சுயமாக ஓட்டும் (செல்ஃப்-டிரைவிங்) கார்கள் தயாரிக்கும் தனது கம்பெனியின் பெயரை கூகுள் நிறுவனம் அறிவித்தது
published on ஆகஸ்ட் 06, 2015 10:02 am by manish
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
கூகுளின் சுயமாக ஓட்டும் (செல்ஃப்-டிரைவிங்) கார் திட்டம் தொடர்பாக பல விதமான ஊகங்களும், வதந்திகளும் பல வருடங்களாக உலாவி வருகின்றன. இதனை முன்னிட்டு இந்த நிறுவனம் பகிரங்கமாக ஒரு முன்மாதிரியையும் போன வருடம் வழங்கியது. இருந்தாலும், கடந்த திங்கள் கிழமை வரை, கூகுள் இந்த திட்டத்தை சட்ட ரீதியாக நிறைவேற்ற புதிய வரைமுறைக்குட்பட்ட கடன்பாட்டு நிறுவனத்தை (லிமிடெட் லையபிலிட்டி கம்பெனி) உருவாக்கியுள்ளது பற்றி யாருக்கும் தெரியாது.
2011 ஆம் ஆண்டு, கூகுள் இந்த நிறுவனத்தை கூகுள் ஆட்டோ LLC என்ற பெயரில் பதிவு செய்துள்ளது. கூகுள் தனது பழைய டொயோடா பிரியஸ் கார்களை விடுத்து லெக்ஸஸ் SUV க்கு மாறிய தருணத்தில் இந்த புதிய நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ‘தி கார்டியன்’ பத்திரிக்கை குறிப்பிடுகிறது. மேலும், கூகுளின் அனைத்து 23 விதமான சுயமாக ஓட்டக்கூடிய லெக்ஸஸ் ரக கார்கள் அனைத்திற்கும் இந்த LLC நிறுவனமே பட்டியலிடப்பட்ட சட்ட ரீதியான உற்பத்தியாளர். மேலும், ஒவ்வொரு காரின் வாகன அடையாள எண்ணை (VIN) வாங்கும் போதும், இந்த நிறுவனத்தின் பெயரையே உபயோகப்படுத்தி உள்ளனர்.
கூகுள், தனது நிறுவனத்தையும், அதன் நிதி மற்றும் சொத்துக்களை பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும் விதத்தில், இந்த துணை நிறுவனத்தை 2011 ல் பதிவு செய்துள்ளது. பிரச்சனை என்று பேசும் போது, சமீபத்தில் கூகுள் கார்களுக்கு ஏற்பட்ட செயலிழப்புகளை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
இணையத்தளத்தில் அதுவும் குறிப்பாக தேடுதல் சேவை தருவதில் ராஜாவான கூகுள் சென்ற வருடம் புதிதாக உரிமம் பெற்றிருந்தாலும், மீண்டும் தன்னுடன் உற்பத்தி பங்குதாரர் ஆகுவதற்கு, நிலையான நன்கு ஸ்தாபிக்கப்பட்ட கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தன்னுடன் இணை தயாரிப்பாளராவதற்கு சென்ற ஜனவரியில் ஒரு அறிக்கை விடுத்தது. இதன் மூலம், கலிபோர்னியாவில் ஒரு உரிமம் பெற்ற கார் தயாரிப்பாளராக ஆக முடியும்.
ஏற்கனவே, அமெரிக்காவிலும், உலக நாடுகள் அனைத்திலும், கூகுள் ஆட்டோ நிறுவனம் பதிவு செய்யப்பட்ட பயணிகள் வாகன உற்பத்தியாளராக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது கூகுள் மேலும் ஒரு இணை தயாரிப்பாளரை தேடுகிறது என்று தெரிகிறது. எனினும், கூகுள் இதுவரை அத்தகைய இணை தயாரிப்பாளரின் பெயரை வெளியிடவில்லை.
0 out of 0 found this helpful