BS-V மற்றும் BS-VI மாசு கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்துவத்தில் தாமதம் ஏற்படலாம்
published on ஜனவரி 04, 2016 05:42 pm by sumit
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
BS-V மற்றும் BS-VI என்ற மாசு கட்டுப்பாட்டு விதிகளை, முறையே 2019 மற்றும் 2021 ஆண்டிற்குள் அமல்படுத்த வேண்டும் என்ற இந்திய அரசின் முடிவை செயல்படுத்துவத்தில் தாமதம் ஏற்படலாம். தற்போது, BS-V விதிகளை அமல்படுத்துவதை 2020 –ஆம் வருடத்திற்கும், BS-VI விதிகளை அமல்படுத்துவதை 2022 –ஆம் வருடத்திற்கும் ஒத்திப்போட இந்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. மாசு விளைவிக்காத நவீன தொழில்நுட்பத்திற்கு மாறத் தேவையான சுத்தமான எரிபொருள் கிடைக்க தாமதப்படுவதுதான், இந்த விதிகளை அமல்படுத்தும் தேதியை ஒத்திப் போடுவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. சென்ற வாரத்தில், பல்வேறு அமைச்சகங்களும் கலந்து கொண்ட, அமைச்சர்களுக்கான ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் நடுவே ஒரு சரியான நிலைப்பாடு ஏற்படாததால், இந்த கூட்டத்தில் எந்த வித முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை என்று தற்போது வந்துள்ள நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. மாசு கட்டுப்பாட்டு விதிகளை வேகமாக அமல்படுத்த, சாலை போக்குவரத்து அமைச்சகம் ஆர்வமாக இருந்தாலும், சரியான எரிபொருள் தீர்வு இல்லை என்பதால், இந்த விதிமுறைகளை செயல்படுத்த பெட்ரோலிய அமைச்சகம் முட்டுக் கட்டை போட்டது.
“பெட்ரோலிய அமைச்சகத்தின் பச்சைக் கொடிக்காக நாங்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம். தகுந்த எரிபொருள்களை வழங்க அந்த அதிகாரிகள் தயாராகவில்லை, எனவே, BS-V (பாரத் ஸ்டேஜ்) விதிகளை அமல்படுத்துவதை 2020 –ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்,” என்று நம்பகமான ஆதாரத்தைத் தந்த ஒருவர் தெரிவிக்கிறார். மேலும், மற்றுமொரு அதிகாரி, “புதிய மற்றும் ஏற்கனவே சந்தையில் உள்ள வாகனங்களுக்கு நாங்கள் விதித்த வெவ்வேறு காலக் கெடுக்களை இணைத்து ஒரே கெடுவாக மாற்றும் வாய்ப்பு உள்ளது. அதாவது, BS-V விதிமுறைகளை 2020 –ஆம் ஆண்டில் இருந்து அனைத்து வாகனங்களும் பின்பற்ற வேண்டும். அது போலவே, BS-VI விதிகளை 2022 –ஆம் ஆண்டில் இருந்து அனைத்து வாகனங்களும் பின்பற்ற வேண்டும்,” என்று தெரிவித்தார்.
சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல்ஸ் மேனுபேக்சரர்கள் என்ற சங்கத்தின் எக்ஸிக்யூடிவ் டைரக்டரான (தொழில்நுட்பம்) K.K. காந்தி, “வாகன தொழில் துறையை பொறுத்தவரை, இந்த திட்டம் ஒத்தி வைக்கப்படுவதால் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. ஏனெனில், இதற்கு முன்பே BS-V விதிமுறைகளை 2019 –ஆம் ஆண்டிற்குள் அமல்படுத்தப்படுவதை நாங்கள் ஆதரித்தோம். எனினும், சுற்றுபுற சூழலுக்கு மாசு விளைவிக்காத தூய்மையான வாகனங்களை அறிமுகப்படுத்துவத்தில் எங்களுக்கு ஒரு வருட தாமதம் ஏற்படும். இது நிச்சய்மாக வரவேற்கத்தக்க சூழ்நிலை இல்லை,” என்று வருத்தம் தெரிவித்தார். இந்த விதிகளை அமல்படுத்தும் ஆரம்ப திட்டத்தில், இவை முறையே 2021 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் அமலாக்கப்படும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது சூழ்நிலை மாறிவிட்டதால், முதல் முதலாக இந்த விதிமுறைகளை அமல்படுத்த தீட்டிய திட்டத்தின் ட்ராஃப்ட்டில் இடம் பெற்றுள்ள தேதிகளை மூன்று வருடம் முன்னதாக சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் மாற்ற வேண்டும்.
இதையும் படியுங்கள்