• English
  • Login / Register

டெல்லியில் வாகனங்களின் விலை உயருகிறது

published on நவ 16, 2015 10:22 am by nabeel

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர் :

நவம்பர் 5, 2015 வடக்கு டெல்லி நகராட்சி கார்கள் மீது விதிக்கப்படும் ஒரு முறை பார்கிங் கட்டணத்தை மாற்றி அமைப்பது பற்றிய திட்டம் ஒன்றை வெளியிட்டது. அந்த கட்டணம் காரின் பதிவு கட்டணத்தோடு சேர்க்கப்படும். இதன் விளைவாக வாகனத்தின் விலை  ரூ. 6 லட்சம் வரை உயரும். மேலும் ஆட்டோ ரிக்க்ஷா , இ -  ரிக்க்ஷா , இரு சக்கர வாகனங்கள் மற்றும் டேக்ஸிகள் இந்த ஒரு முறை பார்கிங் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு இந்த கட்டணம் உயர்த்தப்பட்டது. இப்போது மாநகராட்சியின் வருவாயை அதிகரிப்பதற்காகவும் சுற்றுபுறம் மாசு படுதலை கட்டுப்படுத்தும் விதமாகவும் இந்த கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவிக்கிறது.

இந்த கட்டண உயர்வால் வர்த்தக வாகனங்களின் விலை ரூ.9500  முதல் ரூ. 36000 வரை உயரும் என்றும் வர்த்தக வாகனங்கள் இல்லாத பிற வாகனங்கள் ரூ.6000 முதல் 6 லட்சம் வரை விலை உயர்வை சந்திக்கும் என்று தெரிகிறது. தெற்கு டெல்லி நகராட்சியும்,இ -  ரிக்க்ஷா மற்றும் இ – கார்ட் வாகனங்களுக்கு இந்த கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தனது திட்டத்தில் தெரிவித்துள்ளது. அதே சமயம், தெற்கு டெல்லி நகராட்சி, கிழக்கு டெல்லி நகராட்சியை போல் இன்னும் இந்த ஒரு முறை பார்கிங் கட்டணத்தை வர்த்தக / வர்த்தகம் இல்லாத வாகனங்கள் மீது விதிப்பதா என்பது பற்றி  முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டணத்தில் 95% மாநகராட்சிக்கு கிடைக்கும்.  NDMC நிர்வாக குழுவின்  சேர்மன் மோகன் பரத்வாஜ், “ டெல்லியில் அசுர கதியில் பெருகி வரும் வாகனங்கள் ஏற்படுத்தும் சுற்றுப்புற சூழல் அசுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் , மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டே இந்த கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. “ என்று கூறினார்.

NDMC அமைப்பின் எதிர் பிரிவின் தலைவர் மற்றும் கவுன்சலர் இந்த கட்டண உயர்வை ஒரு "வரி சுமை " என்று சொல்லி எதிர்த்தாலும் இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துவிட்டது. “ வர்த்தக வாகனங்களின் விலை உயர்வின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் .  இது நிச்சயம் ஒரு  கூடுதல் சுமையாக  மக்கள் மீது ஏற்றப்படும் " என்றும் அவர்  கூறினார்.

இதையும் படியுங்கள் :

மெர்சிடீஸ் பென்ஸ் அக்டோபர் 2015 ல் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது.

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience