Nissan Magnite 2024 ஃபேஸ்லிப்ட் | ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்
Published On பிப்ரவரி 11, 2025 By alan richard for நிசான் மக்னிதே
- 1 View
- Write a comment
நிஸான் மேக்னைட் சமீபத்தில் ஒரு மிட்லைஃப் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெற்றது. இந்த அப்டேட்டால் தோற்றம், உட்புறம், வசதிகள் மற்றும் பாதுகாப்பை ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தும் எப்படி உள்ளன ? இவை மேக்னைட்டின் பிரபலத்தை உயர்த்துமா ?
புதிய நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் இப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பழைய மாடலுடன் ஒப்பிடும் போது கிட்டத்தட்ட இது ஒரே மாதிரியாகத் தெரிகிறது. ஆனால் காரின் உள்ளே மாற்றங்கள் கொஞ்சம் தெரிகின்றன. இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்களில் எந்த மாற்றங்களும் இல்லை. ரூ.5.99 லட்சம் முதல் ரூ.11.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் விலை )வரையிலான வரம்பில் புதுப்பிக்கப்பட்ட மேக்னைட் இன்னும் பட்ஜெட்டுக்கு ஏற்ற காம்பாக்ட் கிராஸ்ஓவர் எஸ்யூவி -யாகவே உள்ளது. ஆனால் இந்த சிறிய ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டில் என்ன விஷயங்கள் மாறியுள்ளன?
புதிய வடிவமைப்பிலான சாவி
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட்டின் சாவி -யின் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது கனமாகவும் அதிக பிரீமியமாகவும் தெரிகிறது. லாக் மற்றும் அன்லாக் பட்டன்களுடன், ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் ஆப்ஷன் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் சாவி பார்க்க மினிமலிஸ்டிக் ஆக இருக்கும். ட்ரைபரை போலவே இது அருகாமையில் திறக்கும் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. இது நன்றாக வேலை செய்கிறது மற்றும் காரில் நுழைவதும் வெளியேறுவதும் மிக எளிமையாக செய்யக்கூடிய ஒன்றாக உள்ளது.
இருப்பினும் சாவி -யில் சில குறைகளும் உள்ளன. கையில் சாவி -யை பிடிப்பது இயக்குவது சிறப்பாக இருந்தாலும் கூட அது ஃபிட்டிங் சரியாக இல்லை. மேலும் பியானோ பிளாக் எலமென்ட்டில் ஃபினிஷிங்கும் சரியாக இல்லை.
வெளிப்புற வடிவமைப்பு


மேக்னைட்டின் வெளிப்புறத்தில் மாற்றங்கள் மிகக் குறைவே. மற்றும் முதல் பார்வையில் பழைய காருடன் ஒப்பிடுகையில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. கிளாஸி பிளாக் ஃபினிஷ் மற்றும் ஒரு பெரிய பம்பர் கொண்ட சற்று அகலமான முன் கிரில் உள்ளது மட்டுமே சிறிய மாற்றமாக உள்ளது. பக்கம் அதன் 16-இன்ச் அலாய்களுடன் டூயல்-டோன் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறம் புதிய லைட்டிங் எலமென்ட்கள் உட்பட டெயில்லைட்களில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் பேனல்கள் முன்பு போலவே உள்ளன. ஒரு ஷார்க் ஃபின் ஆண்டெனா ஆகியவை செய்யப்பட்டுள்ள புதிய வடிவமைப்பை காட்டுகின்றன.
பூட் ஸ்பேஸ்
336 லிட்டர் பூட் ஸ்பேஸ் இந்த காரில் உள்ளது. இது ஒரு வார இறுதி மதிப்புள்ள சாமான்களுக்கு போதுமானது. இந்த பிரிவில் மிகவும் அகலமானது இல்லை என்றாலும் கூட இது ஒரு சிறிய கிராஸ்ஓவருக்கு போதுமானது. 60:40 ஸ்பிளிட் பின்புற சீட்கள் கூடுதல் நெகிழ்வுத்தன்மையை கொண்டுள்ளதால் கூடுதலாக சில பொருள்களை வைக்க அனுமதிக்கின்றன. ஆனால் பூட் ஓபனிங் கொஞ்சம் உயரத்தில் உள்ளதால் கனமான பைகளை தூக்கும் போதும் வெளியே எடுக்கும்போதும் கொஞ்சம் முயற்சி தேவைப்படுகிறது.
இன்ட்டீரியரில் உள்ள புதுப்பிப்புகள்
இந்த அப்டேட்டில் உள்ளே நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குரோம், கிளாஸி பிளாக் மற்றும் நுட்பமான பொருட்களுடன் ஒட்டுமொத்த அமைப்பும் நன்றாகவே உள்ளது. ஸ்டீயரிங் மற்றும் டோர் பேனல்கள் போன்ற பெரும்பாலான முக்கிய டச் பாயிண்ட்களில் சாஃப்ட் லெதரெட் பேடிங் கொடுக்கப்பட்டுள்ளது. சில காரணங்களால் நிஸான் இந்த கலர் ஸ்கீமை ஆரஞ்சு என்று பெயரிட்டுள்ளது. ஆனால் படங்களும் சரி கண்களும் சரி அதை அப்படியே ஏற்கவில்லை. பார்ப்பதற்கு டேன்/பிரெளவுன் கலரில் உள்ள காரின் உட்புறம் பிரீமியம் உணர்வை கொடுக்கிறது.
ஸ்டீயரிங் வீல் சென்டர் கன்சோல் மற்றும் ஏசி பட்டன்கள் உறுதியானதாகவும், நன்கு கட்டமைக்கப்பட்டதாகவும் உணரும் போது ஃபிட் மற்றும் ஃபினிஷ் ஆகியவற்றில் சில முரண்பாடுகள் உள்ளன. பேனல் இடைவெளிகள் தெரிகின்றன, குறிப்பாக க்ளோவ் பாக்ஸ், பி-பில்லர்கள் மற்றும் சி-பில்லர்கள் சுற்றி உள்ள இது கொஞ்சம் பிரீமியம் உணர்வை குறைக்கிறது. ஹேண்ட் பிரேக்கின் இடம் போன்ற எரகனாமிக்ஸ் சிக்கல்களும் உள்ளன. இது கியர் லெவல் மார்க்கிங் பார்வையை தடுக்கிறது. சென்டர் ஆர்ம்ரெஸ்ட் ஓட்டுநருக்கு மிகவும் வசதியாக உள்ளது. இவை வெளிச்செல்லும் மாடலுடன் ஒப்பிடும் போது நல்ல முன்னேற்றமாக உள்ளன.
முக்கியமான வசதிகள்


வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் மேக்னைட் வருகிறது. யூஸர் இன்டர்ஃபேஸ் நன்றாகவே உள்ளது, இருப்பினும் 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ரெஸ்பான்ஸ் சற்று மெதுவாக உள்ளது. இது ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல், கம்ஃபோர்ட் மற்றும் வசதிக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறன. இருப்பினும் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் டூயல் கேமரா டேஷ்கேம் போன்ற கூடுதல் வசதிகள், ஹூண்டாய் எக்ஸ்டர் (இதே விலை) போட்டியாளர்களிடம் கிடைக்கின்றன.
நடைமுறை மற்றும் சார்ஜிங் ஆப்ஷன்கள்


நான்கு டோர்களிலும் 1 லிட்டர் பாட்டில் ஹோல்டர்கள், கூல்டு 10 லிட்டர் க்ளோவ்பாக்ஸ், முன் ஆர்ம்ரெஸ்டில் சிறிய ஸ்டோரேஜ் பெட்டிகள் மற்றும் இரண்டு கப்ஹோல்டர்களுடன் கேபின் வருகிறது. கூடுதலாக பின்பக்க பயணிகளுக்கு சீட்பேக் பாக்கெட்டுகள் மற்றும் கப்ஹோல்டர்கள் மற்றும் ஃபோன் ஸ்லாட் கொண்ட சென்டர் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவையும் கிடைக்கும். சார்ஜிங் ஆப்ஷன்களில் USB போர்ட் மற்றும் முன்பக்கத்தில் 12V சாக்கெட் மற்றும் பின்புற பயணிகளுக்கான டைப்-C போர்ட் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.
பின் இருக்கை வசதி
பின் இருக்கை அனுபவம் நல்ல லெக்ரூம், முழங்கால் அறை மற்றும் ஹெட்ரூம், உயரமான பயணிகளுக்கு கூட வசதியாக இருக்கும். இருப்பினும் இருக்கைகள் நிமிர்ந்தபடி உள்ளன. இவை தளர்வான இருக்கையை விரும்புவோருக்கு கொஞ்சம் அசெளகரியத்தை கொடுக்கலாம். நடுத்தர பயணிகளுக்கு நிமிர்ந்த இருக்கை மற்றும் பிரத்யேக ஹெட்ரெஸ்ட் இல்லை. இருப்பினும் ஃபுளோர் தட்டையானது என்பதால் நடு இருக்கையில் அமர்பவருக்கு லெக்ரூமில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
மூன்று பயணிகளுக்கு தோள்பட்டை இடம் இறுக்கமாக இருக்கும். உயரமான ஜன்னல்கள் கேபினுக்குள் போதுமான வெளிச்சத்தை அனுமதிக்கின்றன. இது டேன்-பிரெளவுன் கலர் தீம் கேபினுக்கு நல்ல காற்றோட்ட உணர்வைத் கொடுக்கிறது.
பாதுகாப்பு வசதிகளில் உள்ள அப்டேட்கள்
இந்த ஃபேஸ்லிஃப்ட்டில் பாதுகாப்பில் மிக முக்கியமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வேரியன்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் கிடைக்கும். EBD உடன் ABS, டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவை அடங்கும். ஆட்டோ-டிம்மிங் IRVM ஆகியவை, குறிப்பாக இரவில் ஒட்டுவதற்கு உதவியாக உள்ளன.
ஹையர் வேரியன்ட்கள் 360 டிகிரி கேமராவை வழங்குகின்றன. மேல் மற்றும் முன், மேல் மற்றும் பின், மற்றும் முன் மற்றும் இடது பக்கம் என இது 3 வியூ ஆப்ஷன்களை வழங்குகிறது. இருப்பினும் கேமரா ஃபீடின் தரம் கொஞ்சம் சுமாராக உள்ளது.
இன்ஜின் & செயல்திறன்
மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டுக்கு பிறகும் கூட அதன் முந்தைய இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் (NA) பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். 5-ஸ்பீடு மேனுவல், 5-ஸ்பீடு AMT மற்றும் CVT (டர்போ வேரியன்ட் மட்டும்) டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள். 1-லிட்டர் டர்போ CVT, குறிப்பாக நகரம் மற்றும் நெடுஞ்சாலை டிரைவிங்குக்கு போதுமான டிரைவிங் அனுபவத்தை வழங்குகிறது. இருப்பினும் இன்ஜினின் ரீஃபைன்மென்ட் அவ்வளவு சிறப்பானது இல்லை. மேலும் ஃபுட்வெல், கியர் லீவர் மற்றும் இருக்கைகளைச் சுற்றி அதிர்வுகளை கவனிக்க முடிகிறது. இது சிலருக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தலாம். கூடுதலாக, இன்ஜின் சத்தம் ஆக்ஸிலரேஷனின் போது கேபினுக்குள் மிகவும் கேட்கக் கூடியதாகவே இருக்கும்
நீங்கள் அதிக பட்ஜெட்டுக்கு ஏற்ற 1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் வேரியன்ட்டை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் AMT -யை விட மேனுவல் டிரான்ஸ்மிஷன் நல்லது. ஏனெனில் AMT கொஞ்சம் சலசலப்பாகவும் மெதுவாகவும் இருக்கும்.
கம்ஃபோர்ட் & கையாளுதல்
மேக்னைட்டின் சஸ்பென்ஷன் வழக்கமான சாலை மேடுகள் மற்றும் நகரத்தில் உள்ள பள்ளங்களை எளிதாகக் கையாளுகிறது. குறிப்பிடத்தக்க வகையில் பாடி ரோலின் போது குறிப்பாக திடீர் திருப்பங்களின் போது மென்மையான நெடுஞ்சாலைகள் மற்றும் வழக்கமான நகர சாலைகளில் இது ஒரு வசதியாகவே உள்ளது. சஸ்பென்ஷன் கரடுமுரடான சாலைகளில் உள்ள மேடுகளில் இருந்து பயணிகளை தனிமைப்படுத்தும். ஒரு சிறப்பாக வேலை செய்கிறது; இருப்பினும், டயர் இரைச்சல் மற்றும் சஸ்பென்ஷன் சத்தம் கொஞ்சம் கேபினுக்குள் அதிகமாக கேட்கிறது.
கையாளுதல் என்று வரும் போது மேக்னைட் ஒரு ஸ்போர்ட்டியர் காராக இல்லாமல் ஒரு குடும்பத்துக்கான காரகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக வேகத்தில், ஸ்டீயரிங் இலகுவாக இருக்கிறது மற்றும் அதிக எடையிலிருந்து அதிக நம்பிக்கையுடன் உணர வைக்கிறது. இறுக்கமான திருப்பங்களிலோ அல்லது கூர்மையான திருப்பங்களிலோ ஸ்டீயரிங் துல்லியமாகவோ நம்பிக்கையூட்டுவதாகவோ இல்லை. எனவே சிறந்த அனுபவத்திற்கு நிதானமாக வாகனம் ஓட்டுவதையும் குறைந்த வேகத்தையுமே பரிந்துரைக்கிறோம்.
கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்
-
பரிந்துரைக்கப்பட்ட டயர் அழுத்தம்: 36 PSI
-
ஸ்பேர் வீல்: 14 இன்ச் ஸ்டீல் வீல்
-
சர்வீஸ் இடைவெளிகள்: முதல் சர்வீஸ் 2,000 கி.மீ அல்லது 3 மாதங்கள், இரண்டாவது சர்வீஸ் 10,000 கி.மீ அல்லது 1 வருடம், மற்றும் மூன்றாவது சர்வீஸ் 15,000 கி.மீ அல்லது 1.5 ஆண்டுகள்
-
உத்திரவாதம்: நிலையான கவரேஜ் 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கி.மீ ஆகும். 6 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கி.மீ வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாத விருப்பத்துடன் வருகிறது.
தீர்ப்பு
நிஸான் சில அப்டேட்களை செய்துள்ளது. வடிவமைப்பை ஓரளவு மாற்றி, கேபின் தரத்தை சற்று உயர்த்தியுள்ளது. அடிப்படை வேரியன்ட்டில் இருந்தே கூடுதல் பாதுகாப்பு வசதிகளை கொடுத்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றமாகும். இருப்பினும் மேக்னைட்டின் முந்தைய குறைபாடுகளான சீரற்ற கேபின் தரம், சராசரியான கேமரா தரம், இன்ஜின் ரீஃபைன்மென்ட் மற்றும் கேபின் சத்தம் ஆகியவற்றை பெரிய குறையாக சொல்ல முடியாது.
பட்ஜெட்டில் விசாலமான மற்றும் ஒப்பீட்டளவில் பிரீமியம்-உணர்வு கொண்ட சிறிய கிராஸ் ஓவரை தேடுபவர்களுக்கு மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் ஒரு திடமான தேர்வாக உள்ளது. ஆனால் அந்த பட்ஜெட்டை கொஞ்சம் அதிகரித்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பான ஆப்ஷன்களும் சந்தையில் இருக்கின்றன.