• English
  • Login / Register

ஜிஎம் இந்தியாவின் புதிய தலைவராக கஹேர் கஸீம் நியமனம். அர்விந்த் சக்சேனாவிற்கு பதிலாக

published on டிசம்பர் 08, 2015 02:36 pm by akshit

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டெல்லி :  தற்போது ஜெனெரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்கு அலுவலராக பணியாற்றி வரும் கஹேர் கஸீம், எதிர்வரும் ஜனவரி  1, 2016 ஆம் ஆண்டு முதல் இந்த அமெரிக்க கார் தயாரிப்பாளர்களின் இந்திய பிரிவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். தற்போது இந்த பொறுப்பில் இருக்கும் அர்விந்த் சக்சேனா இரண்டு வருடம் இந்த பொறுப்பில் இருந்த பிறகு இப்போது பதவி விலக உள்ளார். 

" இந்த துறையில் நேரடி அறிவும் , அனுபவமும் உள்ள  கஹேர் அவர்களை இந்த முக்கியமான தருணத்தில்  இப்பதவியில் அமர்த்துவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் " என்று நிர்வாக துணை தலைவர் மற்றும் GM நிறுவனத்தின் சர்வதேச தலைவர் ஸ்டெபான் ஜேகபி கூறியுள்ளார் . “ இந்திய வாகன சந்தைக்கு நீண்ட நெடும் பங்களிப்பை அளிப்பதில் GM நிறுவனம் உறுதியுடன் இருக்கிறது.   இத்துறையில் நிறைய சாதித்துள்ள கஹேரின் துணையோடு மிக சிறந்த வாகனங்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன் ,  ஒரு சர்வதேச வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கிடவும் முடியும் " என்று மேலும் அவர் கூறினார். 

46 வயதான ஆஸ்த்ரேலிய நாட்டை சேர்ந்தவரான கஸீம்  ஜிஎம் இந்தியாவின் முதன்மை இயக்கு அலுவலர் ( COO)  பொறுப்பில்  இந்த  ஆண்டு அமர்த்தப்பட்டார். 2012 ஆம் ஆண்டு முதல் ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அசர்பைஜான் நாட்டு செயல்பாடுகளை கவனித்து வந்தார். 1995 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியா ஜிஎம் நிறுவனத்தில் மூத்த பொறியாளராக பணியில் சேர்ந்த கஸீம் பல தலைமை பொறுப்புக்களில் திறம்பட செயலாற்றி  வந்தார். பின் 2009 ஆம் ஆண்டு ஜிஎம் நிறுவனத்தின் தாய்லாந்து/ ASEAN பகுதியின்  உற்பத்தி மற்றும் தர நிர்ணயப் பிரிவின் துணை தலைவராக நியமிக்கப்பட்டு செயலாற்றி வந்துள்ளார். இதற்கு முன்  2012 முதல் ஜிஎம் உஸ்பெகிஸ்தானில்  கஸீம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்புக்களை கவனித்து வந்துள்ளார். 

வோல்க்ஸ்வேகன் இந்தியா மற்றும் ஹயுண்டாய் மோட்டார் இந்தியாவில் பணியாற்றிய அனுபவம் பெற்ற அர்விந்த் சக்சேனா GM மோட்டார்ஸ் நிறுவனத்தில் இணைந்த இரண்டே ஆண்டிற்குள் தனது பதவியை ராஜினாமா செய்ததன் காரணம் தெளிவாக தெரியவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க  

       

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    Rs.2.30 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • வோல்வோ எக்ஸ்சி90 2025
    வோல்வோ எக்ஸ்சி90 2025
    Rs.1.05 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience