முழுமையான ஆட்டோ எக்ஸ்போ - 2016 மோட்டார் ஷோ நிரந்தரமாக அமைக்கப்படவுள்ள ஹால்களில் இம்முறை நடைபெற உள்ளது.
டெல்லி: எதிர்வரும் மிகப்பெரிய வாகன கண்காட்சியான மோட்டார் ஷோ 2016 க்கு தயாராகும் முகமாக பெரிய கட்டுமான வேலை ஒன்று இந்தியா எக்ஸ்போ மார்ட் லிமிடட் (IEML) அமைப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது.. கண்காட்சி நடைபெறும் இடம் பெரிய அளவிலான கட்டுமான மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு இரண்டு மிகப் பெரிய மன்றம் ( ஹால்) முறையே 25000 ச.மீ மற்றும் 12240 ச.மீ என்ற அளவுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் 27,648 ச.மீ அளவிலான 8 நிரந்தர மன்றங்கள் (ஹால்) இந்த கண்காட்சி நடைபெற உள்ள இடத்தில அமைந்திருந்தது. மற்ற பங்கேற்பாளர்கள் 32,400 ச.மீ அளவுக்கு அமைக்கப்பட்ட தற்காலிக மன்றங்களில் தங்கள் தயாரிப்புக்களை காட்சிக்கு வைத்தனர்.
IEML தற்போது 9 -12 மற்றும் 14 -15 என்ற அளவுகளில் நிரந்தர மன்றங்கள் ( ஹால்ஸ்) அமைத்துள்ளன. இந்த மன்றங்களில் போதுமான மின்சார மற்றும் குளிர் சாதன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. தேவையான உபகரணங்களுடன் கான்க்ரீட் தரைகள் போடப்பட்டுள்ளது மட்டுமின்றி இந்த புதிய ஹால் ஒவ்வொன்றும் ஆறடி உயரத்திற்கு செங்கல் சுவர்களால் பிரிக்கப்பட்டு கூரை பகுதி இன்சுலேஷன் செய்யப்பட்ட ஷீட்கள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இதனால் எந்த விதமான சீதோஷண நிலையிலும் ஹால்களின் தட்பவெப்பத்தை சீராக வைத்திருக்க இந்த அமைப்பு உதவுகிறது. 5.3 மீட்டர் என்ற அனைத்து பகுதியிலும் ஒரே அளவைக் கொண்ட இதற்கு முந்தைய ஹால்களைப் போல் அல்லாமல் இப்போது கட்டப்பட்டு வரும் ஹால்களில் ஹாலின் பக்கவாட்டு பகுதியில் குறைந்தபட்சம் 10 மீட்டர் உயரமும் ஹாலின் மதிய பகுதியில் 13 மீட்டர் உயரமும் இருக்குமாறு கட்டப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால் ஹால் எண் 12 ல் பக்கவாட்டு பகுதியில் உயரம் 1 5 மீட்டரும் மத்திய பகுதியில் 18 மீட்டரும் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. . இதன் மூலம் 9,10,11,14 15 ஆம் ஹால்களில் ஏசி டக்ட்ஸுக்கு கீழே 9.5 மீட்டர் உயரமும் ,ஹால் எண் 12 ல் 14.5 மீட்டர் உயரமும் இருப்பதால் இந்த ஹால்களுக்குள் வரும் பார்வையாளர்கள் மற்றும் காட்சியாளர்கள் இடுக்கமாக உணராமல் போதிய இட வசதியுடன் சௌகரியமாக உணருவார்கள். . இத்தகைய வசதிகள் அனைத்தும் சேர்ந்து இந்த ஹால்களை உலதரம் வாய்ந்ததாக மாற்றியிருக்கிறது என்று சொல்லலாம். இந்த புதிய கட்டுமானத்தால் நிரந்தர கண்காட்சி பகுதியின் மொத்த அளவு 4840 சதுர மீட்டர்களாக உயர்ந்துள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த ஹால்கள் அனைத்திற்கும் 25 MW அளவு மின்சாரம் தேவைகேற்ப வழங்கப்படுகிறது. அனைத்து ஹால்களுக்கும் தடை இல்லா மின்சாரம் வழங்குவதற்காக ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது . இந்த கண்காட்சி நடைபெறும் இடத்தில் P1 மற்றும் P2 என்ற இரண்டு பார்கிங் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பார்கிங் இடங்களில் 10,000 கார்கள் / இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. . பார்கிங் பகுதியில் டிக்கெட் கவுன்டர்களும் இயங்கும். உடல் ஊனமுற்றோர் பார்கிங் வசதிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது மட்டுமல்லாமல் சக்கர நாற்காலி வசதியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது . லிம்கா உலா சாதனை புத்தகத்தில் 2014 ஆம் ஆண்டின் மிகப்பெரிய Wi – Fi வசதி கொண்ட உள்ளரங்கு என்று இந்த இடத்தை அறிவித்தது ஒரு சிறப்பு செய்தியாகும். . இந்த முறை இன்னமும் பெரிதாக அதிகமான பேன்ட்வித் உடன் Wi – Fi வசதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த கண்காட்சி பகுதி மிக உயர்ந்த அளவு பாதுகாப்பு வசதியை கொண்டிருக்கும். CISF மூலம் பல அடுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. இவைகளைத் தவிர தனியார் பாதுகாவலர்கள் , அந்த பகுதி காவல் துறையினர் ஆகியோரும் களத்தில் இறங்குவர் . 24/7 CCTV கேமரா கண்காணிப்பு வழங்கப்பட்டு கண்காட்சி நடைபெறும் இடம் மற்றும் அதன் சுற்றுபுறங்களில் சுமார் 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. . அதுமட்டுமின்றி இந்த மாபெரும் நிகழ்வு எந்த வித சிக்கலும் இன்றி சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யும் விதத்தில் அந்த பகுதி காவல் துறையினர் கண்காட்சி நடைபெறும் இடங்களைச் சுற்றி PCR வேன்களை பாதுகாப்புக்கு நிறுத்தி உள்ளனர். இவைகளைத் தவிர காரின் அடிப் பகுதியை சோதனையிடும் அண்டர் பாடி வெஹிகல் ஸ்கேனர் மற்றும் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. . அணைத்து விதமான தீ விபத்தையும் சமாளிக்கவல்ல பாதுகாப்பு உபகரணங்களும் கண்காட்சி நடைபெறும் இடத்தில தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன..