சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

செப்டம்பர் மாத விற்பனை: பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை சரிவு

published on அக்டோபர் 26, 2015 09:43 am by cardekho

ஜெய்ப்பூர்:

கடந்த காலாண்டில் ஒட்டுமொத்த கார் பிரிவுகளும் சீரான வளர்ச்சியை அடைந்துள்ள நிலையில், ஒரு விசித்திரமான செய்தியாக பயன்பாட்டு வாகனங்கள் (யூட்டிலிட்டி வெஹிக்கிள்ஸ்) பிரிவின் விற்பனை மட்டும் செங்குத்தான சரிவை அடைந்துள்ளது. ஆனாலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் க்ரேடா அதிகபட்சமாக 23,000 என்ற ஒரு சிறப்பான விற்பனை இலக்கை எட்டியுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் (சொசைட்டி ஆப் இந்தியன் ஆட்டோமொபைல் மெனிஃபேக்ச்சரர் - SIAM) அளித்துள்ள ஒரு அறிக்கையில், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் பயன்பாட்டு வாகனங்களின் பிரிவு 2.5%-க்கும் மேலான சரிவை சந்தித்துள்ளது.

கடந்தாண்டின் இதே காலாண்டு உடன் ஒப்பிட்டால், இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் விற்பனை 273,323 யூனிட்டில் இருந்து 266,327 யூனிட்டாக குறைந்து, 8.56% என்ற சாதனை சரிவை அடைந்துள்ளது. அதிகமாக விற்பனையாகும் 10 முக்கிய பயன்பாட்டு வாகனங்களில் ஒன்றான மஹிந்திரா XUV500 மட்டும் ஒரு சுமாரான வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த காலாண்டில் அதிகளவிலான அறிமுகங்கள் செய்யப்பட்டதால், UV பிரிவின் பெருமை ஓரளவுக்கு காப்பாற்றப்பட்டது. இந்த காலாண்டு காலத்தில் இப்பிரிவின் முதலிடத்தில் உள்ள ஹூண்டாய் க்ரேடா, அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து ஒட்டுமொத்தமாக இதுவரை வெற்றிகரமான 23,000 யூனிட்களின் விற்பனையை பதிவு செய்துள்ளது. இதில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும், இந்த கச்சிதமான SUV-யின் விற்பனை 7,256 யூனிட்கள் ஆகும்.

மேலும் படிக்க: நெக்ஸா டீலர் தளங்களை மாருதி பெலினோ எட்டியது: அக்டோபர் 26 ஆம் தேதி அறிமுகம்

செப்டம்பர் 2015-ல் அதிக விற்பனையான முதல் 10 பயன்பாட்டு வாகனங்கள்

செப்– 2014

மாடல்

இடம்

மாடல்

செப்- 2015

% மாற்றம்

8,541

பெலேரோ

1

க்ரேடா

7,256

N/A

6,060

ஸ்கார்பியோ

2

பெலேரோ

5,585

-34.6

5,876

இனோவா

3

இனோவா

5,430

-7.5

5,672

எர்டிகா

4

TUV300

4,321

N/A

5,329

மொபிலியோ

5

ஸ்கார்பியோ

4,313

-28.8

4,515

ஈகோஸ்போர்ட்

6

S-கிராஸ்

3,603

N/A

3,410

டஸ்டர்

7

ஈகோஸ்போர்ட்

3,121

-30.8

3,035

XUV500

8

XUV500

3,110

2.4

1,768

டெரானோ

9

எர்டிகா

2,641

-53.4

1,745

ஃபார்ச்யூனர்

10

ஃபார்ச்யூனர்

1,089

-37.5

நன்றி:SIAM

இந்த பட்டியலில் 4 UV-களை கொண்டு பிரபலமடைந்து, முக்கிய இடத்தை பிடித்துள்ள மஹிந்திரா நிறுவனம், தனது பாரம்பரிய இடத்தை தக்க வைத்துள்ளது. மஹிந்திராவின் க்ரேடாவிற்கு அடுத்த இடத்தில் அதன் பொலேரோ உள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் 8,541 யூனிட்கள் விற்பனை என்ற நிலையிலிருந்து 34% செங்குத்தாக சரிந்து, இந்தாண்டு அதே காலளவில் 5,585 யூனிட்கள் மட்டுமே க்ரேடா விற்பனையாகி உள்ளது.

டொயோட்டாவின் சிறந்த விற்பனையை கொண்ட பன்முக பயன்பாட்டிற்கான வாகனமான இனோவா கூட, கடந்தாண்டோடு ஒப்பிட்டால் விற்பனை எண்ணிக்கையில் 7.5% சரிவை சந்தித்துள்ளது. இது 2014 செப்டம்பரில் 5,876 யூனிட்கள் விற்பனையான நிலையில், 2015 செப்டம்பரில் 5,430 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி, சிறந்த விற்பனை கொண்ட முதல் 10 இடங்களை கொண்ட பட்டியலில் டொயோட்டா இனோவா 3வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2014 செப்டம்பரில் மாருதி எர்டிகா 5,672 யூனிட்களின் விற்பனை என்ற நிலையிலிருந்து நழுவி, கடந்த மாதத்தில் 2,641 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி, கடந்தாண்டு பட்டியலில் 4வது இடத்தில் இருந்த அது, தற்போது 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்தாண்டோடு ஒப்பிட்டால், 53.4% என்ற மிகப்பெரிய சரிவை பதிவு செய்த ஒரே MUV-யாக இது உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதியின் மற்றொரு தயாரிப்பு கூட, சிறந்த விற்பனையான UV-களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. நம் நாட்டில் மாருதி சுசுகியின் முதல் கிராஸ்ஓவரான S-கிராஸ் 3,603 யூனிட்கள் விற்பனையாகி அந்த நிலையை எட்டியுள்ளது.

மஹிந்திராவின் TUV300 மற்றும் ஸ்கார்பியோ ஆகியவை முறையே 4,321 யூனிட்கள் மற்றும் 4,313 யூனிட்கள் என்ற விற்பனையை பெற்று, பட்டியலில் முறையே 4வது மற்றும் 5வது இடங்களை பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த பட்டியலில் ஒரு புகழ்பெற்ற நுழைவை பெற்றுள்ள XUV500, 8வது இடத்தை பெற்றுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் 3,035 யூனிட்கள் விற்பனையான இது, இந்தாண்டு அதே காலளவில் 3,110 யூனிட்கள் விற்பனையை பெற்று, இந்த மலைக்க வைக்கும் பட்டியலில் இடம்பிடித்த ஒரே UV-யாக உள்ளது.

இந்த பட்டியலில் விலையுயர்ந்த UV-யாக உள்ள டொயோட்டா ஃபார்ச்யூனர், கடந்தாண்டு செப்டம்பரில் 1,745 யூனிட்கள் விற்பனையாகி இருந்த நிலையில், இந்தாண்டு செப்டம்பரில் 1089 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி, பட்டியலில் கடைசி இடத்தில் நிலைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:

இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் 2016 டொயோட்டா ஃபார்ச்யூனர், ஆஸ்திரேலியாவில் அறிமுகம்
அதிக காத்திருப்பில் உள்ள அடுத்து வரவிருக்கும் SUV-கள்
‘வோல்க்ஸ்ஃபிஸ்ட்' என்ற அற்புதமான சலுகைகளுடன் வோல்க்ஸ்வேகன் பண்டிகை காலத்தை துவக்குகிறது

c
வெளியிட்டவர்

cardekho

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.86.92 - 97.84 லட்சம்*
Rs.68.50 - 87.70 லட்சம்*
பேஸ்லிப்ட்
பேஸ்லிப்ட்
Rs.7.51 - 13.04 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை