Mahindra XUV400 விமர்சனம்: ஒரு விவேகமான EV, ஆனால் எல்லாம் சரியானதாக உள்ளதா ?
Published On நவ 25, 2024 By ujjawall for மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி
- 5.3K Views
- Write a comment
போதுமான செயல்திறன், வசதிகள், இட வசதி, மற்றும் நிறைவான இதர வசதிகள் உடன் XUV400 உங்கள் குடும்பத்துக்கான தனி வாகனமாக இது இருக்க தகுதியானதுதான். ஆனால் ஒரு எச்சரிக்கை உள்ளது.
மஹிந்திரா XUV400 3XO (முன்பு 300 என அறியப்பட்டது) சப்-4m எஸ்யூவி -ன் ஆல்-எலக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். ரூ.15.48 லட்சம் முதல் ரூ.19.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலையில் இதன் ஒரே நேரடி போட்டியாளராக டாடா நெக்ஸான் EV உள்ளது.
இதை அப்டேட்டட் ஆக வைத்திருக்க மஹிந்திரா 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய EL வேரியன்ட்களில் சில அப்டேட்களை கொடுத்தது. இதனால் இந்த காரில் புதிய வசதிகள் மற்றும் புதிய கேபின் கிடைத்தது. ஆனால் இதன் போட்டியாளரை விட XUV400 காரை நீங்கள் தேர்வு செய்ய இந்த கூடுதலான புதிய வசதிகள் போதுமானதா இருக்குமா ? இந்த விரிவான ரோடு டெஸ்ட் ரிவ்யூ -வில் கண்டுபிடிப்போம்:
சாவி
XUV400 -ன் சாவியானது மற்ற மஹிந்திரா எஸ்யூவி -களில் இருந்து வேறுபட்டதல்ல. இது ஒரு பெரிய செவ்வகமாகும் ஆனால் சில்வர் இன்செர்ட்களுக்கு பதிலாக XUV400 சில காப்பர் எலமென்ட்கள் உள்ளன. இது ஒரு நல்ல வித்தியாசத்தை கொடுக்கிறது. இதன் எடை நன்றாகவே உள்ளது. சாவியில் பூட் -டை திறப்பதற்காக ஒன்று மற்றும் மேலும் 3 பட்டன்கள் உள்ளன. நீங்கள் ரெக்வென்ஸ்ட் சென்சார் மூலம் காரைப் லாக்/அன்லாக் செய்யலாம். ஆனால் அது டிரைவர் பக்கத்தில் இருந்தால் மட்டுமே கிடைக்கும். கூடுதலாக ஃபோன் மூலம் கனெக்டட் கார் டெக்னாலஜியை பயன்படுத்தி தொலைவிலிருந்து காரை லாக்/அன்லாக் செய்யலாம்.
வடிவமைப்பு
XUV400 -ன் வெளிப்புற ஸ்டைலிங்கில் பெரிய மாற்றம் இல்லை. பழைய காரை போலவே உள்ளது. மேலும் XUV300 காரை அடிப்படையாகக் கொண்டாலும் XUV400 -ன் ஸ்டைலிங் அதற்கென தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளது. இது அதன் ICE உடன்பிறப்புகளிடமிருந்து முரட்டுத்தனமான தோற்றத்தை பெற்றுள்ளது. ஆனால் இப்போது காப்பர் இன்செர்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை மிகச் சிறப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு XUV400 தனித்து நிற்க உதவுகிறது. குறிப்பாக அதன் வொயிட் மற்றும் பிளாக் எக்ஸ்ட்டீரியர் கலர்களில் நன்றாக இருக்கிறது.
முன்புறம் மிகவும் நவீனமாகத் தெரியவில்லை ஆனால் அதன் வழக்கமான ஸ்டைலிங் சில பிரீமியம் எலமென்ட்கள் நேர்த்தியான LED DRL -கள் போன்றவை உள்ளன. ஆனால் அவை புதுமையாக தெரிகின்றன. குறிப்பாக அவற்றின் கீழே பவர்டு எக்ஸ்டென்டர் காப்பர் ஸ்ட்ரிப் உடன் உள்ளன. ஆனால் ஹெட்லைட்டுகளின் வடிவமைப்பு அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. அவர்கள் சற்று பழமையானதாக இருப்பது மட்டுமின்றி ஹாலோஜன் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்களும் உள்ளன.
மஸ்குலர் ஃபெண்டர்கள் மற்றும் கிளாடிங் ஆகிய விஷயங்களில் முரட்டுத்தனமான தோற்றத்தை அப்படியே தக்க வைக்கிறது. ஆனால் இது XUV400 -ன் பின்புறம் தான் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது மிகவும் பெரிதாக தோற்றமளிக்கிறது. பம்பர் மிகப்பெரியது மற்றும் டெயில்லைட்கள் அவற்றில் சுவாரஸ்யமான LED எலமென்ட்களை கொண்டுள்ளன.
3XO க்கு அப்டேட் கொடுக்கப்பட்டாலும் கூட XUV400 -ன் ஒட்டுமொத்த ஸ்டைலிங் பழமையானதாக தெரியவில்லை. ஆனால் இங்கு நவீனமான அல்லது மிக பிரீமியமான வடிவமைப்பு எலமென்ட்கள் எதுவும் இல்லை. ஆனால் பெரும்பாலான மக்கள் XUV400 காரின் வழக்கமான ஸ்டைலிங்கை விரும்பக்கூடும்.
பூட் ஸ்பேஸ்
XUV400 -ன் முக்கிய போட்டியாளரை விடவும் மற்றும் 3XO -யை விடவும் அதன் பூட் ஸ்பேஸின் நன்மைகளில் ஒன்று. நீளமான பின்புறத்தில் 378 லிட்டர் இடம் உள்ளது. இது மிகப்பெரியது மட்டுமல்ல பூட் பெரியது மற்றும் பரப்பளவு அகலமானது எனவே சிறிய நடுத்தர மற்றும் பெரிய சூட்கேஸை உள்ளடக்கி வைக்கும் அளவுக்கு ஒரு முழு சூட்கேஸ் இந்த பகுதியில் எளிதில் வைக்க முடியும். மேலும் கூடுதலாக ஒரு டஃபிள் அல்லது இரண்டு லேப்டாப் பைகளை வைக்க இடம் கிடைக்கும்.
கூடுதலாக பின்புற இருக்கைகளை 60:40 ஆக ஃபோல்டு செய்ய முடியும். இதன் மூலமாக அதிக அல்லது நீண்ட பொருட்களை வைக்க உங்களுக்கு இடம் கிடைக்கும். இருப்பினும் இருக்கைகள் சற்று உயர்த்தப்பட்டிருப்பதால் ஃபுளோர் ஃபிளாட் ஆக இல்லை. ஆனால் மஹிந்திரா இன்னும் பார்சல் ட்ரேயை இங்கு கொடுக்கவில்லை.
இன்ட்டீரியர்
அதன் லேட்டஸ்ட் அப்டேட் உடன் மஹிந்திரா இறுதியாக XUV400 -க்கு முதலில் தகுதியான உட்புறத்தை வழங்கியது. டூயல் டோன் தீம் இடத்தின் உணர்வை உருவாக்கும் ஒரு நல்ல இடமாக இருக்கிறது - அதில் எந்தப் பற்றாக்குறையும் இல்லை.
வெளிப்புறத்தைப் போலவே ஸ்டைலிங்கும் நவீனமானது அல்ல மாறாக வழக்கமானதாகவே உள்ளது. ஆனால் எளிமையான வடிவமைப்பு இருந்தபோதிலும் இது பிரீமியமாகத் தெரிகிறது. பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் ஆனது பெரிய டாஷ்போர்டில் மையமாக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே காப்பர் இன்செர்ட்கள் உள்ளன. இது பியானோ பிளாக் எலமென்ட்களுடன் சேர்ந்து பிரீமியம் தோற்றத்தை அதிகரிக்கிறது. ஆனால் அதன் காரணமாகவே தூசி மற்றும் கீறல்கள் எளிதில் விழலாம். எனவே துடைப்பதற்கு கையில் ஒரு துணியை வைத்திருங்கள்!
சென்ட்ரல் ஏசி கன்ட்ரோல் யூனிட்டில் பெரிய சில பட்டன்கள் மற்றும் டயல்கள் இருந்தாலும் ஏசி கன்ட்ரோல்களுக்கான டிஸ்ப்ளே மெலிதானது மற்றும் பழைய தோற்றத்தையே கொண்டுள்ளது போல் தெரிகிறது. மஹிந்திரா இரண்டு டெம்பரேச்சர் மற்றும் ஃபேன் வேகத்தை கட்டுப்படுவதற்கான கன்ட்ரோல்களுடன் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்களை வழங்கியிருக்கலாம். இது கேபினை நவீனமாகவும் அதிக பிரீமியமாகவும் மாற்றியிருக்கும்..
கேபின் தரம் சிறப்பாக இருக்கும் என்றாலும் பெரிய புகார்கள் ஏதுமின்றி சரியாக உள்ளது. ஃபிட் அண்ட் ஃபினிஷ் நன்றாக இருக்கிறது லெதரெட் இருக்கைகள் உள்ளன. மேலும் சென்ட்ரல் மற்றும் டோர் ஆர்ம்ரெஸ்ட்களில் சாஃப்ட் டச் பொருட்களையும் பெறுவீர்கள். ஆனால் மீதமுள்ள கேபினில் பிளாஸ்டிக் எலமென்ட்கள் மட்டுமே உள்ளன. இது கடினமானது கீறல் விழக்கூடிய பிளாஸ்டிக் அல்ல ஆனால் இதே பிளாட்ஃபார்ம் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் 3XO -ன் டாஷ்போர்டு மற்றும் டோர் பேட்களில் சாஃப்ட்-டச் பொருட்களை வழங்குவதால் அதே போல மெட்டீரியலை இங்கேயும் கொடுத்திருக்கலாம்.
இது லெதரெட் இருக்கைகளை கொண்டுள்ளது, இது தொடுவதற்கு நன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் குறுகிய மற்றும் நீண்ட பயணங்களில் மிகவும் வசதியாக இருக்கும். அவற்றின் குஷனிங் மென்மையான பக்கத்தில் உள்ளது மேலும் பெரிய பக்க வரையறைகளிலிருந்தும் நல்ல சப்போர்ட் கிடைக்கும். மேனுவலாக சீட் ஹெயிட் அட்ஜெஸ்ட்மென்ட் காரில் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளது டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் அட்ஜெஸ்ட்மென்ட்டை தவிர்த்துவிட்டாலும் கூட வசதியான ஓட்டுநர் நிலையைக் கண்டறிவது எளிதானதாக உள்ளது.
எனவே XUV400 முன்பக்க பயணிகளுக்கு இடம் மற்றும் வசதியை வழங்குவது மட்டுமின்றி ஸ்டோரேஜ் இடங்களுக்கும் பஞ்சமில்லை.
நடைமுறை தன்மை
பெரும்பாலான கார்கள் நான்கு கதவுகளிலும் வழக்கமான 1 லிட்டர் பாட்டில் பாக்கெட்டுகளைப் கொண்டுள்ளன. ஆனால் XUV400 ஒரு படி மேலே சென்று முன்பக்க பயணிகளுக்கு ஒவ்வொரு கதவிலும் இரண்டு பாட்டில் ஸ்லாட்கள் உள்ளன. உங்கள் காபி கோப்பைகளை சென்ட்ரல் டனலில் உள்ள உள்ள இரண்டு கப் ஹோல்டர்களில் வைக்கலாம். அதற்கு மேலே ஆர்ம்ரெஸ்டின் கீழ் ஒரு சராசரி அளவிலான ஓபனிங் ஒன்று உள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் பேட் பயன்பாட்டில் இல்லாதபோது வாலட் மற்றும் சாவிகளை வைத்திருக்க இதை பயன்படுத்தலாம். மேலும் கூரையில் பொருத்தப்பட்ட சன்கிளாஸ் ஹோல்டரும் உள்ளது.
க்ளோவ் பாக்ஸ் -ம் உள்ளது மற்றும் வாகன ஆவணங்களுடன் உங்களது பொருள்களை சேமிக்க முடியும். பின்புறம் நகர்ந்தால் பின்புற ஏசி வென்ட்களுக்குக் கீழே ஃபோன் ஸ்டோரேஜ் பகுதியும் சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்டில் இரண்டு கப் ஹோல்டர்களும் உள்ளன. முன்பக்கத்தில் இரண்டு USB போர்ட்கள் உள்ளன. அதே சமயம் பின்பக்கத்தில் இருப்பவர்களுக்கு டைப்-சி போர்ட்டுடன் 12V சாக்கெட் வசதியும் உள்ளது.
இந்த அப்டேட்களுக்கு முன் XUV400 பயணிகள் பக்க டாஷ்போர்டில் ஒரு ஓபன் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது அது நீக்கப்பட்டுள்ளது. இது சாவிகள் போன்ற இலகுவான பொருட்களை சேமித்து வைப்பதற்கு பயனுள்ளதாக இருந்தது. இந்த இடம் இன்னும் இருந்தால் XUV400 -ன் நடைமுறை இன்னும் முழுமையாக இருந்திருக்கும்.
வசதிகள்
இப்போது XUV400 ஆனது புதிய கேபின் வடிவமைப்புடன் ஏராளமான புதிய வசதிகளைப் பெற்றுள்ளது இதில் சில பிரீமியம் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஹைலைட்ஸில் டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆகியவையும் உள்ளன.
புதிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் XUV700 -ன் அதே இன்டர்ஃபேஸில் இயங்குகிறது. இது பயன்படுத்த எளிதானது எந்த தாமதமும் இல்லை மேலும் சாஃப்ட் கிராபிக்ஸ் உள்ளது. முக்கிய மெனுக்களுக்கு இடையில் மாறுவது எளிதானது. இது இன்னும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இது கொண்டிருக்கவில்லை. இது விற்பனைக்கு வந்ததில் இருந்து OTA அப்டேட்டுக்காக அதன் ஒருங்கிணைப்புக்காகக் காத்திருக்கிறது. மஹிந்திரா சீக்கிரம் அப்டேட்டை கொடுக்கவும்!
டிரைவரின் டிஸ்ப்ளேவும் நேர்த்தியான கிராபிக்ஸ் மூலம் பிரீமியம் ஆக இருக்கிறது. இது பயண விவரங்கள் முதல் டயர் காற்று அழுத்த புள்ளிவிவரங்கள் வரை பல விதமான தகவல்களை வெளியிடுகிறது - இவை அனைத்தும் சில மெனுக்களை ஸ்க்ரோலிங் செய்தால் பார்க்கும் வகையில் உள்ளன. அவற்றின் வழியாக நேவிகேஷனை இயக்குவதில் முதலில் குழப்பமாக இருக்கலாம்.
டிரைவர் டிஸ்பிளேவுக்கான மற்றொரு சிறப்பம்சமாக இங்கே நேரடியாகக் காட்டப்படும் நேவிகேஷன் ஃபீடு ஆகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது மஹிந்திராவின் சொந்த நேவிகேஷன் மட்டுமே கிடைக்கும். கூகிள் அல்லது ஆப்பிள் வரைபடத்தில் கிடைக்காது.
XUV400 பல புதிய வசதிகளைப் பெற்ற போதிலும் அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் அது உபகரணங்களை கொடுக்க தவறியுள்ளது, மற்றும் பட்டியலில் பிராண்டட் ஆடியோ சிஸ்டம் வென்டிலேட்டட் சீட்கள், 360 டிகிரி கேமரா மற்றும் வெஹிகிள் லோடிங் தொழில்டெக்னாலஜி ஆகியவை அடங்கும். XUV400 ஐ விட சிறிய 3XO அதிக உபகரணங்களை வழங்குகிறது என்பதை நீங்கள் உணர்ந்தால் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக உணர வைக்கலாம்.
நிச்சயமாக இந்த வசதிகளில் சிலவற்றைக் கொண்டிருக்கவில்லை என்றால் நீங்கள் தவறிவிட்டீர்கள் அல்லது சமரசம் செய்கிறீர்கள் என்று அர்த்தமல்ல ஆனால் வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை நீங்கள் நிச்சயமாகப் பாராட்டியிருப்பீர்கள். 3XO மற்றும் XUV400 ஆகியவை அவற்றின் கேபினில் நிறைய ஒற்றுமைகளைப் பகிர்ந்துகொள்வதால் மஹிந்திரா இந்த வசதிகளை ஃபேஸ்லிஃப்ட்டின் ஒரு பகுதியாக விரைவில் சேர்க்க வாய்ப்புள்ளது. 4XO -ன் விடிவு காலம் எப்போது வரும்? காத்திருப்போம்.
பாதுகாப்பு
XUV400 காரை இதுவரை எந்த அமைப்பாலும் கிராஷ் டெஸ்ட் -க்கு உட்படுத்தப்படவில்லை. ஆனால் இது XUV300 காரை அடிப்படையாகக் கொண்டது. இது குளோபல் NCAP ஆல் முழுமையான 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. வசதிகளைப் பொறுத்தவரை XUV400 ஆனது டூயல் ஏர்பேக்குகள் ISOFIX மவுண்ட்கள் அனைத்து நான்கு டிஸ்க் பிரேக்குகள் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் EBD உடன் ABS ஆகியவற்றை ஸ்டாண்டர்டான வசதிகளாக பெறுகிறது.
டாப்-ஸ்பெக் டிரிம் கூடுதலாக 6 ஏர்பேக்குகள், வைப்பர் மற்றும் வாஷருடன் கூடிய பின்புற டிஃபோகர், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ரியர் வியூ கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது. இருப்பினும் ஃபீடின் தரம் சிறப்பாக இல்லை. நேவிகேஷனும் ரியர் வியூ கேமராவின் செயல்பாடு சிறப்பாக இருந்திருக்கலாம். பிந்தையது OTA அப்டேட் மூலம் சேர்க்கப்படும் என்று மஹிந்திரா கூறியுள்ளது.
பின் இருக்கை அனுபவம்
XUV400 -ன் பின்புற இருக்கை அனுபவம் இந்த பிரிவில் சிறந்ததாக உள்ளது. முன் இருக்கைகளைப் போலவே பின் பெஞ்ச் சமநிலையான குஷனிங் மற்றும் சப்போர்ட்டை கொடுக்கிறது. இது நீண்ட தூர பயணங்களில் வசதியான இடமாக அமைகிறது. கேபின் அகலமாகவும் தளம் தட்டையாகவும் பின்புறம் தட்டையாகவும் இருப்பதால் மூன்று தாராளமாக இங்கே உட்காரலாம். நிச்சயமாக அவர்களின் தோள்கள் எப்போதும் சிறிது இடித்துக் கொள்ளலாம். உண்மையில் நடுத்தர பயணிகளும் ஹெட்ரெஸ்ட் -ம் உள்ளன. எனவே நீண்ட தூர பயணங்களில் பயணிகளுக்கு எந்த சிக்கல்களும் இருக்காது.
சராசரி அளவிலான பெரியவர்கள் முழங்கால் மற்றும் ஹெட்ரூம் பற்றி எந்த குறையும் சொல்ல மாட்டார்கள். ஆனால் ஆம் உங்கள் கால்களை நீட்டுவதற்கான கேபின் இடம் கொஞ்சம் தடைபடுகிறது. அதற்குக் காரணம் நீங்கள் சற்று முழங்காலை உயர்த்திய நிலையில் அமர்ந்திருப்பதாலும் உயரமான பெரியவர்கள் (6 அடிக்கு கூடுதல்) அமர்வதால் இங்கு சிறிது அசௌகரியத்தை உணரலாம்.
ஆனால் XUV400 -ன் பின் இருக்கைகளில் யாரும் தடையாக உணர மாட்டார்கள். கேபின் ஏற்கனவே விசாலமானது மற்றும் தெளிவான காட்சியை வழங்கும் பெரிய ஜன்னல்களும் உள்ளன. எனவே நீங்கள் அதை ஓட்டுநர் இயக்கும் வாகனமாகப் பார்த்தாலும் அல்லது உங்கள் வயதான பெற்றோருக்கு வசதியாக இருக்கும் வாகனமாக இருக்கும். XUV400 உங்களை இந்த விஷயத்தில் ஏமாற்றாது.
ஓட்டும் அனுபவம்
வேரியன்ட் |
EC புரோ |
புரோ |
பேட்டரி பேக் |
34.5 kWh |
34.5 kWh அல்லது 39.5 kWh |
அவுட்புட் |
150 PS/310 Nm |
|
கிளைம்டு ரேஞ்ச் |
375 கி.மீ |
375 கி.மீ முதல் 456 கி.மீ வரை |
சார்ஜிங் ஆப்ஷன் |
3.3கிலோவாட் |
3.3kW அல்லது 7.2kW |
XUV400 -ஐ ஓட்டுவது மிகவும் இனிமையான அனுபவமாகும். அதன் எலக்ட்ரிக் இயல்பு கொஞ்சம் தெரிந்தாலும் கூட அல்லது தொடக்க நிலை டிரைவர்கள் அதற்கு ஏற்ப நேரத்தை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சலுகையில் 3 டிரைவிங் மோடுகள் உள்ளன - ஃபன், ஸ்பீடு மற்றும் ஃபியர்லெஸ் - மற்றும் நீங்கள் எந்த டிரைவ் மோடில் இருந்தாலும் செயல்திறன் குறைபாட்டை நீங்கள் உணர மாட்டீர்கள்.
எலக்ட்ரிக் கார் என்பதால் ரெஸ்பான்ஸ் உடனடியாக வழங்கப்படுகிறது இது நகரம் மற்றும் நெடுஞ்சாலை இரண்டிலும் மிக எளிதாக முந்துவதற்கு உதவுகிறது. ஆக்ஸிலரேஷன் விரைவானது ஆனால் த்ராட்டில் அளவு சீராக இருப்பதால் எந்த பயமும் இல்லை. எனவே நீங்கள் த்ராட்டில் அதிகரிக்கும் போது XUV400 சீராக வேகத்தை கொடுக்கிறது மற்றும் பதற்றத்தை உணர வைக்காது.
3 டிரைவிங் மோடுகளுக்கு இடையில் அதன் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் மற்றும் ஸ்டீயரிங் வெயிட் ஆகியவற்றுக்கு இடையே மாற்றத்தை உணர்வீர்கள். ஃபன் மோடில் நார்மல் இகோ மோடுக்கு சமமானது இதில் கார் மிகவும் சீராக வேகத்தை கொடுக்கும். இது நிதானமான நகரம் மற்றும் நெடுஞ்சாலை ஓட்டுவதற்கு போதுமானது. த்ராட்டில் ஷார்ப்பானதாக இருக்க வேண்டுமெனில் தேவைப்பட்டால் ஸ்பீடு அல்லது ஃபியர்லெஸ் மோடுக்கு மாறலாம்.
இது போன்ற கார்கள் மிக விரைவாக வேகமெடுக்கக்கூடியவை. அது இன்னும் மென்மையாகவும் நேராகவும் இருக்கும் போது EV -ன் உடனடி டார்க்கை பயன்படுத்தாத புதிய ஓட்டுநருக்கு இது கொஞ்சம் புதிதாக இருக்கும். ஆனால் புதிய டிரைவர்கள் கூட XUV400 -ன் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்குடன் பழகுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.
இது 3 மோடுகளுக்கு இடையில் சிறிது மாறுபடுகிறது மற்றும் தீவிரம் வாகனத்தின் வேகத்தைப் பொறுத்தது. ஆனால் அது எல்லா நேரங்களிலும் இயல்பான உணர்வையே கொடுக்கிறது. நீங்கள் கூடுதலாக சிங்கிள்-பெடல் டிரைவ் மோடும் உள்ளது. மிகவும் ஸ்ட்ராங்கான ரீஜென் மற்றும் காரை முழுவதும் ஸ்தம்பிக்க வைக்கும். பம்பர் டூ பம்பர் டிராஃபிக்கில் நீங்கள் நிச்சயமாக பாராட்டக்கூடிய ஒன்றாக இது இருக்கும்.
பாராட்ட வேண்டிய மற்றொரு விஷயம் XUV400 கொடுக்கும் ரேஞ்ச். மஹிந்திரா 456 கி.மீ என்று என்கிறது. ஆனால் நாங்கள் எஸ்யூவி -யை 100% முதல் 0% வரை சோதித்து அதன் நிஜ உலக ரேஞ்ச் சரியாக 290 கி.மீ என்று கண்டறிந்துள்ளோம்.
அதை அப்படியே தக்க வைக்க நீங்கள் தினசரி சுமார் 40 கி.மீ ஓட்டினால் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வாகனத்தை சார்ஜ் செய்ய வேண்டும். 290 கிமீ நிஜ உலக வரம்புடன் நீங்கள் நகர எல்லைகளுக்கு அப்பால் இந்த காரை எடுத்துச் செல்லலாம். மற்றும் டெல்லி-ஜெய்ப்பூர் அல்லது மும்பை-புனே போன்ற நகரங்களுக்கு இடையேயான பயணங்களை எளிதாகச் மேற்கொள்ளலாம். நீங்கள் சேருமிடத்தில் சார்ஜர் இருந்தால் மட்டுமே.
சதவீதம் மற்றும் சார்ஜிங் வேகம் |
நேரம் |
0-100% 3.3kW AC ஐப் பயன்படுத்துகிறது |
13.5 மணி நேரம் |
0-100% 7.2kW AC ஐப் பயன்படுத்துகிறது |
6.5 மணி நேரம் |
0-80% 50kW DC ஐப் பயன்படுத்துகிறது |
50 நிமிடங்கள் |
உண்மையில் நீங்கள் முன்கூட்டியே திட்டமிட விரும்பவில்லை என்றால் XUV400 உடன் 50kW வரை ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும் திறன் இருப்பதால். தாராளமாக நீண்ட சாலைப் பயணங்களைச் மேற்கொள்ளலாம். DC ஃபாஸ்ட் சார்ஜர் XUV400 -ன் பேட்டரியை 0-80% வரை சார்ஜ் செய்ய 50 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும். எனவே நீங்கள் சிறிது நீட்டிப்பதற்காக மற்றும் சிற்றுண்டி சாப்பிடுவதை நிறுத்தும்போது உங்கள் காரும் விரைவாக சார்ஜ் ஆகும்.
உங்கள் வழக்கமான நகரப் பயணங்களுக்கு அப்பால் XUV400 நிச்சயமாக சாலைப் பயண வாகனமாகவும் பயன்படுத்தப்படலாம். ஏனெனில் செயல்திறன் மற்றும் ரேஞ்ச் போதுமானதாக இருப்பது மட்டுமல்லாமல் அதன் சவாரி தரமும் பாராட்டத்தக்கது மற்றும் எல்லா நேரங்களிலும் உங்கள் வசதியை தக்க வைக்கும்.
சவாரி மற்றும் கையாளுதல்
XUV400 -ன் சஸ்பென்ஸ் நமது நகரத்தின் சாலைகள், பள்ளங்கள் ஸ்பீட் பிரேக்கர்கள் மற்றும் கரடுமுரடான சாலைகள் ஆகியவற்றை எளிதாக சமாளிக்கிறது. இது அமைதியாக வேலை செய்கிறது மற்றும் பேட்டரி பேக்கின் கூடுதல் எடை இருந்தபோதிலும் கேபினுக்குள் அசைவை நீங்கள் அரிதாகவே உணர்வீர்கள். நீங்கள் ஸ்பீட் பிரேக்கர் அல்லது பள்ளத்தை தவறவிட்டாலும் வாகனத்தை சரியான நேரத்தில் பிரேக் செய்து நிறுத்த முடியாவிட்டாலும் XUV400 -ன் சஸ்பென்ஷன் இயக்கத்தை குறைந்தபட்சமாக வைத்திருக்கும் மற்றும் பெரும்பகுதி தாக்கத்தை உறிஞ்சிவிடும்.
பெரிய பள்ளங்கள் கொண்ட உடைந்த சாலைகளில் மட்டுமே நீங்கள் கேபினுக்குள் அசைவை உணர்வீர்கள். இது பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் வயதானவர்களுக்கு சங்கடமாக இருக்கும். எனவே அந்த இடங்களை மிகவும் மெதுவான வேகத்தில் கடப்பது சிறந்தது.
உயரத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டாலும் கார் நிலையானதாக உணர வைக்கிறது. மேலும் இயக்கம் கட்டுப்படுத்தப்படுவதாலும் நெடுஞ்சாலையிலும் சவாரி வசதி பாராட்டத்தக்கது. அதாவது நீங்கள் வழக்கமான முறையில் ஓட்டினால் ஒரு திருப்பங்களிலும் கூட நிலையானதாக இருக்கிறது. கொஞ்சம் உற்சாகமாக ஓட்டுங்கள் மற்றும் XUV400 -ன் கூடுதல் எடை தன்னைத் தெரிந்து கொள்ளும் மற்றும் கார் திசை திருப்பத் தொடங்குகிறது. ஆனால் அதை நிதானமாக எடுத்துக் கொள்ளுங்கள் மலைகளில் அந்த சாலைப் பயணங்களில் உங்கள் குடும்பத்தினர் எந்த புகாரும் கூற மாட்டார்கள்.
தீர்ப்பு
இந்த கால கார்கள் நவீனமான வசீகரிக்கும் வித்தைகள் மற்றும் தோற்றத்துடன் உங்கள் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்துள்ளன. ஆனால் XUV400 அடிப்படைகளை வைத்துக் கொண்டு கவன ஈர்ப்பை சரியாக செய்கிறது.
இது எதிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்காது. ஆனால் அதன் ஸ்டைலிங் இன்னும் கவர்ச்சிகரமானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது. கேபின் வடிவமைப்பும் எளிமையானது ஆனால் எரகனாமிக்ஸ் சிக்கல்கள் எதுவும் இல்லை. இது கம்ஃபோர்ட்டில் சமரசம் எதையும் செய்யாது மேலும் அதன் பிரிவில் சிறந்த பின் இருக்கைகள் உட்பட தாராளமான இடவசதி உள்ளது.
இதில் சில நல்ல வசதிகளை இல்லை. ஆனால் தற்போதைய பட்டியலில் உங்கள் முடிவை மாற்றும் அளவுக்கு எந்த முக்கிய தவறும் இல்லை. உண்மையில் அந்த விடுபட்ட வசதிகள் மிக விரைவில் XUV400 -ல் சேர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதன் பிறகு அதன் தொகுப்பில் எந்த பெரிய தவறும் இருக்காது.
தற்போதைய வசதிகளுடன் EV -யை ஓட்டுவது ICE வாகனத்தை வைத்திருப்பது போல் மன அழுத்தமில்லாதது என்பது உண்மைதான். நீங்கள் சில நேரங்களில் சார்ஜரை கண்டுபிடிக்க சிரமப்படலாம்.மேலும் சார்ஜர்கள் கிடைப்பதற்கு ஏற்ப உங்கள் சாலைப் பயணங்களைத் திட்டமிட வேண்டியிருக்கும். ஆனால் முன்னோக்கி யோசித்து உங்கள் வழிகளைத் திட்டமிடுவது உங்களுக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை என்றால் XUV400 உங்கள் குடும்பத்தின் ஒரே வாகனமாக இருக்கும்.
குறிப்பாக கேபினின் இடம், வசதி மற்றும் நடைமுறைத் தன்மை ஆகியவற்றில் சமரசம் செய்யாமல் உணர்வுக்கு ஏற்ற நல்ல வசதிகள், சிரமமற்ற மற்றும் ரீஃபைன்மென்ட்டான டிரைவிங் அனுபவத்திற்கு முன்னுரிமை அளித்தால் இந்த காரை தாராளமாக தேர்வு செய்யலாம்.