• English
  • Login / Register

CES 2016 கண்காட்சியில் அறிமுகமான நாலாவது ஜென் யூகனெக்ட் சிஸ்டம்: டிப்போ, செரோகீ மாடல்களில் இணைக்கப்படலாம்

modified on ஜனவரி 07, 2016 02:55 pm by manish

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

உங்கள் ஐபோனுடன் உங்களது ஆண்ட்ராய்ட் காம்பாடிபிள் இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பை பேர் (pair) செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறதா? அல்லது உங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் ஃபோனுடன் ஆப்பிள் கார்பிளே(Carplay) ஆப்பை இணைப்பதற்கு சிரமமாக இருக்கிறதா? இனி இந்த கவலைகளைத் தூக்கி எறியுங்கள். ஏனெனில், ஃபியட் கிறிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் யூகனெக்ட் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டத்தின் மேம்படுத்தப்பட்ட 2016 வெர்ஷன் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லாஸ் வேகாஸில் நடந்து கொண்டிருக்கும் கன்ஸ்யூமர் எலக்டிரானிக்ஸ் ஷோ (CES) கண்காட்சியில், இந்நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட யூகனெக்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது.

தற்போது வெளியாகி உள்ள வெர்ஷன், யூகனெக்ட் அமைப்பின் நாலாவது ஜெனரேஷன் ஆகும். மேம்பட்ட ரெசல்யூசன் மற்றும் ரெஸ்பான்சிவ்னெஸ் கிடைக்கும் விதத்தில், இந்த அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. மாருதியின் சமீபத்திய பிரிமியம் ஹாட்ச்பேக் காரான பலீனோவில் உள்ள ஆப்பிள் கார்பிளே (CarPlay )மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ (Auto) போன்ற ஆப்களுடன் இந்த புதிய யூகனெக்ட்டை எளிதாக இணைத்துக் கொள்ளலாம். மேம்பட்ட டச் ரெஸ்பான்ஸ், ஒப்பீட்டளவில் வேகமாக ஸ்டார்ட்அப் ஆகும் தன்மை, வேகமாக செயல்படும் (ப்ராசஸிங்) திறன் மற்றும் அதிகரிக்கப்பட்ட ப்ரைட்னஸ் போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டிருப்பதால், இந்த புதிய இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு அதிக செயல்திறன் கொண்டதாக இருக்கிறது.

ஐபோன் வைத்திருப்பவர்கள், ஆப்பிளின் சிரி வாய்ஸ் கண்ட்ரோல் அமைப்பை பயன்படுத்த யூகனெக்ட் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டத்தை உபயோகித்துக் கொள்ளலாம். அதே போல, ஆண்ட்ராய்ட் சாதனங்கள் வைத்திருப்பவர்கள், மேம்படுத்தப்பட்ட யூகனெக்ட்டை பயன்படுத்தி ‘ஓகே கூகுள்’ மற்றும் கூகுள் வாய்ஸ் சர்ச் அப்ளிகேஷன்களை உபயோகித்துக் கொள்ளலாம். FCA நிறுவனத்தின் யூகனெக்ட் மார்கெட்டிங் பிரிவின் தலைவரான ஜோனி கிறிஸ்டென்சென், “யூகனெக்ட் கருவி மென்மேலும் வளர்ச்சி அடைந்து, சிறப்பான செயல்திறனோடு செயல்பட எங்கள் யூகனெக்ட் குழு அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறது,” என்று கூறினார். “நாலாவது ஜெனரேஷன் யூகனெக்ட் அமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஓய்வே இல்லாத இந்த இயந்திர வாழ்க்கையில் வெளிப்படும் அன்றாட மனஅழுத்தங்களைக் குறைக்க நாங்கள் முயற்சி எடுத்துள்ளோம். டிரைவர்கள் இந்த அமைப்பை உபயோகப் படுத்துவதன் மூலம், அவர்களது வாகனத்துடன் அவர்களை பல்வேறு விதத்தில் இணைத்துக் கொள்ள முடியும்.  அவர்களது ஒவ்வொரு பயணமும் நிச்சயமாக வித்தியாசமாக, இன்ஃபர்மேட்டிவாக, பொழுதுபோக்காக மற்றும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

டாட்ஜ் சார்ஜர் பர்ஸ்யூட் போலீஸ் காரில், இந்த அமைப்பு பொருத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. 12.1 அங்குலத்தில் வரும் இந்த புதிய இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு, FCA நிறுவனத்தின் ஏனைய ப்ரொடக்ஷன் மாடல்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இது எப்போது வரும் என்று ஏங்கும் விதத்தில் மேம்பாடுகளைப் பெற்றுள்ள இந்த அமைப்பு, அடுத்து வரும் ஜீப் மாடல்களில் பொருத்தப்பட்டு, இந்தியாவில் இனிதே அறிமுகமாகிறது. கிராண்ட் செரோகீ மற்றும் 4500 bhp சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய அசுர பலம் கொண்ட கிராண்ட் செரோகீ SRT போன்ற ஜீப் மாடல்கள் இந்த அமைப்பைத் தாங்கி வரவுள்ளன. ஃபியட் நிறுவனத்தின் டிப்போ, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால், அதிலும் இந்த அமைப்பு பொருத்தப்பட்டு வரும் என்று தெரிகிறது.

 மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience