Maruti Brezza: 7000 கி.மீ லாங் டேர்ம் விமர்சனம்
Published On மார்ச் 19, 2024 By nabeel for மாருதி brezza
- 1 View
- Write a comment
மாருதி பிரெஸ்ஸா கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு எங்களிடம் இருந்து விடை பெறுகிறது. நிச்சயமாக எங்கள் டீம் இந்த காரை மிஸ் செய்யும்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் மற்றும் எங்களுடன் சுமார் 7000 கிமீ தூரம் வரை பயணம் செய்த பிரெஸ்ஸா இப்போது மாருதியின் கைகளுக்கு திரும்ப செல்கிறது. இந்த நேரத்தில் இது பெரும்பாலும் நகரத்திற்குள்ளேயே பயணத்தை மேற்கெண்டது. அவ்வப்போது ரோடு டிரிப்களும் இருந்தன. எனது கடந்தகால அறிக்கைகளில் இதன் வசதிகள் எவ்வாறு அனுபவத்தை சிறந்ததாக்குகிறது இது எப்படி ஒரு அருமையான கம்யூட்டர் என்பதையும் அதன் குறைபாடுகள் என்ன என்பதை பற்றி நாங்கள் விவாதித்தோம். இந்த அறிக்கையில் இந்த காரை ஓட்டிய அனுபவத்தைப் பற்றி சுருக்கமாகக் கூறியுள்ளோம். அதை வைத்து மாருதி பிரெஸ்ஸா -வை நீங்கள் வாங்க வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்கலாம்.
நிறைகள்
கம்பீரமான தோற்றம்
பிரெஸ்ஸா ஓல்டு ஸ்கூல் எனப்படும் வழக்கமான அழகைக் கொண்டுள்ளது. பாக்ஸியான பெட்டி போன்ற வடிவம் மற்றும் டூயல்-டோன் பெயிண்ட் "நவீன" தோற்றம் கொண்ட எஸ்யூவி -களின் கூட்டத்தில் தனித்து நிற்க உதவுகிறது. கூடுதலாக LED DRL -கள் மற்றும் LED ஹெட்லேம்ப்கள் போன்ற நவீன எலமென்ட்களின் கலவையில் இது கம்பீரமாக தோற்றமளிக்கின்றது. எனக்கு இந்த நிறம் பெரிதாக பிடிக்கவில்லை ரசிகன் இல்லை என்றாலும் மஞ்சள் விளக்குகளின் கீழ் இது கவர்ச்சிகரமானதாகத் தோற்றமளிக்கின்றது -- ஃபுட் கோர்ட்களில் உள்ள விளக்குகளின் கீழ் அல்லது சூரிய அஸ்தமனத்தின் போது.
நன்றாக கட்டப்பட்ட கேபின்
பிரெஸ்ஸாவின் கேபின் மற்றும் டேஷ்போர்டு திடமான உணர்வை தருகின்றது. ஃபிட் மற்றும் ஃபினிஷ் நன்றாக உள்ளது. மேலும் உறுதியான உணர்வை கொடுக்கின்றது. பட்டன்கள் -- ஏசி கன்ட்ரோல்கள் லைட்கள் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் ஆகியவை பயன்படுத்த நன்றாக இருக்கும். ஒட்டுமொத்தமாக இது நீடித்து நிலைத்திருக்கும் ஒரு கேபின் போல் இருக்கின்றது. இதுவரை இந்த கேபினில் எந்தவிதமான சலசலப்பு அல்லது தேவையற்ற சத்தம் எதையும் நாங்கள் கேட்கவில்லை.
ஈர்க்கக்கூடிய நடைமுறை மற்றும் எரகனாமிக்ஸ்
மாருதி வழக்கமாக தனது அனைத்து கார்களுக்கும் இந்த பகுதியை நன்கு கொடுத்துள்ளது. வயர்லெஸ் சார்ஜர் இரண்டு பெரிய கப்ஹோல்டர்கள் அண்டர் ஆர்ம்ரெஸ்ட் ஸ்டோரேஜ் மற்றும் சரியான அளவிலான க்ளோவ்பாக்ஸில் ஃபோனை வைக்க பிரெஸ்ஸாவில் பாதுகாப்பான இடம் உள்ளது. டோர் பாக்கெட்டுகள் கூட பெரியவை. நீண்ட சாலைப் பயணங்களில் கூட நீங்கள் பொருள்களை எளிதாக வைக்க உதவுகின்றன.
பிரெஸ்ஸாவில் இருக்கையை அட்ஜஸ்ட் செய்யும் ரேஞ்ச் சுவாரஸ்யமாக உள்ளது. ஸ்டீயரிங் கூட உயரம் மற்றும் அடையக்கூடிய அளவிற்கு சரி செய்யப்படலாம். இதன் மூலம் எந்த விதமான உயரம் கொண்டவர்களாக இருந்தாலும் கூட அவர்களை வசதியான ஓட்டும் நிலைக்கு கொண்டு வருகின்றது.
பயனுள்ள வசதிகள்
பிரெஸ்ஸா ஒரு ஈர்க்கக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது. மேலும் முக்கியமாக வசதிகள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற விஷயங்கள் பொதுவாக வித்தைகளாகப் பார்க்கப்படுகின்றன ஆனால் பிரெஸ்ஸாவில் அவை அனுபவத்தின் ஒரு பகுதியாக மாறும். HUD ஆனது கலர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் டெம்பரேச்சர் ஃபேன் வேகம், நேவிகேஷன் மற்றும் டோர்-ஓபன் வார்னிங் போன்ற பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. கேமரா துல்லியமானது மற்றும் பயன்படுத்த மிகவும் எளிதானது. இதற்கு ஒரு நல்ல சவுண்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் சேர்க்கப்பட்டிருந்தால் இந்த அனுபவம் மகிழ்ச்சியான ஒன்றாக மாறும்
லோ மெயின்டனன்ஸ் கேபின்
பிளாக் மற்றும் டல் பிரவுன் கலர் தீம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றாலும் அது கேபினை எளிதாக பராமரிக்க உதவுகிறது. இதை சுத்தம் செய்வது எளிமையானது மற்றும் உங்கள் காபியை இருக்கைகளில் கொட்டினாலும் அது உங்களுக்கு அசிங்கமான ஒரு கறையை ஏற்படுத்தாது.
இது ஒரு அருமையான கம்யூட்டர்
பிரெஸ்ஸாவின் ஒரு அம்சம் முற்றிலும் விரும்பப்படும் ஒரு விஷயம் இது ஒரு சிறந்த கம்யூட்டர். இன்ஜின் ரீஃபைன்மென்ட் ஆக உள்ளது, ஆக்சலரேஷன் சீரானது மற்றும் சவாரியும் சிறப்பாக உள்ளது. உண்மையில் இந்த தலைப்பில் எனது எண்ணங்களை நான் முன்பே ஒரு அறிக்கையில் தொகுத்திருந்தேன் அதைப் படித்துப் பாருங்கள். நெடுஞ்சாலைகளில் இன்ஜின் மூச்சுத் திணறுகிறது ஆனால் நகரத்தின் உள்ளேயும் போக்குவரத்திலும் பிரெஸ்ஸா மென்மையான மற்றும் அமைதியான அனுபவத்தை வழங்குகிறது.
பிளாட் பூட் ஃப்ளோர்
பிரெஸ்ஸாவின் பூட் ஸ்பேஸ் செக்மென்ட்டில் சிறப்பாக இல்லாவிட்டாலும் அதன் ஸ்லீவ் வரை ஒரு தந்திரம் உள்ளது. இருக்கைகளை தட்டையாக மடிக்க முடியும். அதாவது ஒரு பெரிய தட்டையான தளம் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் பெரிய பொருள்கள் இடம் மாற்ற வேண்டியிருக்கும் போது இது பயனுள்ளதாக இருக்கும்.
குறைகள்
இது ஒரு ஆல்ரவுண்டர் அல்ல
பிரெஸ்ஸாவை நகரத்தில் ஓட்டுவது சுலபமாக இருந்தாலும் நெடுஞ்சாலைகளில் இது வேறு கதை. ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட இன்ஜின் அதன் ஆறுதல் ஜோனில் இருந்து மிக விரைவாக வெளியேறுகிறது. எளிதான மற்றும் சிரமமின்றி ஆக்ஸலரேஷனை வழங்க போராடுகிறது. எனவே ஓவர்டேக்குகள் மெதுவாகவும் சிரமமாகவும் இருக்கின்றன. மேலும் அதிக வேகத்தில் பயணம் செய்வதற்கும் சில முயற்சிகள் உங்களுக்கு தேவைப்படும்.
கேபின் மந்தமான உணர்வையே தருகிறது
இதை நான் முன்பே சொன்னேன் இதை மீண்டும் சொல்கிறேன்: பிரெளவுன் மற்றும் பிளாக் ஆகியவை பிரெஸ்ஸாவின் கேபினுக்கு தவறான தேர்வாக இருந்தது. இது புதிய காரை கூட மந்தமானதாகவும் பழையதாகவும் உணர வைக்கிறது. பிரெளவுன் நிற பிட்கள் வெள்ளையாகவோ அல்லது கிரே கலரிலோ இருந்தால் அது எவ்வளவு புதியதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். கேபின் காற்றோட்டமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவியிருக்கும்.
சராசரி மைலேஜ்
இது உங்களில் சிலருக்கு வசதியாக இருக்கும் மற்றவர்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள். ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் பிரெஸ்ஸா நகரத்தில் 12-13 கிமீ/லி மற்றும் நெடுஞ்சாலையில் 16 கிமீ/லி மைலேஜை வழங்குகிறது. ஆனால் பழைய விட்டாரா பிரெஸ்ஸா டீசல் மாடலுடன் நகரத்தில் 20 கிமீ கொடுக்கும். ஆகவே மக்கள் பொதுவாக மாருதி கார்களில் இருந்து சிறந்த மைலேஜை எதிர்பார்ப்பதால் பிரெஸ்ஸா இங்கே கவனம் ஈர்க்கத் தவறிவிட்டது.
மோசமான வானிலையில் ஹெட்லேம்ப் வெளிச்சம் நன்றாக இல்லை
LED ஹெட்லேம்ப்களின் ஒரு பெரிய குறைபாடு பொதுவாக மோசமான வானிலையில் அவற்றின் செயல்பாடு ஆகும். பிரெஸ்ஸாவும் இந்தப் பிரச்சினையை சந்திக்கின்றது. ஹெட்லேம்ப்கள் நகரத்தில் போதுமானதை விட அதிகமாக உணர்வை தரும் ஆனால் மழை பெய்யத் தொடங்கும் போதோ அல்லது ஃபாக் அல்லது தூசி நிறைந்த சூழ்நிலையில் அவை நல்ல லைட்டிங்கை வழங்கத் தவறிவிடுகின்றன. நெடுஞ்சாலைகளில் வெளியே செல்லும் போது லைட்டிங் குறைவாகவே இருக்கும் என்பதால் மெதுவாகச் செல்ல வேண்டியிருக்கும்.
ஐடில் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் டியூனிங்
பிரெஸ்ஸா ஒரு மைல்ட்-ஹைப்ரிட் அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் ஒரு செயல்பாடு என்னவென்றால் நீங்கள் டிராஃபிக்கில் அல்லது சிக்னல்களில் நிறுத்தப்படும்போது இயந்திரத்தை அணைத்து நீங்கள் பிரேக்கை விடுவிக்கும் போது அது இயங்க தொடங்கும். இருப்பினும் இங்கே டியூனிங் சிறப்பாக இருக்க வேண்டும். ட்ராஃபிக்கில் குறைந்த வேகத்தில் கார் முன்னோக்கி நகரும் போதும் நீங்கள் மெதுவாக போகும்போதும் பிரெஸ்ஸாவின் இன்ஜின் ஆஃப் ஆகிவிடுகின்றது. இது இந்த வசதியை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் நான் காரை ஸ்டார்ட் செய்தவுடன் அதை ஆஃப் செய்து வைப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
தீர்ப்பு
எனது தினசரி டிரைவ்களில் பிரெஸ்ஸா எனக்கு ஒரு அருமையான துணையாக இருந்தது என்றே கூற வேண்டும் . நெடுஞ்சாலை அனுபவம் விரும்பத்தக்கதாக இருந்தாலும் மற்ற எல்லா வசதிகளும் பிரெஸ்ஸாவுடன் வாழ்வதை அமைதியான மற்றும் மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுகின்றன. நீங்கள் பெரும்பாலும் நகரத்தில் இதைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றாலோ, ஒரு உற்சாகமான டிரைவை விட கம்ஃபோர்ட்க்கு முன்னுரிமை கொடுக்கப் போகிறீர்கள் என்றாலோ நான் பிரெஸ்ஸாவையே அதிகமாக உங்களுக்காக பரிந்துரை செய்வேன்.