Tata Curvv EV விமர்சனம்: இது ஸ்டைல் உடன் பொருந்திப் போகிறதா ?
Published On ஆகஸ்ட் 20, 2024 By tushar for டாடா கர்வ் இவி
- 1 View
- Write a comment
டாடா கர்வ் EV -யை பற்றி ஏற்கெனவே நிறைய பரபரப்பு உள்ளது. அதே போல இது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்கிறதா ?
டாடா கர்வ்வ் EV கார் 5 பேர் அமரக்கூடிய சிறிய எஸ்யூவி ஆகும். இந்த காரின் முக்கிய ஹைலைட் அதன் தனித்துவமான எஸ்யூவி-கூபே ஸ்டைலிங் ஆகும். இது காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் டாடாவின் பயணத்தை தொடங்கி வைத்துள்ளது. நெக்ஸான் EV -க்கும் இதற்கு இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. ஆனால் இது நீளமானது மேலும் பெரிய பேட்டரி பேக் உடன் வருகிறது.
டாடா கர்வ் EV -க்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை. ஆனால் அதன் நெருங்கிய போட்டி கார்களாக MG ZS EV மற்றும் டாடா நெக்ஸான் EV ஆகியவை உள்ளன. விரைவில் ICE வெர்ஷன் வெளியாகும் போது அது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மட்டுமல்ல சமீபத்தில் வெளியான சிட்ரோன் பசால்ட், மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
வெளிப்புறம்
வடிவமைப்பிற்கு வரும்போது கர்வ் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. அனைவருக்கும் பிடிக்குமா என்பதில் சந்தேகம் இருக்கலாம் ஆனால் அது நிச்சயமாக சாலையில் செல்லும் போது நிறைய பேரின் கவனத்தை ஈர்க்கும். பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது ஸ்லோப்பிங் ரூஃப் மற்றும் ஹை பூட் லைன் ஆகியவை உடனடியாக கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். 18 இன்ச் வீல் வெல்களை ஃபில் செய்கின்றன, அதே சமயம் கதவுகளின் கீழ் பாதியில் உள்ள கான்ட்ராஸ்ட் பிளாக் பேனல்கள் மற்றும் வீல் வெல்களை சுற்றியுள்ள ஆகியவை ஒட்டுமொத்தமாக பக்கவாட்டு தோற்றத்துக்கு சமநிலையை சேர்க்கிறது.
இல்லுமினேஷன் உடன் கூடிய ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் அதிநவீனத்தின் டச்சை கொடுக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக அவை மிகவும் நடைமுறைக்குரியவை அல்ல. அவை எலக்ட்ரிக்கலி கன்ட்ரோல் மூலம் வெளியே வராது. எனவே, கதவைத் திறப்பது டூ-ஸ்டெப் செயல்முறையாகும். இது பைகள் அல்லது சாமான்களை எடுத்துச் செல்லும்போது சிரமமாக இருக்கும். பின்புறத்தில் இருந்து பார்க்கும் போது ஸ்லோப்பிங் ரூஃப் காருக்கு ஏரோடைனமிக் மற்றும் தனித்துவமான தோற்றத்தை வழங்குகிறது. கனெக்டட் LED டெயில் லைட்ஸ் பின்புற டிஸைன் உடன் அழகாக மிக்ஸ் ஆகியுள்ளன.
முன்பக்கத்தில் இருந்து பார்க்கும் போது கர்வ்வ் நெக்ஸானை போலவே தெரிகிறது. இது சிலரை ஏமாற்றலாம். இருப்பினும் கர்வ் இன்னும் பிரீமியமாகத் தோன்றுகிறது. இதில் ஆல் LED லைட்டிங் சிஸ்டம் உள்ளது. இதில் வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷன் கொண்ட LED DRL -கள், LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் LED ஃபாக் லேம்ப்கள் ஆகியவை உள்ளன. டாடா பன்ச் EV காரில் உள்ளதை போலவே இப்போது சார்ஜிங் போர்ட் பின்புற ஃபெண்டரிலிருந்து காரின் முன்புறத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளது. சார்ஜரை அணுகுவதற்கும் எளிதாக இருப்பதால் இது வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும்.
இன்ட்டீரியர்
முன்புற வெளிப்புற வடிவமைப்பைப் போலவே கர்வ் -ன் உட்புறமும் குறிப்பாக டேஷ்போர்டும், நெக்ஸானை போலவே உள்ளது. க்ராஷ் பேடின் பேனலில் ஒரு புதிய பேட்டர்ன் கொடுக்கப்பட்டுள்ளது, இது முன்பக்க பம்பரில் காணப்படும் டிசைன் பேட்டர்னை அப்படியே பிரதிபலிக்கிறது. இருப்பினும் அதைத் தவிர எல்லாம் அப்படியே உள்ளது. நெக்ஸான் உடன் ஒப்பிடும்போது டாடா மேம்படுத்தும் என என்று நாங்கள் எதிர்பார்த்த ஒரு பகுதி ஒட்டுமொத்த தரம்தான். துரதிர்ஷ்டவசமாக பிளாஸ்டிக் கிரேனிங் அப்படியே உள்ளது. இப்போதும் பல இடங்களில் கடினமான பிளாஸ்டிக்குகளை பார்க்க முடிகிறது, குறிப்பாக கீழே அதே போல் டோர் பேடுகளிலும் தென்படுகின்றன. நெக்ஸானை விட ஒரு படி கூடுதலான செக்மென்ட்டில் இருக்கும் காரில் இது சிறப்பாக இருந்திருக்க வேண்டும். இருப்பினும் பெரிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் நவீனமாக தெரிகிறது. ஏர் கண்டிஷனிங் கன்ட்ரோல்களுக்கான ஒரு அழகான ஃபெதர் டச் மற்றும் ஃபிசிக்கல் டோக்கிள் ஸ்விட்சுகளின் ஆகியவற்றின் கலவை உங்களுக்கு கிடைக்கும்.
கர்வ் -ன் முன் இருக்கைகள் வசதியானவை. ஓட்டுநரின் இருக்கை 6-வே பவர் அட்ஜஸ்ட்மென்ட்டை கொண்டுள்ளது, இது சரியான ஓட்டுநர் நிலையை எளிதாகக் கண்டறிய உதவும். இருப்பினும் பெடல் லெவல் காரணமாக நீங்கள் இருக்கையை கர்வ் -ல் சற்றுத் தள்ளி அமைக்க வேண்டும். மேலும் ஸ்டீயரிங் வீலில் ரீச் அட்ஜெஸ்ட்மென்ட் இல்லாததால் அது எப்போதும் டிரைவருக்கு சற்று எட்டாத உணர்வை கொடுக்கிறது.
கர்வ் இன் பெரிய அளவு இருந்தபோதிலும் நெக்ஸான் உடன் ஒப்பிடும்போது பின்புற இருக்கை அனுபவம் கணிசமாக மேம்படுத்தப்படவில்லை. ஸ்லோப்பிங் ரூஃப், ஹெட்ரூமை மேம்படுத்த டாடாவின் முயற்சிகள் இருந்தபோதிலும் குறிப்பாக 5'10"க்கு மேல் உள்ள நபர்களுக்கு, பின்புறம் தடைபட்டது போல இருக்கிறது. உயரமானன ஃபுளோர், பேட்டரி ஃபிட்டிங் காரணமாக, குறைந்த லெக் ரூம் உடன் முழங்கால்கள் வரை அமரும் நிலையை உருவாக்குகிறது. பின் இருக்கை வசதி குறைவானதாகவே உள்ளது.
பூட் ஸ்பேஸ்
கர்வ் ஆனது இந்த பிரிவில்-சிறந்த 500 லிட்டர் பூட் ஸ்பேஸை வழங்குகிறது. அதன் பெரிய அளவு மற்றும் நாட்ச் பேக் ஒபனிங் ஆனது பெரிய பைகளை ஏற்றுவதை எளிதாக்குகிறது. மேலும் நன்கு வடிவ ஸ்கொயர் வடிவ ஸ்டோரேஜ் பகுதி அதன் நடைமுறைத்தன்மையை சேர்க்கிறது. கூடுதல் சாமான்களுக்கு 60:40 ஸ்பிளிட்-ஃபோல்டு பின்புற இருக்கைகள் உதவுகின்றன. அதன் செக்மென்ட்டில் கிக் சென்சார் கொண்ட பவர்டு டெயில்கேட்டை கொண்ட முதல் கார் இதுவாகும்.
வசதிகள்
வசதிகளைப் பற்றி பார்க்கையில் டாடா கர்வ் மிகவும் சிறப்பானவற்றை கொண்டுள்ளது.
வசதி |
குறிப்புகள் |
10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே |
டிரைவரின் டிஸ்பிளே அருமையாக உள்ளது. தெளிவான வடிவத்தில் நிறைய தகவல்களைக் காட்டுகிறது. நீங்கள் அதை மூன்று வெவ்வேறு செட்டப்களுடன் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். டிரைவரின் டிஸ்பிளேயில் வைக்கப்பட்டுள்ள பிளைண்ட் வியூ மானிட்டர் ஃபீடு கிடைக்கும். |
12.3 இன்ச் டச் ஸ்கிரீன் |
பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெரிய ஐகான்களுடன் பயன்படுத்த எளிதானது. மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவையும் கிடைக்கும். |
9-ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ |
சவுண்ட் சிஸ்டத்தின் ஒலி தரம் சிறப்பாக உள்ளது. மேலும் இந்த சிஸ்டத்தில் பேஸ்-ஹெவி இசையை நீங்கள் ரசிப்பீர்கள். |
360 டிகிரி கேமரா |
360 கேமரா ஃபீடு இந்த பிரிவில் சிறந்தது. இரவில் கூடஅ மிகத் தெளிவானதாக இருக்கிறது. |
செயல்திறன்
கர்வ் EV உடன் நீங்கள் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் கிடைக்கும்: சிறிய 45 kWh பேக் மற்றும் பெரிய 55 kWh பேக். இரண்டும் ஒரே மோட்டாரை பகிர்ந்து கொண்டாலும் கூட பவர் அவுட்புட்டில் வித்தியாசம் இருக்கலாம். 45 kWh பேட்டரி பேக் 150 PS அவுட்புட்டை கொடுக்கிறது. அதே நேரத்தில் பெரிய 55 kWh பேக் 167 PS அவுட்புட்டை கொடுக்கிறது. இருப்பினும் டார்க் அவுட்புட் 215 Nm என ஒரே மாதிரியாக இருக்கும்.
நாங்கள் பெரிய பேட்டரி பேக் கொண்ட காரை ஓட்டினோம். முதல் பார்வையில் அது நன்றாக இயங்குகிறது. ECO மோடில் பவர் டெலிவரி சீரானதாக இருந்தது குறைந்த வேகத்தில் வாகனம் ஓட்டுவது மிகவும் எளிதானது. மேலும் விரைவாக முந்திச் செல்ல போதுமான பவர் உள்ளது. நீங்கள் சிட்டி மோடுக்கு மாறும்போது குறிப்பிடத்தக்க வித்தியாசம் உள்ளது, அங்கு ஆக்ஸிலரேஷன் உடன் ரெஸ்பான்ஸிவ் ஆக உள்ளது, ஆனால் பவர் டெலிவரி சீராக இருக்கும். இதன் விளைவாக பேட்டரி பாரை பாதுகாப்பதில் நீங்கள் அதிக அக்கறை காட்டவில்லை என்றால் இதுவே சிறந்த மோடு ஆகும்.
நெக்ஸான் -ல் பவர் டெலிவரி ஸ்போர்ட் முறையில் கூட படிப்படியாக இருக்கும் போது கூட கர்வ் வேறுபட்டது. ஸ்போர்ட் மோடில், கர்வ் அதிக ஆவலுடனும் உண்மையான வேகத்துடனும் இருக்கிறது. இது சற்று குழப்பமாக இருக்கலாம். ஆனால் தினசரி வாகனம் ஓட்டுவதற்கு கூட, இது முற்றிலும் பயனுள்ளதாக இருக்கும்.
4 ரீஜென் மோடுகள் காரில் இருக்கின்றன. பூஜ்ஜிய அளவில் ரீஜென் எதுவும் இல்லை. ஒன்று மற்றும் இரண்டு நிலைகளில் உள்ள டியூனிங் எங்களுக்கு மிகவும் பிடித்தது, அங்கு கார் வேகம் குறையும் விதம் நேச்சுரலாக இருக்கிறது. மேலும் முன்னோக்கி வேகத்தில் இருந்து ரீஜென் மோடுக்கு போது மாறுவது சீராக இருக்கும். இருப்பினும் லெவல் 3 -ல் சற்று பதட்டமாக இருக்கிறது. மேலும் இந்த மோடில் பயணிகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் அல்லது குமட்டல் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
சார்ஜிங் விவரங்கள்
சார்ஜ் செய்யும் நேரத்தைப் பொறுத்தவரையில் நெக்ஸானுடன் ஒப்பிடும்போது கர்வ்ன் பெரிய பேட்டரி வேகமாக சார்ஜ் செய்யும் திறனைப் பெறுகிறது. 55 kWh பேட்டரி பேக் அதிகபட்சமாக 70 kW விகிதத்தில் சார்ஜ் செய்யப்படலாம். சிறியது அதிகபட்சமாக 60 kW திறன் கொண்டது.
45kWh |
55kWh |
|
DC ஃபாஸ்ட் சார்ஜ் (10-80%) |
~40 நிமிடங்கள் (60kW சார்ஜர் அல்லது அதற்கு மேல்) |
~40 நிமிடங்கள் (70kW சார்ஜர் அல்லது அதற்கு மேல்) |
7.2kW AC ஃபாஸ்ட் சார்ஜ் (10-100%) |
~6.5 மணி நேரம் |
~7.9 மணிநேரம் |
போர்ட்டபிள் சார்ஜர் 15A பிளக்-பாயிண்ட் (10-100%) |
17.5 மணி நேரம் |
21 மணிநேரம் |
சவாரி மற்றும் கையாளுதல்
பெரிய அளவு மற்றும் எடை இருந்தபோதிலும் கர்வ் இன்னும் நெக்ஸானை போலவே எந்த வித்தியாசமும் இல்லாமல் இருக்கிறது. நாங்கள் காரை மிகவும் குறுகலான மற்றும் உடைந்த சாலைகளில் ஓட்டினோம், மேலும் மேடுகள், பள்ளங்கள் மீது செல்லும் போதும் கூட அது ஒருபோதும் சங்கடமாக இருக்காது. இது அதிக வேகத்தில் நிலையானதாக உணர்கிறது, மேலும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் ரேஞ்ச் உடன் இணைந்து கர்வ்வ் EV ஒரு நல்ல நீண்ட தூர காராகவும் இருக்கும். திருப்பங்களில் செல்லும் போதும் கர்வ் அதன் எடையை நன்றாக மறைக்கிறது. மேலும் அது எப்போதும் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இருக்கும். நீங்கள் காரை மிகவும் கடினமாகத் தள்ளும் போதுதான் காரின் எடையை நீங்கள் உணர்வீர்கள்.
பாதுகாப்பு
பெரும்பாலான டாடா மோட்டார்ஸ் கார்களை போலவே கர்வ் EV பல பாதுகாப்பு வசதிகளுடன் வருகிறது.
ADAS வசதிகள்
ஸ்டாப்-என்-கோ உடன் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் |
லேன் டிபார்ச்சர் வார்னிங் |
லேன் கீப் அசிஸ்ட் |
ரியர் கிராஸ் டிராஃபிக் வார்னிங் |
ஆட்டோ எமர்ஜென்ஸி பிரேக்கிங் (பாதசாரி, சைக்கிள் ஓட்டுபவர், வாகனம் மற்றும் சந்திப்பு) |
பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் வித் டோர் ஓபனிங் அலெர்ட் |
ரியர் கொலிஷன் வார்னிங் |
ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் |
டிராஃபிக் சைன் ரெக்கனைசேஷன் |
ஆட்டோ ஹை பீம் அசிஸ்ட் |
பாதுகாப்பு வசதிகள்
முன் ஏர்பேக்குகள் |
சைடு மற்றும் கர்ட்டெயின் ஏர்பேக்குகள் |
எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் |
ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் |
அனைத்து பயணிகளுக்கும் 3-பாயிண்ட் சீட்பெல்ட்கள் |
சீட் பெல்ட் ரிமைண்டர்கள் |
ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் |
டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் |
முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் |
ஹில் டெசென்ட் கன்ட்ரோல் |
தீர்ப்பு
ஒட்டுமொத்தமாக டாடா கர்வ் ஒரு விரும்பத்தக்க மற்றும் தனித்துவமான தயாரிப்பு ஆகும். இது அதன் தோற்றத்தால் தனித்து நிற்கும். நெக்ஸானுடன் ஒப்பிடும்போது இது டிரைவ் செயல்திறன், ரேஞ்ச், வசதிகள் மற்றும் பூட் ஸ்பேஸ் பற்றி பேசும்போது இது மேம்படுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் கர்வ் மேலே உள்ள ஒரு பிரிவில் உள்ள அனுபவத்தை வழங்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அங்கே நீங்கள் ஏமாற்றமடையலாம். குறிப்பாக உட்புறம் அல்லது பின் இருக்கை இடம் மற்றும் வசதிக்கு வரும்போது. பின் இருக்கை அனுபவம் நெக்ஸானை போலவே உள்ளது. மேலும் அதன் சாய்வான கூரையின் காரணமாக சராசரிக்கும் அதிகமான உயரம் உள்ளவர்களுக்கு இது தடையாக இருக்கும். இந்த அளவுள்ள காரில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பெரிய கார் உணர்வை கர்வ் கார் தராது. கூடுதலாக அதன் வெளிப்புற முன் வடிவமைப்பு மற்றும் கிட்டத்தட்ட முழு உட்புற வடிவமைப்பு மற்றும் தரம் போன்ற நெக்ஸானை போன்ற பல எலமென்ட்கள் கர்வ் -ல் உள்ளன. நீங்கள் கர்வ் -க்கு கூடுதலாக பனம் செலுத்துகிறீர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்தப் பகுதிகளில் சில வேறுபாடுகள் இருந்திருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக கர்வ் ஒரு நல்ல தயாரிப்பு ஆகும், ஆனால் தரம், இடம் மற்றும் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் இது ஒரு செக்மென்ட்-அப் அனுபவத்தை வழங்க முடிந்தால் அது நெக்ஸானை விட முழுமையான மேம்படுத்தப்பட்டதாக இருந்திருக்கும்.