சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2026 ஆம் ஆண்டிற்குள் இந்திய ஆட்டோ தொழில்துறை ரூ.18.9 ட்ரில்லியன் (285 பில்லியன் அமெரிக்க டாலர்) வரை வளர்ச்சியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

published on செப் 04, 2015 01:19 pm by nabeel

இந்திய ஆட்டோமொபைல் துறையில் அடுத்த பத்தாண்டுகளில் தற்போதைய மதிப்பை விட, 4 மடங்கு வரை வளர்ச்சியை பெற்றிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சில சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமையன்று கனரக தொழிற்சாலைகள் துறை வெளியிட்ட ஒரு அறிக்கையில், அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 7.5% வளரும் பட்சத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) வாகன உற்பத்தி துறை 12%-க்கு அதிகமாகவும், அதன் தயாரிப்பு துறை 40%-மும் பங்கு வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல நடந்தால், வரும் 2026 ஆம் ஆண்டிற்குள் ஆட்டோமொபைல் துறையின் மதிப்பு ரூ.18.9 ட்ரில்லியனை (285 பில்லியன் அமெரிக்க டாலர்) எட்டும்.

இந்தியாவிற்குள் நுழையும் சர்வதேச பிராண்ட்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், நம் நாட்டு ஆட்டோமொபைல் துறைக்கு சர்வதேச அளவில் சிறப்பான அறிமுகம் கிடைத்துள்ளது. ஜீப் மற்றும் ஜாகுவார் லேண்டு ரோவர் போன்ற பிராண்ட்கள், இந்தியா வளரும் சந்தையாக மாற, பெரும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக காண்கின்றன. இந்தாண்டின் துவக்கத்தில் ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவனம், ஃபியட் இந்தியா ஆட்டோமொபைல்ஸ் பிரைவேட் லிமிடேட்டில் 280 மில்லியன் டாலர் முதலீடு செய்து, டாடா மோட்டார்ஸ் லிமிடேட் உடன் சேர்ந்து ஃபியட்டின் ரன்ஜன்கவுன் உற்பத்தி சாலையை விரிவாக்கம் செய்வதாக அறிவித்தது.

இந்த முதலீட்டின் மூலம் புதிய ஜீப் வாகனம் தயாரிப்பிற்கு உதவியாக இருக்கும் என்று ஃபியட் கிரைஸ்லர் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. வரும் 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், இந்த புதிய ஜீப்பின் தயாரிப்பு துவக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்தாண்டின் மார்ச் மாதத்தில், டாடா-வின் பொறுப்பில் இருக்கும் ஜாகுவார் லேண்டு ரோவர் இதுவரை இல்லாத சிறப்பான விற்பனையாக 58,481 வாகனங்களை விற்று, கடந்தாண்டை விட 6% அதிக விற்பனையில் ஈடுபட்டுள்ளது. அந்நிறுவனம் புதிய டிஸ்கவரி ஸ்போர்ட் வாகனத்தை மும்பை எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.46.10 லட்சம் என்று அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு வெளிநாட்டு பிராண்ட்டான மெர்சிடிஸ் கூட, இந்திய சந்தையில் தனது நிலையை விரிவாக்கம் செய்யும் முடிவோடு, இந்தாண்டு 15 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் ரூ.2.53 கோடி விலை நிர்ணயத்தில் 2015 மெர்சிடிஸ்- AMG S 63 சேடனை, கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதியும், டெல்லி எக்ஸ்-ஷோரூமின் துவக்க விலையான ரூ.1.3 கோடியில் C63 S AMG சேடன் ஆகிய இரண்டும் இந்த ஜெர்மன் வாகன தயாரிப்பாளரின் சமீப கால வெளியீடுகள் ஆகும். மேற்கண்ட இரண்டு கார்களின் விலையும் ரூ.1 கோடியை தாண்டுவதில் இருந்து, இந்திய சந்தையின் மீது இந்த பிராண்ட் வைத்துள்ள நம்பிக்கையை அறிந்து கொள்ளலாம். இதை தவிர, அந்நிறுவனத்தின் புதிய ஆட்டோ ஹங்கரை, ராய்ச்சூரில் துவக்கப்பட்டிருப்பதன் மூலம், நம் நாட்டில் இந்த பிராண்ட் விரிவாக்கம் செய்யப்பட போவதை காட்டுகிறது.

n
வெளியிட்டவர்

nabeel

  • 13 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை