ரெனால்ட்-நிசான் கூட்டமைப்பில், இந்தியாவில் மில்லியனாவது வாகனம் வெளியிடப்பட்டது
published on ஜனவரி 12, 2016 12:31 pm by bala subramaniam
- 15 Views
- 2 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
சென்னை ஓரகடம் பகுதியில் ரெனால்ட்-நிசான் கூட்டமைப்பில் உருவான தொழிற்சாலையில், மில்லியனாவது (பத்து லட்சமாவது) கார் தயாரிக்கப்பட்டு, ஒரு முக்கிய மைல்கல்லை தாண்டியுள்ளது. 2016 ஜனவரி 8 ஆம் தேதி, உற்பத்தி வரிசையில் இருந்து வெளியேறிய ஒரு நிசான் மைக்ரா கார், இந்த மைல்கல்லை எட்டிய கார் ஆகும். ஓரகடத்தில் உள்ள இத்தொழிற்சாலை, உலகிலேயே இந்த கூட்டமைப்பிற்கு உள்ள மிகப்பெரிய தயாரிப்பு நிலையமாகும். துவக்க முதலீடாக INR 45 பில்லியன் இடப்பட்டு, கடந்த 2010 மார்ச் மாதம் முதல் இதன் செயல்பாடு துவங்கியது. இதை ஒரு உலகதரம் வாய்ந்த ஆற்றலக தயாரிப்பு நிலையமாகவும், கருவியமைப்பு கொண்டதாகவும் (டூலிங்) மாற்றும் வகையில், இதில் INR 16 பில்லியன் கூடுதலாக முதலீடு செய்யப்பட்டது.
இதுவரை, ரெனால்ட், நிசான் மற்றும் டாட்சன் ஆகியவற்றின் 32 புதிய மாடல்களையும், அதன் வழிதோன்றல்களையும் அறிமுகம் செய்து, உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இத்தொழிற்சாலை, உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளின் தேவையை பூர்த்தி செய்துள்ளது. இங்கு சமீபகாலமாக, கடந்த 2015 செப்டம்பரில் தயாரிப்பிற்காக ரெனால்ட் க்விட் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து 106 நாடுகளுக்கு, ஏறக்குறைய 6,00,000 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ள இந்த ரெனால்ட்-நிசான் கூட்டமைப்பு, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளர் ஆவார். இந்த நேரத்தில் தான், கடந்த 2010 நிதியாண்டில் ஒரு துவக்க தயாரிப்பு அளவாக 75,000 யூனிட்கள் என்ற நிலையில் இருந்து, 2015 மார்ச் காலாண்டிற்கு (காலண்டர் இயர்) பிறகு, இதன் ஆண்டு தயாரிப்பு அளவு 2,00,000 ஆக உயர்த்தப்பட்டது.
நிசானின் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இந்தியா பகுதிகளுக்கான தலைவரும், முன்னாள் கூட்டமைப்பு நிர்வாக துணைத் தலைவருமான கிறிஸ்டியன் மார்டர்ஸ் கூறுகையில், “இந்த முக்கிய தொழிற்சாலை தற்போது பரிணாம வளர்ச்சியை பெற்று வரும் இந்நேரத்தில், இது போன்ற ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியிருப்பதை எண்ணி, சென்னையில் உள்ள எங்களின் பணியாளர் குழுவை பாராட்டுகிறேன்” என்றார்.
திரு.மார்டர்ஸ் மேலும் கூறுகையில், “எங்களின் வியாபாரத்தை இந்தியாவில் மேம்படுத்துவதில், எங்களின் சென்னை தொழிற்சாலை ஒரு முக்கிய பங்கை வகித்து வரும் நிலையில், அதன் பணி மேலும் தொடரும். இந்தியாவிலும், ஏற்றுமதி சந்தைகளிலும் நிசான் மற்றும் ரெனால்ட் தயாரிப்புகளின் பிரபலத்தையும், எங்கள் பணியாளர்களின் செயல்திறன் மற்றும் சமர்ப்பணத்தையும், இன்றைய மைல்கல் எதிரொலிப்பதாக அமைகிறது. தமிழக அரசிடம் இருந்து எங்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சிகரமான உயர்தர ஆதரவின் அளவையும் இது குறிப்பதாக உள்ளது” என்றார்.
சென்னையில் உள்ள R&D சென்டர் உடன் சேர்த்து, இந்த கூட்டமைப்பின் மூலம் தமிழகத்தில் ஏறக்குறைய 12,000 நேரடி வேலை வாய்ப்புகளும், மேலும் இந்திய விநியோக சங்கிலியின் (இந்தியன் சப்ளையர் செயின்) மூலம் 40,000-மும் அளிக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் நிசான் அலையன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட் (RNAIPL) தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் கோலின் மெக்டோனால்டு கூறுகையில், “இந்த தொழிற்சாலையுடன் தொடர்புடைய அனைவருக்கும், இது ஒரு பெருமையான நாளாகும். கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து 3 பிராண்டுகளிலும் சராசரியாக ஆண்டுதோறும் 2 புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளோம். ஆண்டு உற்பத்தி அளவை அதிகரித்து, உலக தரம் வாய்ந்த தர நிர்ணயத்தை பராமரித்து வரும் நிலையில், இந்த நிலையை எட்டுவதற்கு உதவிய, எங்களின் பணியாளர் குழு மற்றும் விநியோக கூட்டாளிகள் (சப்ளையர் பார்டனர்ஸ்) ஆகியோர் மகத்தான பலனை பெறுவதற்கு தகுதியானவர்கள்” என்றார்.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful