MP4-X தொழில்நுட்பம் மூலம் எதிர்கால பார்மூலா ஒன் கார்கள் தயாரிப்பிற்குள் மெக்லாரன் நுழைகிறது: வீடியோ இணைக்கப்பட்டுள்ளது

published on டிசம்பர் 08, 2015 06:06 pm by akshit

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மெக்லாரன் ரேஸிங் லிமிடேட் (மெக்லாரன் ஹோண்டா), தனது MP4-X தொழில்நுட்பத்தை வெளியிட்டு, எதிர்காலத்தில் பார்மூலா ஒன் கார்களின் உருவாக்கம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. எதிர்காலத்திற்குரிய ரேஸ் காரின் மூடப்பட்ட–காக்பிட்டை, மாற்று ஆற்றல் மூலங்களை கொண்டு வடிவமைத்து, பல்வேறு வகையிலான ஏரோடைனாமிக் தேவைகளை கருத்தில் கொண்டு சேசிஸ் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டியில் கலந்து கொள்ளும் போது இந்த காரில் தோல்வி அல்லது பிரச்சனை ஏற்பட்டால், அதை பல்வேறு வழிகளில் தொடர்புக் கொள்ளும் வசதிகளை கொண்டுள்ளது.

இந்த மூடப்பட்ட காக்பிட்டிற்குள் டிரைவரின் தலைக்கு மேல் உள்ள டிஸ்ப்ளே மூலம் மிகவும் அருகில் உள்ள போட்டியாளர்களின் நிலைகள், கொடி மற்றும் கவனிக்க வேண்டிய தகவல்கள், விபத்து ஏதாவது நடைபெற்று இருந்தால் அந்த இடம் போன்ற விறுவிறுப்பான ரேஸ் குறித்த தகவல்களை டிரைவர் அறிந்து கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, இந்த காரில் உள்ள ஒரு பிரைன் செனாப்டிக் கன்ட்ரோல் சிஸ்டம் மூலம் வாகனத்தில் உள்ள அமைப்புகளை இயக்கும் டிரைவரின் மூளையில் ஏற்படும் எலக்ட்ரிக்கல் சிக்னல்களை மேற்பார்வையிடுகிறது.

இது குறித்த ஒரு அறிக்கையில் மெக்லாரன் பிராண்ட் இயக்குனர் ஜான் ஆலர்ட் கூறுகையில், “எதிர்காலத்திற்குரிய மெக்லாரன் MP4-X தொழில்நுட்ப ரேஸ் கார் மூலம், நாங்கள் எதிர்காலத்திற்குள் நுழைந்து செல்ல விரும்புவதோடு, அதன் சாதகமான வடிவமைப்பை கற்பனை செய்து பார்க்கிறோம். F1 கார்களில் உள்ள முக்கிய அம்சங்களான – வேகம், குதூகலம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுடன் வளர்ந்து வரும் ஸ்போர்ட்ஸ் கார்களின் தன்மைகளாக விளக்கப்படும் – டிரைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்ட மூடப்பட்ட காக்பிட் மற்றும் ஹைபிரிடு பவர் டெக்னாலஜிகள் ஆகியவற்றை இதில் நாங்கள் ஒருங்கிணைத்து உள்ளோம்” என்றார். 

MP4-X-க்கான ஆற்றலக கண்டுபிடிப்புகளில், ‘மெலிதான பேட்டரி’களை சார்ஜ் செய்ய டிராக்கிற்கான இன்டக்டீவ் கப்லிங் பில்ட் உதவுகிறது. இது ஒரு தனி யூனிட்டாக இல்லாமல், வாகனத்தின் கிரஷ் கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும், சேசிஸில் சோலார் செல்கள் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த MP4-X தொழில்நுட்பம் என்பது, மெக்லாரன் நிறுவனத்தின் ஒரு இணை அமைப்பான மெக்லாரன் அப்லைடு டெக்னாலஜிஸின் ஒரு முதல்நிலை தயாரிப்பாகும். இந்த அமைப்பு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் ஆற்றல் உள்ளிட்ட பல தொழில்துறைகளில் மேம்பட்ட கண்டுபிடிப்புகளை அளிப்பதில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் வாசிக்க 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience