• English
  • Login / Register

எக்ஸ்பீரியன்ஸ் சோன் (PEZ) நிகழ்ச்சியை ஹரியானாவில் உள்ள சோனேபட்டில், போலாரிஸ் இந்தியா தொடங்கி வைத்தது

published on நவ 23, 2015 11:30 am by அபிஜித்

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

Polaris Vehicles
இந்தியாவின் தலைசிறந்த ஆல்-டெர்ரைன் (ஒருவர் மட்டும் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட, கடுமையான பயணங்களை மேற்கொள்ள, 3 அல்லது அதற்கும் அதிகமான சக்கரங்களை உடைய மோட்டார் வாகனம்) வாகனங்களைத் தயாரிக்கும் கம்பெனியான போலாரிஸ், தனது மூன்றாவது ‘போலாரிஸ் எக்ஸ்பீரியன்ஸ் சோன்’ (PEZ) நிகழ்ச்சியை ஹரியானாவில் தொடங்கி    வைத்தது. இந்த டிராக், டெல்லியில் இருந்து சண்டிகர் செல்லும் ஹைவேயில் உள்ள சோனேபட்டில் உள்ள கண்ணார் என்னும் அருமையான நகரத்தில் அமைந்துள்ளது. இந்த இடம், டெல்லியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ‘அட்வென்ச்சர் ரைட் சோன்’ போலரிஸ் நிறுவனத்தின் நாற்பதாவது டிராக்காகும். மக்கள் இங்கு வந்து, இந்நிறுவனத்தின் வாகனங்களை ஓட்டிப் பார்த்து அனுபவிக்கலாம்.

Polaris Experience Zone Inauguration

கிட்டத்தட்ட 3 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ள இந்நிகழ்ச்சியின் டிராக்கில் பங்கேற்க மொத்தமாக 5 ATV -க்கள் உள்ளன. அவற்றில், இரண்டு போனிக்ஸ் 200, இரண்டு அவுட்லாஸ் 90 மற்றும் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் ஆகியவை அடங்கும். சகதி குழிகள், மேடுகள், வாட்டர் பாசேஜ் மற்றும் டயர் ஹர்டில்கள் போன்ற கடுமையான வழியைக் கொண்ட அழுக்கான பாதைகள் இந்த டிராக்கில் உள்ளன. ஒரு சவாலான, வேடிக்கையான அனுபவத்தை வழங்குவதற்காகவே, இத்தகைய தடைகள் இந்த பாதையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை பார்வையிட வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த, அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் அங்கே உள்ளனர். நிச்சயமாக, அங்கிருந்து செல்வதற்குள் அவர்கள் நிறைய கற்றுக் கொள்வர். இத்தகைய வசதிகள் தவிர, இந்த பகுதியில் ஒரு பாங்கான உணவகம் உள்ளது. குடும்பமாக இந்நிகழ்ச்சியை கண்டு களிக்க வருபவர்கள், தங்கள் நேரத்தை சிறந்த முறையில் செலவிட முடியும் என்று, இந்நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உறுதி கூறுகின்றனர்.

Polaris Experience Zone Ride

தொடக்க விழாவில் பேசிய போலாரிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான திரு. பங்கஜ் துபே, “முதல் முறையாக போலாரிஸ் எக்ஸ்பீரியன்ஸ் சோனை இந்தியாவில் ஆரம்பித்த நாங்கள், ஒரு நீண்ட நெடிய பாதையைக் கடந்துவிட்டோம். தற்போது, இனிய பாதையில்லா ஆஃப்-ரோட் பந்தயங்கள் இந்தியாவில் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. உண்மையில், இத்தகைய கலாச்சாரம் வளர போலாரிஸ் எக்ஸ்பீரியன்ஸ் சோன்கள் பெரிய வகையில் உதவியுள்ளன. இந்தியாவில் சாகச பந்தயங்களின் மீது இருந்த பழமையான கருத்துக்கள் மாறி, நல்லெண்ணம் உருவாகிக் கொண்டிருப்பதை நாங்கள் உணர்கிறோம். இத்தகைய மாற்றத்தை மேலும் வளர்ப்பதற்காக, இந்தியா முழுவதும் PEZ நிகழ்ச்சியை நடத்துகிறோம். ஆர்வலர்களுக்கு மத்தியில் PEZ நடத்தப்படுவதால், அந்த அனுபவம் அவர்கள் அட்வென்ச்சர் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கிறது. வருங்காலத்தில், போலாரிஸ் எக்ஸ்பீரியன்ஸ் சோன் மீதுள்ள ஆர்வம் மற்றும் அதன் வளர்ச்சி மேலும் அதிகமாகும் என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே, நாடு முழுவதிலும், மேலும் பல PEZ நிகழ்ச்சிகளை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்,” என்று கூறினார்.

அட்வென்ச்சர் ரைட் சோன் உரிமையாளரான திரு. நரேஷ் தாகியா அவரது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட போது, “போலாரிஸ் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது எங்களுக்கு ஒரு சிலிர்ப்பான அனுபவமாக இருக்கிறது. குவாட் பைக்களில் சவாரி செய்வதற்கேற்ற அனைத்து வசதிகளையும் வழங்கும் ஒரு சிறந்த தளமாக இந்த புதிய எக்ஸ்பீரியன்ஸ் சோன் திகழ்கிறது. டெல்லி நகரத்தின் அருகே அமைந்துள்ளதால், இந்த எக்ஸ்பீரியன்ஸ் சோன் நிகழ்ச்சியில் பல்வேறு விதமான அருமையான போலாரிஸ் ஆஃப்-ரோட் வாகனங்களை வழங்குவதோடு மட்டுமல்லாது, பங்கேற்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் உலகத் தரத்தில் அனைத்து வசதிகளையும் தர முடியும். மக்களுக்கு ஈடு இணையில்லா பொழுதுபோக்கை வழங்கி பணியாற்ற வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். எனவே, இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்காக இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்று கூறினார்.

இதையும் படியுங்கள் : மஹிந்த்ரா நிறுவனம் ‘குட்னேஸ் ட்ரைவ்’ பயணத்தை ஆரம்பித்து வைத்துள்ளது – நாடு முழுவதும் பயணிக்கும் e2o கார்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience