Renault Kiger விமர்சனம்: பட்ஜெட்டில் கிடைக்கும் ஒரு சிறப்பான எஸ்யூவியா ?
Published On ஜனவரி 27, 2025 By ujjawall for ரெனால்ட் கைகர்
- 1 View
- Write a comment
விலையுயர்ந்த சப்-4எம் எஸ்யூவி -களின் படையில் கைகர் ஆனது இடம், நடைமுறை தன்மை மற்றும் வசதி ஆகியவற்றை மையமாக கொண்டு கவர்ச்சிகரமான பட்ஜெட் காராக இருக்கிறது.
ரூ.5.99 லட்சம் முதல் 11.22 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் (எக்ஸ்-ஷோரூம்) ஒரு சப்-4m எஸ்யூவி -யாக ரெனால்ட் கைகர் உள்ளது. இதன் கவர்ச்சிகரமான விலை ஆனது மஹிந்திரா XUV 3XO, மாருதி பிரெஸ்ஸா, சோனெட், மற்றும் ஹூண்டாய் வென்யூ, நிஸான் மேக்னைட், டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்றவற்றுக்கு ஒரு பட்ஜெட் காராக கைகரை நிலைநிறுத்த உதவுகிறது.
இப்போது கைகர் சரியான அப்டேட்டை பெறுவதற்கு சிறிது நேரம் ஆகிவிட்டது. எனவே இந்த விமர்சனத்தில், அது போட்டியை இன்னும் தொடர முடியுமா என்பதையும், பட்ஜெட்ட்டில் இருப்பதால் சமரசங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை நாங்கள் இங்கே விவரித்துள்ளோம்.
சாவி
கைகரின் சாவி தனித்துவமானது. இது ஒரு காருடன் கிடைக்கும் வழக்கமான சாவியை போல் இல்லை இது மெல்லியதாகவும், செவ்வக வடிவமாகவும் இருப்பதால் ஒரு கீ கார்டு போல உள்ளது. நல்ல விஷயம் என்னவென்றால் இது உங்கள் பாக்கெட்டில் எளிதில் பொருந்துகிறது. ஆனால் வடிவமைப்பைப் பொறுத்தவரையில் இது கொஞ்சம் பழமையானதாக உள்ளது. ஸ்டைலிங் ஒரு கொஞ்சம் பழமையானது மற்றும் பிளாஸ்டிக் தரமும் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.
சாவியை தவிர கைகரில் ப்ராக்சிமிட்டி சென்சார் ஒன்றும் கொண்டுள்ளது. எனவே நீங்கள் உங்கள் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுக்க வேண்டியதில்லை. கைகளில் பொருள்கள் நிறைந்திருக்கும் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வடிவமைப்பு
அப்டேட் இல்லாவிட்டாலும் கூட கைகர் இதன் போட்டியாளரகளுடன் ஒப்பிடும் போது காலாவதியானதாகவோ அல்லது போட்டியில் இருந்து விலகியதாகவோ தெரியவில்லை. இதன் அளவு காரணமாக பெரிய எஸ்யூவி -யின் பிரிவில் இதை சேர்க்க முடியாவிட்டாலும் கூட வடிவமைப்பு எலமென்ட்கள் இந்த காருக்கு ஒரு முரட்டுத்தனமான எஸ்யூவி தோற்றத்தை கொடுக்கின்றன.
முன்புறம் ஒரு பாடி பில்டர் தோற்றத்துடன் வருகிறது. பெரிய ஹெட்லைட்கள் மற்றும் பானட்டில் ஃபோல்டுகள் உள்ளன. LED DRL -கள் குரோம் கிரில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் டிரிபிள் LED ஹெட்லைட்கள் பிரீமியமாக தோன்றினாலும் சாலைகளில் அவற்றின் தீவிரம் சிறப்பாக இருந்திருக்கலாம்.
பக்கவாட்டிலும் இதன் ரூஃப் ரெயில்ஸ், வீல் ஆர்ச் மற்றும் சைடு கிளாடிங் ஆகியவற்றுடன் முரட்டுத்தனமான தோற்றத்தை கொடுக்கிறது. தனிப்பட்ட முறையில் இதன் 16-இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் எனக்கு சிறப்பானதாக தோன்றுகின்றன. மேலும் அதை இன்னும் சிறப்பானதாக்குவது சென்டர் கேப்பில் உள்ள ரெட் கலர் இன்செர்ட்களும் அதைத் தொடர்ந்து உள்ள ரெட் கலர் காலிப்பர்கள் உள்ளன.
பின்புறமாக பார்க்கும் போது இதன் சாய்வான பின்புற விண்ட்ஸ்கிரீன் காரணமாக இதன் குறுக்குவெட்டு ஷேடை உங்களால் கவனிக்க முடியும். கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் ஷார்க் ஃபின் ஆண்டெனாவின் உதவியோடு இந்த வடிவம் வடிவமைப்பிற்கு ஒரு ஸ்போர்ட்டி டச் சேர்க்கிறது. இந்த வடிவம் கைகர் இதன் போட்டியாளர்களிடமிருந்து தனித்து நிற்க உதவுகிறது. ஒரு ஸ்கிட் பிளேட் மற்றும் பெரிய C-வடிவ LED டெயில் லைட்கள் பின்புறத்தில் உள்ளன.
ஒட்டுமொத்தமாக கைகர் நிச்சயமாக ஏராளமான முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் சரியான அளவிலான ஸ்போர்ட்டி எலமென்ட்கள் கொண்ட அழகான தோற்றமுடைய சப்-4m எஸ்யூவி ஆகும். இதன் பல டூயல் டோன் ஷேடுகள் மற்றும் கிராஸ்ஓவர் போன்ற ஸ்டைலிங் மூலமாக வடிவமைப்பு பெரும்பாலான மக்கள் விரும்பும் வகையிலேயே உள்ளது.
பூட் ஸ்பேஸ்
பேப்பரில் 405-லிட்டர் பூட் இடத்தை கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முழு சூட்கேஸ் செட் (1x பெரியது, 1x நடுத்தரம், 1x சிறியது) மற்றும் ஒரு டஃபிள் பேக் உட்பட ஒரு முழு குடும்பத்துக்கான வார இறுதி சாமான்களையும் வைக்கலாம். இதன் பிறகும் இரண்டு லேப்டாப் பைகள் அல்லது தளர்வான பொருட்களை வைக்க உங்களுக்கு இடம் உள்ளது.
நீங்கள் பின் இருக்கைகளுக்கு 60:40 ஸ்பிளிட் ஆப்ஷன் உள்ளது. இதனால் கூடுதல் பொருட்கள் அல்லது சாமான்களை வைக்க ஒரு ஃபுளோர் கிடைக்கும். பூட் லிப் கொஞ்சம் உயரத்தில் உள்ளது. இதனால் சாமான்களை வைக்கும் போது கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது.
இன்ட்டீரியர்
கைகரின் கேபின் அடிப்படையான விஷயங்களை மட்டுமே கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் ஸ்டைலிங் சிறப்பாக இருப்பதால் அதையே உட்புறத்திலும் எதிர்பார்க்க முடியாது. இதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் பெரும்பாலான கேபின் டார்க் கிரே கலரில் உள்ளது. டேஷ்போர்டில் சில கான்ட்ராஸ்ட் எலமென்ட்கள் உள்ளன. சீட் ஆரஞ்சு ட்ரீட்மென்ட்டை கொண்டுள்ளன. ஆனால் உங்கள் ரசனையைப் பொறுத்து இது பிடிக்கலாம் அல்லது பிடிக்காமல் போகலாம்.
தரம் என்று வரும் போது சராசரியாகவே உள்ளது. ஆனால் இந்த விலைக்கு தரம் ஏற்றுக்கொள்ளத்தக்கது. கடினமான பிளாஸ்டிக்குகள் முழு டாஷ்போர்டு முழுவதும் உள்ளன. ஆனால் அவை கீறல் விழும் வகையில் இல்லை. ரெனால்ட் சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் ஸ்டீயரிங் வீலில் சில லெதரெட் பொருட்கள் உள்ளன. அதே சமயம் இருக்கைகள் செமி லெதரெட் ஆக உள்ளன. பட்டன்களின் தரமும் ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே உள்ளது. ஆனால் AC கன்ட்ரோல்கள் மற்றும் டயல்களில் உள்ள சிறிய டிஸ்பிளேக்களில் பிரீமியம் தெரிகிறது.
இருக்கைகளுக்கு வரும்போது அவை கொஞ்சம் விறைப்பாக இருந்தாலும் நல்ல வசதியாக உள்ளன. அவர்கள் நகரத்தில் குறைவான மெத்தையை போல உணர வைக்கவில்லை என்றாலும் கூட நீண்ட சாலைப் பயணங்களிலும் உங்களை சோர்வடையச் செய்யாது. நபர்கள் எந்த அளவில் இருந்தாலும் கூட அவை இடமளிக்கும். இருக்கைக்கு மேனுவலாக ஹெயிட் அட்ஜஸ்ட்மென்ட் கிடைக்கிறது. அதே சமயம் ஸ்டீயரிங் டில்ட் அட்ஜஸ்ட்மெண்ட்டை மட்டுமே கொண்டுள்ளது. எனவே வசதியான ஓட்டுநர் நிலையைக் கண்டறிவது எளிதானது.
சீட் பெல்ட்டை கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமாக உள்ளது. சில சமயங்களில் சீட் பெல்ட்டை கண்டுபிடித்து உள்ளே நுழைப்பதை கடினமாக்குகிறது. பக்கிள் சற்று மேலே அமைந்திருந்தால் மட்டுமே ஒவ்வொரு முறை சீட் பெல்ட்டை போட முயற்சிக்கும் போது நீங்கள் சிரமப்பட வேண்டியதிருக்காது.
முன்பக்கத் தோற்றம் தடையின்றி உள்ளது. ஆனால் ஏ-பில்லர்கள் கொஞ்சம் அதிகமாகவே உள்ளன. அவற்றுக்கும் ORVM -களுக்கும் இடையில் எந்த இடைவெளியும் இல்லை என்பதால், நீங்கள் 90 டிகிரி திருப்பத்தை எடுக்கும் போதெல்லாம் இது ஒரு பிளைண்ட் ஸ்பாட்டை உருவாக்குகிறது.
ஆனால் இவை இரண்டு சிறிய குறைகள் மட்டுமே மற்றபடி கேபின் அமைப்பு நன்றாகவே உள்ளது. நிச்சயமாக இது வடிவமைப்பின் அடிப்படையில் நிதானமானது. ஆனால் இது வசதியானது. மேலும் ஏராளமான நடைமுறை ஸ்டோரேஜ் ஸ்பேஸையும் கொண்டுள்ளது.
நடைமுறை
நான்கு டோர்களில் வழக்கமான டோர் பாக்கெட்டுகள், க்ளோவ் பாக்ஸ் மற்றும் ஏசி கன்ட்ரோல்களுக்கு கீழே இரண்டு ஓபன் ஸ்டோரேஜ் இடங்கள் உள்ளன. உங்கள் மொபைலை சென்ட்ரல் கன்சோலில் உள்ள டிரேவில் வைக்கலாம். இதன் அடியில் பெரிய இடமும் உள்ளது. ஆனால் இது ஒரு வித்தியாசமான வடிவத்தைக் கொண்டுருப்பதால் பொருட்களை வைக்க சற்று சிரமமாக உள்ளது. ரெனால்ட் அதனுடன் ஆப்ஷனலான கூடுதல் ஆக்ஸசரீஸை வழங்குகிறது. இதில் கப் ஹோல்டருக்கான ஆப்ஷனையும் பெறுகிறது. ஆனால் அதுவும் கூட பயன்படுத்த எளிமையானதாக இல்லை.
வழக்கமான ஸ்டோரேஜ் இடங்களை தவிர டாஷ்போர்டிலேயே கூடுதல் க்ளோவ்பாக்ஸ் ஸ்பேஸ் உள்ளது.
பின்பக்க பயணிகளுக்கு முன் இருக்கைகளுக்குப் பின்னால் பாக்கெட்டுகள் மற்றும் இரண்டு கப் ஹோல்டர்கள் மற்றும் சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்டில் ஃபோன் ஸ்டோரேஜ் உள்ளது. சார்ஜ் செய்வதற்கு 12V சாக்கெட் (முன் மற்றும் பின்புறம்) மற்றும் USB போர்ட் உள்ளது. டைப்-சி போர்ட் இல்லை.
வசதிகள்
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ஆட்டோ IVRM, கீலெஸ் என்ட்ரி, ஆட்டோ ஏசி மற்றும் ஆட்டோ ஓஆர்விஎம்கள் என கைகரில் தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.
இன்ஃபோடெயின்மென்ட் இதன் பிரிவில் மிகப்பெரியது அல்ல என்றாலும் கூட வேலையை சரியாக செய்கிறது. போட்டி கார்களில் உள்ளதை போல இது சாஃப்ட் ஆக இல்லை. ஆனால் ஸ்கிரீன் நம்பகத்தன்மையுடன் உள்ளது. இதன் செயல்பாட்டில் உண்மையான பின்னடைவு இல்லை மற்றும் உங்கள் ஃபோனை இணைப்பதும் எளிதான செயலாகும்.
இருப்பினும் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, டிரைவ்-மோட் குறிப்பிட்ட தீம்களுடன் கூடிய சாப்ஃட் கிராபிக்ஸ் கொண்டுள்ளது. டிரைவ் மோடுக்கு ஏற்ப டிஸ்ப்ளேவில் உள்ள தகவலும் மாறுகிறது. எடுத்துக்காட்டாக, இது இகோ பயன்முறையில் மைலேஜ் விவரத்தை காட்டுகிறது. அதே நேரத்தில் நீங்கள் ஒரு ஜி ஃபோர்ஸ் பார் மற்றும் அவுட்புட் (ஹார்ஸ்பவர் மற்றும் டார்க்) விவரங்கள் ஸ்போர்ட் மோடில் கிடைக்கும்.
6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் வழக்கமான பயன்பாட்டிற்கு தேவைப்படும் வேலையைச் செய்கிறது. இதன் போட்டியாளர்கள் சிலர் வழங்கும் பிரீமியம் ஆடியோ தரம் இதில் இல்லை. ஆனால் நீங்கள் ஹார்ட்கோர் இசைப் பிரியர்களாக இருந்தால் மட்டுமே இதைப் பற்றி புகார் இருக்கும்.
எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கையில் எந்த வசதியையும் கைகர் தவறவிடவில்லை. ஆனால் போட்டியாளர்களை நாம் பார்க்கும் போது சன்ரூஃப், வென்டிலேட்டட் சீட்கள், ஆட்டோ ஹெட்லைட்கள் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே போன்ற சில ஃபீல்-குட் வசதிகள் இதில் கிடைக்காது. இந்த பிரிவில் கூடுதலான வசதிகளை வழங்கும் கார்கள் கைகரை விட விலை அதிகமாக உள்ளன. எனவே இந்த விலைக்கு கைகரி -ன் வசதிகள் பட்டியல் மிகச் சிறப்பானதாக உள்ளது.
பாதுகாப்பு
கைகரில் டூயல் ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், சென்சார் கொண்ட பின்புற பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் வார்னிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகியவை ஸ்டாண்டர்டாக கிடைக்கின்றன. மிட்-ஸ்பெக் RXT வேரியன்ட்டில் இரண்டு கூடுதல் ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இதன் டாப்-ஸ்பெக் டிரிமில் கூட 6 ஏர்பேக்குகள் கிடைக்காது.
இருந்த போதிலும் 2022 ஆம் ஆண்டில் குளோபல் NCAP -லிருந்து கைகர் ஒரு ஈர்க்கக்கூடிய நான்கு நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. ஏதேனும் ஒரு குறை இருந்தால் அது ரிவர்சிங் கேமராவின் தரம் ஆகும். அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
பின் இருக்கைகள்
இந்த பிரிவில் உள்ள கார்கள் பொதுவாக சமரசம் செய்யப்பட்ட பின் இருக்கை அனுபவத்தைக் கொண்டிருக்கும். ஆனால் கைகர் இந்த வகையில் ஈர்க்கிறது. உங்கள் குடும்பத்தாரையோ அல்லது வயதான பெற்றோரையோ உட்கார வைக்க விசாலமான மற்றும் வசதியான இடம் கிடைக்கும்.
தலை, முழங்கால் அல்லது கால் அறை என எல்லாவற்றிலும் போதுமானதாகவே உள்ளது மேலும் இது 6 அடி உயரத்தில் இருப்பவர்களுக்கும் போதுமானதாக இருக்கும். கேபினில் மூன்று சாதாரண அளவிலான பெரியவர்கள் அமரும் அளவுக்கு அகலம் உள்ளது. தட்டையான தளம் காரணமாக மேலும் நடுத்தர பயணிகள் குறுகிய நகரங்களில் ஓட்டவும் வசதியாக இருக்கும். ஆனால் நீண்ட பயணங்களில், நடுத்தர ஹெட்ரெஸ்ட் இல்லாதது ஒரு புகாராக இருக்கலாம்.
மற்றொரு சிறிய புகார் இதன் சிறிய ஜன்னல்களில் இருந்து வருகிறது, இது டார்க் கேபின் தீம் உடன், இங்கு உண்மையான இடத்துக்குப் பஞ்சம் இல்லை என்றாலும், இறுக்கமான இடத்தில் இருப்பதை போன்ற உணர்வை கொடுக்கிறது.
ஓட்டும் அனுபவம்
ரெனால்ட் கைகரை 1-லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் என இரண்டு இன்ஜின்களின் ஆப்ஷன் உடன் வழங்குகிறது. எங்கள் சோதனை காரில் டர்போ-பெட்ரோல் மற்றும் சிவிடி மிக்ஸிங் இருந்தது. ஆனால் டிரைவிங்கை பார்க்கும் முன்னர் இந்த இன்ஜினின் ரீஃபைன்மென்ட் பற்றி பேச வேண்டும்.
இன்ஜின் |
1-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் |
1 லிட்டர் டர்போ |
அவுட்புட் |
72 PS/96 Nm |
100 PS/160 Nm வரை |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT மற்றும் AMT |
5-ஸ்பீடு MT மற்றும் CVT |
3-சிலிண்டர் யூனிட்கள் என்பதால் இது மிகவும் ரீஃபைன்மென்ட் ஆக உள்ளன. அதிர்வுகள் குறைவாக உள்ளன, அது ஏற்றுக் கொள்ளத்தக்கது, ஆனால் கேபினுக்குள் வரும் இன்ஜின் சத்தம் கொஞ்சம் பயமுறுத்தலாம். ஆனால் குறிப்பாக நீங்கள் ஆர்வத்துடன் வாகனம் ஓட்டும்போது. தினசரி அடிப்படையில் உங்களுக்கு இதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் ரெனால்ட் இன்சுலேஷனில் இன்னும் கொஞ்சம் வேலை செய்திருந்தால் ஒட்டுமொத்த ரீஃபைன்மென்ட் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
செயல்திறனை பொறுத்தவரையில் இந்த இன்ஜின் உற்சாகமானதாக இருக்காது. இது நகரம் மற்றும் நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு போதுமான சக்தியைக் கொண்டுள்ளது. டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் அசாதாரண இணைப்பான CVT டிரான்ஸ்மிஷன் உண்மையில் இங்கு நன்றாக வேலை செய்கிறது. இது வழக்கமான டிரான்ஸ்மிஷன் போன்ற கியர் ஷிஃப்ட்கள் போலவே உள்ளன. ஆனால் AMT -களை போலல்லாமல் (ஆட்டோமெட்டிக் மேனுவல்), இதன் செயல்பாட்டில் மென்மையானது மற்றும் ஜெர்க் இல்லாததாக உள்ளது
விரைவாக முந்திச் செல்வது எளிமையானது. ஓவர்டேக்குகளுக்கும் அதிக நேரம் எடுக்காது. இன்ஜின் 80-100 கி.மீ வேகத்தில் சிரமமின்றி பயணிக்கிறது. ஆனால் அந்த வேகத்தைத் தாண்டி விரைவாக முந்திச் செல்ல வேண்டும் என்றால் காரை ஸ்போர்ட்ஸ் மோடில் வைப்பது நல்லது.
த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் மிகவும் நன்றாகவே உள்ளது. மற்றும் கியர்பாக்ஸ் அதிக ஆர்பிஎம்களில் கியரை பிடித்துக் கொள்கிறது. எனவே அதிலிருந்து அதிகபட்ச பெர்ஃபாமன்ஸை பிரித்தெடுக்க நீங்கள் இன்ஜின் வேகத்தை உருவாக்க வேண்டியதில்லை. ஸ்போர்ட்ஸ் மோடில் ஸ்டீயரிங் சிறிது கனமாக இருக்கிறது. இது தேவையற்றது என்பது எங்கள் கருத்து.
வழக்கமான வாகனம் ஓட்டுவதற்கு இயல்பான பயன்முறை போதுமானது. மேலும் நீங்கள் அதிகபட்ச செயல்திறனைப் பெற விரும்பினால். நீங்கள் அதை இகோ மோடில் ஸ்லாட் செய்யலாம். இந்த பயன்முறையில் த்ரோட்டில் பதில் மிகவும் மந்தமாக இருக்கும். மேலும் இது மிகவும் நிதானமாக ஓட்டுவதற்கு மட்டுமே பொருத்தமானது.
மைலேஜை சோதித்த போது நகரத்தில் 13 கிமீ/லி மற்றும் நெடுஞ்சாலையில் 17.02 கிமீ/லி கொடுத்தது. இந்த எண்கள் அசாதாரணமானவை அல்ல, ஆனால் சிறிய மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுக்கு இவை ஏற்கத்தக்கவை.
நீங்கள் மிகவும் இறுக்கமான பட்ஜெட்டில் இருந்தால் மற்றும் நகர மற்றும் அவ்வப்போது நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு கைகர் விரும்பினால் மட்டுமே நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை கருத்தில் கொள்ளுங்கள். இல்லையெனில் இந்த டர்போ-பெட்ரோல் இன்ஜின் உங்களுக்கு நகரத்திலும் நெடுஞ்சாலையிலும் அதிக சிரமமில்லாத அனுபவத்தை வழங்கும்.
சவாரி வசதி
சவாரி தரம் மற்றும் சௌகரியம் ஆகியவற்றின் அனுபவத்திலும் கைகர் -ன் வலுவான புள்ளியாக இருக்கலாம். சஸ்பென்ஷன் நகரின் அனைத்து ஸ்பீட் பிரேக்கர்களையும், உடைந்த சாலைகளையும், பள்ளங்களையும் நன்றாக சமாளிக்கிறது. இதன் சவாரி தரத்தில் குஷனிங் உணர்வு உள்ளது. இது மோசமான சாலைகளில் உங்களை வசதியாக வைத்திருக்கும். மற்றும் கேபினுக்குள் மூவ்மென்ட்டை கட்டுப்படுத்துகிறது.
205 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் என்பதால் பெரிய ஸ்பீட் பிரேக்கர்களை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. மேலும் அந்த கரடுமுரடான சாலைகளில் வழக்கத்தை விட அதிக வேகத்தில் செல்லலாம். உங்கள் நெடுஞ்சாலை டிரைவ் -க்கும் இது வசதியாக இருக்கும். ஏனெனில் இது அதிக வேகத்தில் நிலையானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சஸ்பென்ஷன் சாலைகளில் உள்ள இடைவெளிகளையும் நன்றாக சமாளிக்கும்.
கேபினுக்குள் ஒரே ஒரு உண்மையான பிரச்சனை உள்ளது - அது சவுண்ட் இன்சுலேஷன். சஸ்பென்ஷன் நன்றாக வேலை செய்தாலும் அது அமைதியாக இல்லை. மோசமான சாலைகள் அல்லது ஸ்பீட் பிரேக்கர்களில் அந்த ஒலியை நீங்கள் தொடர்ந்து கேட்கலாம். இது டயர் மற்றும் சாலை இரைச்சலுடன் சிறிது வெறுப்பாக மாறும். அதற்கான ஒரு எளிய தீர்வு, ட்யூன்களை பம்ப் அப் செய்வதாகும். அதன் பிறகு உங்களுக்கு எந்த இன்சுலேஷன் பிரச்சனையும் இருக்காது.
தீர்ப்பு
இதன் விலைப் புள்ளியில், ரெனால்ட் கைகர் இதன் அளவிலான போட்டியாளர்களை விட கணிசமாக விலை குறைவாக உள்ளது, அதுதான் இதன் பலம். பணத்திற்கான இதன் மதிப்பை புறக்கணிப்பது கடினம், ஏனென்றால் விலை குறைவான இருந்தபோதிலும் கரடுமுரடான எஸ்யூவி தோற்றம், அனைத்து சரியான அம்சங்களையும் கொண்ட விசாலமான மற்றும் நடைமுறை கேபின், நல்ல பாதுகாப்பு பேக்கேஜ் மற்றும் பட்டு சவாரி தரம் ஆகியவற்றைப் பெறுவீர்கள். காரை ஓட்டுவது ஒரு பொதுவான வேடிக்கையாக இருக்காது. ஆனால் டர்போ பெட்ரோல் இன்ஜின் மென்மையான ஆட்டோமெட்டிக் வசதியுடன் போதுமான செயல்திறனைக் கொண்டுள்ளது.
ரெனால்ட் இரண்டு இடங்களில் மூலைகளை வெட்டியுள்ளதால், இது பட்ஜெட்டில் இருப்பது போல் உணர்கிறேன். கேபின் தரம் மற்றும் NVH நிலைகள் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். மேலும் இது ஒரு சில நல்ல வசதிகளும் இல்லை. ஆனால் பிந்தையது அனைத்து அடிப்படைகளையும் சரியாகப் பெறுவதால் இது உண்மையான சமரசம் அல்ல.
உங்கள் பட்ஜெட்டை ரூ. 13 லட்சத்திற்கு அப்பால் நீட்டிக்க முடிந்தால் கைகரின் போட்டியாளர்கள் நிச்சயமாக உங்களுக்கு சிறந்த ஒட்டுமொத்த அனுபவத்தைத் தருவார்கள். ஆனால் இந்த விலையில் கைகரில் உண்மையான டீல் பிரேக்கர் எதுவும் இல்லை. குறிப்பாக நீங்கள் விரும்புவது போன்ற ஸ்டைலான தோற்றமுடைய, நடைமுறை மற்றும் வசதியான சிறிய எஸ்யூவி உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற ஒரு எஸ்யூவியாக இது இருக்கும்.