மஹிந்த்ரா KUV 100 Vs ரினால்ட் கிவிட்: சிறிய-பெரிய கார்களின் வளர்ச்சி!
published on ஜனவரி 07, 2016 03:10 pm by அபிஜித்
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
மஹிந்த்ரா KUV 100 மற்றும் ரினால்ட் கிவிட் போன்ற கார்களை சிறிய கார்களின் பிரிவில் சேர்த்துக் கொள்வதா அல்லது பெரிய கார்களின் பிரிவில் சேர்த்துக் கொள்வதா என்ற குழப்பம், இந்த தலைப்பில் மட்டுமல்ல நம் அனைவரின் மனதிலும் உள்ளது. இவை SUV கார்களைப் போல தோற்றத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட சிறிய அளவு விகிதத்தில் உள்ள பெரிய கார்கள் ஆகும். இவை சிறியதா அல்லது பெரியதா என்ற பட்டிமன்றம் இந்திய வாகன சந்தையில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நடக்கிறது. நாளுக்கு நாள் SUV கார்களுக்கும் சேடான் ரக கார்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி குறைந்து கொண்டிருப்பதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது. இதற்கு முழு முதற்காரணம், க்ராஸ்ஓவர் ரக கார்கள் என்று நிச்சயமாகக் கூற முடியும். புதிய ரக க்ராஸ்ஓவர் கார்களின் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்த்தால், முதலாவதாக இவை SUV போன்ற கம்பீரமான தோற்றத்தில் இருக்கின்றன; இரண்டாவதாக, இவை டாங்க்கில் உள்ள எரிபொருள் முழுவதையும் உறிஞ்சி விடாமல், சிறந்த மைலேஜ் தருகின்றன; மூன்றாவதாக, இவை சேடான் ரக கார்களின் அளவுகளில் வருகின்றன.
உண்மையில், சம்பிரதாயமான எல்லைக் கோடுகளை நவநாகரீக ஃபேஷன் எவ்வாறு மாற்றுகிறது என்பது, க்ராஸ்ஓவர் கார்களைப் பார்க்கும் போது நமக்கு தெளிவாக புரிகிறது. இத்தகைய புதுமையான க்ராஸ்ஓவர் பிரிவிற்கு, ரினால்ட் கிவிட் சிறந்த எடுத்துக் காட்டாக இருக்கின்றது, ஏனெனில், இது பெரிய தோற்றத்தில் உள்ள சிறிய கார் (அதன் பிரிவில் இது பெரிய கார்). உயரமான பானேட் மற்றும் பூட் பகுதிகள்; தெளிவாக உள்ள சக்கர வளைவுகள்; மற்றும் சற்றே பாக்ஸியான அளவுகள் போன்றவை சேர்ந்து, இந்த காருக்கு கம்பீரமான தோற்றத்தைத் தருகின்றன.
க்ராஸ்ஓவர் கார் சரித்திரத்தில், ரினால்ட் கிவிட் என்பது ஒரு ஆரம்பம் மட்டும்தான், ஏனெனில், இப்போது மேலும் பல கார் தயாரிப்பாளர்கள் இந்த மாதிரியான வடிவமைப்பை, பலாப்பழத்தை ஈ மொய்பதைப் போல மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, மாருதியின் இக்னிஸ், அவர்களது புதிய ஆல்டோ மற்றும் அடுத்த ஜெனெரேஷன் விட்டாரா போன்ற கார்களை எடுத்துக் கொண்டால், எதிர்கால இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பம் எவ்வாறு இருக்கும் என்று நாம் எளிதாக யூகிக்கலாம். ஏனெனில், இவை எதிர்கால இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பத்தை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டவை ஆகும். இவை தவிர, ஹோண்டா BR-V, டாட்சன்’ஸ் கோ காரின் அடிப்படையில் உருவான க்ராஸ்ஓவர் என்று ஏராளமான எடுத்துக் காட்டுகளை நாம் இங்கே குறிப்பிட முடியும்.
SUV என்ற சொல்லுக்கு மற்றொரு பெயர் மஹிந்த்ரா, என்று சொல்லும் அளவிற்கு மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ராவின் SUV கார்கள் இந்தியாவில் பிரபலமாக உள்ளன. எனினும், ‘மஹிந்த்ரா இனி தங்களது வாகனங்களை SUV கார்களின் சாயலிலேயே தயாரிக்கும்,’ என்ற அவர்களது சமீபத்திய அறிவிப்பில் இருந்து அவர்களாலும் க்ராஸ்ஓவர் கார்களைத் தயாரிப்பதில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியவில்லை என்பதை நாம் உணர முடிகிறது. அது மட்டுமல்ல, அவர்களது சமீபத்திய வெளியீடான KUV 100 மற்றும் TUV 300 (நேர்த்தியான க்ராஸ்ஓவர் இல்லை என்றாலும், அதன் பிரிவிலேயே உள்ளது) போன்ற கார்களின் தோற்றத்தில் இருந்து, அவர்கள் சொன்னதை மெய்ப்பித்து விட்டனர் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். மேலும், KUV 100 மற்றும் TUV 300 போன்ற பெயர்கள், SUV என்ற சொல்லின் இயைபுடைய பெயர்களாக இருப்பதாலும், SUV ரகத்தின் வழக்கமான அம்சங்கள் இந்த கார்களில் இடம் பெற்றிருப்பதாலும், அவர்கள் சொன்னது உண்மை என்று தெரிகிறது.
ஒருவேளை!
க்ராஸ்ஓவர் கார்களைப் பற்றிய ஒரு நெடிய விளக்கத்திற்கு பின், இப்போது தலைப்பில் உள்ள முதல் பகுதிக்கு வருவோம். பொதுவாக, KUV 100 கார், ரினால்ட் கிவிட் காரின் நேரடி போட்டியாளராக இருக்காது. எனினும், நீங்கள் கிவிட் மாடலின் உயர்தர வேரியண்ட்டையும், KUV 100 மாடலின் அடிப்படை வேரியண்ட்டையும் ஒப்பீடு செய்தால் குழப்பம் வரலாம். தற்போது வெளிவந்துள்ள ஆய்வறிக்கையின் படி, KUV 100 காரின் விலை, சுமார் ரூ. 4.20 லட்சங்கள் என்று நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரம், ரினால்ட் கிவிட் உயர்தர வேரியண்ட்டின் விலை ரூ. 3.53 லட்சங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை குறைவாக இருந்தாலும், KUV 100 காரின் உள்ளே இருக்கும் அதிகமான இட வசதி, கிவிட்டில் இல்லை என்பதை நாம் மறுக்க முடியாது. மேலும், KUV –யில் 6 இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அந்த ஆறு இருக்கைகளிலும் சிரமமில்லாமல் அமர்ந்து பயணம் செய்யும் விதத்தில் அவை சரியான ப்ரோபொசிஷனில் செயல்பட, 6 சீட் பெல்ட்கள் கொடுக்கப்படுமா என்பது இது வரை உறுதியாகத் தெரியாவில்லை. மேலும், KUV 100 காரில் பெரிய பூட் பகுதி இடம்பெறும் என்று தெரிகிறது. கிவிட் காரை விட பெரிய சக்கரங்களும், அகலமான டிராக்கும் இருப்பதால், KUV 100 காரின் ரோட் டைனமிக்ஸ் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க