• English
  • Login / Register

Mercedes-Benz EQA விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ்

Published On செப் 03, 2024 By arun for மெர்சிடீஸ் eqa

  • 1 View
  • Write a comment

மெர்சிடிஸின் மிகக் குறைவான விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவி -யான இது ஆடம்பரமான சிட்டி காரை விரும்புவோருக்கு ஒரு சிறப்பான தேர்வாக இருக்கும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் EQA கார் என்பது மெர்சிடிஸின் மிகச்சிறிய எஸ்யூவி -யான GLA -வை அடிப்படையாகக் கொண்ட ஒரு எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். இந்தியாவில் இது ஒரு ‘EQA 250+’ வேரியன்ட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய 70.5kWh பேட்டரி பேக் உடன் 560 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வரும். 

இந்த சிறிய EV ஆனது வோல்வோவின் XC40 ரீசார்ஜ் உடன்நேரடியாக போட்டியிடுகிறது. இதேபோன்ற பட்ஜெட்டுக்கு நீங்கள் கியா EV6 அல்லது BMW iX1 போன்ற மற்ற எலக்ட்ரிக் மாற்று கார்களையும் கருத்தில் கொள்ளலாம். இதைவிட குறைந்த பட்ஜெட்டில் நீங்கள் BYD சீல் மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 கார்களையும் கருத்தில் கொள்ளலாம்.

மெர்சிடிஸ்-பென்ஸ் EQA உங்களுக்காக கொடுக்கிறது ? 

வடிவமைப்பு

மெர்சிடிஸ் இன் எலக்ட்ரிக் 'EQ' வரிசையில் உள்ள மற்ற மாடல்களுடன் ஒப்பிடும்போது ​​அதன் ICE-உடன்பிறந்த GLA உடனான EQA உடனான இணைப்பு இன்னும் கொஞ்சம் தெளிவாக தெரிகிறது. நிச்சயமாக இது அனைத்து வழக்கமான EQ ஸ்டைலிங் எலமென்ட்களுடன் வருகிறது, இதில் கனெக்டட் LED லைட்ஸ், ஏராளமான '3-பாயிண்ட் ஸ்டார்' டீடெயில் உடன் குளோஸ்டு கிரில் மற்றும் ஒரு விளிம்பு முதல் மறு விளிம்பு வரையிலான டெயில் லைட் உள்ளது . 

Mercedes-Benz EQA front look

மெர்சிடிஸ்-பென்ஸ் 19” AMG அலாய் வீல்களின் இனிமையான தோற்றமுடைய தொகுப்பைத் தேர்ந்தெடுத்துள்ளது. அதனால் EQA ஸ்போர்ட்டியாக தோற்றமளிக்கிறது. 

Mercedes-Benz EQA side profile

மெர்சிடிஸ் பெஸ்போக் 'மனுஃபக்டூர்' பெயிண்ட் ரேஞ்ச் உடன் வரும் 'மவுண்டன் கிரே மேக்னோ' (மேட் கிரே) மற்றும் 'படகோனியா ரெட்' போன்ற சில சுவாரஸ்யமான வண்ணங்களையும் தேர்வு செய்யலாம். மற்ற ஆப்ஷன்களில் வழக்கமான வொயிட், சில்வர், கிரே மற்றும் பிளாக் ஆகியவற்றுடன் டீப் 'ஸ்பெக்ட்ரல் ப்ளூ' ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. 

Mercedes-Benz EQA rear three-fourth

EQA ஒரு பெரிய கார் அல்ல நீளம் 4.5 மீட்டருக்கும் குறைவானது. ஆகவே சாலையில் மிரட்லான தோற்றத்தை கொண்டிருக்கு என்று எதிர்பார்க்க வேண்டாம். இருப்பினும் இது அதற்கேற்றபடி ஒரு பெரிய ஆளுமையைக் கொண்டுள்ளது. வடிவமைப்பு மிகைப்படுத்தப்படவில்லை. மெர்சிடிஸின் தெளிவான லைன்கள் மற்றும் சாஃப்ட்  மேற்பரப்புகள் கொடுக்கப்பட்டால் அது தோற்றம் கொண்டதாக மாறிவிடும் என்பது உறுதி. 

இன்ட்டீரியர்

EQA -ல் நுழைவது மற்றும் வெளியேறுவது எளிதான விஷயம். பேட்டரி பேக் தரைக்கு அடியில் வைக்கப்பட்டுள்ளதால் வழக்கமான GLA உடன் ஒப்பிடும்போது இது சற்று உயரத்தில் இருப்பதை போலவே தோன்றுகிறது. இது உண்மையில் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு சற்று வசதியாக இருக்கலாம். 

உள்ளே நுழைந்ததும் கார் பழக்கமான ஒன்றாக தோன்றுகிறது. டாஷ்போர்டின் செட்டப், பயன்படுத்தப்பட்ட பொருட்களின் உணர்வு, ஃபிட் மற்றும் ஃபினிஷ் ஆகியவை GLA போலவே இருக்கும். அதிக விலை கொண்ட ஒரு வாகனத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது மிகவும் சரியாக இருக்கும். டாஷ்போர்டு மற்றும் டோர் பேட்களில் சாஃப்ட்-டச் மெட்டீரியல் தாராளமாக பயன்படுத்தப்பட்டுள்ளது மேலும் ஸ்டீயரிங் வீலுக்கும் மீட்டி லெதர் கொடுக்கப்பட்டுள்ளது. 

Mercedes-Benz EQA cabin

EQA க்கு அதன் சொந்த பாணியை வழங்க, AC வென்ட்களில் புரோன்ஸ் கலர் ஆக்ஸென்ட்களுடன் உள்ளன. ஏசி வென்ட்கள் மற்றும் கிராஷ் பேடில் உள்ள சிறிய நட்சத்திரங்களை ஒளிரச் செய்யும் ஆம்பியன்ட் லைட்ஸ் (மாற்றிக்கொள்ளக்கூடியது, 64 வண்ணங்கள்) புத்திசாலித்தனமான பயன்பாட்டுடன் கேபின் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 

Mercedes-Benz EQA

முன்பக்க இருக்கைகள் இரண்டையும் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொன்றிற்கும் மூன்று மெமரி செட்டப்கள் உள்ளன. தொடை சப்போர்ட் அட்ஜஸ்ட்மென்ட் மேனுவலாக செய்து கொள்ளகூடியதாக உள்ளது. 

இடவசதியை பொறுத்தவரையில் EQA நிச்சயமாக நன்றாகவே உள்ளது. காரில் நான்கு 6 அடி உடைய நபர்களுக்கு போதுமான இட வசதி உள்ளது. முழங்கால் மற்றும் ஹெட்ரூம் வசதியும் நன்றாகவே உள்ளது. 

Mercedes-Benz EQA rear seat space

இருப்பினும் ஒரு பெரிய குறை இருக்கிறது பேட்டரி பேக் தரைக்குக் கீழே வைக்கப்பட்டுள்ளதால், நீங்கள் முழங்கால்களை மேலே வைத்தபடி அமர்ந்து இருக்கிறீர்கள். இது குறிப்பாக பின்புறத்தில் தெளிவாகத் தெரிகிறது. அங்கு தொடையின் கீழ் ஆதரவு குறைவாக இருக்கும்.  பின்புறத்தில் அகலம் சிறப்பாக இல்லை எனவே EQA நான்கு இருக்கைகளாகப் பயன்படுத்தப்படுவதே நன்றாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக GLA போலல்லாமல் EQA ஆனது ஒரு பின்புற-ஆர்ம்ரெஸ்ட்டை கொண்டுள்ளது, இது கூடுதல் வசதியை காருக்கு கொடுக்கிறது. 

பூட் ஸ்பேஸ் 

EQA அகலமான ஆனால் ஆழமற்ற 340-லிட்டர் பூட்டை கொண்டுள்ளது. சிறிய பைகளை செங்குத்தாக வைப்பது போல் பெரிய பைகளை வைக்க முடியாது என்பதே இதன் பொருள். உங்கள் சாமான்களை பேக் செய்ய கேபின் அளவிலான டிராலி பேக்குகளை பயன்படுத்துவது நல்லது அதில் நான்கை EQA -வில் வசதியாக வைக்கலாம். 

Mercedes-Benz EQA boot space

நீங்கள் எதிர்பார்ப்பது போல் பின் இருக்கையை 40:20:40 விகிதத்தில் ஃபோல்டு செய்யலாம் அல்லது முழுவதுமாக அதிக லக்கேஜ்களை எடுத்துச் செல்ல வேண்டும். 

வசதிகள் 

விலையைப் பொறுத்தவரையில் மெர்சிடிஸ்-பென்ஸ் EQA மிகவும் சிறப்பான வசதிகள் உடன் வருகிறது. அவற்றின் விரைவான பார்வை இங்கே: 

வசதி

குறிப்புகள்

10.25” டச் ஸ்கிரீன் 

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகள் உள்ளன. தெளிவு, ரெஸ்பான்ஸ் நேரம் மற்றும் இன்ட்டியூட்டிவ் ஆன யூஸர் இன்டஃபேஸ் ஆகியவை நன்றாகவே உள்ளன. ஆனால் திரை அளவு பெரிதாக இருந்திருக்கலாம்.

பில்டு இன் நேவிகேஷனில் 'ஆக்மென்டட் ரியாலிட்டி' ஒருங்கிணைப்பு பெரிதும் உதவுகிறது.
 

710W பர்மெஸ்டர் ஆடியோ சிஸ்டம்

மிகச் சிறப்பான ஆடியோ தரம், குறிப்பாக உயர்தர இசை. 

10.25" இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்

பல பார்வைகளைப் பெறுகிறது மற்றும் நேவிகேஷனையும் காண்பிக்க முடியும். ஹை ரெசொல்யூஷன் ஸ்கிரீன் மற்றும் விரைவான ரெஸ்பான்ஸ். அதற்காக ஒரு தம்ஸ் அப்! 

ஹெட்ஸ் அப் டிஸ்பிளே

செயல்பாடுகள் நன்றாகவே உள்ளன. இடத்தை சரிசெய்யலாம் மற்றும் இருக்கை செட்டப்களை மெமரியில் கூட சேமிக்க முடியும். 

360° கேமரா

நல்ல தரம், பின்னடைவு இல்லாத அவுட்புட். டிஸ்பிளே ஸ்கிரீன் பெரிதாக இருந்திருக்கலாம். 

Mercedes-Benz EQA parking assistant

கீலெஸ் என்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட் ஸ்டாப், மெமரி உடன் கூடிய பவர்டு பவர்டு முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பவர்டு டெயில்கேட் மற்றும் ஐந்து டைப்-சி சார்ஜிங் போர்ட்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இருக்க வேண்டிய அனைத்தும் உள்ளன, ஆனால் முன் இருக்கை வென்டிலேஷன் இல்லாதது வித்தியாசமாக தெரிகிறது. 

பாதுகாப்பு

பாதுகாப்புக்காக பிரதான 7 ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் ஆகியவை உள்ளன. EQA ஆனது முன் கேமரா மற்றும் பின்புற ரேடார்கள் உள்ளன, இது பிளண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற சில ADAS வசதிகளும் உள்ளன. பெரும்பாலான மெர்சிடிஸ் வாகனங்களைப் போலவ எமர்ஜென்சி பிரேக்கிங் என்பது நமது அடிக்கடி கணிக்க முடியாதபடி ஓட்டுநர் நிலைமைகளில் மிகவும் சென்ஸிட்டிவ் திறன் வாய்ந்தது. ஆகவே இந்திய சாலைகளில் அதை ஸ்விட்ச் ஆஃப் செய்வதே சிறந்தது. 

Mercedes-Benz EQA ADAS

செயல்திறன்

இந்தியாவைப் பொறுத்தவரை EQA EQA 250+ பதிப்பில் கிடைக்கிறது. ஒரு பெரிய 70.5kWh பேட்டரி பேக் உள்ளது, முன் சக்கரங்களை இயக்கும் 190PS/380Nm மோட்டாருடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது. 

Mercedes-Benz EQA powertrain

EQA250+ -ன் செயல்திறனை விவரிக்க எளிதான வழிகளில் ஒன்று 'எஃபெர்ட்லெஸ்' என்று குறிப்பிடலாம். EQA இன் பவர்டிரெய்னின் மென்மையான, அமைதியான மற்றும் உடனடி இயல்பு பழகுவது எளிதானது. மூன்று டிரைவ் மோடுகள் உள்ளன: இகோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் ஆகும். அதன் மிகவும் ஸ்போர்ட்டி அமைப்பில் கூட, EQA உண்மையில் உங்களை சிரிக்க வைக்கப் போவதில்லை. 0-100 கி.மீ வேகத்தை எட்டுவதற்கு சாதாரணமாக 8.6 வினாடிகள் ஆகும். 

ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட பேடில் ஷிஃப்டர்களை பயன்படுத்தி பிரேக் எனர்ஜி ரீஜெனரேஷன் அளவை நீங்கள் மாற்றலாம். 'இன்டெலிஜென்ட் ரெகுப்ரேஷன்' மோடும் உள்ளது. அது நிலைமைக்கு ஏற்றபடு தானாகவே லெவலை மாற்றும். 

Mercedes-Benz EQA paddle shifter

கிளைம்டு ரேஞ்ச் 560 கி.மீ (WLTP சுழற்சி) ஆகும். நிஜ உலகில் நீங்கள் 400 கி.மீ -க்கு மேல் மிக எளிதாக செல்ல முடியும். EQA ஐ 11kW சார்ஜர் மூலம் 0-100% முதல் 7 மணி 15 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். 100kW இல் 10-80% சார்ஜ் ஆனது 35 நிமிடங்கள் எடுக்கும். இந்த புள்ளிவிவரங்களின்படி மும்பை-புனே, டெல்லி-குர்கான் போன்ற விரைவான டிரைவ்களுக்கு  EQA -வை நீங்கள் வசதியாகப் பயன்படுத்தலாம். 

சவாரி மற்றும் கையாளுதல்

அதன் அளவு மற்றும் எடையை பொறுத்தவரையில் EQA -ன் சவாரி தரம் வசதியானது. மென்மையான சாலைகளில், உங்களுக்கு எந்த புகாரும் இருக்காது. போக்குவரத்து இல்லாத நெடுஞ்சாலை EQA -ன் திடமான வீட்டைப் போல் உள்ளது, அங்கு அது மூன்று இலக்க வேகத்தில் செல்லும்போது  கூட திடமாகவே இருக்கும். இந்த வேகத்தில் சாலை விரிவாக்க பகுதிகளில் செல்லும் போது குறைந்தபட்ச கேபின் மூவ்மென்ட்டையே கேபினில் உணர முடியும். 

Mercedes-Benz EQA handling

EQA -ல் சில சாலைகள் வழியாகவும் செல்ல எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. மேடுகள் மீது அண்டர்பாடி பேட்டரி பேக்கை உரசுவதை பற்றி நாங்கள் சிறிது நேரம் கவலைப்பட்டபோது, ​​EQA இன்ப அதிர்ச்சி அளித்தது. மிகவும் கடினமான பரப்புகளில் குறைந்த வேகத்தில் சில எதிர்பார்க்கப்படுவதை விட குறைவான இயக்கம் மட்டுமே உள்ளது.

தீர்ப்பு

நீங்கள் பணத்துக்கு ஏற்ப நல்ல மதிப்பு கொண்ட காரை தேடுகிறீர்கள் என்றால், ஹூண்டாய் அயோனிக் 5 கவர்ச்சிகரமானதாகத் தோன்றலாம். மேலும் நீங்கள் இன்னும் ஃபன் மற்றும் டிராமாவை விரும்பினால், கியா EV6 இருக்கிறது அல்லது முன்னோக்கி பார்க்கலாம். இருப்பினும் நீங்கள் ஒரு சிறிய மெர்சிடிஸ்-பென்ஸ் வாகனத்தை அதிக நகர உபயோகத்திற்காக விரும்பினால் ஒருவேளை உங்களுடையதை GLS/எஸ்-கிளாஸ் கொடுக்கலாம். செயல்பாட்டில் ஒரு தகுதியான இடைவெளி உடன் EQA உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும். 

Mercedes-Benz EQA

ரூ.66 லட்சத்தில் EQA விலை அதன் பெட்ரோல் உடன்பிறப்பை விட கிட்டத்தட்ட 14 லட்சம் அதிகமாகவும் டீசல் பதிப்பை விட ரூ.10 லட்சம் வரை அதிகமாகவும் உள்ளது. உங்கள் பயன்பாடு குறைவாக இருந்தால், இந்த விலையை ஏற்பது சாத்தியமற்றது. இருப்பினும் அதிக உபயோகத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் அதாவது ஒரு நாளைக்கு 80-120 கி.மீ ரேஞ்ச் என்றால், குறைந்த இயக்க மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிக தேய்மான ஆஃபர் செய்யப்படுவதால் 67% திரும்பப் பெறுவதன் காரணமாக (4 ஆம் ஆண்டு) மெர்சிடிஸ் பென்ஸ் EQA நீண்ட காலத்திற்கு விலை குறைந்ததாகவே இருக்கும் என்பது உறுதி.

Published by
arun

மெர்சிடீஸ் eqa

வகைகள்*Ex-Showroom Price New Delhi
250 பிளஸ் (எலக்ட்ரிக்)Rs.67.20 லட்சம்*

சமீபத்திய எஸ்யூவி கார்கள்

வரவிருக்கும் கார்கள்

  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • M ஜி Majestor
    M ஜி Majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு

சமீபத்திய எஸ்யூவி கார்கள்

×
We need your சிட்டி to customize your experience