• English
  • Login / Register

மஹிந்திரா BE 6: அசத்தலான ஃபன் நிறைந்த கார் !

Published On பிப்ரவரி 11, 2025 By Anonymous for மஹிந்திரா be 6

  • 9.9K Views
  • Write a comment

கடைசியாக ஒரு டிரைவருக்கு தேவையான முக்கிய விஷயங்கள் முதன்மையானதாகவும் மற்ற அனைத்தும் இரண்டாம் நிலையிலும் உள்ள எஸ்யூவி ஒன்று கிடைத்துள்ளது.

குடும்பங்களுக்கு மட்டுமின்றி டிரைவிங் ஆர்வலர்களுக்காகவும் கார்கள் வடிவமைக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஓட்டுவதற்கு த்ரில்லான, திருப்பங்களில் சாகசம் நிறைந்த, ஓட்டுவதை விரும்புபவர்களுக்கு உருவாக்கப்பட்ட கார்கள் நிறைய இருந்தன. இருப்பினும் பின்னர் அத்தகைய கார்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆனால் அந்த காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு மஹிந்திராவின் BE 6 காரால் முடிவுக்கு வரக்கூடும்: எலக்ட்ரிக், பவர்ஃபுல், ரியர் வீல் டிரைவ் மற்றும் ஒரு கான்செப்ட் கார் போன்ற பாணியில் இது முதலில் அறிமுகமானது. ஆனால் இந்த டிரைவர் விரும்பும் கார் பேக்கேஜை உருவாக்குவதில் குடும்பம் பாராட்டாத வகையில் மஹிந்திரா சமரசம் ஏதேனும் செய்துள்ளதா? அல்லது இந்த காரால் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உண்மையிலேயே மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியுமா?.

தோற்றம்

இதுதான் இறுதி தயாரிப்பில் வெளியான கார் என்று நம்புவது இன்னும் கடினமான உள்ளது. இதுபோன்ற சிக்கலான வடிவமைப்பை இதற்கு முன்பு இந்தியாவில் ஒரு காரில் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையிலும் யாருமே மறுக்க முடியாத X-காரணியுடன் ஸ்போர்ட்டியாகவும், அதிரடியாகவும், முரட்டுத்தனமாகவும் தெரிகிறது. DRL சிக்னேச்சர் மிகவும் தனித்துவமானது. நீங்கள் அதை வேறு எந்த காருடனும் குழப்பிக் கொள்ள மாட்டீர்கள். குறிப்பாக இரவில் பின்புறக் கண்ணாடியில் அதைப் பார்க்கும்போது. இது ஆல் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி ஃபாக் லேம்களும் கொடுக்கப்பட்டுள்ளன. டைனமிக் இண்டிகேட்டர்கள் DRL -களில் கொடுக்கப்பட்டுள்ளன. காரில் ஏரோடைனமிக் வென்ட் உள்ளது. இது அதிக வேகத்தில் காற்று ஓட்டத்தை மேம்படுத்தி இழுவை விசையை குறைத்து காரின் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது. 

காரின் அளவானது உண்மையிலேயே பாராட்டும் வகையில் உள்ளது. இது கிரெட்டா, செல்டோஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுடன் ஒப்பிடக்கூடிய பெரிய எஸ்யூவி ஆகும். ஆனால் அவை குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் கூட அதே சமயம் BE 6 டிரைவரை மகிழ்விக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சாய்வான ரூஃப், தடிமனான பாடி லைன்கள் மற்றும் ஒவ்வொரு கோணத்திலிருந்தும் கவர்ச்சிகரமான அழகியல் கொண்ட உண்மையான கூபே எஸ்யூவி ஆகும். 19-இன்ச் அலாய் வீல்கள் (20-இன்ச் சக்கரங்கள் விருப்பமாக கிடைக்கும்). நீங்கள் காரை திறக்கும்போது அவை பாப்-அவுட் செய்யும் வகையில் ஃப்ளஷ்-ஃபிட்டட் டோர் ஹேண்டில்கள் மற்றும் பின்புற டோர் ஹேண்டில்கள் போன்றவை உள்ளன.

பின்புற ஸ்டைலிங் தொடர்பாக பலருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். முன் மற்றும் பக்கங்கள் கூர்மையாகவும் கோணமாகவும் இருக்கும்போது ​​​​பின்புறம் ஒப்பீட்டளவில் ஃபிளாட் ஆக உள்ளது. இருப்பினும் மஹிந்திரா பின்பக்கத்தின் தோற்றத்தை மேம்படுத்த ஸ்போர்ட்டி ரூஃப் ஸ்பாய்லர், பூட் -டில் மற்றொரு ஸ்பாய்லர், ஒரு ஸ்டிரைக்கிங் லைட்டிங் எலமென்ட் மற்றும் கீழே இரண்டு டிஃப்பியூசர் போன்ற வசதிகள் உள்ளன. உன்னிப்பாக பார்க்கும் போது ரேஸ் கார்கள் அல்லது ஃபார்முலா 1 காரை நினைவூட்டும் வகையில் மையத்தில் உள்ள ரிவர்ஸ் லைட்டை கவனிக்க முடியும். LED டெயில் லேம்ப்கள் முன்புற வடிவமைப்பை பிரதிபலிக்கின்றன. மேலும் டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள் பின்புறத்திலும் உள்ளன.

இருப்பினும் வடிவமைப்பை மேலும் உயர்த்த மஹிந்திரா பியானோ பிளாக்கில் கிளாடிங் உடன் ஃபினிஷ் செய்துள்ளது. பியானோ பிளாக் ஃபினிஷ்கள் எளிதில் பாதிப்படையக் கூடியவை. எனவே நீங்கள் இந்த காரை வாங்க திட்டமிட்டால் முதலில் பேனல்களுக்கான தரமான PPF கோட்டிங் கொடுக்க வேண்டியிருக்கும். 

ஒட்டுமொத்தமாக இந்த வடிவமைப்பு வழக்கமான சாலை காரை போல தெரியவில்லை. ஒரு நிஜமான பந்தய வீடியோ கேமில் இருப்பதை போன்ற உணர்வை கொடுக்கிறது. 

பூட் ஸ்பேஸ்

காரில் பவர்டு டெயில்கேட் உள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க வகையில் வசதியான மற்றும் மிகவும் எளிமையான ஒன்றாகும். உள்ளே நீங்கள் 3 ஓவர்நைட் கேபின் டிராலி பைகளை வைக்கலாம். ஆனால் அது கிட்டத்தட்ட பூட்டை முழுமையாக இடம் பிடித்துக் கொள்ளும். அதையும் தாண்டி லேப்டாப் பைகள் போன்ற சிறிய பைகளுக்கு மட்டுமே இடம் இருக்கும். நீங்கள் ஒரு பெரிய சூட்கேஸை வைக்க தேர்வு செய்தால் வேறு எதையும் வைக்க அதிக இடம் கிடைக்காது. சிறிய குடும்ப பயணங்களுக்கு, சிறிய பைகளில் பேக்கிங் நன்றாக வேலை செய்ய வேண்டும். இருப்பினும் ஐந்து பேர் அல்லது பெரிய குடும்பங்களுடன் பயணம் செய்யும் போது இருக்கும் இடத்தை பயன்படுத்திக் கொள்ள நீங்கள் புத்திசாலித்தனமாக பேக் செய்ய வேண்டும்.  

கார் முன்பக்கத்தில் கொஞ்சம் கூடுதல் ஸ்டோரேஜ் கிடைக்கும். இந்த ஃப்ரங்க் 35 கிலோ எடை கிடைக்கும். இது பெரியதாக இல்லாவிட்டாலும் - லேப்டாப் பைகள் போன்ற சிறிய பொருட்களுக்கு மட்டுமே பொருத்தமானது - காரின் சார்ஜர் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இது ஏற்றது. 

சாவி

மஹிந்திரா இறுதியாக அதன் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சாவிகளை அப்டேட் செய்துள்ளது. இப்போது சுவாரஸ்யமான சாவி ஒன்று கிடைத்துள்ளது. ஒரு நேர்த்தியான, சிறிய, அறிவியல் புனைகதைகளில் இருப்பதை போன்று இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அதிநவீனமானது, அதன் ஸ்டைலான தோற்றத்துடன், இது ஏராளமான செயல்பாடுகளை கொண்டுள்ளது. நீங்கள் கிளைமேட் கன்ட்ரோல் செய்யலாம், பூட்டை திறக்கலாம், காரை பூட்டலாம் மற்றும் திறக்கலாம் - அனைத்தையும் சாவியிலிருந்து நேரடியாக செய்யலாம். 

ஸ்மார்ட் பார்க்கிங்கிற்கான இரண்டு பிரத்யேக பட்டன்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. குறுகலான பார்க்கிங் சூழ்நிலைகளில், நீங்கள் விரும்பிய இடத்திற்கு காரை வழிநடத்தி, வெளியேறி, காரை நிறுத்துவதற்கு இந்த பட்டன்களை பயன்படுத்தலாம். அதேபோல் நீங்கள் புறப்படத் தயாரானதும், நீங்கள் வெளியே நின்று சாவியைப் பயன்படுத்தி பார்க்கிங் செய்யப்பட்ட இடத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லலாம்.  

கேபின்

​​இந்த காரின் கேபின் டிரைவரின் காக்பிட் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்க பயணிக்கான இடம் டிரைவரிடம் இருந்து கிட்டத்தட்ட பிரிக்கப்பட்டது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் முழுவதும் டிரைவரை மையமாகக் கொண்டு, தனித்துவ உணர்வை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கார் ஓட்டுவதற்காக வடிவமைக்கப்படவில்லை. ஆனால் உண்மையான ஸ்போர்ட்ஸ் காரால் ஈர்க்கப்பட்ட உட்புறம் போன்றது. இங்கே அமர்வது நம்பமுடியாத அளவிற்கு சிறப்பு வாய்ந்தது போன்ற உணர்வை கொடுக்கிறது. மேலும் இந்த விலையில் அல்லது இரு மடங்கு விலையில் கூட வேறு எந்த காரிலும் இதுபோன்ற வடிவமைப்பை நீங்கள் காண முடியாது என்று நாங்கள் நம்பிக்கையுடன் கூற முடியும்.  

இந்த காரில் உள்ள இருக்கைகள் மிகவும் வசதியானவை மற்றும் டூயல் அப்ஹோல்ஸ்டரி டிசைனுடன் வருகின்றன. கீழ் பகுதியில் வென்டிலேஷன் உடன் கூடிய லெதரெட் மெட்டீரியல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மேல் பகுதி ஃபேப்ரிக்கால் ஆனது. இது 50% மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் ஆனது என்று மஹிந்திரா தேரிவித்துள்ளது. கம்ஃபோர்ட்டை அதிகரிக்கும் வகையில் வகையில், ஹெட்ரெஸ்ட்கள் நன்கு பேட் செய்யப்பட்டு சிறந்த சப்போர்ட்டை கொடுக்கிறது. ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு ஒட்டுமொத்த இருக்கை அனுபவத்தை இது மேம்படுத்துகிறது.

மேலும் தனித்து நிற்கும் தனித்துவமான விஷயங்கள் நிறையவே உள்ளன. 

  • முதலில் ஃபேப்ரிக் டோர் ஹேண்டில்கள், பொதுவாக லக்ஸரியான ரேஸ் கார்களில் காணப்படுவதை போல உள்ளன. முதலில் பார்க்கும் போது அவை சிக்கலை ஏற்படுத்தலாம் என்று நீங்கள் கருதலாம், ஆனால் அவை பயன்படுத்த எளிதானவை. 

  • புதிய ஸ்டீயரிங் முழுமையாக வட்டமாக இல்லை, சற்று சதுரமாக உள்ளது. இது ஸ்போர்ட்டியாக உணர்வை கொடுக்கிறது. மற்றும் பிடிப்பதற்கு நன்றாக இருக்கிறது. விரைவான யு-டர்ன்களுக்கு இது ஒரு சுற்று ஸ்டீயரிங் போல் வசதியாக இல்லாவிட்டாலும், அதன் ஸ்போர்ட்டி ஃபீல் இந்த சிறிய குறையை ஈடு செய்கிறது. 

  • விமானங்களில் இருக்கும் த்ரஸ்டர் போன்ற போன்ற வடிவமைப்பைக் கொண்ட கியர் செலக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தரம் சற்று சுமாராக இருந்தாலும் கூட அதன் பயன்பாடு மிக நன்றாக இருக்கிறது. 

  • ஆக்ஸிலரேஷன் மற்றும் பிரேக் பெடல்கள் மஹிந்திராவின் லோகோ போன்ற வடிவில் ரப்பர் கிரிப்களுடன் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.  

  • 360 டிகிரி கேமரா, ஆட்டோ பார்க்கிங், பூட், அபாயங்கள் மற்றும் லைட்டிங் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான டாப்-மவுண்டட் டோக்கிள்கள் போர் விமானங்களில் கானப்படுவதை போல உள்ளன. 

நீங்கள் கேபினில் அதிக நேரம் செலவழிக்கும் போது ​​டிரைவரை மனதில் வைத்து எப்படி எல்லாம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கவனிப்பீர்கள். இருப்பினும் சில பகுதிகளை மேம்படுத்தியிருக்கலாம்:

  • ஜாய்ஸ்டிக் கன்ட்ரோல்கள் பழைய மஹிந்திரா மாடல்களில் உள்ளதை போலவே உள்ளன. மற்ற பிரீமியம் கேபினுடன் ஒப்பிடும்போது பழையதாக தெரிகிறது.  

  • பியானோ பிளாக் ஃபினிஷ்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் இந்த மேற்பரப்புகள் மிக எளிதாக கீறல் விழும் வகையில் உள்ளன. 250-300 கி.மீ தூரத்தை மட்டுமே கடந்த எங்கள் சோதனை காரில் கூட, கீறல்கள் ஏற்கனவே விழத் தொடங்கிவிட்டன.

  • ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன்: பியானோ பிளாக் பேனலுடன் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தாலும் கூட அது செயல்பட சரியான இடத்தில் துல்லியமாக அழுத்த வேண்டும். இது பழகுவதற்கு சில நேரம் எடுக்கலாம்.

ஓட்டுனர் கவனம் செலுத்தினாலும், பயணிகள் கவனிக்கப்படுவதில்லை. அவர்கள் இரண்டு பிரத்யேக ஏசி வென்ட்கள், சாஃப்ட்-டச் டேஷ்போர்டு மற்றும் டோர் பேட்களில் மென்மையான, பிரீமியம் தரமான பிளாஸ்டிக் பேனல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 

ஒரு நல்ல ஓட்டுநருக்கு, சரியான டிரைவிங் பொசிஷன் அவசியமான ஒன்று. மேலும் இந்த கார் அதை ஆணி அடிக்கிறது. நீட்டப்பட்ட கால்கள் மற்றும் ஸ்டீயரிங் கைக்கு எட்டிய தூரத்தில் நீங்கள் -பொதுவாக அதிக இருக்கைகள் உள்ள எஸ்யூவி -களில் இது அசாதாரணமானது.  மெமரி ஃபங்ஷன் உடன் கூடிய பவர்-அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் இருக்கை, இருக்கையை அட்ஜ்ஸ்ட் செய்வதற்கு வசதியாக இருக்கும். மேலும் ஸ்டீயரிங் டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் அட்ஜஸ்ட்களை சரியான இடத்தைப் பெறுவதற்கு வழங்குகிறது. இந்த காரில் ஒரு முழுமையான ஸ்போர்ட்டினஸ் கொண்ட கேபின் உள்ளது. பிரீமியமான டிரைவரை மையப்படுத்திய அனுபவத்தை இது வழங்குகிறது.

கேபின் நடைமுறை தன்மை

கேபின் ஸ்போர்ட்டியாக இருந்தாலும் நடைமுறையில் அவை பயன்படுத்த வசதியாக இருக்கும் என்பதையும் மஹிந்திரா உறுதி செய்துள்ளது. இது மிகவும் விசாலமான கேபின். நீங்கள் இரண்டு வயர்லெஸ் சார்ஜர்கள் உள்ளன. ஓட்டுநருக்கு ஒன்று மற்றும் சக பயணிகளுக்கு ஒன்று. மற்றும் உங்கள் பர்ஸை வைத்திருக்க தனி ஸ்லாட் உள்ளது. இருப்பினும் ஒரே ஒரு கப் ஹோல்டர் மட்டுமே உள்ளது. முன் ஆர்ம்ரெஸ்டின் கீழ், பெரிய கூல்டு ஸ்டோரேஜ் ஒன்றும் உள்ளது. 

டோர் பாக்கெட்டுகளில் இரண்டு 1-லிட்டர் பாட்டில்களை எளிதில் வைக்கலாம். க்ளோவ் பாக்ஸில் சிறிய திறப்பு ஒன்றும் உள்ளது. சென்டர் கன்சோலில் உள்ள அனைத்து ஸ்டோரேஜ் பகுதிகளும் ரப்பர் மேட்டிங்குடன் வருகின்றன.

சார்ஜிங் ஆப்ஷன்கள் ஏராளமாக உள்ளன. முன்பக்கத்தில் இரண்டு வயர்லெஸ் சார்ஜர்களுடன் இரண்டு டைப்-சி போர்ட்களும் உள்ளன. பின்பக்க பயணிகளும் இருக்கைகளில் இரண்டு டைப்-C சாக்கெட்டுகளும் உள்ளன. மேலும் இவை 65W கொண்ட ஃபாஸ்ட் சார்ஜர்கள் ஆகும். எனவே உங்கள் கருவிகளை இது வேகமாக சார்ஜ் செய்யும். நீங்கள் 12V சாக்கெட்டை தேடுகிறீர்கள் என்றால் அது பூட் பகுதியில் மட்டுமே கிடைக்கும்.

வசதிகள்

ஸ்டீயரிங் ஒரு பளபளப்பான பிளாக் பேனலை கொண்டுள்ளது. மேலும் "BE" லோகோ இரவில் ஒளிரும், பிரீமியம் டச்சை சேர்க்கிறது. டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (AR HUD) என மூன்று ஸ்கிரீன்களும் உள்ளன. மையத்தில் ஒரு ஆட்டோ டிம்மிங், ரிம்லெஸ் ரியர்-வியூ மிரர் ஸ்போர்ட்டியாக தெரிகிறது. டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், கேபின் முழுவதும் மல்டி கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் ஸ்டாண்டர்டான கிளாஸ் ரூஃப் ஆகியவை அனுபவத்தை மேலும் மேம்படுத்துகின்றன. 

டிரைவர் டிஸ்பிளே பல செயல்பாடுகளை காட்டுகிறது. இது ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்) போன்ற விவரங்களைக் காட்டுகிறது. நேவிகேஷன் இங்கே நேரடியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, எனவே நீங்கள் ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார்பிளே -வை பயன்படுத்தினால் டிஸ்பிளேவிலேயே மேப்களை பார்க்கலாம்-இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனை பார்க்க வேண்டியதன் அவசியத்தைக் குறைப்பதன் மூலம் கவனச்சிதறல்களும் குறையும். பயணத் தகவல், ஆற்றல் நுகர்வு விவரங்கள் மற்றும் பேட்டரிகளில் இருந்து சக்கரங்களுக்கு எலக்ட்ரிக் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் டைனமிக் பவர் டிரைவிங் மேப் உள்ளது. டிரைவிங் மோடுகள் அனிமேஷன்கள் மற்றும் வண்ணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன: ரேஞ்ச் மோடு கிரீன் நிறத்தில் ஒளிரும், டெய்லி மோடில் ஊதா நிறமாக மாறும், மற்றும் ரேஸ் மோடு ஃபயரி ரெட் கலரில் இருக்கும்.

இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சுத்தமான டைல் அடிப்படையிலான இன்டர்ஃபேஸ் உடன், மஹிந்திராவுக்கு இது முற்றிலும் புதியது. இது யூஸர் ஃபிரன்ட்லி ஆக உள்ளது. கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் சீட் வென்டிலேஷன் முதல் ADAS அமைப்புகள் மற்றும் ஓட்டுநர் மோடுகள் வரை அனைத்தையும் நீங்கள் அணுகலாம். ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவை வயர்லெஸ் மற்றும் சீராக வேலை செய்கின்றன, இருப்பினும் ஆப்பிள் கார்ப்ளேயில் சிறிய கனெக்டிவிட்டில் சிக்கல்களை நாங்கள் சந்தித்தோம். ஆம்பியன்ட் லைட்ஸ் அமைப்பையும் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.  

சிறந்த ஆடியோ தரத்தை வழங்கும் 16-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஒரு தனித்துவமான வசதியாகும். கஸ்டமைஸபிள் ஈக்வலைசர் செட்டப்கள் மற்றும் சப்வூஃபரில் இருந்து கிடைக்கும் வலுவான பேஸ் மூலம், நீங்கள் சிம்பொனி ஹால் அதிர்வுகளை விரும்பினாலும் அல்லது கச்சேரி அளவிலான தீவிரத்தை விரும்பினாலும், அதிசிறப்பான ஒலி அனுபவத்தை இது கொடுக்கிறது.  

360 டிகிரி கேமரா மற்றொரு சிறப்பம்சமாகும். அனிமேஷன்கள் அடிப்படையாக தெரிந்தாலும் கூட படத்தின் தரம் உறுதியானது. மிகவும் சுவாரஸ்யமாக இதில் உள்ள ஒரு டாஷ் கேம் ஒரு பட்டனை அழுத்தினால் சம்பவங்கள் அல்லது சாலை விபத்துகளைப் பதிவு செய்யும். காருக்குள் இருக்கும் தருணங்களை படம்பிடிக்க செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது. நிறுத்தப்பட்டு இருந்தாலும் கூட இந்த கேமரா சுற்றுப்புறங்களை கண்காணித்து, காரை இழுத்துச் செல்வது அல்லது சேதப்படுத்துவது போன்ற சந்தேகத்திற்குரிய செயல்பாட்டைப் பதிவு செய்கிறது. இது கூடுதலான பாதுகாப்பையும் மன அமைதியையும் வழங்குகிறது.

பின் இருக்கை அனுபவம்

பெரும்பாலான கூபே எஸ்யூவி -களில் போதுமான முழங்கால் அறை அல்லது ஹெட்ரூம் கிடைக்காது. இருப்பினும் BE 6 -ஐப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். 6-அடி உயரமுள்ள நபர் முன்பக்கத்தில் அமர்ந்திருந்தால் மற்றொரு 6-அடி உயரமுள்ள நபர் அவர்களுக்குப் பின்னால் வசதியாக அமர முடியும். கால் அறையும் ஒழுக்கமானது. ஹெட்ரூமை பொறுத்தவரையில் நீங்கள் 6 அடிக்கு மேல் உயரமாக இருந்தால் போதும். சராசரி உயரம் கொண்ட பயனர்களுக்கு ஏராளமான ஹெட்ரூம் உள்ளது. 

இந்த இருக்கைகள் மிகவும் ஆதரவாக உள்ளன. அவை சற்று மேல் நோக்கி இருப்பதோடு மட்டுமில்லாமல் தொடையின் கீழ் ஆதரவையும் போதுமான அளவுக்கு வழங்குகின்றன. இது EV-யிலிருந்து குறிப்பாக கூபே எஸ்யூவி-யில் இருந்து நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறந்ததாகவே உள்ளது. சாய்வு கோணம் மிகவும் வசதியாக உள்ளது, மேலும் ஹெட்ரெஸ்ட்கள் மிகவும் ஆதரவாக உள்ளன. மொத்தத்தில் இந்த இருக்கைகள் நீண்ட பயணங்களில் கூட உங்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் வெளிப்புற பார்வை ஓரளவு சமரசம் செய்யப்படுகிறது. பின்புற ஜன்னல்கள் சிறியவை, குறுகிய பார்வையை வழங்குகின்றன. உண்மையில், பெரிய ஹெட்ரெஸ்ட்கள், ஓட்டுநர் மற்றும் முன் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தாலும், பின்புறத்திலிருந்து பார்வையைத் தடுக்கின்றன. கண்ணாடி கூரை திறக்கவில்லை என்பதால் குழந்தைகள் தலையை வெளியே நீட்ட மாட்டார்கள்,. கூடுதலாக கூரை மிகவும் பெரியதாக இருப்பதால் அது ஏராளமான வெளிச்சத்தை அனுமதிக்கிறது. ஒரு பிளாக் இன்ட்டீரியர் உடன் கேபின் வென்டிலேஷன் உடன் விசாலமாகவும் உணர வைக்கிறது.

அதாவது மூன்று பேர் பின்னால் வசதியாக உட்கார முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஃபுளோர் தட்டையானது, எனவே நடுத்தர பயணிகளுக்கு கால் இடைவெளியில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் இருக்கைகள் சற்று உள்நோக்கி அமைந்துள்ளன. அதாவது இரண்டு பக்க பயணிகளும் நெருக்கமாக இருப்பதால் மூன்றாவது பயணிக்கு இது மிகவும் உகந்ததாக இல்லை.

வசதிகளைப் பொறுத்தவரையில் நீங்கள் இரண்டு கப்ஹோல்டர்கள் கொண்ட சென்டர் ஆர்ம்ரெஸ்ட் உள்ளது. மேலும் முன் இருக்கைகளுக்குப் பின்னால், டேப்லெட் அல்லது ஃபோனை இணைப்பதற்கான மவுண்டிங் பாயிண்ட்கள் உள்ளன. மஹிந்திரா இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைந்து செயல்படும் செயலியை வழங்கியுள்ளது. இது கிளைமேட் செட்டப்கள் செட்டப்கள், மியூஸிக் மற்றும் பலவற்றைக் கட்டுப்படுத்த உங்களை அனுமதிக்கிறது, உங்கள் தொலைபேசி அல்லது டேப்லெட்டை மூன்றாவது திரையாக மாற்றுகிறது. இது மிகவும் ஈர்க்கக்கூடிய அம்சமாகும். உண்மையில் காரில் உள்ள அனைவரும் ஒன்றாக உள்ளடக்கத்தைப் பார்க்க விரும்பினால் அது தடையின்றி செயல்பட வைக்கலாம்.

நடுவில் ஏசி வென்ட்கள் உள்ளன. ஆனால் அவற்றின் வடிவமைப்பு சற்று வழக்கத்திற்கு மாறானது. அவர்கள் இடது அல்லது வலது பக்கம் சுழற்ற முடியாது. நீங்கள் திறக்க அல்லது மூட மட்டுமே முடியும். வென்ட்களுக்குக் கீழே, சில ஸ்டோரேஜ் இடங்கள் உள்ளன, மேலும் சார்ஜிங் ஆப்ஷன்களுக்கு வரும்போது ​​ஒவ்வொரு இருக்கைக்குப் பின்னும் இரண்டு வகையான போர்ட்கள் உள்ளன, இது வேகமாக சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. சீட் பேக் பாக்கெட்டுகள் பத்திரிகைகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். அதே நேரத்தில் டோர் பாக்கெட்டுகள் 500 மில்லி முதல் 1 லிட்டர் வரையிலான பாட்டில்களை வைக்கலாம். ஆனால் நீங்கள் பின் இருக்கையில் 3 பேரை எடுத்துச் செல்ல திட்டமிட்டால் அது ஒரு அழுத்தமாக இருக்கும்.

பாதுகாப்பு விவரங்கள்

கார் ஸ்போர்ட்டியாக இருந்தால் பாதுகாப்பும் முக்கியமானது. அதனால்தான் மஹிந்திரா இந்த காரில் 6 ஏர்பேக்குகளை வழங்காமல் 7 ஏர்பேக்குகளை வழங்குவதன் மூலம் கூடுதல் மைல் சென்றுள்ளது. இதனுடன், நீங்கள் ABS (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்), EBD (எலக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன்) மற்றும் ஹில் ஹோல்ட் ஆகியவை உள்ளன. மஹிந்திரா இந்த காரின் நேரடி கிராஷ் டெஸ்ட் சோதனையை கூட நடத்தியுள்ளது. இது எந்த புதிய கார் மதிப்பீட்டு திட்டங்களிலும் (NCAP) சிறந்த மதிப்பெண் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதற்கான வலுவான அறிகுறியை அளிக்கிறது. இது மஹிந்திரா ஏற்றுமதி சந்தைகளையும் இலக்காகக் கொண்ட ஒரு கார் என்று கருதி BE 6 சர்வதேச NCAP தரநிலையிலும் சோதிக்கப்படலாம்.

மோட்டார் மற்றும் செயல்திறன்

பேட்டரி அளவு

59kWh

79kWh

டிரைவ் டைப்

ரியர் வீல் டிரைவ்

ரியர் வீல் டிரைவ்

பவர்

230PS

285PS

டார்க்

380 Nm

380 Nm

கிளைம்டு ரேஞ்ச்

556 கி.மீ

682 கி.மீ

மதிப்பிடப்பட்ட ரியல் வேர்ல்டு ரேஞ்ச்

380-450 கி.மீ

500-550 கி.மீ

BE 6 ஆனது INGLO தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இது பின்புற வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் இரண்டையும் சப்போர்ட் திறன் கொண்டது. இருப்பினும் அறிமுகத்தில் மஹிந்திரா ரியர்-வீல் டிரைவ் மட்டுமே அறிமுகப்படுத்தியது. நாங்கள் சோதித்த 79kWh பதிப்பு, 285PS மற்றும் 380Nm அவுட்புட்டை கொடுக்கும் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் வருகிறது. இது ஸ்கோடா ஆக்டேவியா RS230 போன்ற செயல்திறன் செடான்களை விட அதிகமாகும்!

இறுதி முடிவு 6.7 வினாடிகளில் 0-100 கி.மீ/மணி நேரம் மற்றும் 202 கி.மீ/மணி என்ற எலக்ட்ரிக்கலாக-லிமிடெட் செய்யப்பட்ட அதிகபட்ச வேகம் ஆகும். BE 6 என்பது மிக விரைவான கார் ஆகும். அதாவது எந்த வேகத்திலும் முந்திச் செல்வது முழுப் பயணிகளின் சுமையுடன் இருந்தாலும் எந்தத் தொந்தரவும் இல்லை. ஆனால் இது ஓட்டுவதற்கு மிகவும் மென்மையான கார் மற்றும் தினசரி பயணங்கள் ஒரு நிதானமான விஷயமாக இருக்கும். குறிப்பாக எஸ்யூவி இன் சிறந்த சவுண்ட் இன்சுலேஷன் காப்பு காரணமாக.

பிரேக் பவர் ரீஜெனரேஷன் மோடுகளை தவிர BE 6 ஒரு ஒரு பெடல் மோடு உடன் வருகிறது. இது நன்றாக அளவீடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக EV வாங்குபவர்களுக்கு பழகுவதற்கு சில பயிற்சிகள் தேவைப்படும். ஆனால் இது குறிப்பாக அதிக ட்ராஃபிக்கில் பயனுள்ளதாக இருக்கும். 

சார்ஜிங்

  • 175kW சார்ஜர் மூலம், 79kWh பேட்டரி 20 நிமிடங்களில் 20-80 சதவிகிதம் சார்ஜ் ஆகும்.

  • 140kW சார்ஜர் மூலம், 59kWh பேட்டரி 20 நிமிடங்களில் 20-80 சதவிகிதம் சார்ஜ் ஆகும்.

  • ஆப்ஷனலான 11kW AC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம், BE 6ஐ 0-100 சதவீதத்திலிருந்து 6-8 மணிநேரத்தில் சார்ஜ் செய்யலாம் (முறையே 59-79kWh பேட்டரிகள்).

  • ஆப்ஷனலான 7kW AC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம், BE 6ஐ 0-100 சதவீதத்திலிருந்து 9-12 மணிநேரத்தில் சார்ஜ் செய்யலாம் ( 59-79kWh பேட்டரிகள்).

  • 79kWh பேட்டரி பேக்கிற்கான கிளைம்டு ரேஞ்ச் 682 கி.மீ ஆகும். இருப்பினும் இது நிஜ உலகில் 500-550 கி.மீ வரை இருக்கலாம்.

  • 59kWh பேட்டரி பேக்கிற்கான கிளைம்டு ரேஞ்ச் 556 கி.மீ ஆகும். இருப்பினும் இது நிஜ உலக நிலைமைகளில் 380-450 கி.மீ வரை இருக்கலாம் 

சவாரி மற்றும் கையாளுதல்

BE 6 என்பது அதன் லைட் ஸ்டீயரிங் காரணமாக அதிக வேகத்தில் நிலையானதாக இருக்கும் போதும் அந்த ​உணர்வு மிகவும் செயற்கையானதாக தெரிகிறது. சவாரி தரம் உறுதியான பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மென்மையான சாலைகளில் இது வசதியாக இருக்கும். ஆனால் சீரற்ற சாலைகளில் பயணிகள் சில பக்கவாட்டாக தூக்கி எறிவது போல உணர்வார்கள்.

.

நாங்கள் ஓட்டிய பாதைகளில் உள்ள பெரிய மேடுகள் மற்றும் குழிகள் போன்றவற்றில் சஸ்பென்ஷன் கேபினில் ஏற்படும் எந்த அதிர்ச்சியையும் கட்டுப்படுத்தியது. மோசமான புடைப்புகள் மீது சத்தம் வரவில்லை.

தீர்ப்பு

நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு கார் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பிய ஒரு காரை நாங்கள் ஓட்டியுள்ளோம். BE 6 என்பது ஒரு நவீன, ஃபன் நிறைந்த, வேகமான மற்றும் தொழில்நுட்பம் ஏற்றப்பட்ட எஸ்யூவி ஆகும். அதன் தோற்றம் ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படத்தில் இருந்து வெளிப்பட்டது போல இருக்கிறது. ஓட்டுநருக்கு பிரீமியம் காக்பிட் கிடைக்கிறது. இது ஒரு நல்ல ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது. மேலும் அதன் நிஜ உலக ரேஞ்ச் 400-550 கி.மீ (பேட்டரி பேக்கை பொறுத்து) போதுமானதாக இருக்கும். உங்கள் குடும்பத்தையும் மனதில் வைத்துக் கொண்டு இவை அனைத்தையும் செய்கிறது. உண்மையாகவே அதிக சமரசங்கள் தேவைப்படாத மற்றும் குறைவான விலையில் இருக்கும் ஒரு ஸ்போர்ட்டி காரை வாங்க வேண்டும் என்று நீங்கள் கனவு கண்டிருந்தால் அதிகம் யோசிக்க வேண்டாம்!

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Published by
Anonymous

சமீபத்திய எஸ்யூவி கார்கள்

வரவிருக்கும் கார்கள்

சமீபத்திய எஸ்யூவி கார்கள்

×
We need your சிட்டி to customize your experience