2024 Mercedes-Benz GLA Facelift: இது என்ட்ரி லெவல் கார்தானா ?
Published On மே 10, 2024 By nabeel for மெர்சிடீஸ் ஜிஎல ்ஏ
- 1 View
- Write a comment
GLA ஆனது கால ஓட்டத்துக்கு ஏற்றபடி ட்ரெண்டிங்கில் இருக்க உதவும் வேரியன்ட்யில் சிறிய அப்டேட்டை பெறுகிறது. இந்த சிறிய அப்டேட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா?
மிக நீண்ட காலமாக என்ட்ரி லெவல் சொகுசு கார்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படிகின்றது: வசதிகள் என்று வரும்போது அவை முற்றிலும் வெறுமையாக இருக்கின்றன. இது GLA க்கும் ஓரளவு உண்மையாக இருந்தது. மெர்சிடிஸ் காரின் என்ட்ரி லெவல் எஸ்யூவி -யான GLA ஆனது இப்போது 2024 ஆம் ஆண்டுக்கு ஏற்றவாறு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. சிறந்த தோற்றம், வசதிகள் மற்றும் சிறப்பான இன்ட்டீரியரை வழங்குவதன் மூலம் இந்த களங்கத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறது. இந்தப் அப்டேட் அதை மேலும் விரும்பத்தக்கதாக மாற்ற முடியுமா?
மெர்சிடிஸ்-பென்ஸ் GLA மெர்சிடிஸின் என்ட்ரி லெவல் எஸ்யூவி ஆகும். இது வாடிக்கையாளர்களுக்கு கச்சிதமான மற்றும் நடைமுறை விலையில் ஆடம்பரத்தின் சுவையை வழங்குகிறது. இது BMW X1 மற்றும் ஆடி Q3 போன்றவற்றுடன் போட்டியிடுகிறது. மெர்சிடிஸ் வரிசையில் இது GLC, GLE மற்றும் GLS எஸ்யூவி -களின் கீழ் உள்ளது.
தோற்றம்
எஸ்யூவிகளை பொறுத்தவரை சாலை தோற்றம் என்பது அவற்றுக்கு அவசியமானது. GLA ஆனது அதன் அளவை மறைக்கும் மிகவும் வட்டமான வடிவத்தைக் கொண்டுள்ளது. ஆகவே இது சாலையில் அதிக ஈர்ப்பைக் கொண்டுள்ளது. இந்த புதுப்பிப்பில் விஷயங்கள் சிறப்பாக இருந்தபோதிலும் GLA காரின் ஒட்டுமொத்த தோற்றம் இன்னும் பெரிய ஹேட்ச்பேக் ஆகவே இருக்கின்றது.
அப்டேட்டை பொறுத்தவரை ஃபேஸ்லிஃப்ட் GLA புதிய முன்பக்கத்துடன் வருகிறது. புதிய கிரில், பம்பர் மற்றும் ஹெட்லேம்ப்கள் முன்பை விட ஆக்ரோஷமாக இருக்க உதவுகிறது. இருப்பினும், இது ஒரு எஸ்யூவி -யை விட ஒரு ஹேட்ச்பேக் போல தோற்றமளிக்கும் சாய்வான பானட் மற்றும் கூரையின் வடிவம் கீழே சாய்ந்துள்ளது. இது ஒரு நல்ல தோற்றமுடைய வடிவமைப்பை கொண்டுள்ளது பாரம்பரிய எஸ்யூவி போல இல்லை.
ஏஎம்ஜி-லைனில் ஸ்போர்டியர் பம்பர் மற்றும் 19-இன்ச் அலாய் வீல்கள், விளிம்பு பற்றி கவலைப்படாமல் மோசமான சாலை நிலைமைகளை சமாளிக்க சைடு வால் (Wall) உடன் இது உள்ளது. வீல்-ஆர்ச் கிளாடிங் பாடி கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. கிரில் கூட குரோம் ஆக்ஸன்ட்களுடன் வருகிறது.
பின்புறத்தில் புதிய LED டெயில்லேம்ப்கள் நவீனமாகத் தெரிகின்றன. மீதமுள்ள டெயில்கேட் GLA-ன் ஒட்டுமொத்த வடிவமைப்பிற்கு ஏற்றவாறு மிகவும் கிளீன் ஆக உள்ளது.
உட்புறங்கள்
ஃபேஸ்லிஃப்ட் போல இந்த அப்டேட் இருப்பதால் இன்ட்டீரியர் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளன. புதிய அப்ஹோல்ஸ்டரியைத் தவிர AMG-லைன் வேரியண்டில் உள்ள புதிய AMG-ஸ்பெக் ஸ்டீயரிங் வீல் மற்றும் சென்டர்-கன்சோல் பொருத்தப்பட்ட டச்பேட் மற்றும் கன்ட்ரோல்கள் நீக்கப்பட்டுள்ளது பெரிய மாற்றம். டாஷ்போர்டின் இடதுபுறத்தில் உள்ள டிரிம் புதியது, இரண்டு வேரியன்ட்களிலும் வேறுபட்டது.
நீக்கப்பட்ட டச்பேடை பற்றி பேசுகையில் அது வசதியாக இருந்தபோதிலும், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அது தேவையற்றதாகி விட்டது. இது ஒரு ரப்பர்-பேடட் ஓபன் ஸ்டோரேஜ் -க்கு வழி ஏற்படுத்தி கொடுக்கின்றது. ஏனெனில் புதிய திறந்த ஸ்டோரேஜ் -க்கு முன்னால் 2 கப் ஹோல்டர்கள், ஸ்டோரேஜ் ஏரியா மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பெரிய ஸ்டோரேஜ் உள்ளது.
GLA இன் உட்புறத் தரம், நல்ல ஃபிட், ஃபினிஷ் மற்றும் பொருட்களின் தரம் மற்றும் ஸ்டீயரிங் மற்றும் டர்பைன்-பாணி ஏசி வென்ட்கள் போன்ற பிரீமியம் ஃபீலிங் டச் பாயிண்ட்கள் ஆகியவற்றுடன் நன்றாகவே உள்ளது.
வசதிகள்
காலப்போக்கில் GLA ஆனது அதன் வாடிக்கையாளர்களின் அடிப்படை தேவைகளைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. இந்த அப்டேட்டின் மூலமாக இது ஒரு படி மேலே சென்றுள்ளது. நீங்கள் எதிர்பார்க்கும் வசதிகளைப் பெறுவது மட்டுமல்லாமல் எஸ்யூவியின் ஒட்டுமொத்த அனுபவத்தை உயர்த்துவதற்கு மேலும் சில வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வசதிகள் டச் ஸ்கிரீன் இன்டர்ஃபேஸில் இருந்து தொடங்குகின்றன, இது இப்போது MBUX சாஃப்ட்வேர் சமீபத்திய தலைமுறையை இயக்குகிறது. இது இப்போது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வருகிறது. இது கூடுதலான வசதியை சேர்க்கிறது. ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜருடன் இணைந்து இந்த கலவையானது வயர்கள் இல்லாமல் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும். மேலும் கார் பார்க்கிங் மோடில் இருக்கும்போது சிஸ்டத்தில் சுடோகு, பெயர்ஸ் மற்றும் ஷஃபிள்பக் போன்ற கேம்களை விளையாடலாம்.
மற்றொரு பயனுள்ள கூடுதலாக 360 டிகிரி கேமரா உள்ளது. பாரலல் பார்க்கிங் செய்யும் போது ஸ்டீயரிங் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளும் ஆக்டிவ் பார்க்கிங் அசிஸ்ட்டின் சேர்க்கப்பட்ட லேயர் மூலம் பார்க்கிங்கை எளிதாக்க இது உதவுகிறது. மற்ற வசதிகளில் மெமரி செயல்பாடு, பனோரமிக் ஸ்லைடிங் சன்ரூஃப்கள், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 2 ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் 64 கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் கொண்ட எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் முன்பக்க இருக்கைகள் அடங்கும். இவற்றின் மூலம், GLA ஆனது வசதிகளின் அடிப்படையில் மிகவும் அப்டேட் ஆன நிலையில் உள்ளது.
பின் இருக்கை அனுபவம்
GLA -ன் பின் இருக்கைகளில் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. அவை விசாலமாகவும் நன்கு குஷனிங் ஆகவும் இருக்கும். பின்புற ஆங்கிள் சற்று நிமிர்ந்தவாறு இருக்கும். நீங்கள் ஒரு சேமிப்பு, பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் பின்புறத்தில் இரண்டு டைப்-சி சார்ஜிங் போர்ட்களை பெற்றாலும், ஆர்ம்ரெஸ்ட்களில் கப் ஹோல்டர்கள் இல்லாதது ஒரு குறை. நீங்கள் பின் இருக்கைகளை சாய்த்து சரியலாம். ஆனால் அது பயணிகளுக்கு வசதியை சேர்ப்பதை விட பூட் இடத்தில் அதிகமானதை எடுத்துக் கொள்கின்றது.
பூட் ஸ்பேஸ்
425 லிட்டரில் GLA ஒரு அழகான பெரிய பூட் -டை கொண்டுள்ளது. பெரிய சூட்கேஸ்கள் அல்லது சிறிய பைகளுக்கு இடம் போதுமானதாக இருக்கின்றது மற்றும் குடும்பத்தின் வார இறுதி பயணத்திற்கான பேக்கேஜ்களை முன் திட்டமிடல் இல்லாமல் எடுத்து செல்லலாம். பின் இருக்கைகள் 40:20:40 விகிதத்தில் ஃபோல்டு ஆகின்றன. மேலும் தேவைப்பட்டால் மேலும் இருக்கைகளை முன்னோக்கிச் நகர்த்தலாம்.
இன்ஜின் மற்றும் செயல்திறன்
GLA இன்னும் 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது: 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல். பிந்தையது 4MATIC AWD செட்டப் உடன் கிடைக்கிறது. நாங்கள் ஓட்டியதும் இதுதான். 190PS மற்றும் 400Nm உடன் இது டீசல் மிகவும் பவர்ஃபுல்லானது மற்றும் AMG-Line வேரியன்ட் உடன் கிடைக்கிறது. 0-100 கிமீ/மணி வேகத்தை 7.5 நொடிகளில் இது கடக்கும். மைலேஜ் 18.9 கிமீ/லி ஆகும். இது 8-ஸ்பீடு DCT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
எண்களை தள்ளி வைக்கலாம் இந்த இன்ஜின் ரீஃபைன்மென்ட் என வரும் போதும் விரைவான ஸ்பீடு மாற்றங்களின் போதும் பிரகாசிக்கிறது. நகரத்தில் வாகனம் ஓட்டுவது சிரமமற்றதாக இருக்கின்றது. மேலும் GLA ஆனது போக்குவரத்தின் போது ஓட்டுவதற்கு நன்றாக இருக்கும். ஒரு இடைவெளியைக் கண்டுபிடித்து அதில் முன்னேறுவதில் GLA மகிழ்ச்சி அடைகிறது. டவுன்ஷிஃப்ட் சற்று மெதுவாக இருப்பதை போல தோன்றலாம் ஆனால் அதன் பிறகு வரும் ஆக்ஸ்லரேஷன் அதை ஈடுசெய்கிறது. நெடுஞ்சாலைகளில் கூட GLA ஆனது மூன்று இலக்க வேகத்தில் பயணிப்பதை எளிதாகவும் வசதியாகவும் உணர வைக்கின்றது. இங்கே அதன் முந்திச் செல்லும் திறன் உண்மையில் ஈர்க்கிறது, மேலும் இது 80 கிமீ/மணி இலிருந்து 120 கிமீ/மணி வரை எந்த நேரத்திலும் செல்ல முடியும். ஒட்டுமொத்தமாக இது உண்மையில் ஒரு நல்ல ஆல்ரவுண்டர் இன்ஜின் ஆகும். இது உங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வகியில் செயல்திறன் மற்றும் மைலேஜை கொடுக்கின்றது.
சவாரி மற்றும் கையாளுதல்
AMG-லைன் வேரியன்ட் 19 இன்ச் ரிம்மை கொண்டுள்ளது. ஒரு குழியின் விளிம்பை சேதப்படுத்தாமல் இருக்க இது கவலைக்குரிய ஒரு அங்கமாக இருக்க வேண்டும். தடிமனான 235/50 பக்கவாட்டு பகுதி அதை கவனித்துக் கொள்கிறது. அதற்கு சஸ்பென்ஷன்பயணம் குறைவாகவே உள்ளது என்று அர்த்தம். எனவே GLA ஆனது சிறிய அலைவுகள் மற்றும் ஸ்பீட் பிரேக்கர்களில் வசதியாகவும் மென்மையாகவும் இருக்கிறது. ஆனால் பெரிய மேடுகளில் லேசான தட் சத்தத்தை உணர முடியும். அவை உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாவிட்டாலும் கடுமையான வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கச் செய்யும்.
நெடுஞ்சாலைகளில் GLA மிகவும் நிலையானதாக உள்ளது. விரைவான பாதை மாற்றங்கள் அல்லது முந்திச் செல்லும் சூழ்ச்சிகள் கூட சஸ்பென்ஷன் தொந்தரவு செய்யாது மற்றும் பயணிகள் மிகவும் வசதியாக இருக்கிறார்கள். கையாளுதல் கூட கணிக்கக்கூடிய வகையிலேயே இருக்கிறது மேலும் பாதுகாப்பானது. GLA திரும்புவதற்கு ஷார்ப்பாக இருக்கின்றது. ஸ்டீயரிங் நல்ல நம்பிக்கையையும் வழங்குகிறது. பிரேக் லெவல்கள் பாராட்டத்தக்கவை ஆகவே நீங்கள் அதை மலைப்பாதையில் ஓட்டி மகிழலாம். ஓட்டுவது ஸ்போர்ட்டியாக இல்லை என்றாலும் கூட குறிப்பாக மெதுவான டவுன்ஷிஃப்ட்கள் கொடுக்கப்பட்டால் சிறிய குடும்ப எஸ்யூவிக்கு இது மிகவும் ஃபன் ஆக மாறுகிறது.
தீர்ப்பு
மெர்சிடிஸ் GLA ஆனது வாடிக்கையாளர்களுக்கு சொகுசு எஸ்யூவி வாழ்க்கை முறைக்கு ஒரு என்ட்ரி கார்டை வழங்குகிறது. மேலும் தோற்றம், ஹேட்ச்பேக் போன்றது மற்றும் பின் இருக்கை வசதி ஆகியவற்றைத் தவிர மற்ற இடங்களிலும் ஈர்க்கும் வகையில் இருக்கின்றது. கேபின் உயர்தர சொகுசு அனுபவத்தை வழங்குகிறது மேலும் இப்போது வசதிகள் நிரம்பியுள்ளன. கேபின் மட்டுமல்ல வசதிகளின் தரமும் ஈர்க்கும் வகையில் உள்ளது. இறுதியாக டீசல் இன்ஜின் ஒரு ஆல்ரவுண்டர் ஆகும். இது பெரும்பாலான சூழ்நிலைகளில் உங்களை திருப்திப்படுத்தும். ஒட்டுமொத்தமாக இந்த GLA முன்பை விட சிறப்பாக உள்ளது. இன்னும் அதே சிறப்பான வேல்யூ கொண்ட தொகுப்பை வழங்குகிறது - ஒரு சிறிய குடும்பத்திற்கான சொகுசு எஸ்யூவி -களின் உலகில் இது ஒரு தகுதியான என்ட்ரி ஆகும்.