ஓட்டுவதற்கும், கையாளுவதற்கும் ஏற்ற ஒரு புதிய தரமான வாகனம்: ஜாகுவார் F-பேஸ்
published on ஆகஸ்ட் 27, 2015 12:50 pm by manish
- 12 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: ஜாகுவார் வழங்கும் புதிய செயல்திறன் மிக்க SUV ஆன F-பேஸ், ஸ்போர்ட்ஸ்-காரின் சேஸ் அமைப்பைக் கொண்டுள்ளதால், மற்ற ஜாகுவார் வாகனங்களை போலவே இதற்கும் அதிக தேவை ஏற்படுவதாக மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது. நிகரற்ற சக்தி வாய்ந்த திறனை F-பேஸ் வெளிப்படுத்துகிறது. இந்த பிரிவை சேர்ந்த கார்களுடன் ஒப்பிட முடியாத வகையில் உள்ள F-பேஸ், ஓட்டுநர்களுக்கு மட்டுமின்றி பயணிகளுக்கும், சுறுசுறுப்பான மற்றும் ஒரு இதமான அனுபவத்தை கலந்து அளிக்கிறது. அது ஒரு திருப்பங்கள் நிறைந்த மலைப் பாதை, நாட்டு சாலை அல்லது அதிவேக வாகன சாலையில் மின்னல் வேகத்தில் செல்வது என எந்த மாதிரியான பயணத்திலும், அமைவடக்கத்துடன் கூடிய சிறப்பான மெருகேறிய பயணத்தை அளிப்பதில் துல்லியமாகவும், பொறுப்பாகவும் F-பேஸ் செயல்படுகிறது.
இது குறித்து வாகன நம்பகத்தன்மையின் (இன்டிகிரிட்டி) மூத்த என்ஜினியரான மைக் கிராஸ் கூறுகையில், “நாங்கள் எந்த விதமான சமரசத்திற்கோ அல்லது விதிவிலக்குகளுக்கோ இடம் அளிக்கவில்லை. புதிய F-பேஸ் ஒரு உண்மையான ஜாகுவாராக செயல்பட்டு, பழைய சக்தி வாய்ந்த தன்மையை (டைனாமிக்ஸ் டிஎன்ஏ) அளிக்க வேண்டும். நாங்கள் எல்லா விதமாக சூழ்நிலைகளிலும், காலநிலைகளிலும் F-பேஸை ஓட்டி, கையாண்டு பரிசோதித்தோம். இதன் முடிவில் புதிய F-பேஸ் ஓட்டுவதற்கு அமைதி மற்றும் இதமானது என்ற வெகுமதியை பெற்றுள்ளது. நீங்கள் வாகனத்திற்குள் நுழைந்த உடனேயே, இது இருப்பதற்கு சிறந்த இடம் என்பதை உணர முடியும்” என்றார்.
ஜாகுவாரின் லைட்வெயிட் அலுமினியம் ஆர்க்கிடெக்சரின் துணையுடன் உருவாக்கப்பட்டுள்ள F-பேஸ், ஓட்டுவதற்கு இதமான தன்மையை இழந்துவிடாமல் கட்டுப்பாடு மற்றும் துல்லியமாக இருப்பதால், வாகனத்தை கையாளுவதற்கு வசதியாக உள்ளது. மிகவும் உயரமாக செல்லும் சாலைகள், தாக்கங்கள், செல்ல கடினமான சாலைகள் போன்ற சவால் மிகுந்த சாலைகளையும் எளிதாக எதிர்கொள்ளும் வகையில், இயல்பான அதிக உறுதியான கட்டமைப்பை இந்த காருக்கு ஜாகுவார் வழங்கி உள்ளதால், F-பேஸ் நம்ப முடியாத பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்வது இதன் சாதகமான விஷயங்களில் ஒன்றாகும். காரின் முன் பகுதிக்கு டபுள் விஸ்போன் ஃப்ரென்ட் சஸ்பென்ஸன் மற்றும் பின் பகுதிக்கு இன்டிகரல் லிங் ரேர் சஸ்பென்ஸன் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த காரில் எலக்ட்ரிக் பவர்-அசிஸ்ட்டெட் ஸ்டீயரிங் சிஸ்டம் கொண்டிருப்பதால், இப்பிரிவில் இதன் ஸ்டீயரிங் தரம் மிகவும் உயர்ந்ததாக கூறப்படுகிறது. F-டைப் ஸ்போர்ட்ஸ் காரான இந்த கார், ஜாகுவாருக்கு ஒரு படிப்பினையாக அமையும். எல்லா காலநிலைகளிலும், நிலப்பரப்புகளிலும் சுறுசுறுப்பாக இயங்க F-பேஸில் இணைக்கப்பட்டுள்ள டார்க் வெக்டாரிங் டெக்னாலஜி, F-டைப் வாகனங்களுக்காக முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளதால், இதில் முடுக்குவிசைக்கு ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டம் தேவைப்படும்.
ஜாகுவாரின் வெஹிக்கிள் இன்டிகிரிட்டி அணியினரின் மதிப்பீடுகளை வெஹிக்கிள் டைனாமிக்ஸ் CAE அணியினர் பயன்படுத்திய கம்ப்யூட்டர்-எய்டட் என்ஜினியரிங் (CAE) கருவிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சோதனை மற்றும் மேம்பாடுகள் மிக திறமையாக அமைந்தது. மேலும் சிறந்த உருவக முடிவுகள் மற்றும் எதிர்மாறான விளைவுகளை பெற்றுக் கொள்ள உதவியாக இருந்தது.
0 out of 0 found this helpful