சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே 36பைசா மற்றும் 87பைசா அதிகரித்துள்ளது

published on நவ 17, 2015 02:49 pm by nabeel

ஜெய்பூர்:

இந்திய ரூபாய் மற்றும் அமெரிக்க டாலர் பரிமாற்ற விகிதத்தில் எற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்தியாவில் எண்ணை விலை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 61 .06 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 46 .80 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய பரிமாற்ற விகிதத்தினால் ஏற்படும் விளைவுகள் நேரிடையாக மக்கள் மீது சுமத்தப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேச சந்தையில் வலுவாக வளர்ந்து வருவதே இந்த விலை ஏற்றத்திற்கு காரணமாகும்.

இந்தியன் ஆயில் கார்பரேஷன் விளியிட்டுள்ள அறிக்கையில், “ சர்வதேச சந்தையில் தற்போதைய பெட்ரோல் , டீசல் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பைப் பொறுத்தே இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவே இப்போது நுகர்வோரை பாதித்திருக்கிறது.

இந்திய அரசாங்கம் சமீபத்தில் எரிபொருள் மீது கூடுதல் வரி விதித்திருக்கிறது. இதன் காரணமாக பெட்ரோல் /டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது. மேலும், மாறும் மார்கெட் ரேட்டினால் எண்ணை நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க , அடிக்கடி ( மாதத்திற்கு இருமுறையாவது ) இந்த விலை மாற்றம் செய்யப்படுவது தவிர்க்க முடியாததாகிறது". எண்ணை நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும், மத்தியிலும் ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு மற்றும் முந்தைய இறக்குமதி செலவு போன்றவைகளை மதிப்பீடு செய்கிறது.

இதையும் படியுங்கள்:

n
வெளியிட்டவர்

nabeel

  • 13 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை