வேறு எந்த சப்-4m எஸ்யூவி -களிலும் இல்லாத வகையில் சைரோஸ் கார் ஆனது ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் மற்றும் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் போன்ற பல பிரீமியம் வசதிகளுடன் வருகிறது.
சைரோஸ் EV ஆனது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV போன்றவற்றுடன் போட்டியிடும். மேலும் சுமார் 400 கி.மீ தூரம் வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கியா நிறுவனத்தின் எஸ்யூவி வரிசையில் சோன ெட் மற்றும் செல்டோஸுக்கு இடையில் சைரோஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற வென்டிலேட்டட் இருக்கைகள், பெரிய ஸ்கிரீன்கள் மற்றும் பல கூடுதல் வசதிகளை கொண்டுள்ளது.