- + 4நிறங்கள்
- + 43படங்கள்
- வீடியோஸ்
ஆடி க்யூ5
ஆடி க்யூ5 இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1984 சிசி |
பவர் | 245.59 பிஹச்பி |
torque | 370 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | ஆட்டோமெட்டிக் |
top வேகம் | 240 கிமீ/மணி |
drive type | ஏடபிள்யூடி |
- heads அப் display
- memory function for இருக்கைகள்
- சரிசெய்யக்கூடிய ஹ ெட்ரெஸ்ட்
- panoramic சன்ரூப்
- 360 degree camera
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்

க்யூ5 சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: ஆடி நிறுவனம் இந்தியாவில் Q5 எஸ்யூவி காரின் போல்ட் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது
விலை: ஆடி Q5 விலை ரூ.62.35 லட்சம் முதல் ரூ.68.22 லட்சம் வரை. Q5 -ன் லிமிடெட் எடிஷன் ரூ.69.72 லட்சம் வரை இருக்கிறது(அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா)
வேரியன்ட்கள்: Q5 இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது: பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி. Q5 -ன் லிமிடெட் எடிஷன் பதிப்பு டாப்-ஸ்பெக் டெக்னாலஜி டிரிம் அடிப்படையிலானது.
நிறங்கள்: ஐந்து கலர் ஆப்ஷன்களில் ஆடி எஸ்யூவியை வாங்கலாம்: நவர்ரா புளூ, இல்பிஸ் ஒயிட், புளோரெட் சில்வர், மைத்தோஸ் பிளாக் மற்றும் மன்ஹாட்டன் கிரே
சீட்டிங் கெபாசிட்டி: இதில் ஐந்து பேர் வரை அமரலாம்.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: ஆடி Q5 ஆனது 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை (265PS/370Nm) பயன்படுத்துகிறது, இது நான்கு சக்கரங்களுக்கும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 240 கிமீ ஆகும், அதே சமயம் 6.1 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும்.
வசதிகள்: ஆடி Q5 ஆனது 10.1-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, கனெக்டட் கார் டெக்னாலஜி மற்றும் 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி போன்ற வசதிகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது 30-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், பவர்டு ஃபிரன்ட் சீட் வித் மெமரி பங்ஷன், 19-ஸ்பீக்கர் 755W பேங் மற்றும் ஓலுஃப்சென் மியூசிக் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவற்றை பெறுகிறது.
பாதுகாப்பு: பாதுகாப்பை பொறுத்தவரை Q5 ஆனது 8 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் ஆகியவற்றைப் பெறுகிறது.
போட்டியாளர்கள்: ஆடி Q5 கார் மெர்சிடிஸ்-பென்ஸ் GLC, BMW X3, வோல்வோ XC60, மற்றும் லெக்சஸ் NX ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மேல் விற்பனை க்யூ5 பிரீமியம் பிளஸ்(பேஸ் மாடல்)1984 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.47 கேஎம்பிஎல் | Rs.66.99 லட்சம்* | ||
க்யூ5 டெக்னாலஜி1984 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.47 கேஎம்பிஎல் | Rs.72.29 லட்சம்* | ||
க்யூ5 bold எடிஷன்(டாப் மாடல்)1984 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.47 கேஎம்பிஎல் | Rs.73.79 லட்சம்* |
ஆடி க்யூ5 விமர்சனம்
Overview
BS6 சகாப்தத்தின் தொடக்கமான 2020 -ம் ஆண்டில் இந்தியா Q5 எஸ்யூவி -க்கு விடைபெற கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது 2021 -ஆம் ஆண்டில் ஆடியின் Q ரேஞ்ச் எஸ்யூவி மிட்லைஃப் ஃபேஸ்லிஃப்ட்டுடன் திரும்பியுள்ளது.
2020 ஜூன் மாதம் வெளிநாட்டில் உள்ள சந்தைகளில் இது முதலில் அறிமுகமானது, இது இரண்டாம் தலைமுறை சொகுசு எஸ்யூவி -க்கான முதல் அப்டேட் ஆகும். Q5 ஏற்கனவே அளவு மற்றும் செயல்பாட்டிற்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. எஸ்யூவியின் நேர்த்தியான சமநிலையான ஃபார்முலாவை மேம்படுத்தும் முயற்சியில் இந்த மிட்லைஃப் அப்டேட் என்ன செய்துள்ளது?
வெளி அமைப்பு
ஒரு பார்வையில் ஆடி ஃபேஸ்லிஃப்ட் Q5 காரின் ‘கார்ப்பரேட்’ வடிவமைப்பை விட்டுவிட்டு மேலும் ஸ்போர்ட்டியர் தோற்றத்தை நோக்கிச் சென்றுள்ளது. முன்புறத்தில் குரோம் வெர்டிகலான ஸ்லேட்டுகளை கொண்ட புதிய முன் கிரில் மூலம் புதிய முன்பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பெரிய உடன்பிறந்த Q8 காரை போலவே இருப்பதால் இங்கு சில பழக்கமான விஷயங்களை நீங்கள் கவனிப்பீர்கள். அடுத்ததாக ஒரு பெரிய பம்பர் மற்றும் புதிய LED ஹெட்லைட்கள் DRLகளின் ஸ்னாஸியர் செட் உடன் இணைக்கப்பட்டுள்ளன.
மற்ற இடங்களில் முன்பு இருந்த 18 இன்ச் வீல்களுக்கு பதிலாக இப்போது 19 இன்ச் யூனிட்களுடன் புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் டெயில் லைட் இன்டர்னல்கள் சற்று ஆக்ரோஷமான தோற்றத்திற்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக இது வெளிநாடுகளில் சந்தைகளில் விற்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட லைட் வடிவங்களைக் கொண்ட ஆர்கானிக் LED (OLED) டெயில்லைட்கள் அல்ல, ஆனால் மூன்றாம் நிலை அப்டேட்டின் ஒரு பகுதியாக இது பின்னர் வரும்.
ஆடி 2021 Q5 காரை 5 கலர் ஆப்ஷன்களில் வழங்குகிறது: அபிஸ் வொயிட், மைத்தோஸ் பிளாக், நவரா புளூ, மன்ஹாட்டன் கிரே மற்றும் ஃபுளோரெட் சில்வர். எங்களைப் பொறுத்தவரை, நவர்ரா ப்ளூ ஆகியவற்றால் மற்றவர்களிடையே தனித்து தெரிகின்றது. பிரகாசமான வெயில் நாட்கள் முதல் குறைந்த ஒளி சூரிய அஸ்தமனம் வரை எந்த வகையான இயற்கை காட்சிகளுக்கும் இது பொருத்துகிறது.
ஒட்டுமொத்தமாக வடிவமைப்பு மாற்றங்கள் Q5 -க்கு அதன் சொந்த அடையாளத்தை அளித்துள்ளன. மேலும் இது பெரிய மாற்றங்கள் அவசியமில்லை ஆனால் நேர்த்தியான சீரான சொகுசு எஸ்யூவி -யை போதும் என்பதை தேடும் ஒருவருக்கு ஏற்றது.
உள்ளமைப்பு
Q5 ஆனது எல்லாமே சரியான பகுதிகளில் வைக்கப்பட்டு சரியான ஃபிட் மற்றும் ஃபினிஷிங் உடன் அழகாகத் தோற்றமளிக்கும் அமைப்பை கொண்ட ஒரு சிறப்பான கேபினை கொண்டிருக்கிறது. Q5 ஆனால் மிகவும் சாஃப்ட்-டச் பொருட்கள் கேபினில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும், ஏனெனில் பல கேபினில் கடினமான பிளாஸ்டிக்குகள் பிரீமியம் லெவலை குறைக்கின்றன. என்றாலும் கூட அதன் அமைப்பு BMW X3 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் GLC உடன் ஒப்பிடும்போது போதுமான அளவு நவீனமானது.
கடினமான பிளாஸ்டிக்குகள் ஒருபுறம் இருக்க, Q5 ஆனது லெதரெட் + லெதர் அப்ஹோல்ஸ்டரியில் மூடப்பட்டிருக்கும் நன்கு குஷன் மற்றும் ஆதரவான இருக்கைகளுடன் 'கம்ஃபோர்ட்' வசதியை சரியாகப் பெறுகிறது. முன்பக்கத்தில் பயணிகளுக்கு கால்களை நீட்டுவதற்கு நிறைய இடம் உள்ளது. மேலும் நீண்ட சாலைப் பயணத்தில் நீங்கள் சோர்வாக உணர மாட்டீர்கள். பின் இருக்கைகளுக்கும் இதையே கூறலாம். ஏராளமான குஷனிங், நல்ல லெக்ரூம் மற்றும் தொடையின் கீழ் ஆதரவு, பின்புற ஏசி வென்ட்கள் உள்ளன. மேலும் நீங்கள் வசதியாக உட்காருவதற்கு நடு இருக்கையில் இருந்து கப் ஹோல்டரை பாப்-அவுட் செய்யலாம். மொத்தத்தில் எஸ்யூவி நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஏற்றது. ஆனால் மிகவும் உயரமானவர்களுக்கு லெக் ரூம் சிறிது குறையலாம். மேலும் இருக்கை கான்டூர் மற்றும் கேபின் அகலம் காரணமாக மூன்றாவது பயணிகளை நெருக்குவது மற்ற இருவருக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தும்.
வசதிகள்
இப்போது எஸ்யூவியில் உண்மையில் என்ன மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு புதிய 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கின்றது அது டச் ஸ்கிரீன் யூனிட் ஆகும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பயன்படுத்துவது எந்தத் தாமதமும் இல்லாமல் மீடியா கனெக்ட்டிவிட்டி, கார் செட்டிங்க்ஸ் மற்றும் நேவிகேஷனுக்கான எளிதான அணுகல் மெனுக்களைக் கொண்ட இன்ஃடர்பேஸை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்ட்டிவிட்டியுடன் வருகிறது, ஆனால் இது வயர்லெஸ் வசதி அல்ல. வயர்லெஸ் என்றாலும் இது போன் சார்ஜர் ஆகும்.
Q5 -க்கு மற்றொரு முக்கியமான கூடுதலாக 19-ஸ்பீக்கர் பேங் & Olufsen மியூசிக் சிஸ்டம் அதன் போட்டியாளரான Volvo XC60 -யில் உள்ள 15-ஸ்பீக்கர் போவர்ஸ் & வில்கின்ஸ் செட்டப்பை கொண்டுள்ள கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் பிங்க் ஃபிலாய்ட் அல்லது எட் ஷீரனைக் கேட்டாலும் இந்த விரிவான சவுண்ட் சிஸ்டம் இந்த டியூன்களை சிறந்த தரத்துடன் ஒலிக்கின்றது. ஸ்பீக்கர்கள் டோர்கள், டேஷ்போர்டு மற்றும் தூண்களில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன, சரவுண்ட் ஒலி முழு கேபினையும் நிரப்புகிறது. முழு வேகத்திலும் கூட இது சிறப்பாக இருப்பதை கவனிப்பீர்கள். சிறந்த கேபின் இரைச்சல் இன்சுலேஷனுக்கும் கிரெடிட் கொடுக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியின் நடுவில் கூட குறைந்த ஒலியில் நீங்கள் வசதியாக இசையை கேட்கலாம்.
2021 Q5 -யில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க பிட்களில் 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஒரு பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்ஸ், டிரைவர் மெமரி ஃபங்ஷன் உடன் பவர்டு முன் இருக்கைகள், அத்துடன் ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஆபரேஷன் உடன் கூடிய பவர்டு டெயில்கேட் ஆகியவை அடங்கும். மேலும் ஆடியின் விர்ச்சுவல் காக்பிட் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளேவை பல்வேறு சேர்க்கைகளில் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.
பாதுகாப்பு
Q5 காரில் 8 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஹில்-டிசென்ட் கண்ட்ரோல் மற்றும் பின்புற கேமரா ஆகியவை உள்ளன. ஆனால் 360-டிகிரி கேமரா மற்றும் லேன் கீப்பிங் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -களுடன் வந்திருந்தால் இந்த எஸ்யூவி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். இப்போது இந்த வசதிகள் குறைந்த விலை கொண்ட எஸ்யூவி -களிலேயே இப்போது கிடைக்கின்றன.
வெர்டிக்ட்
மிட்லைஃப் அப்டேட் Q5 எஸ்யூவி -யின் 'நன்கு சமநிலையானது' என்ற உணர்வை மேலும் உறுதி செய்திருக்கின்றது. இது இப்போது கூடுதலான ஸ்போர்ட்டி ஆளுமையை பெற்றுள்ளது. குடும்பத்திற்கு ஏற்றது, கூடுதல் வசதிகளுடன் வருகின்றது. மேலும் நீங்கள் ஆர்வத்துடன் அல்லது நகரத்தில் அல்லது ஞாயிற்றுக்கிழமை பயணத்தில் வாகனம் ஓட்டினாலும் இதை ஓட்டுவது சுவாரஸ்யமாக உள்ளது.
2021 Q5 நவம்பரில் இது விற்பனைக்கு வர உள்ளது. இதன் விலை ரூ 55 லட்சத்தில் இருந்து தொடங்கும் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) அதன் போட்டியாளர்களான மெர்சிடிஸ்-பென்ஸ் GLC, BMW X3 மற்றும் வோல்வோ XC60 ஆகியவை ரூ. 57.90 லட்சம் முதல் ரூ. 64 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) விலையில் உள்ளன. எனவே - அது ஒரு சொகுசு எஸ்யூவி -யில் ஒரு தீவிரத்தை நோக்கிச் செல்லாமல் சமநிலையான ஒன்றைத் நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் அதற்கு Q5 சிறந்த தேர்வாக இருக்கும்.
ஆடி க்யூ5 இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- ஸ்போர்ட்டியர் டிசைன் மூலம் இன்னும் மேலும் சிறப்பான அடையாளத்தைப் பெறுகிறது
- விசாலமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற கேபின், ஃபேமிலி லக்ஸரி என்பதற்கான ஃபார்முலா
- ஓரளவுக்கு சிறப்பான வசதிகளின் பட்டியல்
நாம் விரும்பாத விஷயங்கள்
- பெட்ரோல் வெர்ஷன் மட்டுமே கிடைக்கும்
- கேபினில் கொஞ்சம் கடினமான பிளாஸ்டிக்குகள் இல்லாமல் இருந்திருக்கலாம்
- அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் வசதிகள் இல்லாதது
ஆடி க்யூ5 comparison with similar cars
![]() Rs.66.99 - 73.79 லட்சம்* | ![]() Rs.60.97 - 65.97 லட்சம்* | ![]() Rs.44.99 - 55.64 லட்சம்* | ![]() Rs.69.90 லட்சம்* | ![]() Rs.75.80 - 77.80 லட்சம்* | ![]() Rs.49 லட்சம்* | ![]() Rs.76.80 - 77.80 லட்சம்* | ![]() Rs.65.72 - 72.06 லட்சம்* |
Rating59 மதிப்பீடுகள் | Rating123 மதிப்பீடுகள் | Rating81 மதிப்பீடுகள் | Rating101 மதிப்பீடுகள் | Rating3 மதிப்பீடுகள் | Rating19 மதிப்பீடுகள் | Rating20 மதிப்பீடுகள் | Rating93 மதிப்பீடுகள் |
Fuel Typeபெட்ரோல் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் |
Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் |
Engine1984 cc | EngineNot Applicable | Engine1984 cc | Engine1969 cc | Engine1995 cc - 1998 cc | EngineNot Applicable | Engine1993 cc - 1999 cc | Engine1984 cc |
Power245.59 பிஹச்பி | Power225.86 - 320.55 பிஹச்பி | Power187.74 பிஹச்பி | Power250 பிஹச்பி | Power187 - 194 பிஹச்பி | Power201 பிஹச்பி | Power194.44 - 254.79 பிஹச்பி | Power241.3 பிஹச்பி |
Top Speed237 கிமீ/மணி | Top Speed192 கிமீ/மணி | Top Speed222 கிமீ/மணி | Top Speed180 கிமீ/மணி | Top Speed- | Top Speed175 கிமீ/மணி | Top Speed219 கிமீ/மணி | Top Speed250 கிமீ/மணி |
Boot Space520 Litres | Boot Space- | Boot Space460 Litres | Boot Space- | Boot Space- | Boot Space- | Boot Space620 Litres | Boot Space- |
Currently Viewing | க்யூ5 vs ev6 | க்யூ5 vs க்யூ3 | க்யூ5 vs எக்ஸ்சி60 | க்யூ5 vs எக்ஸ்3 | க்யூ5 vs ஐஎக்ஸ்1 | க்யூ5 vs ஜிஎல்சி | க்யூ5 vs ஏ6 |
ஆடி க்யூ5 கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
ஆடி க்யூ5 பயனர் மதிப்புரைகள்
- All (59)
- Looks (9)
- Comfort (28)
- Mileage (11)
- Engine (26)
- Interior (20)
- Space (10)