• English
  • Login / Register

சென்ற வார செய்திகளின் தொகுப்பு: கடந்த வாரத்தில் ரெனால்ட் க்விட் மற்றும் ஃபோர்டு ஃபிகோ ஆகியவற்றின் அறிமுகத்தை கண்டோம். மேலும் வோல்க்ஸ்வேகன் USA-ன் ஏமாற்ற கூடிய மாசு கட்டுப்பாட்டு சாப்ட்வேர் மூலம் அனைவருக்கும் பெரும் ஏமாற்றம் மற்றும் பல

published on செப் 28, 2015 07:29 pm by அபிஜித்

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இரு வாகனங்களான ஃபோர்டு ஃபிகோ மற்றும் ரெனால்ட் க்விட் ஆகியவற்றின் அறிமுகம் கடந்த  வாரத்தில் நடைபெற்றது. ஃபோர்டு நிறுவனம் தனது காருக்கு அடிப்படை விலையாக ரூ.4.29 லட்சம் என நிர்ணயித்து அறிமுகம் செய்த போது, ரெனால்ட் நிறுவனம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், அடிப்படை விலை ரூ.2.56 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புதுடெல்லி) என்று நிர்ணயித்து இருந்தது. இதுமட்டுமின்றி மற்ற பல கார்களின் அறிமுகமும் நடைபெற்றது. மெர்சிடிஸ் S600 மேபேச் கார் ரூ.2.6 கோடி விலை நிர்ணயத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதுவரை இல்லாமல் இருந்த வாகன வகையில், பஜாஜ் நிறுவனத்தின் RE60 (இப்போது க்யூட் என்று பெயரிடப்பட்டுள்ளது) அறிமுகம் செய்யப்பட்டது. பியட் இந்தியா நிறுவனம் தனது இணையதளத்தில் அபார்த் புண்டோ EVO காரின் முதல்படத்தை வெளியிட்டது. டெல்லியில் கிடைத்த புதிய டீலர்ஷிப் மூலம் மாசெராட்டி நிறுவனம், இந்தியாவிற்குள் மீண்டும் தடம் பதித்துள்ளது. பியட் நிறுவனம் தனது அடுத்து வரும் லீனியாவிற்கான மாற்று காராக இருந்த ஏஜியாவின் பெயரை எகியா என்று பெயர் மாற்றியுள்ளது. இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த உயர்தர ஆடம்பர காரான வோல்வோ XC90-யை நாம் சோதித்து பார்த்தோம்.

முக்கிய செய்திகள்

ரெனால்ட் க்விட் ரூ.2.56 லட்சத்தில் அறிமுகம்

பிரான்ஸ் நாட்டு கார் தயாரிப்பாளரான ரெனால்ட் நிறுவனம், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய துவக்க-நிலை தயாரிப்பான ரெனால்ட் க்விட் காரை கடந்த வார இறுதியில் அறிமுகம்  செய்தது. அதன் SUV போன்ற ஸ்டைல், போட்டியிடத் தகுந்த விலை ரூ.2.56 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) மற்றும் லிட்டருக்கு 25.17 கி.மீ மைலேஜ் உள்ளிட்ட பல காரணங்களால், 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கார்களில் க்விட் காரும் ஒன்றாக இருந்தது.

ஃபோர்டு ஃபிகோ 2015 ரூ.4.30 லட்சத்தில் அறிமுகம்

இந்தியாவிற்கான இரண்டாம் தலைமுறையை சேர்ந்த புதுப்பிக்கப்பட்ட ஹேட்ச்பேக் காரான ஃபோர்டு ஃபிகோவை, போர்டு நிறுவனம் கடந்த வாரம் அறிமுகம் செய்தது . இது ஒரு ஹேட்ச்பேக் என்பதற்கு ஏற்ப, பூட்-லெஸ் பதிப்புகளான ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் சேடன் மற்றும் ஃபோர்டு ஃபிகோ ஆகியவற்றின் பெட்ரோல் வகைகளுக்கு ரூ.4.29 லட்சமும், டீசல் வகைகளுக்கு ரூ.5.3 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறிய காரின் விலை நிர்ணயம், கடந்த 2010 ஆம் ஆண்டு போட்டியிடும் வகையில் விலை நிர்ணயம் செய்து அறிமுகம் செய்யப்பட்ட முதல் தலைமுறை ஃபிகோவை நினைவூட்டுவதாக அமைகிறது. மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் i10 மற்றும் டாடா போல்ட் ஆகிய போட்டியாளர்களுடன், அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கார் போட்டியிடும்.

ரூ.2.6 கோடி விலையில் மெர்சிடிஸ்-மேபேச் S600 சேடன் அறிமுகம்

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம், தனது மேபேச் பிரிமியம் ஆடம்பர சப்-பிராண்ட் காரை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்தது.. அந்நிறுவனம் மெர்சிடிஸ்-மேபேச் S600 மாடலை, இந்திய சந்தையில் ரூ.2.6 கோடி (எக்ஸ்-ஷோரூம், புனே) விலை நிர்ணயத்தில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட மேபேச் S600 காரை, உலகிலேயே மிகவும் அமைதியான கார் என்று அந்நிறுவனம் அறிவித்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த காருக்கான முன்பதிவு துவங்கி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விநியோகம் துவங்கியது.

ARAI-யின் புதிய தலைவராக ராஜன் வாத்தேரா நியமனம்

ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அஸோசியேஷன் ஆப் இந்தியாவின் (ARAI) புதிய தலைவராக திரு.ராஜன் வாத்தேராவும், துணை தலைவராக திரு.விக்ரம் கிர்லோஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. முன்னதாக திரு.வினோத் தாசாரியிடம் இருந்து திரு.வாத்தேராவும், புதிய தலைவரிடம் இருந்து திரு.கிர்லோஸ்கரும் பொறுபுக்களை  பெற்றுக் கொண்டனர்.

ஒப்பீடு: ரெனால்ட் க்விட் vs ஆல்டோ 800 vs ஆல்டோ K10 vs கோ vs இயான்

ஆல்டோ 800 மற்றும் A-பிரிவில் காணப்படும் மற்ற எல்லா கார்களுடன் ஒப்பிடும் போது, க்விட் அதன் போட்டியாளர்களை விட மிகவும் விலை குறைவாக உள்ளது. டாடா நேனோவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் 2வது மிக விலை குறைந்த காராக ரூ.2.56 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. A-பிரிவில் விலை நிர்ணயத்தில் போட்டியிடும் இந்த கார், B-பிரிவு ஹேட்ச் மற்றும் B+-பிரிவை சேர்ந்த கார்களையும் வெட்கப்படுத்தும் வகையிலான அளவு மற்றும் அம்சங்களை கொண்டுள்ளது. நம் நாட்டின் துவக்க நிலை கார்களின் பிரிவிற்குள் பெரிய பிரளயத்தை ஏற்படுத்தும் வகையில் ரெனால்ட் நிறுவனம் நுழைந்துள்ள நிலையில், அந்த காரின் பிரிவை சேர்ந்த பெரும்பாலான கார்களுடன் ஒப்பிட்டு பார்க்க உள்ளோம். தொடர்ந்து படியுங்கள்!

ஏஜியாவை, எகியா என்று மறுபெயரிட்டது பியட்

பியட் டர்க்கி, தனது ஏஜியா மாடலின் வடிவமைப்பு மற்றும் பெயரை மாற்றியுள்ளது. கடந்த மே 21 ஆம் தேதி துருக்கியில் காட்டப்பட்ட மாடலுடன், புதிய வடிவமைப்பு ஒத்துப் போனாலும், இந்த கார் மாடலுக்கு தற்போது எகியா என்று பெயரிடப்பட்டுள்ளது. காரின் பரிணாமங்களை மாற்றாமல் இருந்தால், 4500 mm நீளமும், 1780 mm அகலமும், 1480 mm உயரமும் கொண்டிருக்கும். வீல்பேஸ் 2640 mm காணப்படும்.

5 லட்சம் யூனிட்கள் விற்பனை: ஸ்கார்பியோவின் ஆதிக்கம் தொடர்கிறது

மஹிந்திரா நிறுவனத்திற்கு SUV பிரிவிற்குள் நுழைய உதவிகரமாக இருந்த இந்த கார், மற்றுமொரு பெருமையை அந்நிறுவனத்திற்கு தேடி தந்துள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ ஒட்டுமொத்தமாக 5 லட்சம் யூனிட்கள் விற்பனையானது என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் காலத்திற்கேற்ப 2 முறை வடிவமைப்பில்  மேம்பாடுகளை அளித்து வெளியிட்ட, அதன் வடிவமைப்பாளர்களுக்கும்  இந்த வெற்றியில் பங்குண்டு. இந்த கார் ஏறக்குறைய ஆண்டிற்கு 48,000 யூனிட்கள் விற்பனை என்ற இலக்கை எட்டியுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ Vs மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் i10, டாடா போல்ட்

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த தலைமுறை ஃபிகோ காரை, அடிப்படை விலையாக ரூ.4.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயிக்கப்பட்டு ஃபோர்டு நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த விலை நிர்ணயத்தின் மூலம், அதன் முக்கிய போட்டியாளர்களான மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் i10 மற்றும் டாடா போல்ட் ஆகியவற்றிற்கு சவாலாக அமைந்துள்ளது. இந்த கார்களை வேறுபடுத்தி காட்டும் முக்கிய அம்சங்களை முன்னிறுத்தி, ஒரு சிறிய ஒப்பீட்டை செய்துள்ளோம்.

அப்டேட்: மாசு கட்டுப்பாட்டு ஊழலுக்கு “முடிவில்லா மன்னிப்பு” கேட்ட வோல்க்ஸ்வேகன் CEO, விசாரணை நடத்த உறுதி

ஆட்டோமொபைல் உலகையே உலுக்கிய யாரும் எதிர்பார்க்காத வோல்க்ஸ்வேகன் மாசு கட்டுப்பாட்டு ஊழலில், அந்நிறுவனத்திற்கு சில உதவி கரங்கள் கிடைத்துள்ளது. வேறு எங்கிருந்தும் அல்ல, இந்திய ஆட்டோமொபைல் தொழில்துறையிடம் இருந்து தான். நம் நாட்டில் அதன் கார் விற்பனையை தொடரலாம் என்று அந்த கார் தயாரிப்பாளருக்கு தெரிவித்து, அந்நிறுவனத்திற்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு நிதியுதவி பெறும் ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோஸியேஷன் ஆப் இந்தியாவின் (ARAI) மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இதுவரை வோல்க்ஸ்வேகன் கார்களை பரிசோதிக்குமாறு, அரசு தரப்ப்பில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. பொதுவாக நாங்கள் எல்லா கார்களிலும் இடையிடையே சோதனை செய்வது வழக்கம். இதுபோலவே வோல்க்ஸ்வேகன் கார்களிலும் சோதனையிட்ட போது, அதில் எந்த திருப்தியின்மையான காரியங்களையும் கண்டறிய முடியவில்லை” என்றார். அந்நிறுவனத்தின் பங்குகள் 30% சரிந்து, 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவும் நிலையில், இது தெரியவந்துள்ளது. ஆனால் மேற்கூறிய செய்தியின் மூலம், வோல்க்ஸ்வேகன் நிறுவனம் பெரும் ஆறுதல் கிடைத்துள்ளது. ஏனெனில் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு ஊழல் நடந்திருப்பதாக பிடிப்பட்ட அதே என்ஜினை தான், இந்தியாவில் வெளியான கார்களிலும் அந்நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. அப்படியென்றால் அந்த என்ஜின் அமெரிக்காவின் சுற்றுச்சுழலை எந்த அளவிற்கு பாதிக்கிறதோ, அதே அளவில் இந்திய சுற்றுச்சுழலையும் பாதிக்கிறது என்பது தெரிய வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் நடத்தப்படும் சுற்றுச்சுழல் மாசுக் கட்டுப்பாடு தொடர்பான சோதனைகளில், தரம் குறைந்த அளவீடுகள் பயன்படுத்தப்படுவது தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது.

ரெனால்ட் க்விட்: கார் தேக்கோ செய்திகளின் முழுத்தொகுப்பு

அறிமுக அப்டெட்: ரெனால்ட் க்விட் கார், ரூ.2.56 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலை நிர்ணயிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இப்பிரிவை சேர்ந்த கார்களில், பல புதிய அம்சங்களை முதன் முதலாக அறிமுகம் செய்து, குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் இந்த கார் மிகவும் போட்டிக்குரியதாக தெரிகிறது. மேலும், இந்த பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான கவர்ச்சிகரமான குட்டி காரில் பல சிறப்பம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த காரின் முழுமையான அறிமுக விபரத்தை அறிய: ரெனால்ட் க்விட் ரூ.2.56 லட்சத்தில் அறிமுகம்.

புண்டோவிற்காக “ஹூ ஆம் ஐ” பிரச்சாரத்தை அபார்த் அறிமுகம் செய்துள்ளது

அபார்த் என்ற தனது கம்பெனியின் மூலம் ஃபியட் நிறுவனம், புண்டோ காரை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. கடந்த மாதம் சர்வதேச பூத் சர்க்கியூட்டில் முதல் முறையாக காண கிடைத்த இந்�

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience