உலகின் ஒரே ஜீரோ கார்பன் ஸ்மார்ட் சிட்டியில் சுயமாக ஓட்டும் காரில் பிரதமர் மோடி பயணித்தார்
ஜெய்ப்பூர்:
துபாயில் உள்ள இந்திய சமூகத்தை சேர்ந்த 50,000 உறுப்பினர்களுடனான மெகா கூட்டத்தில் கலந்துக் கொள்வதை முன்னிட்டு, துபாய்க்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அபுதாபியில் உள்ள கார்பன் அற்ற (ஜீரோ-கார்பன்) ஸ்மார்ட் சிட்டியான மஸ்தாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப் பயணத்தின் ஒரு முக்கிய பகுதியாக, மஸ்தார் நகரின் தனியார் விரைவு போக்குவரத்து (பிரைவேட் ரேப்பிட் டிரான்ஸ்சிஸ்ட்) அல்லது PRT-ன் ஒரு பகுதியான இருக்கும் சுயமாக ஓட்டும் காரில், ஒரு சோதனை சவாரி (டெமோ ரைடு) செய்தார். மெய்நிகர் மென்பொருள் (வெர்ச்சூவல் சாஃப்ட்வேர்) மூலம் வழிநடத்தப்படும் இந்த காரின் ஓட்டம் மற்றும் பயணத்திற்கு, சூரியஒளியின் சக்தி (சோலர் எனர்ஜி) மூலம் மின்னாற்றலை பெற்றுக் கொள்ளும் லித்தியம் பேட்டரிகள் உதவுகிறது. மேலும் இந்த கார், விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தவிர்கிறது.
மற்ற ஏதோ ஒரு முக்கிய நிகழ்ச்சியை போல, பிரதமரின் இந்த பயணத்தை பெருமையுடன் கண்டு களிக்க மஸ்தாரில் கூடிய இந்தியர்களின் கூட்டத்தை கண்ட பிரதமர், அவர்களை நோக்கி தன் கைகளை அசைத்தார். காலநிலை மாற்றத்தை குறித்து அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி. பிரதமர் அலுவலக டிவிட்டர் பக்கத்தில், “மஸ்தாரில், நகர்புற வளர்ச்சி மற்றும் அடுத்த தலைமுறைக்கான நகர்புற இடவசதி ஆகியவை குறித்து பிரதமர் மோடி ஆலோசித்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த நகரின் கட்டட கலைஞர்களையும், பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதனால் மஸ்தாரில் இருந்து பெற்ற உற்சாகத்தின் மூலம் இந்தியாவிலும் பல ஸ்மார்ட் சிட்டிகளை கட்ட துவக்க வேண்டும் என்று பிரதமர் மோடி யோசித்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது உண்மையெனில் அது ஒரு கார் உபயோகமற்ற நகரமாக இருக்கும் என்பதால், அதில் நமக்கு குறிப்பிடும் வகையில் மகிழ்ச்சியடைய எதுவுமில்லை. மஸ்தார் நகரில் சாத்தியமான முதலீட்டாளர்களின் சந்திப்பு ஒன்றில் கலந்துக் கொண்ட பிரதமர், அங்கு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் வருகை பதிவேடு (டிஜிட்டல் விசிட்டர்ஸ் புக்) ஒன்றில் “அறிவியலே வாழ்க்கை” (சையின்ஸ் இஸ் லைப்) என்று எழுதி கையெழுத்திட்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, எண்ணெய் வளமிக்க அந்நாட்டுடன் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வர்த்தக தொடர்பை ஏற்படுத்துவதே, இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இதன்மூலம் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, 2014-15 ஆம் ஆண்டின் மூன்றாவது பெரிய வர்த்தக தொடர்பாளராக (ட்ரேடு பாட்டனர்) இந்தியா மாறும்.
இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கடந்த 34 ஆண்டுகளில், ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பை பிரதமர் மோடி பெற்றுள்ளார். வர்த்தக பிரதிநிதிகளுடனான உச்சகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, அபுதாபி ஆட்சியாளருடன் பிரதமர் மோடி மதிய உணவை உட்கொண்டார். 40,000 பேர் இருக்கை வசதி கொண்ட ஒரு கிரிக்கெட் மைதானத்தில், துபாய் இந்திய சமூகத்தை சேர்ந்த 50,000 உறுப்பினர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். மைதானத்திற்குள் வர முடியாமல் போனவர்களின் வசதிக்காக, மைதானத்திற்கு வெளியே பெரிய திரைகள் வைக்கப்பட்டு பிரதமரின் உரை காட்டப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவை போல இல்லாமல், இங்கே குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், குடியுரிமையை பெற்றுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள இந்திய சமூகத்தை சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் இந்திய குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தூதரகத்தின் கணக்குப்படி, ஐக்கிய அரபு எமிரேட்டில் சுமார் 2.6 மில்லியன் இந்தியர்கள் வேலை செய்து வாழ்கின்றனர். இதில் சுமார் 60 சதவீதம் மக்கள், கடினமான வேலைகளை செய்து வருபவர்கள் ஆவர்.