• English
  • Login / Register

2024 Mahindra XUV400 EL Pro: ரூ. 20 லட்சத்தில் கிடைக்கும் சிறந்த எலக்ட்ரிக் எஸ்யூவி

Published On மே 08, 2024 By ansh for மஹிந்திரா xuv400 ev

  • 1 View
  • Write a comment

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வசதிகளில் டூயல்10.25-இன்ச் ஸ்கிரீன்கள், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பின்புற ஏசி வென்ட்கள், டூயல் டோன் இன்டீரியர் தீம் மற்றும் புதிய பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் ஆகியவை அடங்கும்.  

2024 Mahindra XUV400 EL Pro: The Best Electric SUV Under Rs 20 Lakh

இந்த புத்தாண்டில் மஹிந்திரா இதன் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு ஒரு பெரிய அப்டேட் கொடுக்க முடிவு செய்து மஹிந்திரா XUV400 புரோ ரேஞ்சை (EC Pro மற்றும் EL Pro) அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய XUV400 ஆனது புதிய கேபின் தீம்கள், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிரைவருக்கான டிஸ்பிளே மற்றும் நவீன வசதிகள் மற்றும் டெக்னாலஜி போன்ற பல மாற்றங்களுடன் வருகிறது. சிறந்த பகுதி? இந்த புதிய பிட்கள் அனைத்தும் மிகச் சிறப்பான விலையில் வழங்கப்படுகின்றன: ரூ. 15.49 லட்சம் முதல் ரூ. 17.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.

எக்ஸ்-ஷோரூம் விலை

EC புரோ

ரூ.15.49 லட்சம்

EL புரோ (34.5kWh)

ரூ.16.74 லட்சம்

EL புரோ (39.4kWh)

ரூ.17.49 லட்சம்

தனித்துவமான வடிவமைப்பு

2024 Mahindra XUV400 EL Pro: The Best Electric SUV Under Rs 20 Lakh

XUV400 -ன் வெளிப்புற வடிவமைப்பின் அடிப்படையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் இது ஒரு நல்ல விஷயம் ஏனெனில் XUV400 ஏற்கனவே தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டுள்ளது. இது C-பிரிவு எஸ்யூவி ஆகும். குறிப்பாக  இந்த பிரிவில் உள்ள முக்கிய போட்டியாளர்களை விட ஒரு (பெரியது) மேலே உள்ளது. ஆகவே இது கேபினுக்குள் போதுமான இடத்தை கொண்டுள்ளது. இந்த முரட்டுத்தனமான வடிவமைப்பு காப்பர் இன்செர்ட்கள் போன்ற நவீன எலமென்ட்களால் நிரப்பப்பட்டுள்ளது, இது தெளிவான வேறுபாட்டை அளிக்கிறது.

ஒரு புத்தம் புதிய கேபின்

2024 Mahindra XUV400 EL Pro: The Best Electric SUV Under Rs 20 Lakh

2024 XUV400 காரில் உள்ள மிகப்பெரிய மாற்றம் இதன் புத்தம் புதிய கேபின் ஆகும். எஸ்யூவி -யின் முந்தைய பதிப்பு முழுவதும் பிளாக் கலர் இன்ட்டீரியருடன் வந்ததது. இது இப்போது பிளாக் மற்றும் ஏர்ரி கிரே ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கேபின் தீம் XUV400 காரின் உட்புறத்தை, குறிப்பாக டூயல்-டோன் ஷேடில் ஃபினிஷ் செய்யப்பட்ட புதிய டேஷ்போர்டு, மிகவும் நவீனமாகவும், பிரீமியமாகவும் இருக்கிறது. இந்த தீம் XUV400 காரின் பிரீமியம் ஃபீல் மட்டுமல்லாமல் கேபின் வென்டிலேஷனையும் அதிகரிக்கின்றது.

புதிய தீம் தவிர மஹிந்திரா தனது எஸ்யூவி -யின் சிறந்த விவரங்களிலும் கவனம் செலுத்தியுள்ளது. டாஷ்போர்டு முழுவதும் கிளாஸி பிளாக் எலமென்ட்களை கொண்டுள்ளது. இது தொடுவதற்கு நன்றாக இருக்கிறது மற்றும் அது ஒரு பிரீமியம் உணர்வை அளிக்கிறது. வெளிப்புறத்தைப் போலவே கேபினும் ஏசி வென்ட்கள் மற்றும் சென்டர் கன்சோலில் காப்பர் எலமென்ட்களை பெறுகிறது, மேலும் டோர் ஹேண்டில்கள் இப்போது குரோமில் ஃபினுஷ் செய்யப்பட்டுள்ளது. இது கேபினின் தீம் உடன் சரியாக பொருந்துகிறது. ஆனால் கேபின் தீம் மட்டும் இங்கு பெரிய மாற்றமாக இல்லை.

பெரிய ஸ்கிரீன்கள்

Mahindra XUV400 EV Centre Console

பயனர் அனுபவத்தை இன்னும் சிறப்பாக்க மஹிந்திரா XUV400 காரின் ஸ்கிரீன்களை மேம்படுத்தியுள்ளது. முதலில் டிரைவருக்கான புதிய 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, இது ஒட்டுமொத்த வடிவமைப்பில் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் சிறப்பாக உள்ளது மற்றும் ஒவ்வொரு டிரைவ் மோடும் அதற்கு ஏற்ற சொந்த தீம் -ஐ பெறுகிறது. மேலும் நேவிகேஷனை எளிதாக்க மேப்  டிரைவரின் டிஸ்பிளேவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எனவே நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதைப் பார்க்க இன்ஃபோடெயின்மென்ட் செட்டப்பை பார்க்க வேண்டியதில்லை. இது முழுத்திரையிலும் நேவிகேஷன் வியூ உடன் வருகிறது. நீங்கள் தற்செயலாக கூட ஒரு திருப்பத்தைத் தவறவிடாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

புதிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் XUV400 -ன் கேபினுக்கு ஒரு சிறந்த கூடுதலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது மஹிந்திரா XUV700 காரில் வழங்கப்படும் அதே யூஸர் இன்டர்ஃபேஸை பெறுகிறது. மேலும் கிராபிக்ஸ் நன்றாக உள்ளது. டச் ஸ்கிரீன் மிகவும் மென்மையானது மற்றும் பயன்படுத்த எளிதானது. மேலும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றை சப்போர்ட் செய்கின்றது. இது OTA அப்டேட் மூலம் விரைவில் கிடைக்கும்.

Mahindra XUV400 EV Digital Cluster

இந்த புதிய திரையுடன் நீங்கள் மஹிந்திராவின் AdrenoX கனெக்டட் கார் வசதிகளையும் பெறுவீர்கள். இந்த 55+ வசதிகளை உங்கள் ஃபோனிலிருந்து பயன்படுத்தலாம். ரோடு சைடு அசிஸ்ட், வாலட் மோடு, வெஹிகிள் ஸ்டேட்டஸ், ரிமோட் வெஹிகிள் ஃபங்ஷன்ஸ், இ-கால் மற்றும் SOS ஆகியவை அடங்கும். இந்த வசதிகள் உங்கள் அனுபவத்தை தடையற்றதாக மாற்றுவது மட்டுமல்லாமல் கவலையின்றி டிரைவிங் செய்யவும் உதவுகின்றது.

நவீன தொழில்நுட்பம்

2024 Mahindra XUV400 EL Pro: The Best Electric SUV Under Rs 20 Lakh

உங்கள் அனுபவத்தில் எந்த சமரசமும் செய்யத் தேவையில்லை என்பதை மஹிந்திரா உறுதி செய்துள்ளது. மேலும் புதிய ஸ்கிரீன்கள் தவிர XUV400 இப்போது டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பின்புற ஏசி வென்ட்கள், அலெக்சா இன்டெகிரேஷன் (விரைவில் கிடைக்கும்) போன்ற பல புதிய வசதிகளுடன் வருகிறது. (OTA அப்டேட் மூலம்), வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் USB டைப்-சி மற்றும் பின்புற பயணிகளுக்கான 12V சாக்கெட். இந்த வசதிகளைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் XUV400 அனுபவத்தில் எதுவும் விடுபட்டதாக நீங்கள் உணரத் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

நிறைய இட வசதி

2024 Mahindra XUV400 EL Pro: The Best Electric SUV Under Rs 20 Lakh

XUV400 இதன் பிரிவில் மிகப்பெரிய எஸ்யூவி ஆகும். மேலும் இது ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் இதன் உரிமையாளர்களுக்கு பயனளிக்கிறது. முதலில் கேபினுக்குள் இருக்கும் இடம். இருக்கைகள் வசதியாக இருப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கும் பயணிகளுக்கும் போதுமான இடவசதியையும் வழங்குகிறது. மேலும் ஃபுளோர் உயர்வாக இல்லை என்பதால் பின்பக்க பயணிகளும் இடத்தை ரசித்து வசதியாக அமர்ந்து கொள்ளலாம்.

2024 Mahindra XUV400 EL Pro: The Best Electric SUV Under Rs 20 Lakh

இரண்டாவதாக 378 லிட்டர் பூட் ஸ்பேஸ் நீண்ட பயணங்களை மிகவும் எளிதாக்குகிறது. நீங்கள் இங்கே 3-4 பைகளை எளிதாக எடுத்துச் செல்லலாம். மேலும் ஒரு சிறிய பைக்கு இன்னும் கொஞ்சம் இடம் இருக்கும்.

இந்த பிரிவில் உள்ள கார்களிலேயே பாதுகாப்பில் சிறந்தது

2024 Mahindra XUV400 EL Pro: The Best Electric SUV Under Rs 20 Lakh

பாதுகாப்பு என்று வரும்போது ​​XUV400 காரில் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஆல்-வீல்-டிஸ்க் பிரேக்குகள், IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவற்றை வழங்குகிறது.

இந்த அனைத்து பாதுகாப்பு வசதிகளும் XUV400 காரை உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பான தேர்வாக மாற்றுகிறது.

உற்சாகமளிக்கும் செயல்திறன் கொண்டது

2024 Mahindra XUV400 EL Pro: The Best Electric SUV Under Rs 20 Lakh

XUV400 காரின் கேபின் மற்றும் வசதிகள் பட்டியல் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டு இருந்தாலும் ஒரே ஒரு விஷயம் இதன் அற்புதமான செயல்திறன் ஆகும். XUV400 எலக்ட்ரிக் கார்களை ஓட்டுவது எவ்வளவு ஃபன் ஆக இருக்கும் என்பதை உங்களுக்கு உணர்த்துகிறது. XUV400 வெறும் 8.3 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும். மேலும் முந்திச் செல்வது சிரமமற்றதாகத் தெரிகிறது. நீங்கள் நகரத்திலோ அல்லது நெடுஞ்சாலையிலோ வாகனம் ஓட்டினாலும் பரவாயில்லை பவர் பற்றாக்குறையை நீங்கள் உணர மாட்டீர்கள்.

சிறப்பானசவாரி தரம்

2024 Mahindra XUV400 EL Pro: The Best Electric SUV Under Rs 20 Lakh

இந்த அற்புதமான செயல்திறன் மட்டுமல்ல சவாரி தரமும் நன்றாக உள்ளது. சஸ்பென்ஷன் மேடுகள் மற்றும் குழிகளை நன்றாக சமாளிக்கின்றது. எனவே மோசமான சாலைகளில் கூட கேபினுக்குள் அதிக அசைவுகளை நீங்கள் உணர மாட்டீர்கள். செயல்திறன் மற்றும் சவாரி தரம் ஆகியவற்றின் இந்த கலவையானது வசதியை அப்படியே வைத்திருக்கும் போது உற்சாகமான டிரைவிங் அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது.

சார்ஜிங் பற்றி கவலைப்பட தேவையில்லை

2024 Mahindra XUV400 EL Pro: The Best Electric SUV Under Rs 20 Lakh

எலக்ட்ரிக் கார் வாங்கும் போது ​​சார்ஜிங் செயல்முறை குறித்து மக்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கும். அதை எப்படி சார்ஜ் செய்வது? சார்ஜிங் நேரம் மிகவும் அதிகமாக உள்ளதா? ஒவ்வொரு முறையும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் செய்ய வேண்டுமா? மஹிந்திரா இந்த விவரங்களை அறிந்திருக்கிறது. மற்றும் XUV400 உடன் 50kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் திறன்களை மட்டும் வழங்குகிறது - இது வெறும் 50 நிமிடங்களில் 0-80 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகக் கூடியது - XUV400, ஆனால் வீட்டிலேயே சார்ஜ் செய்யும் ஆப்ஷனையும் வழங்குகிறது. காரை சார்ஜரில் கனெக்ட் செய்தால் ஓரிரு மணி நேரத்தில் அது முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும்.

சார்ஜிங் வேகம்

50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர்

50 நிமிடங்கள் (0-80 சதவீதம்)

7.2 kW ஏசி ஹோம் சார்ஜர்

6.5 மணி நேரம்

3.3 kW ஏசி ஹோம் சார்ஜர்

13.5 மணி நேரம்

ரியல் வேர்ல்டு நிலைமைகளில்  உங்களுக்கு 300-310 கி.மீ ரேஞ்ச் கிடைக்கலாம். இது வாரம் முழுவதும் உங்களுக்கு எளிதாக டிரைவிங் செய்ய போதுமானது.

ஆனால் பேட்டரி வெப்பமடைய ஆரம்பித்தால் என்ன செய்வது? மஹிந்திரா உங்களை அங்கேயும் சிறப்பான வேலை செய்துள்ளது. XUV400 உடன் நீங்கள் மஹிந்திராவின் பேட்டரி மேலாண்மை அமைப்பைப் பெறுகிறீர்கள், இது பேட்டரி அதிக வெப்பமடைவதையும் சேதமடைவதையும் தடுக்கிறது, அதே நேரத்தில் இதன் ஆயுளையும் அதிகரிக்கிறது.

தீர்ப்பு

2024 Mahindra XUV400 EL Pro: The Best Electric SUV Under Rs 20 Lakh

ஒரு முழுமையான தொகுப்பு இப்படித்தான் இருக்கும். மஹிந்திரா XUV400 சிறந்த வடிவமைப்பு, பிரீமியம் கேபின், நவீன வசதிகள், கனெக்டட் கார் டெக்னாலஜி, சிறந்த-இன்-கிளாஸ் பாதுகாப்பு, உங்கள் முழு குடும்பத்திற்கும் இடம், அற்புதமான டிரைவ் அனுபவம், வசதியான சவாரி தரம் மற்றும் கவலையற்ற சார்ஜிங் ஆப்ஷன் ஆகியவற்றை வழங்குகிறது. இவை அனைத்தும் சிறப்பான விலையில் கிடைக்கும். மஹிந்திரா XUV400 புரோ ஒரு குடும்ப காருக்கு தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது, மேலும் இதன் எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் சஸ்டெய்னபிள் லைஃப்ஸ்டைலை நோக்கி செல்ல உதவுகிறது.

Published by
ansh

சமீபத்திய எஸ்யூவி கார்கள்

வரவிருக்கும் கார்கள்

சமீபத்திய எஸ்யூவி கார்கள்

×
We need your சிட்டி to customize your experience