சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் -க்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பரிசளித்த ஆரஸ் செனட் காரில் என்ன ஸ்பெஷல் ?

modified on ஜூன் 26, 2024 07:42 pm by yashika

புதினின் வடகொரியா பயணத்தின் போது இரு நாட்டுத் தலைவர்களும் செனட் காரை ஓட்டி மகிழ்ந்தனர்.

ஒரு நாட்டின் தலைவருக்கான அதிகாரப்பூர்வ கார், அதே நாட்டில் கட்டமைக்கப்பட்ட சிறப்பான கார். அந்தத் தலைவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின். சரி கார் ? நிச்சயமாக கூடுதல் கவசத்தை கொண்ட ஆரஸ் செனட் லிமோசின். செனட்டிற்கு ஒரு ரசிகராக வட கொரியாவின் உச்ச தலைவரான கிம் ஜாங் உன்னை புதின் கண்டுபிடித்தது போல தெரிகிறது. புதினின் சமீபத்திய வட கொரிய பயணத்தின் போது அவரது நண்பருக்கு ஆரஸ் செனட் காரை அன்பளிப்பாக கொடுத்தார். இருவரும் காரை ஓட்டச் சென்றனர். இந்த ஆண்டு கிம்முக்கு ரஷ்ய அதிபர் பரிசளித்த இரண்டாவது செனட் இதுவாகும்: 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்ட முதல் செனட் கார் புதின் பயன்படுத்திய அதே நீட்டிக்கப்பட்ட லிமோசின் வடிவத்தில் இருந்தது. இது நீண்ட வீல்பேஸ் மற்றும் அதிக இடவசதி கொண்டது. கிம் ஜாங் உன் ஆடம்பர கார்களை விரும்புவதாகக் கூறப்படுகிறது. இப்போது ஆரஸ் செனட் ஒரு நாட்டின் தலைவருக்கு பரிசாக வழங்கப்படுவதற்கு ஏற்ப என்ன விஷயங்களை கொண்டுள்ளது என்பதைப் பார்ப்போம்:

ஆரஸ் - சுருக்கமான அறிமுகம் !

இன்று வரை ஆரஸ் என்ற கார் பிராண்டை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் ரஷ்யாவில் வசிப்பவராக இல்லாத வரை இது இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. ரஷ்ய ஜனாதிபதி புதினின் கட்டளையைத் தொடர்ந்து ஆடம்பர வாகனத்தை உருவாக்க இந்த பிராண்ட் நிறுவப்பட்டது. ஆரஸின் முதல் தயாரிப்பு செனட் சொகுசு செடான் ஆகும், இது 2018 இல் உற்பத்தியைத் தொடங்கியது மற்றும் மூன்று வடிவங்களில் கிடைக்கிறது: ஸ்டாண்டர்டு செனட் (விளாடிமிர் மற்றும் கிம் இயக்கியது போல), செனட் லாங் மற்றும் செனட் லிமோசின் (புதின் மற்றும் ஜாங் உன்னால் இப்போது பயன்படுத்தப்படுகிறது).

செனட் காரின் சிறப்புகளை இப்போது விரிவாக பார்ப்போம்.

செனட் வெளிப்புற வடிவமைப்பு

செனட் "ரஷியன் ரோல்ஸ் ராய்ஸ்" என்ற புனைப்பெயரை பெற்றுள்ளது. அதன் மிரட்டலான கிரில் -க்கான உத்வேகம் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் காரிலிருந்து பெறப்பட்டுள்ளது, செங்குத்தான குரோம் ஸ்லேட்டுகள் மற்றும் ஒரு ஆரஸ் பேட்ஜ் ஆகியவற்றை முன்பக்கம் பார்க்கலாம். LED ஹெட்லேம்ப்கள் இண்டெகிரேட்டட் DRL -களுடன் நேர்த்தியான மற்றும் வட்ட வடிவங்களின் கலவையாக கொடுக்கப்பட்டுள்ளது. கீழே முன் பம்பரில் பெரிய ஏர் டேம்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பக்கவாட்டில் பார்க்கும் போது செனட்டின் கீழ் விளிம்பிலும் ஜன்னல்களைச் சுற்றியும் ஒரு குரோம் ஸ்ட்ரிப், டின்டட் (மற்றும் குண்டு துளைக்காத) ஜன்னல்களுடன் சிறப்பான தோற்றத்தை கொண்டுள்ளது. பெரிய, உறுதியான தோற்றமுடைய அலாய் வீல்கள், அரசாங்க வாகனமாக அதன் நேர்த்தியை காட்டுகின்றன.

மேலும் பார்க்க: பிரபல பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகை சௌமியா டாண்டன் புதிய Mercedes-Benz E-Class காரை வாங்கியுள்ளார்

செனட்டின் பின்புறம் முன்புறம் போலவே நேர்த்தியாக உள்ளது. பென்ட்லி கார்களில் உள்ளதை போலவே வரிசைப்படுத்தப்பட்ட LED டெயில்லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்

ஆரஸ் செனட்டின் உண்மையான ஆடம்பர இயல்பை கேபினில் பார்க்க முடிகிறது. சமீபத்தில் விளாடிமிர் மற்றும் கிம் டிரைவ் செய்த வழக்கமான நீளமான வடிவத்தில் கூட கேபினை சுற்றி மரத்தாலான இன்லேஸ், வசதிக்காக பட்டுத் தோல் அப்ஹோல்ஸ்டரியை கொண்டுள்ளது. டாஷ்போர்டில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் சென்ட்ரல் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன் ஆகியவை இன்டெகிரேட்டட் ஹவுஸிங் உள்ளது. கிளைமேட் கன்ட்ரோல் பேனல் கன்சோல் மட்டுமே கொஞ்சம் பிரீமியமாக குறைவான தோற்றமளிக்கும் பாகம் ஆகும்.

பின்புறத்தில் மொத்தம் நான்கு பேர் அமரக்கூடிய லவுஞ்ச் இருக்கைகள் உள்ளன. இந்த இருக்கைகள் கிளைமேட் கன்ட்ரோல்கள் மற்றும் ஃபோல்டு அவுட் டேபிள்ஸ் மற்றும் முன் இருக்கைகளின் பின்புறத்தில் பொருத்தப்பட்ட இன்ஃபோடியின்மென்ட் ஸ்கிரீன்கள் கொண்ட ஸ்டாண்டர்டான கன்சோலால் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு இருக்கையும் தனித்தனியாக பவர்-அட்ஜஸ்ட் வசதியை கொண்டுள்ளன, பின்புற இருக்கைகள் மசாஜ் ஃபங்ஷனையும் கொண்டுள்ளன.

புதினின் அதிகாரப்பூர்வ காரான லிமோசின் பதிப்பில் பின்புறமாக எதிர்கொள்ளும் இருக்கைகளுக்கான ஆப்ஷனும் உள்ளது. இந்த இருக்கைகள் பாதுகாப்பு ஊழியர்களுக்கோ அல்லது அரசியல் உதவியாளர்களுக்கோ வசதியாக இருக்காது. இதில் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கன்ட்ரோல்களுக்கான பின்புறத் ஸ்கிரீனையும் பெறுகிறது. அதே நேரத்தில் ஆம்பியன்ட் லைட்டிங் ஆனது கேபின் அனுபவத்தை உயர்த்துகிறது.

செனட்டில் வழங்கப்படும் வசதிகளின் முழுப் பட்டியலையும் ஆரஸ் தெளிவாகக் வெளியிடவில்லை. ஆனால் அது நிச்சயமாக ஒரு ஆடம்பர சலுகையிலிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் அடிப்படை விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கும். கேபின் கலர் ஸ்கீம்கள் கஸ்டமைஸ் செய்து கொள்ளக்கூடியவை. மேலும் இரண்டு வடிவங்களிலும், பின்புற பயணிகள் கேபினின் முன்பக்கத்திலிருந்து தனிமைப்படுத்தக்கூடிய வகையில் ஸ்கிரீன் கிடைக்கும்.

ஆரஸ் செனட் காரின் செயல்திறன்

மிக முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் தலைவர்களுக்கான கார் என்பதால், ஆரஸ் செனட் கார் குறிப்பாக அதிக ஆபத்துள்ள சூழ்நிலைகளில் விரைவாக நகரும் வகையில் போதுமான செயல்திறனை கொண்டிருக்க வேண்டும். அதனால் 4.4-லிட்டர் ட்வின்-டர்போ V8 பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் 598 PS மற்றும் 880 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இன்ஜினின் அவுட்புட் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் நான்கு சக்கரங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. ஆரஸ் வழக்கமான செனட்டிற்கு 0-100 கி.மீ வேகத்தை 6 வினாடிகளில் எட்டும்.

மேலும் படிக்க: ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்கள் 2029 ஆம் ஆண்டிற்குள் 7 ​​மடங்கு பிரபலமாகக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்

பாதுகாப்பு

ஆரம்பத்திலிருந்தே ஆரஸ் செனட் ஒரு பாதுகாப்பு கவசம் கொண்ட சொகுசு செடானாகக் கட்டமைக்கப்பட்டதால் இதன் பாதுகாப்புக்காக வழக்கமான ஏர்பேக்குகள், ADAS மற்றும் சீட் பெல்ட்கள் ஆகியவற்றை தாண்டி வேறு சில விஷயங்களும் இருக்கும். இது லிமோசின் வடிவத்தில் பாதுகாப்பானது, இது VR10-லெவல் பாலிஸ்டிக் பாதுகாப்பு மதிப்பீடு, 20-இன்ச் குண்டு துளைக்காத சக்கரங்கள், தீ மற்றும் வெடிப்பு-தடுப்பு எரிபொருள் டேங்க், தீயை அணைக்கும் வசதி மற்றும் ஏர் ஃபியூரிபையர் அமைப்புகள், வெளிப்புற தொடர்பு அமைப்பு மற்றும் அவசரகால வெளியேற்றம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கிம் ஜாங் உன் விரும்பினாரா?

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கிம் ஜாங் உன்னுக்கு ஆரஸ் செனட் காரை பரிசாக வழங்கியபோது அது கிம் ஜாங் உன் -க்கு மிகவும் பிடித்திருந்து என ​​கொரியாவின் (வடகொரியா) ஜனநாயக மக்கள் குடியரசின் (வடகொரியா) அதிகாரப்பூர்வ அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது. சமீபத்திய வீடியோவானது இருவரும் காரை ஓட்டும் போது ரசிக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. வடகொரியாவுக்கான சொகுசு வாகன இறக்குமதிகள் ஐ.நா.வால் அதிகாரப்பூர்வமாக தடைசெய்யப்பட்டாலும், கிம் ஜாங் உன்னிடம் தற்போது மெர்சிடிஸ்-மேபேக் செடான், ரோல்ஸ்-ராய்ஸ் பாந்தம், லெக்சஸ் எஸ்யூவி -களோடு இப்போது ஒரு ஜோடி ஆரஸ் செனட் சொகுசு கார்களும் சொந்தமாக உள்ளன.

வாகனங்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை பின்தொடர்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்

y
வெளியிட்டவர்

yashika

  • 193 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்பேஸ்லிப்ட்
Rs.1.89 - 2.53 சிஆர்*
Rs.10.89 - 18.79 லட்சம்*
Rs.10.69 - 18.69 லட்சம்*
Rs.9.49 - 10.99 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை