பின்னின்ஃபாரினா, TUV மற்றும் KUV ஆகியவற்றில் இந்திய புத்திக்கூர்மை உடன் இத்தாலிய தீவிரத்தன்மை இணைந்த வெளிப்பாடு தெரிகிறது
manish ஆல் டிசம்பர் 31, 2015 06:03 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
“தூய்மையான ஏதாவது காரியத்தோடு நீ துவங்கு. உற்சாகப்படுத்தும் ஏதாவது ஒன்று. அப்போது தவறுகளும், சமரசங்களும் வரும்.” – டோனி ஸ்டார்க்
புதுடெல்லி:
ஒவ்வொரு முறையும் தனது அடுத்து வரவுள்ள தயாரிப்பை மஹிந்திரா நிறுவனம் காட்சிக்கு வைக்கும் போது, நமக்குள் எல்லைகளை கடந்த உற்சாகமும், நடைமுறையில் நாம் அமர்ந்திருக்கும் இறுக்கையின் முனைக்கு வந்துவிடுவதும் நடைபெறுகிறது. TUV300 பார்வைக்கு இதோ என்று கூறுவதற்குள், இப்போது அதன் அடுத்த வரவான மைக்ரோ- SUV-யான KUV100-யை, மஹிந்திரா நிறுவனம் வெளிப்படுத்தி உள்ளது. இது நிச்சயமாகவே அட்டகாசமான கார் என்பதில் எந்த விவாதமும் இல்லை. ஏனெனில், நேசி அல்லது வெறுத்துவிடு என்ற முறையில் அமைந்துள்ளது. சமீபத்தில் டெக் மஹிந்திராவினால் வாங்கப்பட்ட இத்தாலி நாட்டு பிரிமியம் டிசைன் நிலையமான பின்னின்ஃபாரினாவின் உள்ளீட்டை, மஹிந்திராவின் இந்த தயாரிப்பில் காண முடிகிறது.
இந்த காரில், நிசான் ஜூக்கின் குறிப்பிட்ட சாயலை காணலாம், குறிப்பாக பின்பக்கத்தில் காண முடிகிறது. ஒட்டுமொத்த பேக்கேஜை பார்த்தால், உங்களுக்கு ஒருவேளை சிறுபிள்ளையை போன்ற குதூகலத்தை அளிக்க கூடியதாக அமையலாம். ஆனால் அதன் வடிவமைப்பின் தன்மைகளில், சிறுசிறு காரியங்களிலும் நிச்சயமாக கவர்ச்சியாக அமைந்துள்ளது.
கருப்பு நிறம் படர்ந்த சிவப்பு வெளியோட்டங்களுடன் கூடிய மூடப்பட்ட நிலையில் அமைந்த ஹெட்லெம்ப்கள் நிச்சயமாக தனிச்சிறப்புக் கொண்டது. மேலும் கிளெஸ்டர்களில் ஒருங்கிணைந்து காணப்படும் மஹிந்திரா லோகோ, பார்ப்பவர்களின் கவனத்தை கவர்ந்து, விபரம் அறிய தூண்டுவதாக உள்ளது.
மற்றபடி முழு காருக்கும் ஒரு மிரட்டும் தன்மையை அளிக்க உதவும் நேர்த்தியான கிரில், சில்வர் அசென்ட்களோடு இணைந்து, குறைவற்ற ஒருங்கிணைப்பாக காட்சி அளிக்கிறது.
ஒரு மைக்கோ- SUV / கிராஸ்ஓவரை, கிளட்டிங் இல்லாமல் நீங்கள் பெற முடியாது. இந்நிலையில் KUV 100-யிலும் இந்த தன்மை உள்ளதை மஹிந்திரா நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த காரில் ஒரு இரண்டு-டோன் பம்பர் உடன் ஒரு ஸ்கால்ப் பிளேட் மற்றும் பெரிய நீள்சதுர வடிவிலான தன்னம்பிக்கையை காண்பிக்கிற கோணத்தை கொண்ட ஃபேக் லெம்ப்கள் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
எனவே பின்னின்ஃபாரினாவின் தாக்கத்தை புதிய KUV100-ல் தெளிவாக காண கிடைக்கிறது. ஆனால் இதை நீங்கள் ஏற்க மறுத்தால், அதிலேயே உறுதியாக இருக்க வேண்டாம். ஏனெனில் எல்லாரும் வெற்றியாளர்களாக மாற முடியாது. தாவூ டாகுமாவை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்!
இதையும் படிக்கவும் : இத்தாலி நாட்டு டிசைன் ஹவுஸ் பின்னின்ஃபாரினா-வை, மஹிந்திரா வாங்கியது