டர் ஆர்ம்ரெஸ்டில் உங்கள் ஃபோன் அல்லது வாலட்டை வைக்க ஒரு பிளேட் உள்ளது. மேலும் பின்பக்க பயணிகளுக்கு சென்டர் ஆர்ம்ரெஸ்டில் இரண்டு கப்ஹோல்டர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலை டிரைவிங்
நெடுஞ்சாலை டிரைவிங் சுவாரஸ்யமானது. நகர போக்குவரத்தை வெல்வது கடினம், ஆனால் உங்களிடம் திறந்த நெடுஞ்சாலை இருந்தால் ஹைலக்ஸின் செயல்திறனை நீங்கள் உண்மையிலேயே உணரலாம். அது ஏமாற்றத்தை கொடுக்காது. இது 2.8 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது (204 PS பவர் மற்றும் 500 Nm டார்க் வரை) இது ஹைலக்ஸின் பெரிய அளவு மற்றும் அதிக எடையுடன் கூட போதுமானதாக உணர்கிறது.
ஹைலக்ஸை 80-100 கிமீ/மணி -க்கு வேகத்துக்கு கொண்டு செல்வதற்கு நேரம் எடுக்காது. மேலும் அந்த வேகத்திலும் கூட அது நிலையானதாக உணர்கிறது. நகரத்தில் முந்திக் செல்வது எளிதாக இருக்காது என்று நினைத்தேன், ஆனால் இங்கே அவை சிரமமின்றி இருந்தன. லேன்களை மாற்றும்போதும் ஷார்ப்பான திருப்பங்களை எடுக்கும்போதும் அதிகமான பாடி ரோல் உள்ளது. ஆனால் அது பிக்கப் டிரக்கில் இது எதிர்பார்க்கப்படக்கூடிய ஒன்றுதான்.
நான் எனது இலக்கை நெருங்கிக்கொண்டிருந்தேன் சூரியன் மேற்கே மறையத் தொடங்கியிருந்தது. சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து சரியான இடத்தை அடைய நான் முதலில் மலைப்பாதைகளின் கூர்மையான திருப்பங்களில் ஓட்ட வேண்டும் அதை நான் மிகவும் ரசித்தேன். ஷார்ப்பான இடது மற்றும் வலது திருப்பங்கள் ஹைலக்ஸ் -க்கு சவாலாக இல்லை. மேலும் அது எந்த முயற்சியும் இல்லாமல் அவற்றைக் கடந்து சென்றது. ஆனால் இந்த பிக்கப் டிரக்கிற்கு மற்றொரு சவால் காத்திருந்தது.
நான் சேருமிடத்திற்கு அருகில் இருந்தேன் எனது பயணத்தின் கடைசிப் பகுதியில் சில ஆஃப்-ரோடிங் இருந்தது. அவ்வாறு செய்ய நான் நான்கு சக்கர டிரைவில் ஹைலக்ஸை வைத்து அழுத்தினேன். இது ஹைலக்ஸ் -க்கு ஒரு கேக் துண்டு போல் தோன்றியது. மேலும் அது எந்த வகையான சவாலையும் ஏற்க தயாராக இருந்தது. சவாரி அவ்வளவு வசதியாக இல்லாவிட்டாலும் ஆஃப்-ரோட் பேட்சை எளிதாக கடந்து சென்றது.
தீர்ப்பு
ஒரு முழு நாளையும் ஹைலக்ஸ் உடன் செலவழித்து நகரத்திலிருந்து நெடுஞ்சாலைக்குச் சென்று மலைப்பகுதிகளில் கூர்மையான திருப்பங்களை எடுத்து சில ஆஃப்-ரோடிங்கை முடித்த பிறகு இந்த பிக்கப்பிற்கான எனது தீர்ப்பு இங்கே.
பிக்கப் டிரக்குடன் வரும் சமரசங்களைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்பவர்களுக்கு இது இரண்டாம் நிலை கார். சவாரியும், இருக்கைகளும் அவ்வளவு வசதியாக இல்லை. கேபின் பழமையானது மற்றும் வசதிகளின் பட்டியல் மிகவும் விரிவானதாக இல்லை. இந்த சமரசங்கள் எனக்கு மிகவும் தோன்றியது குறிப்பாக நீங்கள் பெரும்பாலும் நகரத்திற்குள் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால் இந்த சமரசங்கள் நிறைய இருக்கும் குறிப்பாக உங்கள் குடும்பத்திற்கு.
இருப்பினும் டொயோட்டா ஹைலக்ஸ் வாங்குவதற்கான காரணமும் மிகவும் தெளிவாக உள்ளது. இந்த கார் மூன்று வகையான நபர்களுக்கானது: வழக்கமான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க அல்லது லைஃப்ஸ்டைல் முறை வாகனங்களை விரும்புபவர்கள் மற்றும் சமரசங்கள் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு வணிக நோக்கங்களுக்காக பொருட்களை கொண்டு செல்பவர்கள். என இதன் பயன்பாட்டுக்காக பிக்கப் டிரக்கை விரும்பும் ஒருவர் அல்லது பெரிய அளவுகளுக்காக ஒரு காரை விரும்புபவர்கள் சாலையில் மிக முக்கியமான நபராக உணரவைக்கும். ஏனெனில் ஹைலக்ஸ் அதைச் செய்யும் திறனைக் கொண்டுள்ளது. நீங்கள் மேலே உள்ள நபர்களில் ஒருவராக இருந்தால் ஹைலக்ஸ் உங்கள் கேரேஜில் இடம் பிடிக்க தகுதியான ஒரு காராக இருக்கும்.