• English
  • Login / Register

நெடுஞ்சாலை உருவாக்கம்: நெடுஞ்சாலைகளின் தரத்தை உயர்த்த 93 பில்லியன் டாலர்கள் ஒதுக்கி அரசு அறிவிப்பு

published on ஆகஸ்ட் 10, 2015 10:02 am by manish

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்: இந்தியாவில் உள்ள மொத்த சாலைகளின் அமைப்பில், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது 2 சதவீதம் ஆகும். 4.80 மில்லியன் கி.மீட்டர்களை கொண்ட இது, உலகின் இரண்டாவது பெரிய சாலை அமைப்பாகும். நெடுஞ்சாலை துறை மொத்த போக்குவரத்தில் 40 சதவீதத்தையும், 65 சதவீத சரக்கு போக்குவரத்தையும், 80 சதவீத பயணிகள் போக்குவரத்தையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் 45 பில்லியன் டாலர் மதிப்பிலான என்ஹெச்டிபி சாலை கட்டுமான பணிகள் உட்பட 93 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களை இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் நெடுஞ்சாலை துறையை முதலீடு செய்வதற்கு “ஒப்பற்ற வாய்ப்பாக” மாற்றும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பல திட்டங்களை உட்கொண்ட பட்டியலை கொண்டுள்ள சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையை பொறுத்த வரை, முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கும் வகையில், “புதிய மாடல்களில் பசுமைநிலம் (கிரீன்பீல்டு – ஹைபிரிட் ஆன்யூட்டி) மற்றும் பழுப்புநில திட்டம் (பிரவுன் பீல்டு ப்ராஜக்ட்ஸ் – மானிடைசேஷன்)” ஆகிய இரு திட்டங்களை நடைமுறையில் கொண்டுள்ளது.

இதில் ஏலம் எடுப்பவர்களை கவரும் வகையில், “வாய்ப்பிற்குள் நுழைந்து பாருங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. இதை வெளிப்படையாக கூறினால், “என்ஹெச்டிபியின் 20,000 கி.மீட்டர் நீளத்திற்கு, அடுத்த 3 ஆண்டுகளில் 45 பில்லியன் டாலர் மொத்த முதலீடு” என்பதாகும்.

அரசின் சாலை கட்டுமான திட்டங்களில், தேசிய நெடுஞ்சாலை கட்டுமான திட்டம் (என்ஹெச்டிபி) என்பது மிக முக்கியமான ஆகும். இது நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை (என்ஹெச்எஸ்) பல நிலைகளாக உலக தரமுள்ள சாலைகளாக உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. என்ஹெச்டிபி என்பது அரசால் நடத்தப்படும் உலகின் பெரிய பிபிபி வளர்ச்சி திட்டங்களாகும். இதில் தேசிய நெடுஞ்சாலை துறையிடம் உள்ள 26,000 கிமீட்டர் பணியில், 20,000 கிமீ தொலைவை என்ஹெச்டிபி திட்டத்தில் உள்ளடங்குகிறது.

இந்த வாய்ப்பு, “6,000 கிலோ மீட்டர்களுக்கான 12 பில்லியன் டாலர் மதிப்பிலான பாரத் மாலா திட்டம்” என்று அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 123 மாவட்ட தலைமையகங்களை இணைக்க 15 பில்லியன் டாலர்கள், 2 ஆண்டுகளில் 350 பாலங்கள்/ ஆர்ஒபிகள் கட்டுமானத்திற்கு 8 பில்லியன் டாலர் ஆகியவை செயல்படுத்தப்படும். “வடமேற்கு மற்றும் எல்லைப்புற பகுதிகளில் உள்ள சாலைகளில் உறுதியான இணைப்பை அளிக்க 5 பில்லியன் டாலர்களும்”, மலைபாங்கான பகுதிகளில் 2,500 கி.மீ. ‘ச்சார் தாம்’ இணைப்பை ஏற்படுத்த 8 பில்லியன் டாலர்களும் இதில் உட்படும். இந்தாண்டு 10,000 கி.மீ அளவில் கட்டுமானப் பணிகளின் திட்டங்களை அளித்து, திட்டத்தை சீர்த்திருத்தம் செய்து முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி, முதலீட்டாளர்களின் “சிரமம் / ஆதாய விருப்பம்” ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு “முதலீட்டாளர்களுக்கான ஒப்பற்ற வாய்ப்புகள்” கிடைக்க செய்யும் என்று அரசு தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியாண்டிற்கான ஊக்கத் தொகையை குறித்து விவரித்து கூறுகையில், “ரைட் ஆப் வே (ROW) சட்டத்தின் கீழ், திட்டத்திற்கு தேவையான நிலங்ளை பெற தடையாக இருந்த எல்லாவற்றையும் நீக்கும் வகையில், நிலங்களை விட்டுக் கொடுப்பவர்களுக்கு வேறு இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் என்ஹெச்ஏஐ மூலம் தலைமை அளிப்பு (கேப்பிடல் கிராட் – வையபலிட்டி கேப் பன்டிங்) திட்டத்திற்கான நிதியில் ஒவ்வொரு கேஸுக்கும் 40 சதவீதம் வரை அளிக்கிறது.

மேலும் இது, மொத்தமுள்ள 20 ஆண்டுகளில், முதல் 5 வருடங்களுக்கு 100 சதவீதம் வரி தள்ளுபடியும், அடுத்த 5 வருடங்களுக்கு 30 சதவீதம் வரியில் கழிவும் அளிக்கிறது.

அதுவுமின்றி, நீண்டகால நிதி ஆதாரங்களான பென்சன் மற்றும் காப்பீடு நிதி போன்றவற்றை இதில் உட்படுத்துவது குறித்து ஆர்பிஐ மற்றும் நிதி அமைச்சரகத்திடம் ஆலோசித்து, இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படலாம் என்று நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது. மேலும், நீண்டகால கடன் மறுசீரமைப்பு செயல்படுத்தப்படும்.

கூடுதலாக, நிறுத்தப்பட்ட 80 திட்டங்கள் மற்றும் 85 ரயில்வே மேம்பால திட்டங்கள், 5.5 பில்லியன் டாலர் மதிப்பிலான 34 திட்டங்களுக்கு கட்டுமான நிறுவனத்தினருடன் கோல்டன் ஹேண்ட் ஷேக் செய்யப்பட்டு, மற்றும் 2.3 பில்லியன் முதல் 0.2 பில்லியன் டாலர் வரை மதிப்புள்ள பிரச்சனை மிகுந்த திட்டங்களை சுமூகமாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience