Hyundai Venue N Line விமர்சனம்: எஸ்யூவி ஆர்வலர்களின் தேர்வாக இருக்குமா ?
Published On ஆகஸ்ட் 21, 2024 By ansh for ஹூண்டாய் வேணு n line
- 1 View
- Write a comment
வென்யூ N லைன் ஆனது வழக்கமான வென்யூவை விட உற்சாகமான டிரைவிங் அனுபவத்தை வழங்கும் அதே வேளையில் அதற்காக கூடுதலாக ரூ. 50,000 -க்கு மேல் கொடுக்க வேண்டியிருக்கிறது.
ஹூண்டாய் வென்யூ N லைன் என்பது ஹூண்டாய் வென்யூ காரின் ஸ்போர்ட்டியர் பதிப்பாகும். இது ரூ.12.08 லட்சம் முதல் ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஒரே போட்டியாளராக கியா சோனெட் X-லைன் வேரியன்ட் ஆகும். மேலும் இது ஸ்போர்ட்டியர் தோற்றம், டார்க் கேபின் மற்றும் ஒட்டுமொத்த வேடிக்கையான டிரைவிங் அனுபவத்தை வழங்குகிறது. ஆனால் அதற்காக நீங்கள் கூடுதலாக தொகையை செலுத்த வேண்டுமா அல்லது ஸ்டாண்டர்டான வென்யூ போதுமானதா? நாம் இங்கே அதை கண்டுபிடிக்கலாம்.
வெளிப்புறம்
வென்யூ N லைன்யின் ஒட்டுமொத்த வடிவமைப்பு ஸ்டாண்டர்டான வென்யூவை போலவே உள்ளது, ஆனால் சில சிறிய விவரங்கள் பெரிய வித்தியாசத்தை உருவாக்குகின்றன. அதன் பெரிய பிளாக் கலர் குரோம் கிரில், நேர்த்தியான LED DRL -கள் மற்றும் கனெக்டட் டெயில் லைட்ஸ் ஆகியவை நவீன தோற்றத்தை கொடுக்கின்றன. மேலும் அதன் வீல் ஆர்ச்கள் கிளாடிங் அதன் வடிவமைப்பில் சில மிரட்டலான தோற்றத்தை கொடுக்கின்றன.
ஆனால் சுற்றிலும் உள்ள ரெட் கலர் இன்செர்ட்கள் இன்செர்ட்கள், குரோம் பம்ப்பர்கள், ஸ்டைலான அலாய் வீல்கள், N லைன் பேட்ஜிங், ரியர் ஸ்பாய்லர் மற்றும் டூயல் எக்ஸாஸ்ட் டிப்ஸ் ஆகியவற்றால் ஸ்போர்ட்டித்தன்மை கிடைக்கிறது. என் கருத்துப்படி, இது ஸ்டாண்டர்டான வென்யூவை விட நன்றாக இருக்கிறது. இது அழகான தோற்றமுடைய கார். இந்த வடிவமைப்பின் காரணமாக நீங்கள் வென்யூ N லைனை ஓட்டும்போது கண்ணைக் கவரும் சாலை தோற்றத்தின் காரணமாக மக்கள் உங்களை நிச்சயமாக கவனிப்பார்கள்.
வென்யூ N லைன் 3 கலர் ஆப்ஷன்களை பெறுகிறது. அதில் புளூ மற்றும் கிரே இந்த ஸ்போர்ட்டி எஸ்யூவி -க்கு பிரத்தியேகமானது. ஹூண்டாய் இந்த வண்ணங்களுடன் சரியாக விளையாடியது, ஏனெனில் இந்த எஸ்யூவியானது அதன் ஸ்போர்ட்டி டிஸைன் எலமென்ட்களுடன் உண்மையில் அந்த ஷேடில் தனித்து தெரிகிறது.
பூட் ஸ்பேஸ்
வென்யூ N லைன் மற்றும் ஸ்டாண்டர்ட் வென்யூவின் பூட் ஸ்பேஸில் எந்த வித்தியாசமும் இல்லை. இங்கே நீங்கள் ஒரு சூட்கேஸ் தொகுப்பை எளிதாக வைக்கலாம்: பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான சூட்கேஸ், மற்றும் இன்னும் ஒரு சிறிய பையை வைக்க இன்னும் வென்யூ -வில் இடம் உள்ளது.
சாமான்களுக்கு வைக்க கூடுதல் இடம் தேவைப்பட்டால் அதன் பின் சீட்களை 60:40 விகிதத்தில் ஃபோல்டு செய்யலாம். எனவே நீங்கள் அதிக சாமான்களை எளிதாக சேமிக்க முடியும்.
கேபின்
வெளிப்புறமானது ஸ்போர்ட்டியாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். வென்யூ என் லைனின் கேபின் ஸ்போர்டியர் மற்றும் கான்ட்ராஸ்ட் ரெட் எலிமெண்ட்களுடன் ஆல் பிளாக் தீமில் வருகிறது. கேபினில் கிளாஸி பிளாக் எலமென்ட்கள் மற்றும் ரெட் இன்செர்ட்கள் கொண்ட ஆல் பிளாக் டாஷ்போர்டு உள்ளது. இங்கே கூடுதல் ஸ்போர்ட்டி டச் -க்காக ரெட் ஸ்டிச் மற்றும் N லைன் பேட்ஜிங் கொண்ட ஸ்போர்ட்டி முன் இருக்கைகளையும் பெறுவீர்கள்.
விவரங்களைப் பற்றி பேசுகையில் ஸ்டீயரிங் மற்றும் கியர் நாப் ஆகியவற்றில் N லைன் பேட்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டீயரிங், ஏசி கன்ட்ரோல்கள், ஏசி வென்ட்கள் மற்றும் டோர்களில் ரெட் டிஸைன் எலமென்ட்களை காணலாம். மேலும் வென்யூ N லைன் கான்ட்ராஸ்ட் ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஸ்டாண்டர்டான வென்யூவில் உள்ளதை விட ஸ்போர்ட்டியாக தெரிகிறது.
வழக்கமாக நான் டார்க் கேபின்களை அவ்வளவாக விரும்புவதில்லை மற்றும் லைட்டான கேபின் தீம்களையும் விரும்புவதில்லை. ஏனெனில் அவை கேபினை அதிக வென்டிலேஷன் கொண்டதாக உணரவைக்கும். இருப்பினும் இந்த டார்க் கேபின் வேறுபட்டது. வென்யூ என் லைனுக்குள் நீங்கள் உட்காரும்போது கேபினின் வடிவமைப்பை விரும்புவது மட்டுமல்லாமல், பவர்ஃபுல்லான காரை ஓட்டப் போகிறீர்கள் என்ற உணர்வையும் பெறுவீர்கள்.
இருப்பினும் கேபின் தரம் சிறப்பாக இருந்திருக்கலாம். இந்த பிரிவில் நீங்கள் வழக்கமாக மிகவும் பிரீமியமான இன்ட்டீரியர் கிடைக்காது. ஆனால் நெக்ஸான் போன்ற சில கார்களில் டாஷ்போர்டில் லெதரெட் ஃபினிஷ் கிடைக்கும். இது இப்போது மார்க்கெட்டில் அதிகமாக கிடைக்கிறது, ஆனால் இந்த காரில் அது கொடுக்கப்படவில்லை.
வென்யூ N லைனில் அல்லது அதற்கான ஸ்டாண்டர்டான வென்யூவில் நீங்கள் கடினமான பிளாஸ்டிக் டாஷ்போர்டை பெறுவீர்கள். அது கொஞ்சம் தரமற்றதாக உணர்கிறது, மேலும் நீங்கள் டோர் பேட்களில் லெதரெட் பேடிங் உள்ளது, ஆனால் அது போதுமானதாக இல்லை. இருப்பினும் சென்டர் கன்சோல் மற்றும் ஸ்டீயரிங் வீலில் உள்ள பட்டன்கள் நல்ல தரமாக உள்ளன.
இப்போது முன் இருக்கைகளுக்கு வருவோம். இந்த இருக்கைகள் ஸ்போர்ட்டியாக மட்டுமின்றி மிகவும் வசதியாகவும் ஆதரவாகவும் இருக்கும். இங்கு உங்களுக்கு நல்ல அளவிலான ஹெட்ரூம் கிடைக்கிறது. மற்றும் ஓட்டுநர் இருக்கை வசதிக்காக 4-வே பவர் அட்ஜெஸ்ட்டெபிள் வசதியை கொண்டுள்ளது. மேலும், டில்ட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங் வீலை நீங்கள் பெற்றிருப்பதால் உங்களுக்கான ஓட்டும் நிலையை கண்டறிவது அவ்வளவு கடினம் அல்ல.
வசதிகள்
வென்யூ என் லைனின் வசதிகள் பட்டியல் அதன் சில போட்டியாளர்களைப் போல விரிவானதாக இல்லை. ஆனால் உங்கள் தினசரி பயணங்களுக்கு அல்லது நீண்ட பயணங்களுக்கு கூட இது போதுமானது. முதலாவது 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இது சீராக இயங்கும், பின்னடைவு அல்லது எந்த குறைபாடுகள் இல்லை. மேலும் நல்ல கிராபிக்ஸையும் கொண்டுள்ளது. இந்தத் ஸ்கிரீன் ஆனது வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்கிறது மேலும் அவை தடையின்றி செயல்படுகின்றன.
இது டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பின்புற ஏசி வென்ட்களுடன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், சிங்கிள்-பேன் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் சன்ரூப்பை திறக்க அல்லது மூடுவதற்கு அல்லது ஏசி வெப்பநிலை/ஃபேன் ஸ்பீடை மாற்றுவதற்கு பயன்படுத்தக்கூடிய வாய்ஸ் கன்ட்ரோல்களையும் வழங்குகிறது.
ஒட்டுமொத்தமாக வசதிகள் பட்டியல் நன்றாக உள்ளது. ஆனால் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற இன்னும் சில வசதிகள் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த வசதிகள் இந்த கேபினின் அனுபவத்தை இன்னும் சிறப்பாக மாற்றியிருக்கும்.
நடைமுறை மற்றும் சார்ஜிங் ஆப்ஷன்கள்
வென்யூ N லைனின் நான்கு டோர்களிலும் 1-லிட்டர் பாட்டில் ஹோல்டர்கள், சராசரி அளவிலான க்ளோவ் பாக்ஸ், சென்டர் கன்சோலில் இரண்டு கப் ஹோல்டர்கள், சென்டர் ஆர்ம்ரெஸ்டில் ஸ்டோரேஜ் மற்றும் டேஷ்போர்டில் உங்கள் மொபைலை வைப்பதற்கான பிளேட் அல்லது பர்ஸை வைக்கும் இடம் ஆகியவை கிடைக்கும்.
வயர்லெஸ் ஃபோன் சார்ஜரை தவிர, USB சார்ஜர், டைப்-சி சார்ஜர், முன்புறத்தில் 12V சாக்கெட் மற்றும் பின்புறத்தில் இரண்டு Type-C சார்ஜர்களும் கிடைக்கும்.
பின் இருக்கை அனுபவம்
முன் இருக்கைகளைப் போலவே பின் இருக்கைகளும் வசதியாக இருக்கும். இங்கே நீங்கள் ஒரு நல்ல அளவு ஹெட்ரூம் மற்றும் தொடைக்கு அடியில் நல்ல சப்போர்ட் கிடைக்கும். மேலும் இந்த இருக்கைகள் முழங்கால் அறைக்கு போதுமான அளவை கொண்டுள்ளன. அதன் கச்சிதமான அளவைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் வென்யூ -வில் உள்ளது கண்டிப்பாகப் போதுமானது. ஆனால் நீங்கள் உயரமான நபராக இருந்தால், அதிக லெக் ரூம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என நீங்கள் நினைப்பீர்கள்.
பின் இருக்கைகளின் அகலம் இரண்டு பயணிகளுக்கு மட்டுமே ஏற்றது. மூன்று பேர் அமரலாம் ஆனால் சிறிது நேரம் தோள்களை இடித்துக் கொள்ளும் வகையில் இருக்கக்கூடும். எனவே பின்னால் இருவரை மட்டும் உட்கார வைப்பது நல்லது.
பாதுகாப்பு
வென்யூ என் லைனின் பாதுகாப்புக்காக 6 ஸ்டாண்டர்டான ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.
இந்த வசதிகளைத் தவிர இது ரியர் வியூ கேமராவுடன் வருகிறது. இது மிகவும் உதவியாக இருக்கும். இந்த கேமராவின் காட்சிகளில் எந்த பின்னடைவும் இல்லை. மேலும் இது பகலில் நன்றாக வேலை செய்கிறது. இருப்பினும் இரவில் அல்லது குறைந்த வெளிச்சத்தில், காட்சிகள் சற்றே சுமாராக இருக்கின்றன. இது பின்னால் இருப்பதைப் பார்ப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இப்போது ஹூண்டாய் வென்யூ என் லைனுடன் டூயல்-கேமரா டாஷ் கேமையும் வழங்குகிறது. இது ஒரு நல்ல வசதிகளைச் சேர்க்கிறது. நீங்கள் வாகனம் ஓட்டும்போது சாலையைப் பதிவு செய்வது மட்டுமல்லாமல், கேபினை எதிர்கொள்ளும் கேமரா மூலம் கேபினையும் பதிவு செய்யலாம். இந்த உபகரணத்தின் உண்மையான நன்மை என்னவென்றால் துரதிர்ஷ்டவசமாக நீங்கள் விபத்துக்குள்ளானாலோ அல்லது வேறு வாகனங்கள் நமது காருக்கு நெருக்கமாக வரும்போதோ டாஷ் கேமில் உள்ள காட்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கடைசியாக வென்யூ மற்றும் வென்யூ N லைன் இரண்டும் லெவல் 1 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) வசதிகளுடன் வந்துள்ளன.
இன்ஜின் & செயல்திறன்
இன்ஜின் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
120 PS |
டார்க் |
172 என்எம் |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT |
வென்யூ N லைன் ஸ்டாண்டர்டான வென்யூவின் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீடு டிசிடி (டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக்) உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் நாங்கள் DCT வேரியன்ட்டை ஓட்டினோம். வென்யூ N லைன் உண்மையிலேயே ஒரு ஆர்வலர்களின் கார் ஆகும். ஏனெனில் அதன் ஓட்டுநர் அனுபவத்திலிருந்து இது தெளிவாகத் தெரிந்தது.
இந்த இன்ஜின் ரீஃபைன்மென்ட் ஆக உள்ளது? பதில் ஆம், இது ரெஸ்பான்ஸிவ் ஆக உள்ளது? ஆம். அது சக்தி வாய்ந்ததா? நிச்சயமாக. வென்யூ என் லைனை ஓட்டும் போது ஒரு நொடி கூட சக்தி இல்லாதது போல உணரவில்லை. இது ஒரு சிறந்த ஆக்ஸிலரேஷனை கொண்டுள்ளது. அதிக வேகத்தைப் பெற அதிக நேரம் எடுக்காது, ஓவர்டேக் செய்வது என்பது இந்த காருக்கு ஒரு எளிமையான விஷயம், மேலும் எக்சாஸ்ட் நோட் காதுகளுக்கு இசை போன்று உள்ளது (ஆம், அதன் எக்சாஸ்ட் நோட் ஸ்டாண்டர்டான வென்யூ -வில் இருந்து வேறுபட்டது).
DCT கியர்களை மிகவும் சீராக மாற்றுகிறது மற்றும் கியர்களை மாற்றும் போது நீங்கள் எந்த சலனத்தையும் உணர மாட்டீர்கள். மேலும் இந்த டிரைவின் விளையாட்டுத்தன்மையை அதிகரிக்க நீங்கள் பேடில் ஷிஃப்டர்கள் உள்ளன. அதன் மூலமாக கியர்களை நீங்களே மாற்றிக்கொள்ளலாம்.
நகரப் பயணங்களின் போது பவர் டெலிவரி -யில் பற்றாக்குறை இருக்காது. மேலும் பம்பர்-டு-பம்பர் டிராஃபிக்கில் கூட நீங்கள் சீராக செல்லலாம். ஹூண்டாய் சிறந்த கையாளுதலுக்காக வென்யூ என் லைனின் சஸ்பென்ஷனில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. ஆனால் இதற்கும் ஸ்டாண்டர்டான வென்யூவின் கையாளுதலுக்கும் இடையே உள்ள வேறுபாடு அவ்வளவு பெரியதாக இல்லை.
நெடுஞ்சாலைகளில் இருக்கும்போது ஸ்போர்ட்டி எக்ஸாஸ்ட் நோட்டுடன் விரைவான ஆக்ஸிலரேஷனை அனுபவிக்கிறீர்கள். மேலும் நீங்கள் தொடர்ந்து செல்ல விரும்புகிறீர்கள். வென்யூ N லைனை ஓட்டுவது குறிப்பாக DCT மூலம் மிகவும் ஃபன் ஆக உள்ளது. மேலும் அதன் டிரைவிங் அனுபவத்தை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
சவாரி, கம்ஃபோர்ட்
அதன் செயல்திறனைப் போலவே அதன் சவாரி தரமும் உங்களுக்கு எந்த புகாரையும் தராது. சஸ்பென்ஷன் செட்டப் சற்று கடினமான பக்கத்தில் இருந்தாலும் கூட மேடுகளை நன்றாக சமாளிக்கிறது. எனவே நீங்கள் கேபினுக்குள் அவற்றை அதிகம் உணர மாட்டீர்கள். இது உடைந்த சாலைகளை எளிதில் கடந்து செல்ல முடியும். மேலும் கேபினுக்குள் சில அசைவுகள் இருக்கும் போதும் கூட நீங்கள் வசதியாக இருப்பீர்கள்.
இருந்தாலும் கூட ஸ்பீட் பிரேக்கர்கள் மற்றும் பெரிய பள்ளங்களில் வேகத்தைக் குறைக்குமாறு பரிந்துரைக்கிறோம். சில சமயங்களில் சஸ்பென்ஷன் உரத்த சப்தத்தை உருவாக்குகிறது. இறுதியாக நெடுஞ்சாலைகளில் வென்யூ N லைன் மிகவும் வழக்கமானது. மேலும் சில குறிப்பிடத்தக்க இடங்களில் பாடி ரோல் இருந்தாலும் உங்கள் கம்ஃபோர்ட் அப்படியே இருக்கும்.
தீர்ப்பு
ஸ்டாண்டர்ட் வெனியூவை விட்டு விட்டு என் லைனை வாங்க வேண்டுமா? ஆம் ஆனால்... இது அனைவருக்கும் பொருந்தாது. நாம் அனைவரும் அதன் டிரைவ் அனுபவத்துடன் எங்களை உற்சாகப்படுத்தும் ஒரு காரை விரும்புகிறோம். ஆனால் நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது அதுவல்ல.
அதே செயல்திறன், அதே வசதிகள், அதே வசதி மற்றும் அதே சவாரி தரம் ஆகியவற்றை வழங்கும் ஒரு காரை நீங்கள் விரும்பினால் நீங்கள் ஸ்டாண்டர்டான ஹூண்டாய் வென்யூவை வாங்கி கொஞ்சம் பணத்தைச் சேமிக்கலாம். ஏனெனில் இது N லைன் செய்யும் அனைத்தையும் வழங்குகிறது. மேலும், ஸ்டாண்டர்ட் வென்யூவுடன், நீங்கள் மேலும் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் கிடைக்கும்: 1.2-லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.2-லிட்டர் டீசல்.
அதே வேளையில் உங்களின் முன்னுரிமை ஸ்டைல், ஸ்போர்ட்டினெஸ் மற்றும் ஜாலியாக ஓட்டும் அனுபவமாக தேவைப்பட்டால் வென்யூ N லைன் உங்கள் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்யும். இந்த காரை நாங்கள் நிச்சயமாக பரிந்துரைப்போம். ஏனெனில் இது உண்மையிலேயே ஒரு எஸ்யூவி ஆர்வலர்களுக்கான கார்.