வரும் 2021 ஆம் ஆண்டு BS-VI மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை, இந்தியா அமல்படுத்துகிறது
மாருதி எஸ்-கிராஸ் 2017-2020 க்காக டிசம்பர் 01, 2015 11:50 am அன்று sumit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
மாறி வரும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை மீது இந்தியா, தனது அர்ப்பணிப்பை மீண்டும் காட்டியுள்ளது. வரும் 2022 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் BS (பாரத் ஸ்டேஜ்) ஸ்டேஜ் V விதிமுறைகளையும், 2024 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் BS ஸ்டேஜ் VI விதிமுறைகளையும், இந்தியாவில் அமல்படுத்தப் போவதாக முன்பு (ஆட்டோ ஃபியூல் பாலிசியின்படி) அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பின்படி, 4 சக்கர வாகனங்களுக்கான மேற்கூறிய இரு ஸ்டேஜ்களும் மூன்று ஆண்டுகள் முன்னதாகவே அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள ஒரு அதிகாரபூர்வமான அறிக்கையில் கூறியிருப்பதாவது, “4 சக்கர வாகனங்களின் பிரிவுகளை உள்ளடக்கிய ஆட்டோமொபைல் துறைக்கான BS-V மற்றும் BS-VI விதிமுறைகளை அமல்படுத்துமாறு, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை ஒரு வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிகளவிலான மாசுக் கட்டுப்பாட்டு தர அளவுகளை (ஹையர் லெவல் எமிஷன் ஸ்டேண்டேடு) அமல்படுத்துவதன் காலஅளவை இன்னும் விரைவுப்படுத்த, இந்த துறையினர் முடிவு செய்துள்ளனர். அதேபோல சுற்றுச்சூழல் மாசுபடுதல் மற்றும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான அபாயகரமான விளைவுகளை குறைப்பதில், சாலை போக்குவரத்து துறை முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என்பதில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 4 சக்கர வாகனங்கள் பிரிவிற்கான காலஅளவு முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளதை போலவே, 2 சக்கர மற்றும் 3 சக்கர வாகனங்களின் பிரிவுகளுக்கும் விரைவில் காலஅளவு குறைக்கப்பட்ட வரைவு அறிவிப்பு வெளியாக உள்ளது.
தற்போதைய புதிய காலஅளவின்படி, வரும் 2019 ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து BS-V விதிமுறைகளையும், வரும் 2021 ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து BS-VI விதிமுறைகளையும் அமல்படுத்த, இந்த அரசு துறை உத்தேசிக்கிறது. NOx/4C நிலைகளை குறைப்பதே, BS-VI விதிமுறைகளின் முக்கிய நோக்கம் ஆகும். இன்று முதல் துவங்கும் “2015 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில்” பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி பெரீஸிற்கு புறப்பட்டு போன, அதே நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து காலநிலை மாற்றங்கள் தொடர்பான பிரச்சனைகளில், எந்தொரு பகுதியிலும் தனது பங்கை இழக்க இந்தியா விரும்பவில்லை என்பது தெரிகிறது.
இதையும் படியுங்கள்