2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் ரெனால்ட் நிறுவனம் என்ன செய்யப் போகிறது ?
modified on டிசம்பர் 31, 2015 03:04 pm by அபிஜித்
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
சரி ! இந்தியாவில் பிப்ரவரி 2016 ல் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் ஏராளமான கார்களின் அறிமுகங்கள், புதிய கான்செப்ட்கள் ஆகியவை அரங்கேற்றப்பட உள்ளன. பல கார்கள் காட்சிக்கும் வைக்கப்பட உள்ளன. நாமும் இந்த நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். மாருதி , ஜீப் மற்றும் ஆடி நிறுவனத்தினர் தாங்கள் காட்சி படுத்தப்போகும் தங்களது பல்வேறு தயாரிப்புக்களைப் பற்றிய தகவல்களை ஓரளவு வெளியிட்டுள்ள நிலையில், பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் க்விட் AMT மற்றும் க்விட் 1.0 லிட்டர் வெர்ஷன் கார்களை இந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி படுத்தும் என்று தெரிகிறது. மேம்படுத்தப்பட்ட டஸ்டர் SUV வாகனங்களும் இந்த கண்காட்சியில் இடம் பெறலாம் என்றும் யூகிக்கப்படுகிறது. இவை தவிர வேறு என்னென்ன வாகனங்களை ரெனால்ட் அறிமுகம் செய்யும் என்று சற்று ஆராயலாம்.
இரண்டாண்டுகளுக்கு முன்னால் நடந்த ஆட்டோ எக்ஸ்போ 2014 ல் ரெனால்ட் நிறுவனம் க்விட் கார்களுக்கான கான்செப்ட் , டஸ்டர் அட்வெஞ்சர் வெர்ஷன் , மெகேன் , ஸ்கேலா மற்றும் பல்ஸ் கார்களை காட்சிக்கு வைத்திருந்தது . இதில் கடைசியாக குறிப்பிடப்பட்டுள்ள ஸ்கேலா மற்றும் பல்ஸ் கார்கள் விற்பனையில் படு தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து , இந்த இரண்டு கார்களின் தயாரிப்பையும் ரெனால்ட் நிறுவனம் விரைவில் நிறுத்தி விடும் என்று தெரிகிறது. அறிமுகமான சமயத்தில், அதன் பிரிவில் சேம்பியன் போல வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்த டஸ்டர் வாகனங்களின் விற்பனை தற்போது பெருமளவு குறைந்துள்ளது. க்விட் கான்செப்ட் க்விட் கார்களாக உருவெடுத்து இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட போது நாம் அதற்கு மிகச் சிறந்த வரவேற்பை அளித்து வெற்றி பெற செய்துள்ளோம். மேலும் அதன் பிரிவில் புயலென பிரவேசித்த க்விட் கார்கள் தன்னுடைய அதீத சிறப்பம்சங்களால் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. மெகேன் கார்களைப் பொறுத்தவரை அவை இன்னும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறும் விதத்தில் சில அதிரடி நகர்வுகளை செய்து தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளுவதே ரெனால்ட் நிறுவனத்திற்கு இப்போதைய தலையாய தேவையாகும். மேம்படுத்தப்பட்ட டஸ்டர் வாகனங்களை வெளியிடுவதோ அல்லது க்விட் 1.0லிட்டர் வெர்ஷனை வெளியிடுவதோ வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க நிச்சயம் போதுமானதாக இருக்காது என்பதே என் எண்ணம்.
ரெனால்ட் அபிமானிகள் மற்றும் கார் ஆர்வலர்களின் ஆவலை தூண்டும் விதமாகவும், சந்தோஷப் படுத்தும் விதமாகவும் ரெனால்ட் நிறுவனம் தங்களது க்ளியோ அல்லது மெகேன் கார்களை இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது என்றே தோன்றுகிறது. க்ளியோ கார்களை வருட இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தி நம் அனைவரையும் ஆனந்த அதிர்ச்சியில் திக்கு முக்காட செய்ய ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டிருந்தாலும் நமக்கு அது தெரிய போவதில்லை .
டெல்லி:
இவை எல்லாவற்றையும் விட தங்கள் கார்களுக்கு எப்படி கச்சிதமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற சூட்சுமத்தை மற்ற அனைத்து கார் தயாரிப்பாளர்களை விட நன்கு ரெனால்ட் அறிந்து வைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். அதற்கு மிகப்பெரிய உதாரணம் க்விட் மற்றும் டஸ்டர் (அறிமுகமான சமயத்தில் ) கார்களின் கச்சிதமான விலை நிர்ணயத்தை சொல்லலாம். மீண்டும் ஒரு முறை அதை தனது க்ளியோ அல்லது மெகேன் கார்களை ஆச்சரியப்படுத்தும் விலையுடன் அறிமுகம் செய்து நிச்சயம் ரெனால்ட் நிகழ்த்திக் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் வாசிக்க: ரெனால்ட் நிறுவனம் , க்விட் கார்களின் AMT மற்றும் 1.0 லிட்டர் வெர்ஷன்களை 2016 ஆட்டோ: எக்ஸ்போவில் காட்சிப்படுத்துகிறது.
0 out of 0 found this helpful