2023 Tata Safari ரிவ்யூ: காரில் உள்ள செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் போதுமானதுதானா ?
Published On மார்ச் 20, 2024 By ansh for டாடா சாஃபாரி 2021-2023
- 1 View
- Write a comment
எஸ்யூவி இப்போது ஒரு புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ADAS மற்றும் ரெட் டார்க் எடிஷன் ஆகியவற்றை கொண்டுள்ளது.
டாடா சஃபாரி 2021 ஆம் ஆண்டில் அதன் புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து டாடாவின் ஃபிளாக்ஷிப் கார்களில் பெரும்பாலான வாடிக்கையாளர்களின் விரும்பும் ஒன்றாக உள்ளது. எஸ்யூவி ஒரு கம்பீரமான தோற்றம், பிரீமியம் கேபின் மற்றும் பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்குகிறது. ஆனால் சஃபாரியில் சில அம்சங்களைக் பார்க்க முடியவில்லை. எனவே சில வாடிக்கையாளர்களை வேறு கார்களை பரிசீலனை செய்ய வேண்டிய நிலை இருந்தது.. இப்போது டாடா அதன் சஃபாரி எஸ்யூவி -யை மேம்படுத்தியுள்ளது. மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய ரெட் டார்க் பதிப்பையும் சேர்த்துள்ளது. ஆனால் இந்த அப்டேட் சஃபாரியின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டதா? வாருங்கள் நாம் கண்டுபிடிக்கலாம்.
தோற்றம்
2023 -ஆண்டில் சஃபாரி எப்போதும் போலவே தோற்றமளிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் எஸ்யூவி -யின் ரெட் டார்க் எடிஷனை நாங்கள் ஓட்டினோம் இது ஆல் பிளாக் நிற வெளிப்புறத்தில் 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ஸ்போர்ட்டி ரெட் எலமென்ட்களுடன் வருகிறது. இது முன் கிரில்லில் ரெட் கலர் இன்செர்ட்களையும் பக்கத்தில் "#Dark" பேட்ஜிங் மற்றும் ரெட் முன் பிரேக் காலிப்பர்களையும் பெறுகிறது. இந்த ரெட் ஹைலைட்ஸ் ஆல் பிளாக் தோற்றத்துடன் நிச்சயமாக சஃபாரியின் ஸ்போர்ட்டியான தன்மையை வெளிக்காட்டும் வகையில் ஆதிக்கம் செலுத்தும் சாலை தோற்றத்தை கொடுக்கின்றது
சுற்றிலும் சிவப்பு நிறம்
நீங்கள் சஃபாரி ரெட் டார்க் பதிப்பில் நுழையும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால் இது நிலையான சஃபாரியை போன்ற உணர்வை கொடுக்கவில்லை. இந்த ஸ்பெஷல் எடிஷனில் பிளாக் மற்றும் ரெட் கேபின் தீம் மற்றும் டோர் ஹேண்டில்கள் மற்றும் சென்டர் கன்சோலில் உள்ள அனைத்து ரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் ரெட் எலமென்ட்கள் உள்ளன. இந்த ரெட் இன்செர்ட்கள் ஸ்டாண்டர்ட்டு சஃபாரியை விட கேபினை அதிக ஸ்போர்ட்டியாக உணரவைக்கும். இதன் முன் இருக்கைகள் வசதியாகவும் ஆதரவாகவும் வென்டிலேஷனுடனும் இருக்கும். டேஷ்போர்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்குகள் தரமானவை மற்றும் தொடுவதற்கும் அழகாக இருக்கும்.
நீங்கள் இரண்டாவது வரிசைக்குச் செல்லும்போதும் கம்ஃபோர்ட் அப்படியே இருக்கும். நாங்கள் வந்திருந்த சஃபாரி கேப்டன் இருக்கைகளுடன் நீண்ட நாள் சோதனைக்கு ஏற்றபடி வசதியாக இருந்தது. ரெட் டார்க் எடிஷனில் 2 -வது வரிசை ஹெட்ரெஸ்ட்களில் கூடுதல் குஷனிங் உள்ளது. அதை சரிசெய்ய முடியும் இது ஏற்கனவே வசதியான இருக்கைகளுக்கு கூடுதல் வசதியை சேர்க்கிறது. இருப்பினும் இந்த இருக்கைகள் உயரமாக அமைக்கப்பட்டுள்ளன மேலும் உயரமான பயணிகள் ஜன்னலின் மேற்பகுதிக்கு சற்று நெருக்கமாக உணருவார்கள். இந்த சிறப்பு பதிப்பின் மூலம் நீங்கள் ரெட் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் சன்ரூஃப் சுற்றி ரெட் மூட் விளக்குகள் மிகவும் அழகாக இருக்கும். ஆனால் இந்த அப்டேட் உடன் சேர்க்கப்பட வேண்டிய இரண்டு விஷயங்களாக பார்க்கப்போனால் இரண்டாவது வரிசைக்கான கப் ஹோல்டர்கள் மற்றும் விண்டோ ஷேடுகள் இன்னும் சஃபாரியில் கொடுக்கப்படவில்லை.
மூன்றாவது வரிசை இந்த பிரிவில் மிகவும் அகலமானதாக இல்லாவிட்டாலும் இங்குள்ள இருக்கைகள் இரண்டு சராசரி அளவுள்ள பெரியவர்களுக்குப் போதுமானதாக இருக்கும். மேலும் அவர்களுக்கு போதுமான ஹெட் மற்றும் லெக் ரூமை வழங்கும் (சஃபாரியின் பெஞ்ச் சீட் வேரியன்ட்களில் இந்த லெக்ரூம் குறைக்கப்பட்டுள்ளது) . ஆனால் உயரமான நபர்களுக்கு இந்த கடைசி வரிசை உட்கார ஏற்ற இடமாக இருக்காது.
ஒரு புதிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்
புதிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சஃபாரியில் டாடா சேர்த்திருக்கும் மிகப்பெரிய அப்டேட்களில் ஒன்றாகும். அதன் பிரிவின் மற்ற மாடல்கள் பெரிய டிஸ்பிளேவை வழங்கினாலும் சஃபாரி அதன் சிறிய 8.8-இன்ச் திரையுடன் நீண்ட காலமாகவே விற்பனை செய்யப்பட்டு வந்தது. அது இப்போது வரை. சஃபாரியின் அனைத்து வேரியன்ட்களிலும் வழங்கப்படும் இந்த பெரிய யூனிட் அதிக தெளிவு, சிறப்பான காட்சி மற்றும் சிறந்த கிராபிக்ஸ் ஆகியவற்றுடன் வருகிறது.
இந்த புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், டிரைவர் அசிஸ்ட் வசதிகள் போன்ற பல்வேறு செயல்பாடுகளை கன்ட்ரோல் செய்ய உங்களை அனுமதிக்கிறது மற்றும் கேபினின் காற்றின் தரத்தை இங்கே பார்க்கலாம். இந்த சிஸ்டம் எளிதாகப் பயன்படுத்துவதற்கான விட்ஜெட்களுடன் வருகிறது. அவை தற்போதைக்கு லிமிடெட் ஆகவே உள்ளன. ஆனால் டிரைவ் தகவல் மற்றும் TPMS போன்றவற்றில் சாஃப்ட்வேர் அப்டேட் மூலமாக கூடுதல் வசதிகள் சேர்க்கப்படலாம்.
இந்த அமைப்பு வேலை செய்யும் போது அது நன்றாக வேலை செய்கிறது. இருப்பினும் ஒவ்வொரு முறை நீங்கள் காரை ஸ்டார்ட் செய்யும் போதும் லோட் ஆக சுமார் ஐந்து முதல் 10 நிமிடங்கள் ஆகும் இது அந்த காலத்திற்கு தாமதமாக இருக்கும். எங்கள் சோதனையில் காரில் சிஸ்டம் ஒரு சிக்கலை சந்தித்தது மற்றும் இரண்டு நாட்களுக்கு வேலை செய்யவில்லை. அந்த நேரத்தில் ரிவர்சிங் கேமரா கூட இயங்கவில்லை. ஒரு அப்டேட் மூலமாக விரைவில் இந்த பிழைகள் சரி செய்யப்படும் என்று நம்புகிறேன்.
எப்போதும் போல் கூடுதல் வசதிகள் நிறைந்துள்ளது
புதிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனை தவிர சஃபாரி இன்னும் பல விஷயங்களை வழங்குகிறது. இது மிகவும் வித்தியாசமாக இல்லாவிட்டாலும் பல்வேறு தளவமைப்புகளுடன் புதுப்பிக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை பெறுகிறது. இந்த அப்டேட்டட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை பயன்படுத்தி நீங்கள் இப்போது ஒவ்வொரு டயரின் அழுத்தத்தையும் நிகழ்நேர ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றை சரிபார்க்கலாம். மேலும் இது வேலையில் டிரைவர் அசிஸ்ட்டை சரிபார்க்க ஒரு பகுதியையும் கொண்டுள்ளது.
சஃபாரி ஏற்கனவே வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் முதல் மற்றும் இரண்டாவது வரிசைகளுக்கான வென்டிலேட்டட் இருக்கைகளுடன் (கேப்டன் இருக்கைகள் மட்டும்) வந்துள்ளது. எலக்ட்ரிக் பாஸ் மோடை பயன்படுத்தி இரண்டாவது வரிசையில் (இடது பக்கம்) அமர்ந்திருக்கும்போது அதிக லெக்ரூமை உருவாக்கலாம் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் மூலம் மேலே திறந்த வானத்தின் பார்வையை அனுபவிக்கலாம்.
அதன் மூன்றாவது வரிசையில் USB மற்றும் Type-C சார்ஜர்கள் AC கன்ட்ரோல் கொண்ட AC வென்ட்கள் கப் ஹோல்டர்கள் மற்றும் ஒவ்வொரு பக்கத்திலும் சிறிய பாக்கெட்டுகள் போன்ற பல வசதிகளையும் வழங்குகிறது.
பூட் ஸ்பேஸ்
சஃபாரி காரின் பூட் முன்பு போலவே உள்ளது. மூன்றாவது வரிசையை மடித்தால் அது இரண்டு சிறிய பைகளுக்கு மட்டுமேயான இடத்தை வழங்குகிறது. ஆனால் நீங்கள் அதை கீழே தள்ளும்போது 447 லிட்டர் தட்டையான ஃபுளோரை பெறுவீர்கள். இது பிரிவில் மிகப்பெரியதாக இல்லாவிட்டாலும் நீண்ட சாலைப் பயணங்களுக்கு உங்கள் சாமான்களை எளிதாக வைத்திருக்க போதுமானது.
எப்போதையும் விட பாதுகாப்பானது
சஃபாரி ஏற்கனவே எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஹில் ஹோல்ட் மற்றும் டிசென்ட் கண்ட்ரோல் ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் ABS உடன் EBD மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற அம்சங்களுடன் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த பட்டியலில் இரண்டு புதிய அம்சங்களை டாடா சேர்த்துள்ளது: 360 டிகிரி கேமரா மற்றும் ADAS.
சஃபாரியின் புதிய 360 டிகிரி கேமரா நல்ல கேமரா தரத்துடன் வருகிறது மற்றும் 2D மற்றும் 3D காட்சிகளை வழங்குகிறது மேலும் அதன் ADAS பட்டியலில் லேன் சேஞ்ச் வார்னிங், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஃபிரன்ட் மற்றும் பேக் கொலிஷன் வார்னிங், ரியர் கிராஸ்-டிஃராபிக் வார்னிங் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற வசதிகள் உள்ளன. இது எஸ்யூவியின் பாதுகாப்பை கணிசமாக அதிகரிக்கிறது.
ஆனால் டாடா லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் கொடுக்கப்படவில்லை. இவை நாட்டிலுள்ள பெரும்பாலான ADAS- பொருத்தப்பட்ட கார்களில் நீங்கள் காணக்கூடிய முக்கியமான அட்டானமஸ் டிரைவிங் வசதிகளாகும். இவற்றின் கிராஷ் டெஸ்ட் முடிவுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்.
இன்ஜின் மற்றும் செயல்திறன்
ஹூட்டின் கீழ் எந்த மாற்றமும் இல்லை. இது இன்னும் 2-லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது இது 170PS மற்றும் 350Nm அவுட்புட் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் வருகின்றது. ஆனால் இந்த அப்டேட் மூலம் இந்த இன்ஜின் புதிய BS6 லெவல் 2 விதிமுறைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது .
இருப்பினும் இந்த டீசல் யூனிட் சஃபாரியின் போட்டியாளர்களின் இன்ஜின் உடன் ஒப்பிடும்போது குறிப்பாக சத்தம் என்று பார்க்கும் போது சற்று குறைவாக ரீஃபைன்மென்ட் ஆக உள்ளது. ஆனால் டிரைவிபிலிட்டியில் எந்த சமரசமும் இல்லை எஸ்யூவி -யின் நகரத்தில் எளிதாக உள்ளது மற்றும் முந்துவதற்கும் நல்ல அளவு டார்க் உள்ளது. இது வசதியாக மூன்று இலக்க வேகத்தில் செல்கிறது.
சவாரி மற்றும் கையாளுதல்
சஃபாரியை ஓட்டுவது ஒரு அமைதியான அனுபவம். கேபின் இன்சுலேஷன் நன்றாக உள்ளது மற்றும் இன்ஜின் மற்றும் போக்குவரத்து சத்தம் இரண்டும் கட்டுக்குள் வைக்கப்படுகிறது. நகரத்தின் உள்ளே ஓட்டுநர் அனுபவம் வசதியானது மற்றும் ஸ்பீட் பிரேக்கர்களில் கூட எஸ்யூவி தாக்கத்தை நன்றாகக் குறைக்கிறது. இருப்பினும் சிறிய மேடுகள் மற்றும் குழிகள் மீது செல்லும் போது கேபினுக்குள் உணரலாம் மற்றும் நீங்கள் உடைந்த சாலைகள் உள்ள பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால் இதை நீங்கள் அதிகமாக உணர்வீர்கள். நெடுஞ்சாலையில் சஃபாரி அதிக வேகத்தில் கூட நிலையாக இருக்கும் எனவே நீங்கள் வசதியாக உட்கார்ந்து ஓட்டத்தை அனுபவிக்க முடியும்.
தீர்ப்பு
அதன் அனைத்து புதிய அம்சங்கள் மற்றும் இந்த புதிய ரெட் டார்க் பதிப்பில் டாடா சஃபாரியின் பலவீனங்களை சரி செய்து அதை சிறந்த ஆல்-ரவுண்டராக மாற்றியுள்ளது. சரி செய்யப்பட வேண்டிய சில விஷயங்கள் இன்னும் உள்ளன என்றாலும் கூட டாடா இந்த காரில் உள்ள பெரும்பாலான சிக்கல்களைத் தீர்த்துள்ளது.
டாடா சஃபாரியின் விலை ரூ.15.65 லட்சம் முதல் ரூ.25.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரெட் டார்க் எடிஷன் ரூ.22.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. பார்க்கப்போனால் இது பழைய சஃபாரி -யை விட விலை கூடுதல்தான். ஆனால் சிறந்த பாதுகாப்பு, பெரிய மற்றும் சிறந்த டிஸ்பிளே மற்றும் பிரீமியமான கேபின் ஆகியவற்றின் காரணமாக இந்த விலை நியாயமாக தெரிகிறது.