கைனடிக் சஃபார்: 3 சக்கர மின்சார வாகனம் ரூ. 1.38 லட்சங்கள் என்ற விலையில் அறிமுகம்
konark ஆல் ஜனவரி 25, 2016 06:32 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
புனே நகரத்தைச் சார்ந்த கைனடிக் க்ரீன் எனர்ஜி அண்ட் பவர் சல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனம், பேட்டரி மூலம் இயங்கும் கைனடிக் சஃபார் என்னும் புதிய இ-ஆட்டோவை பிரத்தியேகமாக வடிவமைத்து, ரூ. 1.38 லட்சங்கள் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்) என்று விலை நிர்ணயித்து, இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. கார்பன் வெளியீட்டைக் குறைக்க மற்றும் குறைந்த விலையில் ஒரு சிறந்த வாகனத்தை வாடிக்கையாளர்களுக்குத் தரவேண்டும் என்ற உயரிய நோக்கங்களுடன், புதிய சஃபார் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய இ-ஆட்டோவின் பாடி முழுவதும் ஸ்டீலால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எலக்ட்ரிக் வைப்பர்கள் மற்றும் முன்புறத்தில் இரட்டை முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. டாஷ்போர்டில், பேட்டரி சார்ஜ் குறித்த இன்டிகேட்டர் மற்றும் ஸ்பீடோமேட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. எக்ஸைட் பேட்டரி உட்பட, இதன் எக்ஸ்-ஷோரூம் அடக்க விலை ரூ. 1.38 லட்சங்கள் ஆகும்.
கைனடிக் க்ரீன் எனர்ஜி அண்ட் பவர் சல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. சுலஜ்ஜா ஃப்ரோடியா மோத்வானி, மின்சாரம் மூலம் இயங்கும் இந்த மூன்று சக்கர வாகனத்தை வெளியிடும் போது, “சுற்றுசூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய அரசாங்கம் எடுக்கும் முயற்சியில் பங்கேற்பது; நமது குடிமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவது; மற்றும் சிறந்த போக்குவரத்து தீர்வுகளை வழங்குவது போன்ற சமுதாய அக்கறை கொண்ட செயல்களில் பங்கேற்பதற்காக நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று கூறினார். இந்திய அரசாங்கத்தின் CMVR (சென்ட்ரல் மோட்டார் வெஹிக்கில் ரூல்ஸ்) பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு கைனடிக் சஃபார் தயாரிக்கப்பட்டுள்ளதால், இந்த வாகனத்திற்கு ARAI (ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா) ஒப்புதல் அளித்துள்ளது. சஃபார் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள லெட் ஆசிட் பேட்டரி அமைப்பை எக்ஸைட் நிறுவனம் வழங்குகிறது. மேலும், இந்த வாகனத்திற்கான உத்தரவாதம், சேவை மற்றும் மறுசுழற்சி முறையை, இந்தியா முழுவதிலும் இந்நிறுவனம் வழங்கும்.
உத்தரப் பிரதேச அரசாங்கம் நடத்திய ஏலத்தில் குறிப்பிடப்பட்ட சரியான விலை மற்றும் சிறந்த செயல்திறன் காரணமாக, கைனடிக் க்ரீன் எனர்ஜி சல்யூஷன்ஸ் நிறுவனம், இந்தியாவிலேயே மிகப் பெரிய அரசாங்க ஆர்டரைக் கைப்பற்றியுள்ளது. ஏலத்தில் வெற்றி பெற்ற இந்த நிறுவனம், உத்தரப் பிரதேச அரசாங்கத்திற்கு, ரூ. 400 கோடிகள் பெருமான 27,000 கைனடிக் சஃபார் வாகனங்களை, அடுத்த 12 மாதங்களுக்குள் டெலிவரி செய்யும் என்று தெரிகிறது. உத்தரப் பிரதேச அரசின் இ-ரிக்ஷா யோஜனா என்னும் திட்டதின் கீழ், கைனடிக் க்ரீன் நிறுவனத்திற்கு இந்த ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு சமூக நல முயற்சியாகும். ஏனெனில், உத்தரப் பிரதேச மாநிலத்தில், தற்போது வாழும் ரிக்ஷா ஓட்டுபவர்களுக்கு ஒரு கௌரவமான நல்ல வருமானத்தைப் பெற்றுத்தரவும்; அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்; அவர்களது வறுமையைக் குறைக்கவும், இ-ரிக்ஷாக்களை இம்மாநில அரசு இலவசமாக வழங்குகிறது. ஏற்கனவே, உத்திரப் பிரதேச அரசாங்கத்திற்கு 300 கைனடிக் சஃபார் வாகனங்களை இந்நிறுவனம் டெலிவரி செய்து விட்டது. மேலும் எதிர்காலத்தில், ஒவ்வொரு மாதமும் 3,000 வாகனங்களை டெலிவரி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹ்மெத்நகரில் உள்ள கைனடிக் க்ரீன் நிறுவனத்தின் ஆலையில், சஃபார் வாகனம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு மாதத்தில் 4,000 வாகனங்களை, இந்த ஆலையில் உற்பத்தி செய்ய முடியும். எதிர்காலத்தில், பெரிய நகரங்களின் சாலைப் போக்குவரத்தைச் சமாளிப்பதற்காக அதிக வேகத்தில் செல்லும் ‘சோல்க்ஷா’ என்னும் இ-ஆட்டோ வாகனம் மற்றும் லிதியம் அயான் பேட்டரிகள் பொருத்தப்பட்ட மின்சார ஆட்டோ போன்றவற்றை அறிமுகப்படுத்த கைனடிக் க்ரீன் எனர்ஜி அண்ட் பவர் சல்யூஷன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.