• English
  • Login / Register

துபாயை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட வைட் கோல்டு மெக்லாரன் 650S ஸ்பைடர்

published on நவ 16, 2015 10:08 am by bala subramaniam

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

மத்திய கிழக்கு நாடுகளுக்காக குறிப்பிடத்தக்க ஆடம்பர வகையில், 650S ஸ்பைடர் காரின் ஒரு சிறப்பு பதிப்பை, 2015 துபாய் மோட்டார் ஷோவில் மெக்லாரன் நிறுவனம் வெளியிட உள்ளது. 650S ஸ்பைடர் ஆல் சஹாரா 79 என்ற பெயரில் அமைந்த இந்த காரை, மத்திய கிழக்கு நாடுகளுக்காக பிரத்யேகமான முறையில் மெக்லாரன் சிறப்பு ஆப்ரேஷன்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கத்திய நிலப்பகுதியில் உள்ள தங்க நிறத்திலான மணலை தழுவும் வண்ணம், இந்த ஆல் சஹாரா 79 காரை, பியர்லெஸாண்ட் வைட் கோல்டு நிறம் பூசப்பட்டுள்ளது. இந்த காரின் பெயரில் இடம்பெற்றுள்ள 79 என்ற எண், காருக்கு பூசப்பட்டுள்ள பெயிண்ட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள 24 கேரட் தங்கத் துகள்களின் அணு எண்ணை குறிப்பதாக அமைந்துள்ளது. 570S கூபே மற்றும் ஒரு திருத்தியமைக்கப்பட்ட P1 உடன், இந்த ஆல் சஹாரா 79 காரையும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

இந்த 650S ஸ்பைடர் ஆல் சஹாரா 79 காரில், ஒரு உள்ளிழுக்கும் கடின கூரை, க்ளொஸ் கருப்பு நிறத்திலான எடைக்குறைந்த ஃபோர்ஜ்டு அலாய் வீல்கள், கார்பன் ஃபைபர் இன்ஃபியூஸ் சைடு இன்டெக்ஸ், முன்புற ஸ்பிலிட்டர் மற்றும் பின்புற டிஃப்பியூஸர், முழு நீள கார்பன் ஃபைபர் MSO-பிராண்டு பக்கவாட்டு பிளெய்டுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. உள்புற வடிவமைப்பில், கருப்பு மற்றும் ஆல்மண்டு வைட் லேதர் அப்ஹோல்ஸ்டர் கொண்ட மின்னூட்டத்தில் இயங்கி – மாற்றியமைக்கும் வசதியுள்ள ஸ்போர்ட்ஸ் சீட்கள் உடன் ஒளிரும் தையல்கள், ஆல் சஹாரா 79 பெயிண்ட் நிறத்திட்டம் கொண்ட ஸ்டீயரிங் வீல், ஹீட்டிங் மற்றும் வென்ட்டிலேஷன் கன்ட்ரோல்களை சுற்றி சென்டர் கன்சோல் மற்றும் டோர் பேனல்கள், ஸ்விட்ச் கியர் மற்றும் ஹீட்டிங் வென்ட்களில் டார்க் கோல்டன் நிறம் மூலம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

650S கூபே மற்றும் 650S ஸ்பைடர் ஆகியவற்றில் காணப்படும், அதே மிட்-மவுண்ட் ஆன 3.8-லிட்டர் ட்வின் டர்போ V8 என்ஜினை பெற்று, 7,250rpm-ல் 641 bhp ஆற்றலையும், 678 Nm முடுக்குவிசையையும் அளிக்கிறது. என்ஜினின் செயல்திறனில் எந்த மாற்றமும் இல்லாமல், 0-வில் இருந்து மணிக்கு 100 கி.மீ வேகத்தை அடைய 3.0 விநாடிகளை எடுத்துக் கொள்கிறது. அதிகபட்ச வேகமாக, மணிக்கு 329 கி.மீ வரை எட்டுகிறது.

மத்திய கிழக்கு பிரதேசத்திற்கான 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாடல்களை, சர்வதேச அளவில் MSO திருத்தி அமைக்கிறது. இந்த திருத்தி அமைப்பில், தனித்தன்மையுள்ள நிறங்கள், தையல்கள், லேதர்கள் ஆகியவற்றில் இருந்து ஏரோடைனாமிக்ஸ் மேம்பா டுகள் வரையுள்ள தேர்வுகளை பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகள்

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience