2024 Skoda Kushaq விமர்சனம்: இன்னும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
Published On மார்ச் 11, 2025 By ansh for ஸ்கோடா குஷாக்
- 1 View
- Write a comment
குஷாக் நீண்ட காலமாக அப்டேட் செய்யப்படவில்லை. அதே சமயம் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் போட்டியாளர்கள் பல படிகள் முன்னேறியுள்ளனர். ஆனாலும் கூட இதன் டிரைவிங் அனுபவம் குஷாக்கை இன்னும் களத்தில் வைத்திருக்கிறது.
ரூ.10.89 லட்சம் முதல் 18.79 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலையில் ஸ்கோடா குஷாக் ஆனது ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற பிரபலமான மாடல்களுடன் போட்டியிடும் வகையில் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் அமர்ந்திருக்கிறது. இந்த எஸ்யூவி -களை போல இல்லாமல் குஷாக் கொஞ்சம் இட வ்சதி குறைவானது, அதிக வசதிகள் இதில் இல்லை மற்றும் டீசல் இன்ஜினும் இல்லை. அப்படியானால் குஷாக்கை விட பிரபலமான மாடல்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டுமா ?. அல்லது இதன் வசதியான சவாரி மற்றும் உற்சாகமான டிரைவ் உங்களை திருப்திப்படுத்த போதுமானதா ? இங்கே கண்டுபிடிப்போம்.
வடிவமைப்பு தெளிவாக தெரிகிறது
நீங்கள் குஷாக்கை பார்க்கும்போது நீங்கள் கவனிக்கும் முதல் விஷயம் என்னவென்றால் இந்த பிரிவில் உள்ள மற்ற எல்லா கார்களிலும் உள்ள கனெக்டட் லைட்டிங் எலமென்ட் டிசைனை இது பின்பற்றவில்லை. இந்த விஷயம் இந்த பிரிவில் குஷாக்கை தனித்து நிற்க செய்கிறது.
மேலும் ஷார்ப்பான எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்டைலான அலாய் வீல்கள் மற்றும் குரோம்/பிளாக்-அவுட் இன்செர்ட்கள் (நீங்கள் தேர்வு செய்யும் வேரியன்ட்டின் அடிப்படையில்) போன்ற வடிவமைப்பு எலமென்ட்கள் குஷாக்கிற்கு ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தை கொடுக்கின்றன.
நீங்கள் குஷாக்கை வாங்க திட்டமிட்டிருந்தால், உங்கள் எஸ்யூவி மற்றவற்றிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என விரும்பினால் லோவர்-ஸ்பெக் வேரியன்ட்களுடன் கிடைக்கும் ஓனிக்ஸ் பதிப்பைத் தேர்வுசெய்யலாம் அல்லது மிட் மற்றும் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களுடன் வழங்கப்படும் மான்டோ கார்லோ பதிப்பைத் தேர்வு செய்யலாம்.
போதுமான அளவில் பூட் ஸ்பேஸ்
385-லிட்டர் பூட் ஸ்பேஸ் குறைந்த பட்சம் பேப்பரில் உள்ள மற்ற கார்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. ஆனால், பூட் பகுதியின் வடிவமைப்பு காரணமாக நீங்கள் ஒரு முழு சூட்கேஸ் செட்டையும் (சிறிய, நடுத்தர மற்றும் பெரிய) எளிதாக இதில் வைக்கலாம். மேலும் ஒரு சாஃப்ட் பையை வைக்க இன்னும் கொஞ்சம் இடம் இருக்கும்.
உங்களிடம் அதிக லக்கேஜ் இருந்தால் பின் இருக்கைகளை 60:40 விகிதத்தில் ஃபோல்டு செய்யலாம். இது அதிக லக்கேஜ்களுக்கு போதுமான இடத்தை கொடுக்கும்.
ஸ்போர்ட்டி நிறைந்த இன்ட்டீரியர்
குஷாக்கின் கேபின் டூயல்-டோன் பிளாக் மற்றும் ஆஃப்-ஒயிட் தீமில் வருகிறது. இது இருட்டாக இருந்தாலும் மந்தமாக இல்லை. க்ரோம் மற்றும் க்ளோஸ் பிளாக் இன்செர்ட்களுடன் டேஷ்போர்டில் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட எலமென்ட்கள் கிடைக்கும். மேலும் இது டூயல்-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் உடன் வருகிறது. இதன் டேஷ்போர்டு இன்னும் ஸ்போர்ட்டியாக தோற்றமளிக்கும்.
கேபின் ஒரு ஸ்போர்ட்டி மற்றும் பிரீமியம் காரில் உள்ளதை போன்ற உணர்வைக் கொண்டிருந்தாலும் கூட சில இடங்களில் கேபின் தரம் சிறப்பாக இருந்திருக்கும். சென்டர் கன்சோல் மற்றும் ஸ்டீயரிங் வீலில் உள்ள பட்டன்கள் திடமானவை, ஏசி வென்ட்கள் உறுதியானவை மற்றும் ஸ்டீயரிங் வீலில் உள்ள மெட்டாலிக் நாப்களும் நன்றாகவே உள்ளன. கேபினை அதிக பிரீமியமாக உணர வைக்க டோர்களில் சாஃப்ட் டச் பேடிங் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டாஷ்போர்டில் உள்ள குரோம் ஸ்டிரிப் இங்கே பொருத்தமில்லாமல் இருக்கிறது. மேலும் கேபின் லைட் பட்டன்களின் தரம் சராசரியாக உள்ளது.
முன் இருக்கைகளை பொறுத்தவரையில் அவை லெதரெட் குஷனிங்கில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன ஆகவே இவை பெரிய உடலமைப்பு கொண்டவர்களுக்கும் போதுமானதாக உள்ளன. மேலும் இரண்டு முன் இருக்கைகளும் 6-வே பவர் அட்ஜெஸ்ட் செய்யக்கூடியவை, மேலும் வென்டிலேட்டட் வசதியுடன் வருகின்றன.
பின்புற இருக்கைகளும் முன்புறத்தில் உள்ள அதே லெதரெட் ட்ரீட்மென்ட்டை பெறுகின்றன. மேலும் 2 பயணிகளுக்கு நல்ல இடத்தை வழங்குகின்றன. லெக்ரூம் மற்றும் முழங்கால் அறை போதுமான அளவு உள்ளது, உயரமானவர்களுக்கு கூட ஹெட்ரூம் போதுமானது. மேலும் தொடையின் கீழ் ஆதரவும் நன்றாக உள்ளது. ஆனால் காரின் அகலம் குறைவாக இருப்பதால் 3 பயணிகள் பின்னால் வசதியாக இருக்க முடியாது. மேலும் பயணிகளின் தோள்கள் ஒன்றுடன் ஒன்று இடித்துக் கொள்ளும் வகையில் இருக்கும்.
காரிலுள்ள வசதிகளின் பட்டியல்
குஷாக் உங்கள் தினசரி டிரைவ்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குகிறது. ஆனால் தனித்து நிற்கும் எதுவும் இல்லை. இது ஸ்போர்ட்டி கிராபிக்ஸ் கொண்ட 10-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப்பை பெறுகிறது. ஸ்கிரீன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது. இது ஸ்போர்ட்டி கிராபிக்ஸ் கொண்ட 8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. மேலும் இது ஆட்டோமெட்டிக் கிளைமேட கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், சிங்கிள் பேனல் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற பிற வசதிகளையும் கொண்டுள்ளது.
அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவது சிறந்தது. நீங்கள் எந்த சிக்கலையும் சந்திக்க மாட்டீர்கள், இருப்பினும் சிறப்பாக இருந்திருக்கக்கூடிய ஒன்று உள்ளது. அது கிளைமேட் கன்ட்ரோல் ஃபங்ஷன் பெரும்பாலான கார்களைப் போலல்லாமல், வெப்பநிலை மற்றும் ஃபேன் வேகத்தை அட்ஜெஸ்ட்மென்ட் கன்ட்ரோல்கள் உள்ளன. குஷாக் டச் கன்ட்ரோல்களை கொண்டுள்ளது. இது அழகாக இருக்கும். ஆனால் வாகனம் ஓட்டும் போது பயன்படுத்த மிகவும் கடினமாக இருக்கும். ஏசி -க்கான பாடி கன்ட்ரோல்கள் கொடுக்கப்பட்டிருந்தால்.
கேபின் நடைமுறை & சார்ஜிங் ஆப்ஷன்கள்
குஷாக் -கின் நான்கு டோர்களிலும் 1-லிட்டர் பாட்டில் ஹோல்டர்கள், முன்பக்கத்தில் இரண்டு கப் ஹோல்டர்கள், முன் ஆர்ம்ரெஸ்டில் ஸ்டோரேஜ், கூல்டு க்ளோவ்பாக்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் ரசீதுகளை வைத்திருக்க சன் ஷேட் மற்றும் விண்ட்ஷீல்டில் கிளிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பின்புற பயணிகள் இரு முன் இருக்கைகளுக்கு பின்னால் இருக்கையின் பின் பாக்கெட்டுகள் உள்ளன. அவை மொபைலை வைத்திருக்க தனி ஸ்லாட் ஆகியவையும் உள்ளன. மேலும் மைய ஆர்ம்ரெஸ்டில் இரண்டு கப் ஹோல்டர்கள் உள்ளன.
சார்ஜிங் ஆப்ஷன்களுக்கு வயர்லெஸ் ஃபோன் சார்ஜரை தவிர முன்பக்கத்திலும், பின்புறத்திலும் இரண்டு டைப்-சி போர்ட்களும் உள்ளன.
சிறப்பான பாதுகாப்பு
குளோபல் NCAP -லிருந்து 5-ஸ்டார் கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு மதிப்பீட்டை கொண்டிருப்பதால் குஷாக் அதன் பாதுகாப்பிற்காக அறியப்படுகிறது. மேலும் பாரத் என்சிஏபியி -லும் இதே மதிப்பீட்டை எதிர்பார்க்கிறோம். பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில் ஸ்டாண்டர்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா என 6 ஏர்பேக்குகள் பெறுகிறது.
இருப்பினும் பின்புற பார்க்கிங் கேமராவை செயல்படுத்துவது சிறப்பாக இருந்திருக்கலாம். முதலாவதாக அதன் தெளிவுத் தன்மை குறைவானது. இது பார்ப்பதை கடினமாக்குகிறது இரண்டாவதாக, குறைந்த ஒளி நிலையில் இன்னும் மோசமாக இருக்கிறது.
உற்சாகமான இன்ஜின் செயல்திறன்
இன்ஜின் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
115 PS |
150 PS |
டார்க் |
178 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6MT/ 6AT |
6MT/7DCT |
குஷாக் இரண்டு டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுட்ன கிடைக்கும். சிறிய 1-லிட்டர் யூனிட் உங்கள் தினசரி டிரைவ்களுக்கு எளிதானது. ஆனால் பெரிய இன்ஜின் உங்களுக்கு உற்சாகமான டிரைவிங் அனுபவத்தைத் தரும்.
குஷாக்கின் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் DCT வேரியன்ட்டை நாங்கள் ஓட்டினோம். அது எப்படி சென்றது என்பது இங்கே. குஷாக் மிக விரைவாக வேகத்தை எட்டுகிறது. மேலும் கடினமான ஆக்ஸிலரேஷனின் போது கூட ஃபுட்வெல்லில் எந்த அதிர்வுகளும் இல்லை. இது இன்ஜின் ரீஃபைன்மென்ட் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த பவர்டிரெய்ன் மூலம் நீங்கள் நகரத்தை சுற்றி எளிதாக பயணம் செய்யலாம். மேலும் ஓவர்டேக்குகள் எளிமையாக இருக்கும். நகர போக்குவரத்தில் கூட டிசிடி உங்களுக்கு மென்மையான மற்றும் தொந்தரவு இல்லாத இயக்கத்தை வழங்கும். ஆனால் பம்பர்-டு-பம்பர் டிராஃபிக்கில் மெதுவாக நகரும்போது நீங்கள் ஒரு சிறிய ஜர்க்கை உணர்வீர்கள்.
நெடுஞ்சாலைகளில் நீங்கள் அதே விரைவான ஆக்ஸிலரேஷன் கிடைக்கும். மேலும் மூன்று இலக்கங்களை அடைவதற்கும் எந்த தாமதம் இல்லை. ஓவர்டேக்குகள் சிரமமற்றவையாக உள்ளன.. கியர்கள் சரியான நேரத்தில் மாறுகின்றன. மேலும் பேடில் ஷிஃப்டர்கள் காருக்கு ஒரு ஸ்போர்ட்டி தன்மையை கொடுக்கின்றன.
வசதியான சவாரி
மேற்கூறிய ஸ்போர்ட்டி டிரைவ் மூலம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மென்மையான மற்றும் வசதியான சவாரி தரத்தைப் பெறுவீர்கள். நகரத்தில், பள்ளங்கள் மற்றும் ஸ்பீடு பிரேக்கர்கள் எளிதில் சமாளிக்கின்றன. மேலும் டிரைவிங்கின் பெரும்பகுதி கேபினுக்கு மாற்றப்படுவதில்லை. பெரிய ஸ்பீட் பிரேக்கர்கள் அல்லது ஆழமான பள்ளங்கள் கூட ஒரு சஸ்பென்ஷனுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இல்லை.
நெடுஞ்சாலைகளில், அலைவுகள் மற்றும் விரிசல்களை குஷாக் சிறப்பாக கையாள்கிறது. மேலும் விரைவான பாதை மாற்றங்களின் போது கூட அதிக வேகத்திலும் நிலையானதாக உணர வைக்கிறது. இந்த கார் வழங்கும் கையாளுதல் ஆர்வமுள்ளவர்களை ஈர்க்கும். குஷாக்கை நெடுஞ்சாலைகளில் ஓட்டுவதில் மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும்.
ஆனால், நாய்ஸ், வைப்ரேஷன், ஹார்ஸ்னெஸ் (NVH) நிலைகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஃபுட் வெல் பகுதியிலும் அதிக அதிர்வுகள் இல்லை என்றாலும் கரடுமுரடான சாலைகளில் டயர்கள் மற்றும் சஸ்பென்ஷன்களின் சத்தங்களை நீங்கள் கேட்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த விஷயங்களைத் தவிர குஷாக்கின் சவாரி தரம் உங்களை ஏமாற்றாது.
தீர்ப்பு
நவீன வடிவமைப்பு மற்றும் பல வசதிகள் கொண்ட பெரிய காரை நீங்கள் தேடினால் குஷாக் உங்களுக்கு ஏற்றது அல்ல. இந்த விஷயங்களை நீங்கள் விரும்பினால் ஹூண்டாய் கிரெட்டா அல்லது கியா செல்டோஸ் போன்ற கார்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதிக மைலேஜ் தரக்கூடிய மற்றும் 5 பயணிகளுக்கு நல்ல இடவசதி உள்ள காரை நீங்கள் விரும்பினால், மாருதி கிராண்ட் விட்டாரா அல்லது டொயோட்டா ஹைரைடர் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
இருப்பினும் நீங்கள் டிரைவிங்கை விரும்புபவராகவும், ஸ்போர்ட்டி டிரைவ் அனுபவத்தை விரும்புபவராகவும் இருந்தால் ஸ்கோடா குஷாக் நிச்சயமாக உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதன் இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் சவாரி தரம் உங்களை ஏமாற்றாது. அதன் கையாளுதல் உங்களுக்கு உற்சாகமான இயக்கி அனுபவத்தை அளிக்கும். மேலும் ஓரளவுக்கு சிறப்பான வசதிகளுடன் கூடிய நல்ல பாதுகாப்பு பேக்கேஜ் இதனுடன் கிடைக்கும். ஒரே பெரிய குறைபாடு குறைந்த பின்புற இருக்கை இடம் மட்டுமே. அதை நீங்கள் அதை சமரசம் செய்து கொண்டால் குஷாக் உங்கள் கேரேஜில் சேர்க்க ஒரு நல்ல காராக இருக்கும்.