Nissan Magnite AMT ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ: குறைவான விலையில் நிறைவான வசதி
Published On மே 06, 2024 By ansh for நிசான் மக்னிதே 2020-2024
- 1 View
- Write a comment
மேக்னைட் AMT உங்கள் நகரப் பயணங்களை எளிதாகக் ஆக்குகின்றது. ஆனால் நெடுஞ்சாலை பயணங்களுக்கு மேக்னைட் CVT சிறந்த தேர்வாக இருக்கும்.
வாகனம் ஓட்டும்போது வசதி வேண்டுமென்றால் அதற்கேற்ற விலை கொடுக்க வேண்டியிருக்கும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் எப்போதும் அதிக விலை கொண்டதாக இருக்கின்றது, அது சாமான்ய மக்களுக்கு எளிதாக அணுகக்கூடியதாக இல்லை. அந்த கவலையை குறைக்கும் விதத்தில் இப்போது நிஸான் நிறுவனம் AMT ஆப்ஷனை மேக்னைட் காரில் சேர்த்துள்ளது. இது மேக்னைட்டை இந்தியாவில் விற்பனையில் உள்ள மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் ஆட்டோமெட்டிக் எஸ்யூவியாக மாற்றியுள்ளது. மேக்னைட் AMT -ன் டிரைவிங் அனுபவத்தை தெரிந்து கொள்வதற்கு முன்னர் அதில் என்ன வசதிகள் இருக்கின்றன என்பதை விரைவாகப் பார்க்கலாம்.
இப்போதும் நவீனமாகத் தெரிகிறது
நிஸான் 2020 ஆண்டில் மேக்னைட் மீண்டும் அறிமுகப்படுத்தியது. ஆனால் இப்போது வரை இந்த சப்காம்பாக்ட் எஸ்யூவிக்கு எந்த ஃபேஸ்லிஃப்ட் அல்லது புதுப்பிப்புகளையும் நிஸான் கொடுக்கவில்லை, ஆனாலும் கூட அது இன்னும் நவீனமாகவே தோற்றமளிக்கிறது. மேக்னைட் AMT ஆனது அதே வடிவமைப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் இரண்டு புதிய விஷயங்களைப் பெறுகிறது: புளூ மற்றும் பிளாக் டூயல்-டோன் ஷேடு மற்றும் AMT வேரியன்ட்டை அடையாளம் காணும் வகையில் "EZ-Shift" பேட்ஜிங் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
மற்ற விஷயங்களில் எந்த வித்தியாசமு இல்லை. அதன் முன்பக்க குரோம் இன்செர்ட்கள், நேர்த்தியான LED ஹெட்லைட் செட்டப் மற்றும் L-வடிவ DRL -களுடன் ஒரு பெரிய கிரில்லை கொண்டுள்ளது. இந்த அப்ரைட் முன்பக்க தோற்றம் மேக்னைட்டின் நவீன தோற்றத்தை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே வைத்திருக்கிறது.
பக்கவாட்டில் அதன் பெரிய வீல் ஆர்ச்கள் மற்றும் டோர் கிளாடிங் உடன் ஒரு மஸ்குலர் தோற்றம் உள்ளது . 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் டோர் கிளாடிங்கில் உள்ள குரோம் எலமென்ட்கள் கூடுதலாக ஒரு தோற்றத்தை கொடுக்கின்றன. மேக்னைட்டின் எஸ்யூவி கவர்ச்சியை நிறைவு செய்கிறது. பின்புறம் ஒரு பெரிய பம்பர், ஸ்கிட் பிளேட் மற்றும் மேல் ஒரு ஃபோல்டிங் ஆகியவற்றுடன் இந்த மஸ்குலர் மற்றும் நவீன வடிவமைப்புப் போக்கைப் பின்பற்றியுள்ளது. ஒட்டுமொத்தமாக நேரம் மேக்னைட்டை பெரிதாக மாற்றியமைக்கவில்லை. இன்றும் கூட எஸ்யூவி -யானது ஆனது அதன் கம்பீரமான வடிவமைப்பின் மூலம் நல்ல அளவிலான சாலை தோற்றத்தை தக்க வைத்துக் கொள்கிறது.
ஒரு சிம்பிள் கேபின்
மேக்னைட் காரின் கேபின் எளிமையானது ஆனால் வித்தியாசமானது. இது லேயர்டு டேஷ்போர்டு மற்றும் அறுகோண ( hexagonal )வடிவ ஏசி வென்ட்களுடன் கூடிய சாதாரண பிளாக் கேபினை பெறுகிறது. இந்த வடிவமைப்பு கேபினை ஸ்மார்ட் மற்றும் ஸ்போர்ட்டியாக மாற்றுகிறது.
கேபினுக்குள் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளின் தரம் சராசரியாக உள்ளது. மேலும் ஃபிட் மற்றும் ஃபினிஷ் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஏசி டயல்கள் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்டுக்கு கீழே உள்ள பட்டன்கள் போன்ற சில எலமென்ட்களும் உள்ளன, அவை கொஞ்சம் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால் கேபினின் வடிவமைப்பும் தரமும் விரும்பும் வகையிலேயே இருக்கின்றது.
முன் இருக்கைகள் என்று வரும் போது அவை வசதியாகவும் விசாலமாகவும் இருக்கின்றன. பிரீமியம் உணர்விற்காக லெதரெட் அப்ஹோல்ஸ்டரியை நாங்கள் விரும்பினாலும், பேப்ரிக் சீட்களும் அதில் எந்த வித சமரசத்தையும் செய்யவில்லை. குஷனிங் சரியானதாக இருக்கின்றது மற்றும் உங்களுக்கு நல்ல அளவு ஹெட்ரூம் கிடைக்கும். ஆனால் சராசரி எஸ்யூவி -யுடன் ஒப்பிடும்போது நீங்கள் இங்கே கொஞ்சம் தாழ்வாக அமர்ந்திருப்பீர்கள்.
பின்புற இருக்கைகளின் சொகுசு மற்றும் இடவசதி முன்புறம் போலவே உள்ளது. ஹெட்ரூம், லெக்ரூம் மற்றும் முழங்கால் ரூம் ஆகியவற்றில் எந்தப் பற்றாக்குறையும் இல்லை. மேலும் நீங்கள் தொடையின் கீழ் நல்ல ஆதரவையும் பெறுவீர்கள். ஜன்னல்கள் பெரியதாக இருப்பதால் வெளிப்பார்வையும் தெளிவாகவே இருக்கின்றது. பின் இருக்கைகள் கூடுதல் வசதிக்காக சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட்டை பெறுகின்றன.
இந்த கேபினின் வசதியைத் தவிர நீங்கள் நல்ல அளவிலான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களையும் பெறுவீர்கள். நான்கு டோர்களிலும் 1 லிட்டர் பாட்டில் ஹோல்டர்கள் உள்ளன மற்றும் நடுவில் இரண்டு கப் ஹோல்டர்கள் கிடைக்கும். சென்டர் கன்சோலில் இரண்டு ஸ்டோரேஜ் இடங்கள் உள்ளன. அங்கு நீங்கள் உங்கள் மொபைல் அல்லது பர்ஸை வைக்கலாம். மேலும் இது சராசரி அளவிலான க்ளோவ் பாக்ஸை பெறுகிறது.
பின்பக்க பயணிகளுக்கு இருக்கை பின் பாக்கெட்டுகள், டோர்களில் பாட்டில் ஹோல்டர்கள் மற்றும் இரண்டு கப் ஹோல்டர்கள் கொண்ட சென்டர் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் உங்கள் ஃபோனை வைப்பதற்கான ஸ்லாட் போன்றவற்றில் நடைமுறை சாத்தியம் உள்ளது. ஸ்டோரேஜ் இடத்தின் அடிப்படையிலும் மேக்னைட் எந்த சமரசமும் செய்யவில்லை. சார்ஜிங் ஆப்ஷன்களுக்கு முன்பக்க பயணிகளுக்கு 12V சாக்கெட் மற்றும் USB சார்ஜிங் போர்ட் கிடைக்கும். ஆனால் பின் இருக்கை பயணிகளுக்கு பின் ஏசி வென்ட்களுக்கு கீழே ஒரு 12V சாக்கெட் மட்டுமே உள்ளது.
பூட் ஸ்பேஸ்
மேக்னைட் ஆனது 336-லிட்டர் பூட் ஸ்பேஸை பெறுகிறது. இது பிரிவில் மிகப்பெரியது இல்லை ஆனால் உங்கள் நீண்ட பயணங்களுக்கு கொண்டு செல்லும் பைகளை வைத்திருக்க போதுமானது. லக்கேஜை பூட்டில் வைக்க அதன் உயரத்தில் உள்ள பூட் காரணமாக நீங்கள் சில கூடுதல் முயற்சிகள் தேவைப்படும். ஆனால் உங்களிடம் அதிகமான லக்கேஜ்கள் இருந்தால் மற்றும் பூட் நிரம்பியிருந்தால், நீங்கள் 60:40 ஸ்பிளிட் பின் இருக்கைகளின் ஆப்ஷன்களை பெறுவீர்கள். எனவே நீங்கள் அதிக சாமான்களை எளிதாக வைத்திருக்க முடியும்.
வசதிகள்
AMT -ன் வசதியைத் தவிர நிஸான் இந்த அப்டேட்டில் மேக்னைட் காருக்கு கூடுதல் வசதிகளை வழங்கவில்லை. நிஸான் மேக்னைட்டின் வசதிகள் பட்டியல் அதன் விலைக்கு போதுமானதாக உள்ளது, ஆனால் கார் மூன்று ஆண்டுகள் பழையது இருக்கின்றது. இது 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப்பை கொண்டுள்ளது. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்கின்றது. ஆனால் இது பயன்படுத்த எளிதானது. ஆனால் இந்த டிஸ்ப்ளே கொஞ்சம் பிக்சலேட்டாக இருப்பதால், அது தேதியிட்டதாகத் தெரிகிறது. டச் ஸ்கிரீன் தவிர இது 7 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் ரியர் ஏசி வென்ட்களுடன் சிறந்த செயல்திறனுடன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் பெறுகிறது. ஆனால் ஒரு பெரிய மிஸ் ஒரு சன்ரூஃப் ஆகும் இது இப்போது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேக்னைட்டின் முதல் இரண்டு வேரியன்ட்களும் நிஸானின் டெக் பேக்கின் ஆப்ஷனை பெறுகின்றன. இதன் மூலம் நீங்கள் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், படில் லேம்ப்ஸ், ஆம்பியன்ட் லைட்ஸ், ஏர் ஃபியூரிபையர் மற்றும் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் செட்டப் உள்ளிட்ட கூடுதல் வசதிகளைப் பெறலாம்.
பாதுகாப்பு
குளோபல் NCAP பழைய கிராஷ் டெஸ்ட்களில் நிஸான் மேக்னைட் கிராஷ்-டெஸ்ட் செய்யப்பட்ட போது 4-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு கிடைத்தது. ஆனால் அதன் பாதுகாப்பு வசதிகளின் பட்டியலை இப்போது அப்டேட் செய்திருக்கலாம். இது ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகளைப் பெறுகிறது. ஆனால் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களில் கூட இரண்டு ஏர்பேக்குகள் மட்டுமே கிடைக்கும்.
இதேபோல் இது சிக்கலான இடங்களிலிருந்து எளிதாக வெளியேற 360 டிகிரி கேமராவை பெறுகிறது, ஆனால் இந்த செட்டப்பின் செயல்பாடு மற்றும் கேமரா குவாலிட்டி அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்த மூன்று ஆண்டுகளில் இந்த வசதிகளை அனுபவத்தை மேம்படுத்த நிஸான் முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
செயல்திறன்
இன்ஜின் |
1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
72PS |
100PS |
டார்க் |
96Nm |
160Nm |
டிரான்ஸ்மிஷன் |
5MT/ 5AMT |
5MT/ CVT |
இப்போது இந்த ரிவ்யூவின் முக்கிய பகுதிக்கு வருவோம்: மேக்னைட் AMT காரை ஓட்டுவது எவ்வளவு சிறப்பானது ? அதற்கான பதில் எளிதானது: மேக்னைட் AMT ஒரு நல்ல நகரப் பயணத்துக்கு ஏற்ற கார் (சிட்டி கம்யூட்டர்) ஆனால் அதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை. முதலில் அடிப்படை விஷயங்களை பார்ப்போம். மேக்னைட் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது: 1-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல், மற்றும் AMT டர்போ இல்லாத இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கும்.
AMT ஓட்டுவதற்கு வசதியானது மேலும் கியர் மாற்றங்கள் மென்மையாக இருக்கின்றன. இருப்பினும், இது கொஞ்சம் மெதுவாக இருக்கின்றது. லேசான காலுடன் நகரத்திற்குள் வாகனம் ஓட்டுவது ஒரு தொந்தரவாக இருக்காது மேலும் நீங்கள் எளிதாக ஓட்டி செல்லலாம், ஆனால் நீங்கள் யாரையாவது முந்திச் செல்லும்போது அல்லது வேகம் தேவைப்படும் சூழ்நிலைகளில் அது கொஞ்சம் நேரத்தை எடுக்கும். இது மேக்னைட்டை மிகவும் வசதியுடன் A புள்ளியில் இருந்து B வரை ஓட்ட விரும்புவோருக்கு ஏற்றதாக ஆக்குகிறது. ஆனால் டிரைவிங்கை என்ஜாய் செய்பவர்களுக்கு ஏற்றதாக இருக்காது.
நெடுஞ்சாலைகளிலும் இதேபோலத்தான் இது க்ரூஸ் செய்வது ஒரு பிரச்சனையாக இருக்காது. ஆனால் அதிக வேகத்தில் செல்வதற்கு சற்று அதிக முயற்சி தேவைப்படும். அது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறையாக இருக்கும். சாலையில் முந்துவதற்கு நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டியிருக்கும்.
மேக்னைட் AMT ஆனது இந்த பிரிவில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் ஆட்டோமெட்டிக் ஆக இருந்தாலும் அது உங்களின் டிரைவிங் பாணியில் சமரசம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறதுஆனால் நிதானமான பயணத்திற்கு இது சிறந்த கார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
சவாரி & கையாளுதல்
இங்கும் மேலே சொன்ன எதுவும் மாறவில்லை. இந்திய சாலை நிலைமைகளுக்கு ஏற்ப சவாரி தரம் இன்னும் வசதியாக உள்ளது. மேக்னைட்டின் சஸ்பென்ஷன் அமைப்பு மேடுகளை நன்றாக சமாளிக்கின்றது காருக்குள் எதையும் நீங்கள் உணர மாட்டீர்கள். இது ஸ்பீட் பிரேக்கர்கள் மற்றும் பள்ளங்களை எளிதில் கடந்து செல்கின்றது. மேலும் டிரைவிங் இன்னும் வசதியாக இருக்கும்.
வடிவமைப்பு ஸ்போர்ட்டியாக இருந்தாலும் கூட இதன் கையாளுதல் அப்படி இல்லை. இருப்பினும், இது பாதுகாப்பானது மற்றும் கணிக்கக்கூடிய வகையில் உள்ளது. மேக்னைட் அதிக வேகத்தில் நிலையானதாக இருக்கும். மேலும் உடலின் பக்கத்திலிருந்து பக்க இயக்கம் குறைவாக இருக்கும். ஒட்டுமொத்தமாக நீங்கள் ஒரு வசதியான மற்றும் மென்மையான ஓட்டுநர் அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்.
தீர்ப்பு
மேக்னைட் AMT -க்கு நீங்கள் ஒரு வாய்ப்பு கொடுக்கலாமா ? ஆம் நிச்சயமாக ஆனால் நீங்கள் ஒரு சிட்டி கம்யூட்டரை விரும்பினால் மட்டுமே. மேக்னைட் AMT அதை எளிதில் கவனித்துக் கொள்ள முடியும். மேலும் அதன் வசதிகள் பட்டியல் அதன் போட்டியாளர்களைப் போல் பெரிதாக இல்லை என்றாலும் விலையால் அதை எளிதாக நியாயப்படுத்த முடியும்.
நகரப் பயணிகளுக்கு ஏற்றபடி இது நவீன ஸ்டைலிங்குடன் உள்ளது நல்ல பெர்ஃபாமன்ஸ் மற்றும் AMT போன்ற வசதிகளை கொண்டுள்ளது. நீங்கள் அதிக நெடுஞ்சாலை பயணங்களை மேற்கொள்வதாக இருந்தால், சிறந்த செயல்திறன் கொண்ட எஸ்யூவியை விரும்பினால் மேக்னைட் டர்போ CVT உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.