• English
  • Login / Register

டோக்கியோ மோட்டார் ஷோ 2015-யின் முதல் நாளில்  விஷன் டோக்கியோ அதிக்கம் செலுத்தியது

published on அக்டோபர் 29, 2015 05:03 pm by sumit

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

Vision Tokyo

டோக்கியோ மோட்டார் ஷோ 2015 நேற்று துவங்கிய நிலையில், பெட்ரோல் வாகனங்களின் மீதான ஆர்வத்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த ஷோவில் எல்லா முக்கிய வாகன தயாரிப்பாளர்களும், தங்களின் திறமைகளை வெளி காட்ட முயன்று வரும் நிலையில், மெர்சிடிஸ்-பென்ஸின் விஷன் டோக்கியோ, முதல் நாளின் ஷோவை தன்வசப்படுத்திக் கொண்டது.

இந்த ஜெர்மன் கார் தயாரிப்பாளர், தனது மேம்படுத்தப்பட்ட கார் தொழில்நுட்பத்தின் (விஷன் டோக்கியோ) வடிவமைப்புத் திட்டங்களை ஒரு மேலோட்டமான முறையில் வெளியிட்டது. ஸீரோ-எமிஷன் டிரைவ்லைன் மற்றும் ஹோலோகிராஃபிக் மல்டி-மீடியா போன்ற தொழில்நுட்பங்களை, மெர்சிடிஸ் காட்சிக்கு வைத்திருந்தது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, சுயமாக ஓட்டும் மாடல்களின் தயாரிப்பை, அது வேகப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பதாக தெரிகிறது.

இந்த கார் தயாரிப்பாளரின் கருத்துப்படி, இந்த புதிய 5 சீட்களை கொண்ட காரின் மூலம், எதிர்காலத்தில் ஒரு பெரிய நகரின் போக்குவரத்து நெரிசலின் இடையே சிக்கி தவிக்கும் ஒரு காரில் எந்த மாதிரியான வாழ்வாதாரங்களை கொண்டிருக்கும் என்பதை விளங்கி கொள்ள முடிகிறது.

Vision Tokyo

தொடர்புடைய செய்தி: 2015 டோக்கியோ மோட்டார் ஷோ நேரடி: NSX ஹைபிரிடு மற்றும் FCV ஹைட்ரஜன் ஃப்யூயல் வெஹிக்கிள் ஆகியவற்றை ஹோண்டா காட்சிக்கு வைத்தது

இந்த விஷன் டோக்கியோவின் நீளம் 4803mm, உயரம் 1600mm, மிக நீண்ட அகலமாக 2100mm என்ற அளவுகளை பெற்றுள்ளது. இதில் ஒரு பெரிய ஒற்றை கிரிப்சைடு டோரை கொண்டு, அது 2 நிமிர்ந்த ஹீன்கர்களின் மூலம் மேல்நோக்கி திறக்கப்பட்டு, மேற்கூரையின் மீது இணையாக சென்று தங்குகிறது.

இந்த வாகனத்தின் கிரில் மற்றும் வீல்கள் உட்பட வெளிப்புற அமைப்பில், நீல நிறம் அதிகபடியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் “டீப் மிஷன் லேன்னிங்” மற்றும் ஸ்மார்ட் பிரிடிக்டீவ் என்ஜின் செயல்பாடுகளை கொண்டுள்ளது. இந்த நான்கு சக்கர வாகனத்தை மேனுவலாக கூட ஓட்ட முடியும். அதற்கு சீட்டின் அருகே அமைந்துள்ள கெளச்சை முன்நோக்கி நகர்த்தினால் போதுமானது.

Vision Tokyo Steering

மேலும் படிக்க: 2015 டோக்கியோ மோட்டார் ஷோ நேரடி: டோக்கியோ மோட்டார் ஷோவில் அரங்கேற்றம் காண உள்ள கார்கள்

வழக்கமான சீட்களின் நிலை நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 5 க்கும் அதிகமானோர் அமரும் வகையிலான ஒரு கெளச் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் உட்புறவியலில், நவீன எலக்ட்ரோனிக்ஸ் மற்றும் மல்டிமீடியா டிவைஸ்களின் விரிவான பயன்பாட்டை காணும் வகையில், ஏராளமான டிஸ்ப்ளேகளை காட்டும் ஒரு 3-D ஹோலோகிராமை கொண்டுள்ளது.

அமைப்பு மற்றும் ஆற்றல் அளவு ஆகியவை குறித்த தகவல்கள் இன்னும் மறைமுகமாகவே வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வாகனத்தை முழுமையாக ஒரு முறை சார்ஜ் செய்தால், ஏறக்குறைய 609 மைல்கள் வரை பயணிக்கலாம் என்ற உறுதியான நம்பிக்கை நிலவுகிறது.

மெர்சிடிஸ்-பென்ஸின் மூலம் சமீபத்திய ஆண்டுகளில் காட்சிக்கு வைக்கப்பட்ட விஷன் இனர்- G-ஃபோர்ஸ், AMG விஷன் கிரான் துரிஷ்மோ மற்றும் G-கோடு உள்ளிட்டவைகளின் வடிவமைப்பு-அடிப்படையிலான கார்களின் தொழில்நுட்பங்களின் சமீபகால வரிசையில் விஷன் டோக்கியோவும் இணைக்கிறது.

Vision Tokyo Cabin

உங்களுக்காக பரிந்துரைக்கப்பட்டது: 2015 டோக்கியோ மோட்டார் ஷோ நேரடி: சுசுகி இக்னிஸ் சர்வதேச அரங்கேற்றத்தை பெறுகிறது

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience