Mercedes-AMG G63 ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: இதை தவிர இன்னும் என்ன வேண்டும்?
Published On பிப்ரவரி 11, 2025 By ansh for மெர்சிடீஸ் ஜி கிளாஸ்
- 1 View
- Write a comment
G63 AMG ஆனது மெர்சிடிஸின் ஆடம்பரத்தை ஆஃப்-ரோடு திறன்களுடன் ஒருங்கிணைக்கிறது. இது அதிக சக்தி கொண்ட டர்போ இன்ஜினை கொண்டுள்ளது.
Mercedes-Benz G Class -ன் டாப் லைன் வேரியன்ட் ஆக Mercedes-AMG G63 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.3.60 கோடி (எக்ஸ்-ஷோரூம்) -யில் இது ஆடம்பரத்தோடு சிறந்த ஆஃப்-ரோடு திறன்களை வழங்குவது மட்டுமல்லாமல் மிகச் சிறந்த V8 இன்ஜினை கொண்டுள்ளது. G63 AMG ஆனது G கிளாஸ் -ன் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. மேலும் கூடுதல் கம்ஃபோர்ட் மற்றும் பன்ச் -ஐ காரில் சேர்க்கிறது. நாங்கள் ஓட்டிய கார் Mercedes-Benz -ன் அதிகாரப்பூர்வ பாகங்கள் உடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டது. ஆகவே இது வழக்கமான AMG G63 யூனிட்டை விட விலை அதிகமாக இருக்கும்.
ஜி வேகனின் இந்த பதிப்பை இயக்கிய பிறகு நாங்கள் கவனித்த சில விஷயங்களுடன் ஒரு சிறிய விமர்சனம் இங்கே.
இது நிச்சயமாக பெரியது
முதல் முறையாக G63 காரை பார்க்கும்போது அதன் அளவை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இது ஒரு பெரிய கார் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். இது நிச்சயமாக மிகப்பெரியது. உதாரணத்துக்கு நீங்கள் இதன் அருகில் நின்றால் நீங்கள் ஒரு சுவற்றுக்கு நெருக்கமாக இருப்பதை போல உங்களுக்கு தோன்றும்.
இதன் வடிவமைப்பு மிகவும் அடிப்படையானது. ஆனால் இந்த காருக்கு நன்றாக பொருந்துகிறது. பக்கவாட்டில் பிளாட் ஆக நேரான கிடைமட்ட லைன்கள் காரின் நீளத்தை காட்டுகின்றன. மேலும் ஒட்டுமொத்த பாக்ஸி வடிவம் ஆனது காருக்கு ஒரு சராசரி மற்றும் மிரட்டலான தோற்றத்தை அளிக்கிறது.
சில கார்களில் கார்பன் ஃபைபர் ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்கும். ஆனால் இங்கு அப்படி இல்லை. முன் மற்றும் பின்பக்க பம்பர்களில், ORVM -களில், முன் மற்றும் டோர்கள் மற்றும் பின்புற ஸ்பேர் வீல் கவர் ஆகியவற்றில் கார்பன் ஃபைபர் இன்செர்ட்கள் உள்ளன. இந்த எலமென்ட்கள் காருக்கு G63 -ன் மிகச் சிறப்பான தோற்றத்தை கொடுக்கின்றன. ஆனால் இதற்கு ரூ 12 லட்சம் வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால் ஒரே நேரத்தில் மிரட்டலாகவும் ஃபன் நிறைந்த ஒன்றாகவும் தோன்ற வைக்க என்ன செய்வது? காப்பர் ஆரஞ்சு மேங்கோ கலர் ஆப்ஷன் மூலம் மெர்சிடிஸ் அதை செய்துள்ளது. இப்படி ஒரு தனித்துவமான கலர் ஆப்ஷனுக்கு இது ஒரு வித்தியாசமான பெயர்.
கேபினில் நிறைய விஷயங்கள் உள்ளன
G63 -க்கு உள்ளே நுழையும் போது உங்கள் கண்கள் ஒரே நேரத்தில் பார்க்க முடியாத அளவுக்கு நிறைய விஷயங்கள் இருப்பதை கவனிக்க முடியும். ஆஃப்-ரோடர் என்பதால் இது ஒரு சிறிய டேஷ்போர்டை கொண்டுள்ளது. விண்ட்ஷீல்டை நோக்கி உள்ள டேஷ்போர்டு முழுக்க சாஃப்ட் டச் லெதர் பேடிங்கால் கொடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் பக்கத்தில் ஒரு கிராப் ஹேண்டிலும் உள்ளது. ஆனால் டிரைவரின் பக்கத்தில் எதுவும் இல்லை. இது காருக்கு உள்ளே நுழைவதையும், வெளியேறுவதையும் சற்று கடினமாக்குகிறது.
சென்டர் கன்சோல் உட்பட டேஷ்போர்டில் நிறையவே சில்வர் ஆக்ஸென்ட்கள் உள்ளன. மேலும் மெர்சிடிஸ் கார்பன் ஃபைபர் டிரிம்களை கிட்டத்தட்ட ஒவ்வொரு இடத்திலும் கொடுக்கிறது. (கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும்). நீங்கள் ஒரு காருக்கு ரூ. 4 கோடி ரூபாய்க்கு சிறந்த தரம் மற்றும் பொருட்கள் உள்ளன. கேபினில் உள்ள அனைத்துமே மென்மையாகவும் தொடுவதற்கு அழகாகவும் இருக்கும். ஆனால் அதே கேபினில் உள்ள பொருட்கள் அதன் ஆஃப்-ரோடு இயல்பை காட்டும் வகையில் முரட்டுத்தனமான தன்மையை கொண்டுள்ளன.
இருக்கைகள் அனைத்து அளவு உள்ளவர்களுக்கு நல்ல சப்போர்ட்டை வழங்குகின்றன. மேலும் ஹெட்ரெஸ்ட்களுடன் மென்மையான குஷனிங் வசதியை கொடுக்கின்றன. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால் காரின் ADAS ஆனது மோதலைக் கண்டறியும்போதோ அல்லது எதிர்நோக்கும் போது அப்படி எதுவும் நடக்கவில்லை என்றாலும் சீட்பெல்ட்கள் திடீரென இறுகும். இது பெரும்பாலான நேரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு இது பிடிக்கவில்லை என்றால் ஆஃப் செய்து வைக்கலாம்.
முன் இருக்கைகளில் மசாஜ் ஃபங்ஷன் வசதி உள்ளது. டிரைவர் மற்றும் கோ டிரைவருக்கு குளிர் மற்றும் வெப்பம் என 8 வகையான மசாஜ் மோடுகள் உள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு 15 நிமிடங்கள் காரில் உட்கார்ந்து மசாஜ் செய்வது மிகவும் நிதானமாக இருக்கும். இது தவிர முன் இருக்கைகள் இருக்கை ஹீட்டிங் மற்றும் வென்டிலேஷன் ஆகியவற்றைப் பெறுகின்றன.
பின்புற இருக்கைகள் முன்புற இருக்கைகளை போலவே அதே அளவிலான வசதியையும் இடத்தையும் கொண்டுள்ளன. பின்புற பொழுதுபோக்குக்குக்காக இரண்டு ஸ்கிரீன்களும் ஆப்ஷனலாக கிடைக்கும். வெளிப்புற பயணிகளுக்கு போதுமான அளவு இடவசதி கிடைக்கிறது. ஆனால் நடுத்தர பயணிக்கும் இடவசதி சிறப்பாக இருக்கும் என சொல்ல முடியாது. நடு இருக்கை சற்று வெளிப்புறமாக இருப்பதாலும், அது தாழ்வாக இருப்பதாலும் நடுவில் உள்ளவர்கள் சற்று நிமிர்ந்து அமர்ந்து நிலையில் இருக்க வேண்டியியிருக்கும்.
பின் இருக்கைகளில் சரியான அளவு வசதி இருந்தாலும் அவை ஹீட்டட் ஃபங்ஷனை மட்டுமே பெறுகின்றன. இந்த வசதி இந்தியாவுக்கு அரிதாகவே பயன்படும் என்றாலும் பிரகாசமான வெயில் நாட்களுக்கு எலக்ட்ரிக் சன்ஷேடு கொடுக்கப்பட்டுள்ளது.
தேவைக்கு அதிகமாகவே வசதிகள் உள்ளன ?
வென்டிலேஷன், ஹீட்டிங் மற்றும் மசாஜ் செயல்பாடுகளுடன் கூடிய முன் இருக்கைகளைத் தவிர இதில் 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஒன்றும் உள்ளது. இது இப்போது டச் ஸ்கிரீன்களுடன் வருகிறது (முன்-பேஸ்லிஃப்ட் பதிப்பின் திரையில் டச் கன்ட்ரோல்கள் எதுவும் இல்லை). இந்த திரையை ஸ்டீயரிங் வீல் மூலமாகவும் கட்டுப்படுத்த முடியும். மேலும் சென்டர் கன்சோலில் டச் பேட் உள்ளது.
இது 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், சிங்கிள் பேனல் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் நீங்கள் இசையை நேசிப்பவர் என்றால் 18-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் 3D சவுண்ட் சிஸ்டத்தை விரும்புவீர்கள்.
பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்குகள், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் உடன் கூடிய 360 டிகிரி கேமரா மற்றும் லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற பல ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) போன்ற வசதிகள் உள்ளன.
இது ஒரு சிறப்பான ஆஃப்-ரோடர்
G63 ஆனது சராசரி அளவிலான க்ளோவ்பாக்ஸ், சென்டர் கன்சோலில் இரண்டு கூல்டு மற்றும் ஹீட் கப்ஹோல்டர்கள், பின்புற சென்டர் ஆர்ம்ரெஸ்டில் இரண்டு மற்றும் அனைத்து டோர்களிலும் 1-லிட்டர் பாட்டில் ஹோல்டர்கள் என அடிப்படையான கேபின் விஷயங்களை கொண்டுள்ளது. இது முன் ஆர்ம்ரெஸ்டில் ஸ்டோரேஜையும், உங்கள் ஃபோன் அல்லது சாவிகளுக்கான சென்டர் கன்சோலில் இடத்தையும் பெறுகிறது.
வயர்லெஸ் ஃபோன் சார்ஜரை தவிர இது நான்கு டைப்-சி சார்ஜிங் போர்ட்களை முன்பக்கத்திலும், இரண்டு பின்புறத்திலும் பெறுகிறது.
G63 -யின் நடைமுறை பற்றி பார்க்கும் போது பூட் பகுதியை குறிப்பிட்டே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் பூட் மிகப்பெரியது மேலும் நீங்கள் எல்லா வகையான பொருட்களையும் இங்கே வைக்கலாம். அது பெரிய சூட்கேஸ்கள் அல்லது பல சிறிய பைகள் எதுவாக இருந்தாலும் இதில் கிடைக்கும் இடம் உங்களுக்குத் தேவையானதை விட அதிகமாகவே இருக்கும்.
மேலும் இது சொகுசு நிறுவனத்தின் கார் என்பதால் பூட் பகுதியில் கூட எல்லா இடங்களிலும் பிரீமியம் இருக்க வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். பூட் பகுதியில் ஒரு பிளாக் ரப்பர் மேட் உள்ளது. அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் பளபளப்பான மர தளத்துடன் இதை அலங்கரிக்கலாம். ஆனால் அதற்கு கொஞ்சம் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
AG வேகனில் V8 டர்போ இன்ஜின்
எஸ்யூவி -கள் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் ஆனால் V8 டர்போ இன்ஜின் அதிசக்தி வாய்ந்த ஒன்று. இது 585 PS மற்றும் 950 Nm அவுட்புட்டை கொடுக்கக்கூடியது. குறைந்த வேகத்தில் ஓட்டுவதற்கே கவனமாக இருக்க வேண்டியிருக்கும். G63 AMG-ல் உள்ள இந்த அதிக சக்தி கொண்ட இன்ஜின் ஜெட் விமானத்தின் இன்ஜினை கொண்ட டிரக் போல உணர இதை வைக்கிறது. நீங்கள் ஆக்ஸிலரேட்டரை அழுத்தியவுடன் காரின் முன்பக்கம் எகிறும் அந்த ஒரு நொடியில் கார் புறப்படப் தயாராக உள்ளதை நீங்கள் உணர்வீர்கள்.
ஸ்போர்ட்ஸ்+ மோடிலும் கார் அப்படியே இருக்கிறது. உண்மையில் நீங்கள் புறப்படலாம். ஆனால் G63 -ல் இதன் பவரை விட நாங்கள் தனிப்பட்ட முறையில் விரும்பிய ஒன்று எக்ஸாஸ்ட் சத்தம். ஒரு கார் ஆர்வலருக்கு இது பீத்தோவன் இசையை போல் தெரிகிறது. ஸ்போர்ட்டி மோடில் சத்தம் இன்னும் சிறப்பாக இருக்கும். காட்டின் ராஜா வரப்போகிறார் என்ப்தை காட்டும் வகையில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை போல உள்ளது.
மெர்சிடிஸ் G63 -யை லாஞ்ச் மோடு உடன் வழங்குகிறது. இது ஆஃப்-ரோடரில் நீங்கள் எதிர்பார்க்காத ஒன்று. மேலும் கார் என்ன திறன் கொண்டது என்பதைப் பார்க்க விரும்புவோருக்கு இது ஒரு அற்புதமான கூடுதலான விஷயம் ஆகும்.
இன்னும் கொஞ்சம் கம்போர்ட் இருந்திருக்கலாம்
இது ஒரு எஸ்யூவி வடிவமைப்பில் வருவதால் கொஞ்சம் பாடி ரோல் உள்ளது. மற்றும் G வேகன் கூட அதை சமாளிக்க வேண்டும். இப்போது சவாரி வசதிக்கு வருவோம். கம்ஃபோர்ட் மோடில் வாகனம் ஓட்டும் போது சஸ்பென்ஷன்கள் மென்மையான உள்ளன. இது மேடுகளை சிறப்பான சமாளிக்க உதவுகிறது.
இருப்பினும் நீங்கள் ஸ்போர்ட்டியர் மோடுகளுக்கு சென்றவுடன் சஸ்பென்ஷன்கள் கடினமாக உள்ளன. சாலைகளில் சிறிய விரிசல்கள் கூட உள்ளே தெரிகின்றன. ஆனால் இது அதிகமாக தெரிவதில்லை என்றாலும் கூட கொஞ்சம் இடைஞ்சலை ஏற்படுத்தலாம்.
கையாளுதலில் புகார் கூற எதுவும் இல்லை. இவ்வளவு பெரிய பாக்ஸி எஸ்யூவி -யாக இருந்தாலும் கூட திருப்பங்களிளும் இது நிலையான உணர்வை கொடுக்கிறது. மேலும் அதிவேகத்திலும் நிலைத்தன்மை சிறப்பாக உள்ளது.
தீர்ப்பு ! உண்மையில் இதற்கு தேவைப்படும் ஒன்றா ?
Mercedes-AMG G63 போன்ற ஒரு காருக்கு உண்மையில் தீர்ப்பு தேவையில்லை. காரணம் இதற்கு எந்த ஒரு போட்டியும் இல்லை. இருப்பினும் அப்படி ஒன்றைக் கொடுக்க முயற்சிக்கிறோம். நீங்கள் அதிக அளவு பணத்தை செலவழிக்கும்போது, ஆடம்பரத்தின் அடிப்படையில் உங்களுக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்குமல்லவா ? அதை ஏமாற்றாமல் G63 வழங்குகிறது. நீங்கள் செயல்திறனிலும் ஏமாற்றவில்லை, இவை அனைத்துக்கும் மேலாக ஒரு சிங்கத்தை போல தோற்றமளிக்கும் கார் உங்களுக்கு கிடைக்கும். G63 -யால் எந்த ஒரு நிலப்பரப்பையும் ச்மாளிக்க முடியும்.
ஒரு காரில் எல்லாவற்றின் கலவையும் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் G63 AMG ஒரு சரியான தேர்வாக இருக்கும். இது கேரேஜில் நிறுத்தி வைக்கக்கூடிய ஒன்று அல்ல. நீங்கள் ஆஃப்-ரோடிங்கிற்கு செல்ல விரும்பவில்லை என்றால். இதே விலையில் மற்ற பிராண்டுகளிலிருந்து சொகுசு எஸ்யூவிகளை வாங்கலாம். இது உங்கள் வழக்கமான நகரம் மற்றும் நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு ஏற்ற ஒன்றாக இருக்கும்.
மாறாக நீங்கள் G63 -யை வாங்க முடிவு செய்தால் அதை அதன் முழுத் திறனுக்கும் பயன்படுத்துங்கள். ஏனென்றால் G63 எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அதை செய்யத் தகுதியானது.