மாருதி சுசுகியை விட, டாடா மோட்டார்ஸ் சிறப்பாக பணியாற்றி உள்ளது
published on பிப்ரவரி 18, 2016 01:51 pm by raunak
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
நெக்ஸான் உடன் விட்டாரா ப்ரீஸ்ஸாவை வைத்து பார்க்கும் போது, தொழிற்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி உள்ளதில் டாடா முன்னணி வகிக்கிறது!
சமீபத்தில் நடைபெற்ற 2016 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மற்றும் மாருதி சுசுகி ஆகிய இரு நிறுவனங்களும், தங்களின் அடுத்துவரவுள்ள சப்-4m SUV-க்களை காட்சிக்கு வைத்திருந்தன. மாருதி சுசுகியின் தயாரிப்பு மாதிரி போர்வையில் விட்டாரா ப்ரீஸ்ஸா உள்ள நிலையில், டாடாவின் நெக்ஸான் அடுத்தபடியாக தயாரிப்பு உருவம் பெற உள்ளது. இவ்விரண்டிலும் உள்ள தொழிற்நுட்பங்களை குறித்து பார்க்கும் போது, விட்டாரா ப்ரீஸ்ஸாவின் அடிப்படையான XA-ஆல்பா, கடந்த 2012 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் நெக்ஸானின் தொழிற்நுட்பம், கடந்த 2014 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது ஆகும்.
இப்போது இந்த செய்தியின் தலைப்பிற்கு தொடர்புடைய விஷயத்திற்கு வருவோம். மாருதி சுசுகியுடன் ஒப்பிடும் போது, தனது தொழிற்நுட்பத்தை ஒரு தனித்தன்மையான வழியில் டாடா பயன்படுத்தி உள்ளது. தொழிற்நுட்பங்களை பொறுத்தவரை எப்போதும் காட்சிக்காகவும், அலங்காரத்திற்காகவும் உருவாக்கப்பட்டு, கண்காட்சியில் தங்களுக்கு ஒரு சிறப்பான தோற்றம் கிடைக்கப் பயன்படுத்தப்படுபவை என்பதை நாம் யாவரும் அறிந்ததே. தொழிற்நுட்பத்தின் பயன்பாட்டை குறித்து பார்க்கும் போது, மாருதியின் மூலம் விட்டாரா ப்ரீஸ்ஸாவில் அதிகளவில் ஒரு புதுமையான வழி கையாளப்பட்டுள்ளது. மற்றொருபுறம் டாடா, இந்த பிரிவிலேயே காணப்படாத ஒன்றை செய்துள்ளது. அவர்கள் கூறுவது போல, சிறந்த படைப்பு என்பது காலத்திற்கு ஒவ்வாதது ஆகவோ அல்லது விரக்தியை ஏற்படுத்துவதாகவோ இருந்தாலும், பிற்காலத்தில் இது டாடா மோட்டார்ஸிற்காக நிலைநிற்பதாக அமையலாம். தற்போதைக்கு பயணிகள் வாகன பிரிவில் இந்நிறுவனத்திற்கு ஒரு பிடிப்பு தேவைப்படுவதோடு, இதற்கு முந்தைய குறைபாடுகளில் இருந்து விடுபட வேண்டியுள்ளது.
இந்தியாவில் உள்ளூரிலேயே விட்டாரா ப்ரீஸ்ஸாவை உருவாக்கியுள்ள மாருதி, அதற்காக சிறப்பாக பணியாற்றி உள்ளது. இந்த பிரிவிற்காக எல்லாவற்றையும், இந்த வாகனத் தயாரிப்பாளர் புதிதாக அளித்துள்ளார். இந்த வாகனத்தில், தேர்விற்குரிய வேறுப்படுத்தி காட்டும் ரூஃப்கள், பிரஜெக்டர் ஹெட்லெம்ப்கள் உடன் LED லைட் கைடு மற்றும் டெயில் லெம்ப்களில் LED கிராஃபிக்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.
மேலும் மற்றவைகளில் உள்ள ஒரு 7-இன்ச் ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், நிறம் மாறும் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் ஆகியவை உள்ளன. மேற்கண்ட இவையனைத்தும் விட்டாரா ப்ரீஸ்ஸாவை அலங்கரிப்பதாக இருக்கலாம். ஆனால் அவை உண்மையான தொழிற்நுட்பமான XA-ஆல்பா-வை அவ்வளவாக சார்ந்தவை அல்ல. நாங்கள் மேலே குறிப்பிட்டது போல, அந்நிறுவனம் ஒரு புதுமையான அணுகுமுறையை கையாண்டுள்ளது. அதில் தவறு எதுவும் இல்லை. அதன் சிறப்பான பகுதியில், அதற்கென தனிப்பட்ட மாற்றம் அளிக்கப்பட்டுள்ளது.
டாடா நெக்ஸானுக்கு நாம் வரும் போது, இதன் வடிவமைப்பு அதிகளவில் இவோக்கை ஒத்ததாக உள்ளது. இதுவே இந்நாட்களில் கூடுதலாக விற்பனையாகி வருகிறது. இதில் வேறுப்படுத்தி காட்டும் ரூஃப் இல்லை. ஆனால் இந்த கூபே-யை போன்ற ஃபுளோட்டிங் ரூஃப், விஸ்ட்லைன் உடன் கூட இயங்கும் ஒரு பகுதி மூலம் பிரிக்கப்படுகிறது. இது செராமிக் பொருள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக, டாடா நிறுவனம் கூறுகிறது. மேலும் பிராஜெக்டர் ஹெட்லெம்ப்களை சுற்றிலும் இப்பிரிவிலேயே முதல் முறையாக LED டேடைம் ரன்னிங் லைட்களை கொண்டுள்ளது.
உள்புற அமைப்பில் ஒரு உன்னத அம்சமாக, டாடாவின் கனெக்ட்நெக்ஸ்ட் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது. இயந்திரவியலை பொறுத்த வரை, நெக்ஸானில் ஒரு சக்திவாய்ந்த 1.5-லிட்டர் டீசல் மற்றும் 1.2-லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் ஆகியவை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில், ஒரு 6-ஸ்பீடு மேனுவல் கொண்டுள்ளதோடு, ஒரு AMT AT-யையும் பெற்றிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொருபுறம் மாருதி தரப்பில், பயன்படுத்தப்பட்டு சோதிக்கப்பட்ட சியஸிடம் இருந்து பெறப்பட்ட DDiS200 - 1.3L டீசலை இப்போதைக்கு பெற்றுள்ளது. சுருக்கமாக கூறினால், விட்டாரா ப்ரீஸ்ஸா ஒரு நல்ல தயாரிப்பு ஆகும். ஆனால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சிறப்பான தயாரிப்பாக பார்க்கும் போது, டாடா நிறுவனம் அவ்வளவாக தொழிற்நுட்பத்தை பயன்படுத்தவில்லை எனலாம்.
மேலும் வாசிக்க டாடா மோட்டார்ஸ் 2.0 லிட்டருக்கு குறைவான அளவுடைய இஞ்சின் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
0 out of 0 found this helpful