சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக: பிஎஸ்4 கார் விற்பனையானது 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளது

published on மார்ச் 24, 2020 06:15 pm by sonny

சி‌ஓ‌வி‌ஐ‌டி-19 தொற்றுநோய் காரணமாக விற்பனை வீழ்ச்சியடைந்ததால் இந்தியாவின் விற்பனையாளர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கோரியுள்ளது

சி‌ஓ‌வி‌ஐ‌டி-19 தொற்றுநோயின் காரணமாகப் பொருளாதார நிலைமை வாகனத் துறையையும் வீழ்ச்சியடையச் செய்துள்ளது. சமூக நிலைமை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் போன்றவை வருகின்ற மார்ச் 31 காலக்கெடுவுக்குள் விற்பனை நிலையங்களால் தங்கள் பிஎஸ்4 தயாரிப்புகளைச் சரியான நேரத்தில் விற்பனை செய்வதை கடினமாக்கியுள்ளன.

தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கும் பதிவு செய்வதற்கும் மே 31 வரை அனுமதி அளிக்கும் படி வாகன விற்பனையாளர்கள் சங்க கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. தற்போதைய கால அவகாசத்தின் படி, ஏப்ரல் 1 முதல் பிஎஸ்4 இணக்கமான வாகனங்கள் எதையும் விற்கவோ பதிவு செய்யவோகூடாது. இல்லையென்றால் விற்பனை நிலையங்களில் பிஎஸ்4 வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் அப்படியே தங்கிவிடும். பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே பிஎஸ்6 இணக்கமான இயந்திரங்களை வழங்கத் தொடங்கியுள்ள நிலையில், பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வது வியாபாரிகளுக்கு ஒரு சுமையாகவே இருக்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருப்பதால், சமீபத்திய நாட்களில் அவற்றின் விற்பனை 60 முதல் 70 சதவீதம் வரை சரிந்துள்ளதாக எஃப்‌ஏ‌டி‌ஏ தெரிவித்துள்ளது. சங்கம் பிப்ரவரியிலும் இதேபோன்ற கோரிக்கையை விடுத்தது, அப்போது அது நிராகரிக்கப்பட்டது. எஃப்‌ஏ‌டி‌ஏவின் தலைவரான ஆஷிஷ் ஹர்ஷராஜ் காலே, " தற்போது இருக்கக் கூடிய சூழ்நிலைகளில் வழக்கம் போல் வியாபாரத்தைத் தொடர்வது மிகவும் கடுமையாக உள்ளது" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "கடந்த 3-4 நாட்களில் பல நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் பாதி கடைகள் பூட்டப்பட்டதன் காரணமாக நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது, மேலும் சில மாவட்ட நீதிமன்றங்கள் வைரஸ் பரவுவதைத் தடுக்க கடைகள் மற்றும் வாகன விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை மூடுவதற்கான அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளது" என்றார்.

இந்த சமீபத்திய கோரிக்கைக்கு உச்சநீதிமன்றம் இத்துவரையிலும் பதிலளிக்கவில்லை, ஏனெனில் வாகனத் தயாரிப்பு நிறுவனம் ஒரு வருடத்திற்கும் மேலாகச் சரிவைச் சந்தித்து வருகிறது. பிஎஸ்4 விற்பனை நீட்டிப்பானது பிஎஸ்6-இணக்கமான வாகனங்களின் விற்பனையைப் பாதிக்க வாய்ப்பில்லை, ஆனால் இது விற்பனை செய்யபடாமல் தங்கி கிடக்கும் பிஎஸ்4 கார்களுக்கான விற்பனை அளவை நீட்டிக்கலாம், அதிலும் குறிப்பாக, விற்பனை நிலையங்களில் உள்ள டீசல் வகைகளுக்கான விற்பனை காலத்தை நீட்டிக்கலாம்.

மேலும் படிக்க: கொரோனா வைரஸ் காரணமாக வாகன தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சி

s
வெளியிட்டவர்

sonny

  • 29 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

கம்மெண்ட்டை இட
12 கருத்துகள்
S
shoaib khan
Jun 25, 2020, 6:13:31 PM

मेरा वाहन बुलेट रॉयल एनफील्ड bs4 13 फरवरी को खरीदा था जिसका रजिस्ट्रेशन लॉक डाउन के चलते हुए नहीं करा सके क्या रजिस्ट्रेशन कराने के लिए कुछ समय मिलेगा

C
chirag baxi
Mar 27, 2020, 11:40:28 AM

Same here. Vehicle arrived and then due to this lockdown, registration can't be made. Please support us in this critical time as we are already losing our big money.

P
pankaj verma
Mar 26, 2020, 3:10:20 PM

I have purchased bs4 venue car but unable to complete the registration due to lockdown. So what I do?

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை