சென்னையில் மழை: ஹூண்டாய், ஃபோர்டு, ரெனால்ட்-நிசான் மற்றும் மற்ற வாகன தயாரிப்பாளர்களின் பணிகள் நிறுத்தம்
manish ஆல் டிசம்பர் 07, 2015 11:20 am அன்று பப்ளிஷ ் செய்யப்பட்டது
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
தமிழகத்தின் தலைநகரில் ஏற்பட்டுள்ள கடும் மழையின் விளைவாக, நகரமே துயரத்தில் சிக்கியுள்ளது. இந்த பாதகமான சூழ்நிலையில் நகர மக்கள் தவித்து வருகின்றனர். இந்த வெள்ளம் நம்மில் ஒவ்வொருவருக்கும், ஒன்று அல்லது மற்றொரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய இந்த சூழ்நிலை, வாகன தயாரிப்பு தொழில்துறையிலும் சிற்றலையை ஏற்படுத்தியுள்ளது. வாகன தயாரிப்பாளர்களான ஹூண்டாய் (இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வாகன தயாரிப்பாளர்), ரெனால்ட்-நிசான், ஃபோர்டு மற்றும் சென்னையை அடிப்படையாக கொண்ட தயாரிப்பு தொழிற்சாலைகளை கொண்ட மற்ற வாகன தயாரிப்பாளர்கள், தங்களின் தொழிற்சாலைகளின் பணிகளை முடக்கி வைத்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக, இந்த மிகப்பெரிய வாகன தயாரிப்பாளர்கள், மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், நகரின் சில இடங்களில் நடமாட கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஃபோர்டு இந்தியா தனது என்ஜின் மற்றும் அசம்பிளி தொழிற்சாலையின் உற்பத்தி பணிகளை நிறுத்தி வைத்துள்ளது. கொரியன் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய், தனது தொழிற்சாலையின் மூன்று ஷிஃப்ட்களை ரத்து செய்து, சென்னையின் காலநிலை சீரான பிறகே மீண்டும் பணிகளை துவக்க தீர்மானித்துள்ளது. அதேபோல, ரெனால்ட்-நிசான் நிறுவனங்களும் தற்போதைய சூழ்நிலை சீரான பிறகே மீண்டும் பணிகளை துவக்க உள்ளன. அதுவரை இந்நிறுவன தொழிற்சாலை மூடப்பட்டிருக்கும். ஹூண்டாய் நிறுவனம் ஆண்டிற்கு ஏறக்குறைய 6.8 லட்சம் வாகனங்களையும், அதே நேரத்தில் ஃபோர்டு மற்றும் ரெனால்ட்-நிசான் தொழிற்சாலைகளில், ஒரு ஆண்டிற்கு முறையே 3.4 லட்சம் என்ஜின்களும், 2 லட்சம் வாகனங்கள் மற்றும் 4.8 லட்சம் கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதையும் படியுங்கள்