மெர்செடெஸ் பென்ஸ் இன் 2017ம் ஆண்டின் இ - கிளாஸ் மாடலின் சிறப்பு அம்சமான ஆட்டோமாடிக் பார்கிங் பைலட் வசதியை பென்ஸ் நிறுவனம் பெருமிதத்துடன் அறிமுகம் செய்தது
published on ஜூலை 14, 2015 05:16 pm by அபிஜித்
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 2017 இ - கிளாஸ் கார் மாடலில் தானாக இயங்கி நிறுத்திக்கொள்ளும் வசதியை (ஆட்டோமாடிக் பார்கிங் பைலட்)பற்றிய செயல் விளக்க வீடியோவை மெர்செடெஸ் பென்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.இந்த சிறப்பு அம்சத்துடன் கூடிய இ - கிளாஸ் கார்களை திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு சில முக்கியமான கார் விற்பனை சந்தைகளில் அறிமுகப்படுத்த உள்ளது என்பது சிறப்பு செய்தியாகும்.
மேலும் இந்த ஆட்டோமாடிக் பார்கிங் பைலட் வசதியானது கார்களை நெருக்கமாக நிறுத்தும் போது கதவுகளை திறக்க முடியாமல் ஏற்படும் சிக்கலை முற்றிலும் தவிர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இன்னொரு முக்கியமான சிறப்பு அம்சம் என்னவென்றால், நாம் இந்த காரை ஸ்மார்ட் போன் மூலமாக ரிமோட்டை பயன்படுத்தி வெளியில் இருந்து நம்மால் இயக்கவும், விருப்பம் போல முன்னோக்கியும் பின்னோக்கியும் மற்றும் திசை அறிந்து காரை திருப்பவும் முடியும்.
இப்பொழுது அறிமுகப்படுத்த பட உள்ள இந்த புத்தம் புதிய பென்ஸ் இ - கிளாஸ் கார்களில் புதிய சக்தி வாய்ந்த 6 சிலின்டர் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது.கூடவே பென்ஸ் இ - கிளாஸ் கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பலத்தரப்பட்ட சக்தி வாய்ந்த இன்ஜின்களும் இணைந்து கொள்வதால் இந்த புதிய மாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்கிறது.அது மட்டும் இன்றி மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் 1.6 லிட்டர் டீசலுக்கு 122 பி ஹைச் பி விகிதம் கூடுதல் உந்து சக்தியை தருகிறது. இந்த பயன் நம் பட்ஜெட்டிற்கும் ஏதுவானதே.
தனிச்சிறப்பு வாய்ந்த தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த ஆட்டோமாடிக் பார்கிங் பைலட் 2017 இ - கிளாஸ் கார்கள் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்துவதை பென்ஸ் நிறுவனம் உறுதி செய்யவில்லை என்றாலும், வெளி நாடுகளில் முதலில் அறிமுகம் செய்த பிறகே இந்தியாவில் இதன் அறிமுகத்தை எதிர் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
0 out of 0 found this helpful